வாராவாரம்-3-இரயில் பயணங்களில் (02-10-2011)

ரெண்டு வாரம்னுஅலுவலக வேலையாச் சென்னை வந்து, ரெண்டு மூனாகி, மூனு நாலாகிருச்சு. இன்னைக்குத் திரும்பவும் பெங்களூர்ப் பயணம்.

இந்த நாலு வாரங்கள்ள சென்னைல ரசிச்ச, விரும்பிய, வெறுத்த, வருத்தப்பட்டன்னு பலப்பல நிகழ்வுகள். ஆனாலும் பாருங்க, ஒவ்வொரு நாளும் என்னால தவிர்க்கவே முடியாமப் போன இரயில் பயணங்கள். அதுல கண்டது, கேட்டது, நினைச்சது நெறைய.

1. சென்னைல இரயில் பயணம் ரொம்பச் சிக்கனமானது. அதுலயும் தெனம் போறவங்கன்னா இன்னமும் மலிவு. ரெண்டாம் வகுப்புல மாம்பலம்-செங்கல்பட்டு போறதுக்கு ஒரு மாதத்துக்கான பயண அட்டை விலை இருநூறுக்கும் குறைவு. முதல் வகுப்புன்ன ஒரு மாதத்துக்கு அறுநூறு ரூபாய்கள். மூனு மாதத்துக்கு ஆயிரத்து இருநூறோ முந்நூறோதான். இதுவே ரெண்டாம் வகுப்புன்னா மூனு மாதத்துக்கு நானூத்திச் சொச்சந்தான்.

2. மாம்பலம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் ரெண்டு ஊர்ல மட்டும் கூட்டம் எக்கச்சக்கம். காலைல அந்த ஊர்கள்ள கூட்டம் எறங்கும். மாலைல ஏறும். ஒன்று பொத்தேரி. இன்னொன்று பரனூர்.

3. பொத்தேரியில இருக்கும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் கூட்டத்துக் காரணம். வடயிந்திய மாணவ மாணவியர் நெறைய. ரெயிலுல்ல ஏறுனா இந்திப் படம் பாத்தாப்புல இருக்கு. வரவு நல்வரவாகுக. பெங்களூர்ல அல்சூர், திப்பசந்திரா, இந்திராநகர், கோடிஹள்ளி போன்ற எடங்கள்ள நிறையத் தமிழ் கேக்கலாம். அது போலத்தான் இதுவும். இப்பல்லாம் பெங்களூர்ல எல்லா எடத்துலயும் எல்லாரும் இருக்காங்கங்கறே உண்மை.

4. அடுத்தது பரனூர். இங்கயிருக்குற மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் நெறைய நிறுவனங்கள். குறிப்பா மென்பொருள் நிறுவனங்கள். அங்ல எறங்குற கூட்டம் இருக்கே. அப்பப்பா. பட்டவன் பாடு எனக்குத்தாந் தெரியும்.

5. பரனூர் நிலையம் மட்டும் பப்பளப்பளபளான்னு இருக்கு. வழுக்காத டைல்ஸ். உக்காரச் செய்ய நல்ல நாற்காலிகள். குறிப்பா குடிக்க நல்ல தண்ணிக் குழாய். அதுலயும் வெளிநாட்ல இருக்குற மாதிரி அமுக்குனா வாய்க்குள நேராத் தண்ணீ போற அமைப்பு. மாடு மாதிரி குடிக்க வேண்டியதுதான். 🙂 டிக்கெட் கொடுக்குறவருக்கும் நல்ல குளிர்பதன அறை. கண்ணாடிச் சன்னல். உள்ளேயே கழிப்பறை. நல்லாப் பராமரிக்கப்படும் சாலைகள். வந்தெறங்குறவங்க ஏத்தீட்டுப் போக நிறுவனப் பேருந்துகள்.

6. குரோம்பேட்டை ரெயில்வே கேட்டுலதான் நெறைய விபத்துகள் நடக்குதாம். பெரும்பாலும் மூடியிருக்குற ரெயில்வே கேட்கள். அதுனால குறுக்க புகுந்து ஓட நினைக்கும் மக்கள் + இருசக்கர வண்டியோட்டிகள். ரெயில்கள் என்ன செய்யும்?! அரசு ஏதாச்சும் செஞ்சா நன்று. ஆனா ரெயில்வே தண்டவாளங்கள் மேல போற பாலத்துகு மத்திய அரசு பொறுப்பு. இப்ப இருக்குற மத்திய அரசையா நம்புறது?!

7. இதே போலக் கோவில்பட்டியில் ஒரு இரயில்வே கேட். வைகோ சிவகாசி எம்பியா இருந்தப்ப மேம்பாலம் கட்ட அனுமதி வாங்கி, மத்திய அரசு கிட்ட (பாஜக) இருந்து நிதியும் வாங்கி தண்டவாளத்திற்கு மேல பாலத்த வேகமாக் கட்டி முடிக்க வழி செஞ்சாரு. ஆனா ரெண்டு பக்கமும் பாலம் கட்ட வேண்டிய மாநில அரசு, மொதல்ல ஒத்துக்கிட்டு பெறகு ஆறப்போட்டு, ஒரு வழியாகக் கட்டிக் குடுத்துச்சு. ஏன்னா வைகோவிற்குப் பேரு வரக்கூடாதாம். இந்தக் கோலத்துல இருக்கு நம்ம மாநில அரசியல். இதுல குரோம்பேட்டைக்கு இரயில்வே மேம்பாலமா?!

8. இன்னொன்னு. பொதுவாவே சென்னை இரயில் வண்டிப் பெட்டிகள் ஓரளவுக்குத் தூய்மையாவே இருக்கு. வெளிநாட்டோட ஒப்பிட வேண்டாம். ஆனா இந்திய அளவுகோலின் படிப் பொதுவாவே தூய்மைதான்.

9.ரெயில்ல வேலைக்குப் போறவங்க கைலப் பொதுவா நாங் கண்டது டப்பர்வேர் (Tupperware) உணவுப் பைகள். அதுவும் பெரும்பாலும் கருப்பாத்தான் இருக்கு. உட்கார்ரப்போ மேல வெச்சா பை மாறிடுமோன்னு நான் மடிலயே வெச்சிருந்தேன். எங்க நிறுவனத்துலயும் நெறைய டப்பர்வேர்கள்.

10. சிறு வியாபாரிகளோட இலக்கு ரெண்டாம் வகுப்புதான். நெறைய மலிவான பொருள்கள். தின்பண்டங்கதான் நெறைய. வெல அஞ்சிலிருந்து பத்துக்குள்ளதான். ஒரு சமோசா அஞ்சு ரூவா. மூனு வாங்குனா பத்து ரூவா. ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களும் கெடைக்குது. தொலைக்காட்சி விளம்பரத்த விட சில வியாபாரிகள் நல்லாவே கூவுறாங்க. ஒரு வெங்காய சமோசா வியாபாரியோட பேச்சைக் கேட்டப்ப பிதாமகன் சூரியா நினைவுக்கு வந்தாரு. இவர் மட்டும் மார்க்கெட்டிங் படிச்சிருந்தால எதையெதையோ வித்திருப்பாரு.

11. ஆனா பரனூர்ல கெடைக்கிற பொருட்கள் வேறுவகை. வேக வெச்ச மக்காச் சோளம், அவிச்ச/வறுத்த கடலை, மிக்சர், கொய்யாப் பழம். இப்பிடி மென்பொருளாளர்களக் குறிவெச்சி விக்கிறாங்க. பொறிச்ச வடை சமோசாக்கள் கிடைக்கிறதில்ல.

12. டிக்கெட்டே இல்லாமலோ ரெண்டாம் வகுப்பு டிக்கெட்டிலோ மொத வகுப்புப் பெட்டீல தெனாவட்டாகப் போற ஆளுகளும் உண்டு. தொடர்ந்து ஒருத்தரக் கவனிச்சேன். அழுக்கான சட்டை. குளிக்காத உடம்பு. எந்த மாநிலம்னே சொல்ல முடியாத ஒரு பொதுவான ஏழ்மை தொனிக்கும் முகவெட்டு. ஒரு நாளு அவரு தூங்கிட்டாரு. நான் நின்னுக்கிட்டிருக்கேன். திடீர்னு முழிச்சிக்கிட்டு தாம்பரம் வந்துருச்சான்னு கேட்டாரு. பக்கத்துல உக்காந்திருந்த ஒரு நடுத்தர வயசுக்காரரு, பாத்தா சமையல் தாமோதரன் மாதிரி இருந்தாரு. குரோம்பேட்ட வந்திருக்குன்னு சொன்னாரு. சொல்லீட்டு “பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் இருக்குல்ல”ன்னு கேட்டாரு. ஒடனே அந்தாளுக்கு ரோசம். பர்ச எடுத்துத் தொறந்து காமிச்சாரு. உள்ள ஒரு எரநூறு முந்நூறு இருக்கும். ஒரு ரெண்டாம் வகுப்பு டிக்கெட்டு. “பாரு டிக்கெட் இருக்கு. அதுக்கு மேல என்னப் பிடிச்சா அபராதம் கட்டீட்டுப் போறேன். ஒனக்கென்ன”ன்னு ஆத்திரமாச் சொல்லீட்டு குரோம்பேட்டைலயே எறங்கீட்டாரு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி.

மொத்தத்துல இந்த ஒரு மாச இரயில் பயணங்களில் அனுபவம் நல்ல அனுபவம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in பொது and tagged , , , , , . Bookmark the permalink.

7 Responses to வாராவாரம்-3-இரயில் பயணங்களில் (02-10-2011)

 1. anandraaj says:

  அட.. நான் பாத்ததை அப்படியே எழுதிடீங்க..! அந்த “ரயில்” விபத்து..!! சென்னைல தான் இப்படி ரயிலில் அடிபட்டு சாகும் நிலை இருக்கிறது..! அவ்ளோவ் விழிப்புணர்வு நம்மாளுங்களுக்கு…! மும்பைல இப்படி கிராஸ் பண்றதை பத்தி யோஷிச்சிகூட பாக்க முடியாது. நீங்க சொன்ன மாதிரி மேம்பாலம் தான் ஒரே வழி.

  • GiRa says:

   நீங்க பாத்தத நானும் பாத்துட்டேன். 🙂 அதான் எழுதீட்டேன். 🙂

   மும்பைல ரெயில் பயணமே ஒரு பயங்கர அனுபவமாச்சே. அந்தக் கூட்டத்துல உள்ள போய், ஸ்டேஷன் பாத்து எறங்கீட்டா இருக்கங்குடி மாரியம்மனுக்கு கெடா வெட்டிப் பொங்க வெச்சிரலாம். 🙂

 2. sudgopal says:

  காலை, மாலை என எல்லா நேரத்திலயும் கூட்டம் அம்மும் இன்னுமொரு நிறுத்தம் கிண்டியை விட்டுட்டீங்களே? பொறகால ரயிலில் கிடைக்கும் இலவச சங்கீதானுபவத்தைப் பத்தியும் ஒரு ரெண்டு வரி எழுதியிருக்கலாம். குரோம்பேட்டை கிராஸிங்கைப் பீக் அவர்ல கடப்பது என்பது ஒரு அரும் பெருங்கலை இல்லையோ?? நடத்துங்க…

  • GiRa says:

   கிண்டியில் எப்பவும் கூட்டம் வரப்போக இருக்கும். அது உண்மைதான். தாம்பரத்துலயும் இப்போ அவ்ளோ கூட்டம்.

 3. Pingback: udanz.com

 4. Jasan Pictures says:

  Haaaa good one 🙂

  Regards,
  J
  http://mycreationz.wordpress.com

 5. ஸ்பீடு போதாது. நான் பதிவுகளைச் சொல்றேன்.
  4 வது வருசத்துக்கும் சேர்த்து நாலைஞ்சா????????

  இனிய வாழ்த்து(க்)கள்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s