வாராவாரம்-அல்குல்-உள்ளாட்சித்தேர்தல்-கோயில்-23-10-2011

உள்ளாட்சித் தேர்தல்கள் எல்லாம் முடிஞ்சிருச்சு. முடிவுகளும் தெரிஞ்சு போச்சு. அடுத்த வேலையப் பாக்கப் போறதுக்கு முன்னாடி சில எண்ணங்கள்.

ஜெயலலிதாவுக்கு வெற்றி. நெனச்ச மாதிரியே பத்து மேயர்களும் கெடைச்சாச்சு. இந்த வெற்றியைத் திமுகவோ வேறெந்தக் கட்சியோ எங்கயும் பெற்றதில்லை.

ஏனிந்த வெற்றி? ஜெயலலிதா நல்லாட்சி தருவார்னா? இல்ல. கருணாநிதி கூட்டத்து மேல இருக்குற பயம். முந்தி ஜெயலலிதாவுக்கு பயந்துக்கிட்டு எல்லாரும் கருணாநிதிக்கு ஓட்டுப் போட்டோம். ஆனா இன்னைக்கு அந்த நெலமைக்கு திமுகவே ஆளாகியிருப்பது ஒரு மோசமான எடுத்துக்காட்டு.

திமுக ஆதரவாளர்களே… ஒன்னே ஒன்னு கேக்குறேன். உண்மையிலேயே கருணாநிதி குடும்பம் உத்தமக் குடும்பம்னு நம்புறீங்களா? நாங்க ஜெயலலிதா & கோ நல்லவங்கன்னு நம்பலை. அவங்க பண்ணதையும் பாத்துதான் முந்தி திமுகவுக்கு ஓட்டுப் போட்டோம். அப்படிப்பட்டவங்கள திரும்ப அதிமுகவுக்கு ஓட்டுப் போட வெச்சீங்களே. நில அபகரிப்புன்னு சொல்றதெல்லாம் பொய்க்கேசுன்னா சொல்றீங்க. நாங்களும் பட்டிருக்கோம்யா. தனிப்பட்ட முறையில பல குடும்பங்கள் பட்டிருக்கு. அதுக்குப் பழிக்குப் பழிதான் மக்களோட தீர்ப்பு. இத இன்னமும் சரியாப் புரிஞ்சிக்கலைன்னா… திமுகவுக்குப் பாலூத்தி தெவசம் கொண்டாட வேண்டியதுதான்.

தலைவன் நல்லவன்னு ஆதரிக்கிறது ஒரு வகை. தப்பு செஞ்சான்னு தெரிஞ்சும் ஆதரிக்கிறது முட்டாள்தனம் அல்லது அவங்க கொள்ளையில் தனிப்பட்ட பயன் இருக்கு. சீச்சீ.
————————————————————-

பெங்களூர்ல கெம்ப் ஃபோர்ட்ன்னு ஒரு பெரிய கடை இருந்தது. அதுக்குப் பின்னாடி ஒரு பெரிய சிவன் செலைய வெச்சாங்க. அது கோயில்னாங்க. கூட்டமும் போகத் தொடங்குச்சு. நேத்து போனப்பதான் தெரிஞ்சது பக்தி மிக நல்ல வியாபாரம்னு. பல கோயில்கள்ள ஏற்கனவே பாத்ததுதான். இங்க வேற மாதிரி.

குகை மாதிரி அரங்கம் அமைச்சு அதுக்குள்ள ரிஷிகேசம் கேதரநாத் மாதிரி அமைச்சு அதுக்குள்ள போக ஆளுக்கு முப்பது ரூபாய். அப்புறம் 108 கிண்ணங்கள் வெச்சிருக்காங்க. நம்ம பணம் கொடுத்து வெங்கலக்காசுப் பை வாங்கிக்கனும். கூடவே ஒரு சின்ன அட்டை குடுப்பாங்க. 108 மந்திரம் இருக்கும். ஒவ்வொரு மந்திரமாச் சொல்லி ஒவ்வொரு கிண்ணத்துலயும் ஒரு வெங்கலக் காசு போடனும். இப்பிடியே பலப்பலதுகள். Magic Spotன்னு ஒரு எடம். அங்க நின்னு பக்கதிலிருக்குற செயற்கைக் குளத்துக்குள்ள காசு போட்டா நல்லது நடக்குமாம். பாவநாச விளக்குன்னு ஒரு மெழுகுவர்த்தி. அத வாங்கி அந்தச் செயற்கைக் குளத்துல மெதக்க விட்டா பாவமெல்லாம் நாசமாயிருமாம். ஆண்டவா.

ஆன்மீகம் ஒரு மனிதனுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய எதையுமே இன்னைக்குக் கோயில்கள் சொல்லிக் குடுக்கலையே. நம்பிக்கை நம்பிக்கைன்னு சொல்லி எல்லாத்தையும் ஆதரிக்கிறது சரியாத் தெரியலை. முந்தி ஜெருசேலம் நகரத்துல கோயிலுக்குப் போன ஏசுநாதருக்கும் இந்த ஆத்திரம் வந்திருக்கு. இரண்டாயிரம் ஆண்டுகளா இப்பிடியே ஏமாத்திக்கிட்டிருக்குறதா?

—————————————————————

அடுத்தது ஒரு தமிழ்ச் சண்டை. ஒரு பழைய பாட்டுங்க. அதுவும் நல்ல பாட்டுங்க. ஏ.ஆர்.ரகுமான் சினிமாவுல கூட பயன்படுத்திருக்காரு. கன்னும் உண்ணாது கலத்தினும் படாதுன்னு தொடங்குற பாட்டு. என்.சொக்கன் இங்க பதிவா போட்டிருக்காரு. http://365paa.wordpress.com/2011/10/16/102/

பிரச்சனை என்னன்னா அந்தப் பாட்டுல ஒரு சொல். அல்குல். அதுக்கு ரெண்டு பொருள் சொல்லலாம். பெண்களின் இடுப்பு அல்லது பிறப்புறுப்பு.

தமிழைப் புனிதப்படுத்துறேன்னு அந்த அல்குலுக்குப் பொருள் புருவம்னு ஒரு பதிவு வேற. இங்க இருக்கு அந்தப் பதிவு http://www.tamilauthors.com/01/90.html. அதுக்கு ரொம்பவே தரவு குடுக்குறதா நெனச்சு நெறைய பாட்டுகளின் அல்குல்னு வர்ர வரியை மட்டும் சொல்லீருக்காங்க. என்னடான்னு அடுத்த வரியைச் சோதிச்சுப் பாத்தா அல்குல்லுக்கு இருக்கும் உண்மையான பொருள் புரியுது.

ஒரு எடுத்துக்காட்டு, “கோடு உயர் அகல் அல்குல்”. இது கலித்தொகையில் வருது. இதைத்தான் எடுத்துக் காட்டீருக்காங்க. அந்தப் பதிவுல சொல்லாத அடுத்த வரி “கொடிபுரை நுசுப்பினள்”. சேத்துச் சொன்னா “கோடுயர் அகல் அல்குல் கொடிபுரை நுசுப்பினள்”.

நுசுப்புன்னா இடை. அல்குலுக்கு புருவம்னு பொருள் எடுத்துக்கிட்டா அகன்ற புருவத்தை உடைய கொடி போன்ற இடையினள்னு வருது. இப்பிடிப் பொருத்தமில்லாம பொருள் சொன்னா எப்படி?

இதை விட வருத்தமானது எதுன்னா அல்குல் என்பதற்கு பெண்குறி என்று சொல்வது இழிவான பொருளாம். அப்படியொரு இழிவான பொருளை புலவர்கள் பயன்படுத்தியிருப்பார்களா என்று கேட்கிறார் கட்டுரையாசிரியர். உடலின் ஒரு உறுப்பை இழிவானது என்று நினைப்பது என்ன வகையான எண்ணம் என்று எனக்குப் புரியவில்லை.

இதையே ஆங்கிலத்தில் சொன்னால் பெருமையாக இருக்கிறது. தமிழில் சொன்னால் இழிவா? நல்ல நியாயமய்யா!

உண்ணாமுலையம்மன் என்று ஒரு பெயர். முருகப் பெருமான் வாய் வைத்துப் பாலருந்தா முலையினள் என்று பொருள். வடமொழிக்காரர்கள் அபீதகுசாம்பாள்னு சொல்வாங்க. இந்தப் பேரை எழுதுனா புனிதம் குறைஞ்சிரும்னு உண்ணாமலைன்னு எழுதுறாங்க. ஏனிந்தக் குற்றவுணர்ச்சி?

அளவுக்கு மீறிய புனிதவுணர்ச்சி மொழிக்குச் செய்வது கேடு. இதைப் புரிந்து கொண்டால் சரி.
————————————-

கடைசியா ஒரு பாட்டு. அதுக்கு முன்னாடி ஒரு புதிர்.

பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் மற்றும் எஸ்.ஜானகி ஆகிய நாலு பேரும் ஒரே படத்துல ஒரே கதாநாயகிக்காக ஒரேயொரு படத்துல மட்டும் பாடியிருக்காங்க. என்ன படம்னு தெரியலையா? பாட்டப் பாருங்க. தெரிஞ்சிரும். 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in பொது and tagged , , , , , . Bookmark the permalink.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s