ஏழாம் அறிவும் ராமானுஜ ஆதிசங்கரரும்

ஏழாம் அறிவு படத்தப் பாத்தாச்சு. சினிமா விமர்சனம் எழுதி ரொம்ப நாளாச்சா… அதான் எழுதீரலாம்னு…. முழு விமர்சனத்தையும் பாக்குறதுக்கு முன்னாடி கண்டேன் சீதையைக் கணக்கா “படம் கண்டிப்பா பாக்கலாம்”னு சொல்லிக்கிறேன்.

படத்துக்கு எக்கச்சக்க விளம்பரம். இது நல்ல ஓப்பனிங் குடுக்கும்னு நெனச்சிருக்கலாம். ஆனா அளவுக்கு மிஞ்சினா வேற மாதிரி ஆயிரும்னும் புரிஞ்சிக்கனும். இந்தப் பாடம் கண்டிப்பா அவசியம். சன் டீவி கொண்டு வந்த டிரெண்டு இது. மாறுனா நல்லது. இல்லைன்னா மக்கள் மாத்தீருவாங்க.

அதே மாதிரி எடுத்ததுமே சிலர் மொக்கைன்னு சொன்னாங்க. அவங்க ஏன் சொன்னாங்கன்னு தெரியலை. அதது அவங்கவங்க கருத்து. அத மதிக்கிறேன். ஆனா மொக்கைன்னு சொல்ற அளவுக்கு மோசமாயில்லைங்குறது எங்கருத்து.

மொத இருபது நிமிசம் அருமையோ அருமை. சிவாஜிதான் கட்டபொம்மனா சிவபெருமானா ராஜராஜ சோழனா நடிக்கனும். அது மாதிரி சூர்யா ரொம்பப் பொருத்தமா இருக்காரு. அதுலயும் தன்னோட குடும்பத்த பாத்துக்கிட்டே தூணுக்குப் பின்னாடி மறைஞ்சு போற காட்சியமைப்பு அட்டகாசம். போதிதர்மரா காட்டும் முகபாவங்களும் அவ்ளோ குளிர்ச்சி. அதே மாதிரி சீனாவுல துணியை விலக்கிக் கொழந்தையைக் காட்டும் காட்சி. அந்த எடங்கள்ளாம் ரொம்பவே அழகு.

சுருதி அழகா இருந்தாலும் லேசாப் பூசுனாப்புல இருந்தா கலக்கலா இருக்கும். புன்னகை அழகு. ரொம்பப் பாதுகாப்பா நடிச்சிருக்கிறது தெரியுது. 🙂 பாலாவோட படத்துல ஒரு தடவ நடிச்சிட்டா அதுக்கப்புறம் பிரமாதமா நடிப்பு வந்திரும். கிண்டலுக்குச் சொல்லல. உண்மையாவே சொல்றேன்.

சுருதிக்குச் சின்ன அறிவுரை. வெளிநாட்டுல இசை படிச்சிட்டு வந்து தமிழ்ப் பாட்டைக் கேட்டதும் அதுல மெய்மறந்து அப்பாவைக் கூட்டீட்டுப் போய் மெல்லிசை மன்னர் கிட்ட ஆசி வாங்குறதெல்லாம் சரிதான். ஆனா தமிழ் உச்சரிப்புக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தையும் புரிஞ்சிக்கனும். பேசும் போது இருக்குற திருத்தம் பாடும் போது மொத்தமா இல்ல. உல்லம் துல்லுமா வெல்லம் அல்லுமான்னு பாடுறது நல்லாயில்ல. ஆனா குரல் நல்லாருக்கு.

ஹாரிஸ் ஜெயராஜ்… இந்தப் படத்தோட பலவீனம் ஹாரிஸ் ஜெயராஜ்தான். தேவா இசையமைச்சிருந்தாக் கூட இன்னமும் பொருத்தமா இருந்திருக்கும். யம்மா யம்மா பாட்டு நல்லாருக்கு. ஆனா அது எம்.எஸ்.வியையும் இளையராஜாவையும் கண்டமேனிக்கி ஞாபகப் படுத்துது. மத்த பாட்டெல்லாம் படுத்துது. அடுத்த படத்துல இவருக்குப் பதிலா சத்யா, கிப்ரான்னு முயற்சி பண்னுங்க. புதுப்பசங்க நல்லாவே யோசிக்கிறாங்க.

பாட்டுகள எடுத்த விதம் நல்லாயிருக்கு. அந்தச் சீனப்பாட்டு அட்டகாசம். நம்மூரும் முந்தி அழகாத்தான் இருந்துருக்கும். நம்மதான் குப்பையப் போட்டு அசிங்கப்படுத்தீட்டோம்.

அந்த வில்லனப் பத்திச் சொல்லியே ஆகனும்யா.. எங்க புடிச்சாங்க. நடிப்பும் நல்லா வருது. சண்டையெல்லாம் கண்ணாபின்னான்னு ஸ்டைலு. அதுலய மரக்கட்டைய வெச்சி வேனைக் கவுக்குறது… வாவ். இப்படியாப்பட்ட வில்லனுக்குக் கொஞ்சமாச்சும் பொருந்துற மாதிரி சூர்யா பாடுபட்டு நடிச்சிருக்காருன்னும் சொல்லனும்.

தமிழ் தமிழ்னு ரொம்ப ஏத்தி விடுறாங்கன்னு ஒரு குற்றச்சாட்டு. கண்டிப்பா அந்தத் தொனியைக் குறைச்சிருக்கலாம். நம்மாளுங்கள்ளயே தமிழ்னு சொன்னா காதுவலி வர்ரவங்க உண்டு. இதுல தமிழ் தமிழ்னு நாலு வாட்டி சொன்னா விடுவாங்களா? போதிதர்மன் தமிழனான்னு கூடக் கேட்டாலும் கேப்பாங்க. பல்லவங்களோட மூலம் நமக்குத் தெரியாது. ஆனா அவங்களைத் தமிழ் மன்னனாத்தான் சாளுக்கியனும் வேங்கியனும் பாத்துச் சண்ட போட்டான். ஒருவேளை கணிதமேதை ராமானுஜம் ஆதிசங்கரர் வெச்சி எடுத்திருந்தா பாராட்டீருப்பாங்க. ஆதிசங்கரரும் கூடுவிட்டுக் கூடுபாஞ்சி கில்பான்சியோ ஜில்பான்சி பண்ணவருதான. அவருக்கும் ஒரு வாரிசுக் கூட்டம் இருக்குன்னு சொல்லிரலாம்.

ஒன்னு உறுதி. பெருமை பேசுறத விட்டுட்டுச் செயல்ல காமிச்சாத்தான் தமிழன் நல்லாப் பொழைக்க முடியும். மலையாளிகள் கிட்ட இருந்து இதக் கத்துக்கனும். தப்பில்லை. வேணும்னா கத்துக்கிட்டுதான் ஆகனும். படத்துல சுருதி சொன்ன மாதிரி “அப்ப வேற! இப்ப வேற!”தான்.

நோக்கு வருமத்தால இதெல்லாம் செய்ய முடியுமா? டி.என்.ஏயை வெச்சி இதெல்லாம் முடியுமான்னும் கேள்விகள். லாஜிக் இடிக்குதாம். கிட்டத்தட்ட 20 வருசத்துக்கு முன்னாடி டைனோசார் டி.என்.ஏஐயும் தவள டி.என்.ஏயையும் கலந்து கட்டி டைனோசார் பண்ணாங்கன்னு சொன்னா நம்பிப் பாத்தோம். தமிழ்ப்படத்துல அதெல்லாம் சொல்லக் கூடாது போல.

முருகதாசுக்கு ஒரு சின்ன அறிவுரை. பொதுவாவே படத்த அவசர அவசரமா முடிக்கிறீங்க. அதுக்காக இன்னும் நீட்டனும்னு பொருள் இல்ல. பிரச்சனையை எப்படி முடிக்கிறதுன்னு நல்லா யோசிங்க. அதுவே போதும்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

10 Responses to ஏழாம் அறிவும் ராமானுஜ ஆதிசங்கரரும்

 1. sudgopal says:

  அப்போ ஒரு தபா பாக்கலாம்னு சொல்றீங்க போல.ரைட்டு…பாத்துடுவோம்…அப்பால “நம்ம மெட்ரோ”ல ஊர்கோலம் போனீங்களாமே???

  • GiRa says:

   கண்டிப்பா பாக்கலாம். 🙂

   மெட்ரோவுல போகலாம்னுதான் நெனச்சேன். ஆனா முடியலை. ஆனா ஒரு வாட்டி போய்ப் பாக்கனும். 🙂

 2. raz_funz says:

  நான் என்ன நினைத்தேனோ அதையே தான் நீயும் சொல்லியிருக்க மச்சி அருமையான விமரசனம்.

  • GiRa says:

   சூப்பர். 🙂 படம் பாத்துட்டு மனசுல பட்டதச் சொன்னேன். குப்பைன்னு ஒதுக்க வேண்டிய படமில்லை இதுங்குறது என் கருத்து. 🙂

 3. amas32 says:

  Touched all the pluses in the film. Very good assessment of Shruthi. I would say she has done well for a beginner, but requires more dedication and hard work to survive in this field, as well as to keep up her father’s name. Murugadoss had a good idea but did not execute it well. There were lot of holes in the screen play and that you can excuse in somebody else but not in somebody of his experience and stature. The villain Dong Lee (is that his real name) was too good and always the hero shines depending on how effective the villain is and Suriya was lucky to work with a guy like him. But there was absolutely no chemistry between Shruti and Suriya. That should have been rectified by the director. So on many counts I feel that the director was a let down for the movie.
  amas32

 4. jaghamani says:

  முழு விமர்சனத்தையும் பாக்குறதுக்கு முன்னாடி கண்டேன் சீதையைக் கணக்கா “படம் கண்டிப்பா பாக்கலாம்”னு சொல்லிக்கிறேன்./

  தெலிவான விரிவான நடுநிலை விமர்சனக் கருத்துகளுக்கு பாராட்டுக்கள்..

 5. நீங்க எழுதுறிங்களா…………….சொல்லவே இல்லே…….

  • GiRa says:

   திரும்ப எழுதத் தொடங்கியாச்சுங்க. பாடுன வாயும் ஆடுன காலும்னு ஒரு பழமொழி சொல்வாங்கள்ள 🙂

 6. Mouli says:

  ஜிரா, இன்னைக்குத்தான் டீச்சர் ப்ளாக் மூலமாக நீங்க இங்கே கடை திறந்திருப்பது தெரிந்தது….. வாழ்த்துக்கள். 🙂

  • GiRa says:

   நன்றி. 🙂

   நம்ம வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி கலந்த வணக்கங்கள். 🙂

   டீச்சருக்குத் தெரியாம ஒன்னு நடக்க முடியுமா?

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s