வாராவாரம்-2 அரசியல்+சினிமா (25-09-2011)

இந்த வாரம் பேசுறதுக்கு நெறைய இருந்தாலும் ரெண்டே ரெண்டு மட்டும் முண்டியடிச்சிக்கிட்டு முன்னாடி வருது. ஒன்னு அரசியல். இன்னொன்னு சினிமா. அரசியலுக்கு முதல் முழுக்குப் போட்டுட்டு அப்புறமா சினிமாவுக்கு வருவோம்.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்கள். இவர்களின் பேச்சும் செயலும் எப்பொழுதும் முன்னிலை பெறும். கூட்டணிக்கட்சிகள் என்று வரும் பொழுது இரண்டு கட்சிகளும் ஒரே விதத்தில்தான் நடந்து கொள்கின்றன.

ஜெயலலிதாவின் அந்தக் கோரமுகத்தை வைகோ விசயத்தில் முதலில் கண்டோம். அடிப்படை அரசியல் நாகரீகம் அற்ற அந்தச் செயலில் வெற்றி வைகோ பக்கம். ஜெயலலிதாவிற்கு அது தோல்வியில்லை என்றாலும் மக்களை மிகவும் முகம் சுளிக்க வைத்த நடத்தை.

அப்போது ஜெயலலிதாவோடு கூட்டுச் சேர்ந்து வைகோவுக்கு அல்வா கிண்டியவர்களுக்குக் கை மேல் பலன். அதுவும் முதன்மை எதிர்க்கட்சியாகி சட்டசபையில் அமர்ந்து நூற்றுச் சொச்ச நாட்களே ஆன நிலையில். ஆனால் வைகோ மேல் எழுந்த அனுதாபம் விஜயகாந்த் மேல் எழவில்லை. இது விஜயகாந்திற்கு உண்மையிலேயே சறுக்கல். கண்டிப்பாக ஓட்டுகள் குறையும். அடுத்த தேர்தலில் கூட்டணி பேரத்தில் பெரிதாகக் கேட்க முடியாது. மேலே தூக்கி கீழே போட்டு விட்டார் ஜெயலலிதா.

கருணாநிதி அப்படிப்பட்டவரா? மூஞ்சியில் நேராகக் குத்துவாரா? அரசியல் நாகரீகங்களை அண்ணா, பெரியார், காமராஜர், கக்கன் என்று எல்லோரிடம் வரிசை கட்டிப் படித்த வரிப்புலியாயிற்றே. சீவிச் சிங்காரித்து மூக்கறுப்பதுதான் அவர் வழக்கம். மூக்கறுத்தது கூட முத்தத்திற்கு உதவும் என்று தமிழ் வார்த்தைகளை வதக்கிப் போட்டு நம்ப வைப்பார். குடும்பத்திற்காக டெல்லிக்கு நூறுமுறை காவடி எடுத்தவர் தமிழனுக்கு என்றால் கடிதம் எழுதுவார். காங்கிரசுக்கு 67 இடங்கள் கையூட்டாகக் கொடுத்தும் நினைத்தது நடக்காமல் காங்கிரசைக் கை கழுவியிருக்கிறார். கூடவே திருமாவையும்.

ஒரு விதத்தில் இது நல்லதுதான். யார் யாருக்கு என்ன பலம் என்று இந்தத் தேர்தலில்தான் தெரியும். அடுத்த தேர்தல் கூட்டணி மாறுதல்களுக்கு இது நல்ல முன்னோட்டம்.

இனியாவது கொள்கையில்லாமல் பெரிய கட்சிகளுக்குக் காவடி தூக்குவதை மற்ற கட்சிகள் விட வேண்டும். தோல்வி பெரிய கட்சிகளுக்கும் இன்றைக்குத் தேவையான பாடம்.

அடுத்தது சினிமா. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தைக் கண்டேன். அதன் எண்ணங்கள் படம் பார்த்து முடித்து தூங்கி எழுந்த பிறகும் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. எல்லாப் பாத்திரங்களும் பொருத்தமாக அமைந்த திரைப்படங்கள் நிறைய வருவதில்லை. ஒரு கதாநாயகன். உடன் ஒரு நகைச்சுவை நடிகர். ஒரு நாயகி. காதல். ஒரு வில்லன். இப்படியான படங்கள் நிறைய வரும்.

ஆனால் ஒரு நல்ல படம் வந்தால் இந்த மசாலாப் படங்களெல்லாம் ஓடியே போய்விடும். பிரம்மாண்ட மங்காத்தா வெளிவந்து ஒரு வாரத்தில் வந்த படம் எங்கேயும் எப்போதும். ஆனால் மங்காத்தாவின் ஆர்ப்பாட்டக் குரல் இப்போது அமுங்கிப் போய் விட்டது. ஒரே வாரத்தில் மங்காத்தாவை லபக்கி விட்டது எங்கேயும் எப்போதும். மசாலாப் படங்களே, நல்ல படங்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். என்னதான் நீங்கள் ஆர்ப்பாட்டமாக வந்தாலும் அமைதியாக உங்களை இந்த நல்ல படங்கள் விழுங்கி விடும்.

எங்கேயும் எப்போதும் படம் முடியும் பொழுது திரையரங்கு முழுவதும் கைதட்டல். என்னாலும் கை தட்டாமல் இருக்க முடியவில்லை. கதாநாயகனுக்காக இல்லாமல் கதைக்காக கை தட்டுவது நல்லதுதான்.

இயக்குனர் சரவணனுக்கும் தயாரிப்பாளர் முருகதாசுக்கும் ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்கு நன்றி. Non linear படங்களை இயக்குவது எப்படி என்று இந்தப் படத்தைப் பார்த்தும் கற்றுக் கொள்ளலாம். முன்னும் பின்னும் மாறிமாறி இரண்டு கதைகளுக்குள் பயணிக்கும் கதையில் சிறிதும் குழப்பமோ தொய்வோ இல்லை. திரைக்கதை ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு அவசியம் என்று எடுத்துச் சொல்ல இந்தப்படம் நல்ல எடுத்துக்காட்டு.

அஞ்சலி மிக அழகு. கொஞ்சம் மெலிந்தால் நிறைய வாய்ப்புகள் வரும். ஆனால் நடிப்பு மிக அலட்சியமாகவும் அழகாகவும் வருகிறது. தெலுங்கு தாய்மொழி. வளர்ந்தது மும்பை. ஆனாலும் சொந்தக்குரலில் தெளிவாகப் பேசியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. வெளுத்த தொலியுடைய வடக்கத்திக்காரிகளின் உணர்ச்சியற்ற முகங்களைப் (கோ படத்தில் பியாவைத் தவிர) பார்த்து விட்டு அஞ்சலியைப் பார்க்கும் பொழுது ஜில்லென்று இருக்கிறது. உடம்பு முழுதும் மூடிக்கொண்டும் நான் அழகாகத் தெரிவேன் என்று அவர் திரையில் தோன்றும் பொழுது உரித்த கோழி தமன்னாக்களும் தப்சிகளும் உப்பில்லாப் பண்டங்கள் ஆகிறார்கள்.

ஜெய் நடித்து பார்க்கும் இரண்டாம் படம் இது. இயல்பான நடிப்பு. தமிழ் முகம் என்பது படம் பார்க்கும் பொழுது பாத்திரப் பொருத்தத்தின் நெருக்கத்தில் தெரிகிறது. நல்ல படங்களாகத் தேர்ந்தெடுங்க நடித்தால் நல்ல வாய்ப்பிருக்கிறது.

அனன்யாவும் சர்வாவும் மிகப் பாந்தம். சொந்தக் குரலில்தான் பேசியிருக்கிறார். நடிப்பு வருகிறது. மதுஸ்ரீ பாடிய உன் பெயரே தெரியாது பாடலில் அப்படியே அள்ளிக் கொண்டு போகிறார். சர்வாவின் முகபாவங்கள் மிகப் பொருத்தம். தமிழில் இவர்க்கு அவ்வளவு வரவேற்பு இருக்காது என்று நினைக்கிறேன். இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அதைப் பொருத்தமாகச் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்தேன். அரங்கம் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு அருமையாக இருக்கிறது. இருக்கைகளும் மிகச் சுகம். திரையரங்கத்தினருக்கும் அங்கு பணிபுரிகின்றவர்களுக்கும் எனது பாராட்டுகள். மீண்டும் அங்கு படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

மொத்தத்தில் எங்கேயும் எப்போதும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in பொது and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வாராவாரம்-2 அரசியல்+சினிமா (25-09-2011)

 1. sudgopal says:

  காங்கிரசுக்கு அறுவத்திரண்டில்ல கொடுத்தாரு நம்ம மஞ்சத்துண்டு மகான். அப்புறம் “எங்கேயும் எப்போதும்” தியேட்டர்ல பாத்தே ஆகணும்னு சொல்றீங்க போல..ரைட்டு…அதையும் பண்ணீடுவோம்…

  • GiRa says:

   அறுபத்திரெண்டா.. அறுபத்தேழு கேட்டிருந்தாலும் குடுத்திருப்பாரு இதயத்தில் இடமளிக்கும் கலைஞர்.

   ஆமா. தேட்டர்லதான் எங்கேயும் எப்போதும் பாக்கனும். 🙂 அப்பத்தான் நல்லாருக்கும். மறந்துறாதீங்க 🙂 பாத்துட்டு எப்படியிருந்துச்சுன்னு சொல்லுங்க.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s