வாராவாரம்-வில்லன்கள்-16-10-2011

ஹிட்லர் உமாநாத் – ஒரு பழைய படம். அதுல சுருளிராஜன் வில்லுப்பாட்டு ரொம்பப் கலக்கலா இருக்கும். பூப்பறிச்சு மாலைகட்டின்னு தொடங்கும் பாட்டை இங்க பாருங்க. கேளுங்க.

இதுல இப்பிடிப் பாடுவாடு சுருளிராஜன்
தச்சுவேலை செய்பவன் தச்சன்
கணக்கு வேலை செய்பவன் கணக்கன்
வில்லை எடுத்தவன் வில்லன்
அப்ப ஒருத்தர் குறுக்க புகுந்து “அப்ப ராமாயணத்துல வர்ர ராமன் வில்லனா”ன்னு கேப்பாரு.

இந்த வில்லன்கள் கதைக்கு/சினிமாவுக்கு ரொம்பத் தேவை. ஒரு கதாநாயகனையோ கதாநாயகியையோ உருவாக்குறது வில்லன்கள்தான். இப்படி எனக்குப் பிடிச்ச வில்லன்கள் மூணு பேரைப் பாப்போமா?

சவடால் வைத்தி

வீரப்பா நம்பியார் அசோகன் மாதிரி இரும்பு வில்லன்கள் இருந்த காலத்துல நரம்பு வில்லனா நாகேஷ் வந்து கலக்குன பாத்திரம் சவடால் வைத்தி. தில்லானா மோகனாம்பாள் புத்தகத்தையே வாங்கிப் படிச்சேன். அந்தக் காலத்துல அதுக்கு வரைஞ்சிருந்த படங்களைப் பாத்தா சவடால் வைத்தி கிட்டத்தட்ட நாகேஷ் மாதிரியே இருக்காரு. நாகேஷ் நடிக்கவே வராதப்ப வந்த தொடர்கதை அது.

வைத்திக்கு சிலம்பம், குஸ்தி, கராத்தே, களறிப்பயிற்று… இதெல்லாம் தெரியவே தெரியாது. அவரால ஒரு கத்தியை எடுத்துக் குத்தக் கூட முடியாது. ஆனா அவரால ஒவ்வொருத்தரும் படுற கஷ்டமிருக்கே. ஊரான் கைய எடுத்துத்தான் வேண்டாதவங்க கண்ணக் குத்துவாரு.

கதை முடியுற கட்டத்துல நீதிமன்றத்து வாசல்ல மக்கள் மதன்பூர் மகாராஜா வெளியேறுன்னு கத்துவாங்க. மதன்பூர் மகாராஜாக்குத் தமிழ் தெரியாது. என்ன சொல்றாங்கன்னு கேப்பாரு. “ஜெய்ஹோ”ன்னு சொல்றாங்கன்னு சொல்வாரு. அப்ப ஏ.ஆர்.ரகுமானோட ஜெய்ஹோ நினைவுக்கு வந்தது. ஆனாலும் வைத்தி பொய் சொல்றாருன்னு மக்கள் முகத்தைப் பார்த்து மகாராஜா கண்டுபிடிச்சிருவாரு.

கதையில் அவருடைய அறிமுக வரிகளைக் கீழே தருகிறேன்.
சாதுரியமான மனிதர். சவடால் பேர்வழி அவர். பிறருக்குக் கெடுதல் செய்தாலும் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போலத்தான் இருக்கும். ஏமாற ஆள் இருக்கும் போது ஏன் திருட வேண்டும் என்ற கொள்கை உடையவர்.

சத்யராஜ்

சத்யராஜ் வில்லனா நெறைய படத்துல நடிச்சிருக்காரு. ஆனாலும் ஒரு படத்தைக் குறிப்பிட்டுச் சொல்லனும். கரூர்ல நாங்க இருந்தப்போ பக்கத்து வீட்டுல இருந்தவங்க வீட்ல பழைய படங்களோட வசன கேசட்கள் நெறைய இருக்கும். ஒரு அம்பதறுவது கேசட்டாச்சும் இருந்துன்னு நெனைக்கிறேன். நான் அப்பப்போ போய்க் கேப்பேன். அதுல அடிக்கடி கேட்டது முதல் வசந்தம் வசனம்.

அதுல முகம் தெரியாது. கேக்குறதுதான். அந்தக் குரல்கள்தான் அதுல நடிக்கிறது. அதுல சத்யராஜோட குரலில் இருக்குற நக்கலும் வில்லத்தனமும்.. அடடா. வில்லனைக் கூட ரசிக்க முடியும். அதுவும் வெறும் குரலை மட்டுமே கேட்டு ரசிக்க முடியும்னு அப்பத்தான் புரிஞ்சது.

கதாநாயகனா அவர சில படங்கள்ளதான் பிடிச்சிருந்தது. ஒரு வேளை அந்தப் படங்கள்ளாம் வரும் போதே பாத்திருந்தா பிடிச்சிருக்கலாம்.

அஞ்சே அஞ்சு நிமிடம் மட்டுமே வந்து கலக்கும் முதல்மரியாதை சத்யராஜை மறக்க முடியுமா?!

இதே மாதிரி நூறாவது நாள் சத்யராஜும் காக்கிச்சட்டையில் தகடு தகடு சத்யராஜும் கலக்கல்.

ரஜினிகாந்த்

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றைக்குத் தமிழில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. வீட்டுல பொதுவா ரஜினி படத்துக்குக் கூட்டீட்டுப் போக மாட்டாங்க. ஒரு வாட்டி அப்பாவும் தங்கச்சியும் மட்டும் பாட்சா படத்தைப் பாத்துட்டு வந்து நல்லாருக்குன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் பாத்த படம் படையப்பா. அதுக்குப் பல காரணங்கள்.

பழைய படங்களைத் தேடி எடுத்துப் பாக்குறப்போ ரஜினி வில்லனா நடிச்ச படங்களையும் பாக்க நேர்ந்தது. கமலோ விஜயகுமாரோ கதாநாயகனா நடிக்க ரஜினி வில்லனா நடிச்ச படங்கள் நெறைய இருக்கு.

நான் மூணு படங்கள்ள ரஜினியில் வில்லன் நடிப்பை ரசிச்சிருக்கேன். மூன்று முடிச்சு, 16 வயதினிலே, பில்லா. இதுல பில்லாதான் ரஜினியை ஒரு மாபெரும் மாஸ் ஹீரோவாகவும் முன்னேற்றிய படம்.

மூன்று முடிச்சுல டீக்ஹே டீக்ஹேன்னு அவர் பண்ற வில்லத்தனங்களும்.. பின்னாடி தான் அடைய விரும்பிய ஸ்ரீதேவியே அம்மாவா வந்து மிரட்டும் போட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிறதாகட்டும், அந்தப் படத்துல ரஜினியை ரசிக்காதவங்களுக்கு ரசனையே இல்லைன்னுதான் சொல்வேன்.

மயிலு என்னடா மயிலு… அவ அம்மாவுக்குத் தாவணி கட்டுனாலும் எடுப்பா இருக்கும்னு சொன்ன பரட்டையப் பாத்தாலே ரெண்டு குத்து விடத் தோணும். அதுதான் வில்லனோட வெற்றி. பத்த வெச்சிட்டியே பரட்டை.

பில்லா… ரஜினிகாந்த் எந்தப் படத்த மறந்தாலும் இந்தப் படத்தை மறக்கவே முடியாது. இன்னைக்கு ரஜினிக்கு இருக்குற பேருக்கும் புகழுக்கும் சிறப்பா போடப்பட்ட அடித்தளம் தான் பில்லா.

முதல் முப்பது நிமிடத்திற்கு அவர் வில்லனாத்தான் வருவாரு. அதுக்கப்புறம் வரும் கதாநாயக ரஜினிக்குப் பாடுறதும் ஆடுறதும் ஓடுறதும்தான் வேலை. ஸ்டீம் ரூமுக்குள்ள அழகிகள் உடல் அமுக்கி விடுறதும், தன்னைக் கொல்ல வரும் ரீனாவின் துப்பாக்கி குண்டுகளை எடுத்து தப்பிக்கிறதாகட்டும்.. வில்லன் ரஜினிதான் விறுவிறுப்பாத் தெரிஞ்சாரு அந்தப் படத்துல.

இன்னும் நிறைய வில்லன்கள் இருக்காங்க. அவங்களையெல்லாம் பின்னாடி கண்டிப்பாப் பாக்காலாம்.

இது மாதிரி ஒங்களுக்குப் பிடிச்ச வில்லன்களைப் பத்தி நீங்களும் சொல்லுங்களேன்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in பொது and tagged , , , . Bookmark the permalink.

5 Responses to வாராவாரம்-வில்லன்கள்-16-10-2011

 1. sudgopal says:

  அட..இந்த லிஸ்டு ஜூப்பராவே இருக்கே….வைத்தியை மறக்கமுடியுமா?? இல்ல “ஜில் ஜில் ரமாமணியைத்தான் மறக்கமுடியுமா?? சத்யராஜ் வில்லனா ஆகிட் கொடுத்ததுல புடிச்சது “முதல் வசந்தம்”. ரம்யா கிருட்டிணன் டெப்யூ ஆன படம். பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்…பி.எஸ்.வீரப்பா,டி.எஸ்.பாலையா, ஆர்.பி.விஸ்வம்னு பிடிச்ச வில்லங்களப் பத்தி ஒரு பெரிய லிஸ்டே போடலாங்க…

  • GiRa says:

   உண்மைதாங்க. பட்டியல் ரொம்பப் பெருசு. ஆனா இந்த மூணும் முன்னாடி முட்டிக்கிட்டு நிக்குது. அதான் போட்டேன்.

   ரம்யா கிருஷ்ணனுக்கு அதுவா முதல்படம்? அதுக்கு முன்னாடியே ஒரு படத்துல நடிச்சாங்கன்னு கேள்விப்பட்டேன். சரியாத் தெரியலை.

   முதல் வசந்தம் பாத்திருப்பீங்களா… பாத்தேன். டீவில பாத்தேன். நல்ல படமாச்சே

   கூடலூரு பருப்பப் போட்டு ஒரு கவளம் உள்ளே விட்டேன்
   ஊத்துக்குளி நெய்ய விட்டு ஒரு கவளம் உள்ளே விட்டேன்

   டேய் அது ஊறுகாய்டா.. அது தெனந்திங்குறவனுக்கு…

   மறக்க முடியுமா?

 2. கலக்கல்ஸ் ராகவன், சத்தியராஜின் லொள்ளுத்தனம் சேர்ந்த வில்லத்தனத்தை ரசிப்பவன், சுருளியின் வில்லுப்பாட்டை நீண்ட நாட்களுக்குப் பின் பார்க்கிறேன்.

  • GiRa says:

   இதுல பாருங்க.. சுருளிக்குப் பாடியது மலேசியா வாசுதேவன். சுருளி குரலும் மலேசியா குரலும் மாறிமாறி வரும். ஆனா அவ்வளவு பொருத்தம். மெல்லிசை மன்னர் அருமையா செஞ்சிருக்காரு.

 3. Dhanabalan Raju says:

  “விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றைக்குத் தமிழில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே.”

  — ha ha ha…itha kadasiya othukittinga..enakku athu pothum 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s