வாராவாரம்-4-பிசிபேளாபாத்-(09-10-2011)

பெங்களூர் வந்தாச்சுல்ல. அதுனால இந்த வாரம் துண்டுதுண்டான கோர்வையில்லாத சுவையான செய்திகள்.

பார் பார் சாம்பார்
சாம்பார் ரசிகர்கள் எவ்ளோ பேர் இருக்கீங்க? இதுல பெங்களூர்க்காரங்க எவ்ளோ பேரு? வந்த புதுசுல என்னடா சாம்பார்னு வாழ்க்கையே வெறுத்திருப்பீங்க. உங்களுக்கெல்லாம் ஒரு சாம்பரான செய்தி. சாம்பாரை சுவைன்னும் சொல்லலாம்ல. 🙂 அடையாறு ஆனந்தபவன் பெங்களூர்ல ரெண்டு மூணு எடத்துல இருக்குங்குறது ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.

இந்திராநகர் சி.எம்.ஹெச் ரோட்டில் இருக்குற ஆனந்தபவன்ல டிபன் வகைகள் சாத வகைகள் கிடைக்குது. குறிப்பா சாம்பார் சாதம் ஓகோ! சரவணபவன் சாம்பர் சாத வகையான சுவை. சென்னையில் இருந்துதான் மசாலாக்கள் வருதாம். எதெது எவ்வளோ கலக்கனும்னு விவரம் தெரிஞ்ச ஒருத்தர் எல்லாத்தையும் பாத்துக்கிறார்னு கேள்வி. நல்ல சாம்பார் சாதம் குடுக்குறதுக்கு அவருக்கு நன்றி.
அந்தப் பக்கம் போறப்போ சாப்ட்டுப் பாத்துச் சொல்லுங்க.

பெங்களூர் தமிழ்ப்பட நிலவரம்
வெடிக்கு அவ்வளவா கூட்டமில்லை. அவ்வளவா இல்லையா, அவ்வளவும் இல்லையான்னு கேக்காதீங்க. கொஞ்சம் காத்தாடுதுன்னு நெனைக்கிறேன். பிவிஆர் தியேட்டர்ல நாலு காட்சிகள் ஓடுது. ஆனா நாலு காட்சிகளுக்கும் டிக்கெட் நிலவரவம் பச்சையில் இருக்கு. தினமும் ஒரே ஒரு காட்சி ஓடுற எங்கேயும் எப்போதும் படத்துக்கு டிக்கெட் இல்லை. இத்தனைக்கும் படம் வந்து மூனு வாரம் ஆச்சு. வாகை சூட வா இன்னும் இங்க வரலை. வருமான்னு தெரியலை. தீபாவளி வெளியீடுகளுக்காக மக்கள் காத்திருக்காங்க.

ஒரு விஷயம் சொல்லியாகனும். சென்னை சத்யம் தியேட்டர்ல படம் பாத்த பெறகு வேற தியேட்டர்ல படம் பாத்தா அவ்வளோ திருப்தியா இல்லை.

அணு அளவும் பயமில்லையா?
அணுவுலை அவசியம்னு ரொம்ப மக்கள் பேசுறாங்க. அது கூடாதுன்னா அதுக்கு மாத்தா வேற வழி சொல்லுங்கன்னு சொல்றாங்க. கெணத்துல தள்ளாதன்னு சொன்னா.. அப்ப மாத்து வழி சொல்லுன்னு கேட்டானாம் ஒருத்தன். படிச்சவங்கதான நீங்கள்ளாம்? பேசாம ஒங்க வீட்டு அடுப்படில அணுவுலை வெச்சிக்கோங்க. பாதுகாப்பானது. ஒலகத்துல நடக்குறதப் பாத்துமா மண்டைல ஏறல. அவசரத்துக்கு அவசரத்துக்குன்னுதான் விவசாயத்த எம்.எஸ்.சுவாமிநாதன வெச்சி அளிச்சோம். அவரே தான் அன்னைக்குச் செஞ்சது தப்புன்னு இன்னைக்குச் சொல்றாரு. அரைகுறை அறிவாளிகளே… நல்லது செய்யாட்டியும் கெட்டது செய்யாம இருங்கய்யா. அது போதும்.

புவியைச் சூடாக்காத மாற்று வழி சொல்லுங்கன்னு கேக்குறாங்க. அணுவுலைல சூடாகலைன்னு யார் சொன்னா? இங்கயும் அணுவைச் சிதைச்சு வெப்பத்த உண்டாக்கி நீரை ஆவியாக்கித்தான் மின்சாரம் தயாரிக்கிறாங்க. ரொம்பத் தெரிஞ்ச மாதிரி பேசுறீங்களே.

இவ்ளோ பேசுற ஒங்களுக்கு ஒங்க வீட்டுக்கு சூரியவொளி மின்சாரம் தயாரிக்கலாமே. கவர்மெண்ட்டுக்கு நீங்க காசே குடுக்க வேண்டாம். நம்மூர் வெயிலுக்கு நாலு நாட்டுக்கு மின்சாரம் குடுக்கலாம். மொதல்ல கொஞ்சம் காசப் போடனும்னு கத சொல்வீங்க. அணுவுலைல என்ன வாழுது? பத்து வருசத்துக்கும் மேலக் காசக் கொட்டித்தானே கட்டிக்கிட்டிருக்கீங்க.

படிக்காதவனை விட, அரைகுறையாளன் ஆபத்தானவன். இந்தக் கொடுமைல டெல்லில இருக்கும் நாக்கில்லா நாராயணன் (அதாங்க மன்மோகன் சிங்கு), தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதீருக்காராம். பேசாம இந்த அணுவுலைய பஞ்சாப்புல வெச்சிக்கோங்க.

விரைவில் வரும் இசைப்புரட்சி
தென்னிந்திய சினிமா உண்டான பொழுதுலயிருந்தே தமிழ்த் திரையிசை முன்னோடியாகத்தான் இருந்திருக்கு. அது வளர்ச்சி காட்டுனது மட்டுமில்லை, தன்னையும் சரியான பொழுதுல புதுப்பிச்சிருக்கு. பாகவதர் காலத்துல இருந்து மெல்லிசைக்கு தன்னை மாத்திக்கிட்டு, இன்னிசையை அடுத்து அரவணைச்சு, புயலிசைக்கு வந்திருக்கு. ஆனா இசைப்புயலோ வெளிநாட்டுல மையம் கொண்டிருக்கு. அங்கிருந்து குடுக்குற மிச்ச சொச்ச பாட்டெல்லாம் ஒன்னும் சரியா எடுபட மாட்டேங்குது.

இங்கயே இருக்குறவங்களும் ஒன்னும் பிரமாதமா பாட்டெல்லாம் குடுக்கலை. கேட்டோமா போனோமான்னு இருக்கு. நடுநடுல சி.சத்யா, கிப்ரன் மாதிரி ஆச்சரிய இசைகள். ஆனா இவங்க தொடர்ந்து எப்படி இசையமைப்பாங்கன்னு ஊகிக்கிறது கடினந்தான். இந்தச் சூழ்நிலைலதான் இசைப்புரட்சி வரனும். கண்டிப்பா வரும். எதிர்பாராத ஜெனோவா, அன்னக்கிளி, ரோஜா மாதிரி ஒரு புரட்சி விரைவில் வரும். ரசிப்போம். ருசிப்போம்.

அமலா அமலா அமலாலாலாலாலா
கடைசியா ஒரு அமலா பாட்டு. ஒல்லிக்குச்சி அமலாவா மாறும் முன்னாடி வந்த பாட்டு. அப்போதைய மார்டன் டிரஸ்சில் அமலா அழகோ அழகு. கூட யாரோ ஒரு பொடிப்பையன் ஆடுறான். மன்னிச்சு விட்டுருவோம். 🙂

அன்புடன்,

ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in பொது. Bookmark the permalink.

6 Responses to வாராவாரம்-4-பிசிபேளாபாத்-(09-10-2011)

 1. ஓ…. அந்த ‘அமலா’வா? நான் பாலுன்னு நினைச்சேன் .

  பிசிபேளா பாத்லே ‘ஸப் பாத்’ சூடு தோ ஹை!

  • GiRa says:

   அமாலாவுக்கு மட்டுமல்ல அமலாபாலுக்கும் ரசிகன் தான். பால் பாட்டுகள் இப்ப எல்லா டீவிலயும் கெடைக்குதே. கெடைக்காத அமலா பாட்டை இங்க போடாச்.

   ஆமா.. அடுத்த வரி புரியவே இல்லை 😦 இந்தியா?

 2. sudgopal says:

  ஏ2பி இப்போ உங்க ஏரியாவிலேயும் வந்திடுச்சா என்ன? காவெரி எம்பொரியம் பின்னால இருக்கிற “பிருந்தாவன்”ல சாம்பார் சூப்பராவே இருக்கும்.சாப்டுப் பாத்து சொல்லுங்க.”கேம் ஆஃப் த்ரான்ஸ்” பார்க்க ஆரம்பிச்சுருக்கேன்.உங்களுக்குப் புடிச்ச ஜானர். ட்ரை மாடண்டீ…

  • GiRa says:

   வந்நு. வந்நு. 🙂 சாம்பார் சாதத்துக்காகவே ரெண்டு ரவுண்டு போனவன் நான். 🙂

   பிருந்தாவன் தேவாம்ருதம்யா. அந்த வத்தக் கொழம்புக்கே காசு சரியாப் போகும். சோறு சாம்பாரு அப்பளம் கூட்டெல்லாம் இலவசம் 🙂 ஆனா முந்தி மாதிரி இப்ப இல்ல. கொஞ்சம் காத்தாடுதுன்னு கேள்வி.

   game of the thrones… ம்ம்ம்.. வாங்கிப் படிக்கிறேன். நீங்களே சொல்லீட்டீன்களே.

 3. பழைய ஆளு says:

  வெல்கம் பேக்.

  பிருந்தாவன் இடத்த அதன் உரிமையாளர்கள் 50 கோடிக்கோ என்னவோ பேசி முடிச்சாச்சு. விரைவில் சரித்திரம் ஆகப் போகுது.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s