பக்ளக்-04-நவம்பர்-2011

வாசகர் நெஞ்சங்களை பக்பக் என அடிக்க வைக்கும் அதிபயங்கர அல்ப அரசியல் இதழ்
டீச்சர் (ஆசிரியர்) – சீச்சீ சீனிவாசன்
வெளியாகும் நாள் – எப்பப்பல்லாம் தோணுதோ அப்பப்பல்லாம்
விலை – பின்னூட்டம் போடுறவங்களுக்கு ஃபிரீ. போடாதவங்களுக்கு இலவசம்.

சென்னை உயர்நீதி மன்றம் பாலியல் மருத்துவமனையாக மாற்றம்

சென்னை – பாரிமுனை – சென்னையில் இருக்கும் பாரம்பரியம் மிக்க உயர்நீதிமன்றம் பாலியல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ஜெபலலிதா அவர்கள் அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.

நாட்டில் மக்களுக்குப் பாலியல் அறிவு குறைவாக இருப்பதாகவும், அதனால் குடும்பத்திற்கு உள்ளும் வெளியிலும் நிறைய குழப்பங்கள் உருவாகுவதாகவும், அது மக்களின் மனநிலையைப் பாதித்து இரண்டாம் மூன்றாம் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு மூடத்தனத்தை உருவாக்குவதாகவும் கூறிய முதல்வர், இது போன்ற தவறுகளைக் குறைக்க மிகச்சிறந்த பாலியல் மருத்துவமனை இந்தியாவிலேயே எங்கும் இல்லை என்று வருந்தினார். அந்த வருத்தத்தைப் போக்க முதன்முறையாக தமிழகத்தில் அமைக்கப்படும் இந்தப் பாலியல் மருத்துவமனை உதவும் என்றார். உயர்நீதி மன்றக் கட்டடத்தை இதற்காக ஒதுக்குவதாகவும் கூறினார்.

எம்.ஜி.நார். பாலியல் மருத்துவமனை என்று பெயரிடப்படவுள்ள இந்த மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் மட்டுமல்லாமல் பாலியல் செயல்பாட்டு செய்முறை விளக்க வகுப்புகளும், அதற்கேற்ற டெஸ்ட்டுகளும் நடத்தப்படும் என்றும் தெரிகின்றது. இந்த டெஸ்டில் வெற்றி பெறுகின்றவர்களுக்கு மட்டுமே திருமணம் செய்ய அனுமதிக்க புதிய சட்டம் இயற்றப்படுமா என்ற கேள்விக்கு, பரீசிலக்கப்படும் என்று முதல்வர் ஜெபலலிதா தெரிவித்தார்.

அத்தோடு உயர்நீதி மன்றம் தொடர்பான பொருட்கள் அனைத்தும் ரங்கநாதன் தெருவிற்கு மாற்றப்படும் என்றும் தெரிவித்தார். உயர்நீதி மன்றம் தாம் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லாம் முட்டுக்கட்டை போடுவதாலேயே இந்த முடிவை எடுத்ததாக யாரும் தவறாக எண்ணக்கூடாது. மக்கள் கூடுமிடத்திலே நீதியிருக்க வேண்டும். அந்த வகையில் ரங்கநாதன் தெருவைவிட பொருத்தமான வேறு இடம் இல்லை என்பதைத் தெளிவு”படுத்தினார்”.

இந்தப் பாலியல் மருத்துவமனை தமிழர்களுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் என்று தினமலற் மற்றும் ஆங்கிலப்பத்திரிக்கையான கிண்டு-வும் புல்லரித்து மயிர்க்கூர்ச்செரிந்து பாராட்டியுள்ளன. தன்னைப் போலவே ஜெபலலிதா சிந்திப்பதாக உபி முதல்வர் சாயாவதி பெருமையாகப் பேசினார்.

பாலியல் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு பிரதமர் பன்மோகன் சிங் அழைக்கப்படுவார் என்று தெரிகிறது. இதுபோன்ற பாலியல் மருத்துவமனகள் ஒவ்வொரு மாநிலத்திலும் துவக்கப்படுவது நல்லது என்று சொன்னியா கோந்தி கருத்து தெரிவித்தார். இங்கிலாந்தில் பார்களில் இலவசமாகவே இந்தப் பாலியல் பள்ளிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார். முன்னாள் பிரதமர் ராசீவு கோந்தியும் முன்னாள் மத்திய அமைச்சர் மாத்தவா ராவா சிந்தியாவும் அங்கு படித்தமை உலகறிந்தது.

நீதியும் பேதியும் சோதியில் போகுமோ? – முக்க வருத்தம்

உயர்நீதிமன்றத்தைப் பாலியல் மருத்துவமனையாக்குவது குறித்து பாலியல் திறனுள்ள தமிழர்கள் முடிவு செய்யட்டும் என்று முக்க அறிக்கை வெளியிட்டு உள்ளார். 1008ம் முறையாக தனது மகள் கன்னிமொழிக்கு ஜாமீன் கிடைக்காத நிலையிலும் வருத்தம் பாராது தான் அயராது பாடுபட்டு உழைப்பதைச் சுட்டிக் காட்டினார்.

தமிழர்கள் பாலியலில் பெருந்திறம் வாய்ந்தவர்கள். திறம் மிகுந்து செயல் மிகுந்து வினை மிகுந்து அது ஓரிடத்தில் மட்டும் போதாமல் ஈரிடத்தும் மூவிடத்தும் பாய்ந்த தமிழர்கள் உள்ள நாடு இது. கலிங்கத்துப் பரணி என்றால் என்ன? கலிங்கம் என்றால் துணி. அந்தத் துணிக்குப் பரணைக் கொடுத்து விட்டுக் கொண்டாடிய தமிழ்ப்பண்பாடு அம்மையாருக்குக் கசப்பாக இருப்பதில் வியப்பில்லை. வீட்டிற்குப் பத்து பிள்ளைகள் இருந்த காலம் மாறி வீட்டிற்கு ஒன்று கூட சமயங்களில் கிடைக்காமல் போவதற்குக் காரணம் யார் என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மறைந்த பெருமைமிகு பக்கன் என்னிடத்தில் தனியாக ஒன்று சொன்னார். தம்பி முக்க, தமிழர்களுக்கு முன்னோடித் தலைவானாக நீயேதான் இருக்க வேண்டும் என்று அன்று அன்புப் பெருந்தகை ஊரரியாமற் சொன்னதை இன்றும் நான் போற்றி நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். எனக்கா பாலியல் தெரியாது? என்னுடைய திரண்ட குடும்பத்தைப் பார்த்தே நீங்கள் உண்மையை அறிவீர்கள். தங்களுக்கு வேண்டியதை மக்கள் மேல் திணிக்கும் வாய் பிளக்கும் வசந்தசேனாவை அனைவரும் அடையாளம் காண வேண்டும்.

அதற்கு மேலும் பாலியல்பள்ளி வேண்டுமென்றால் திகார் சிறைச்சாலையையோ பாட்டியாலா நீதிமன்றத்தையோ தேர்ந்தெடுக்காமல் சென்னை உயர் நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பது உள்நோக்கமுடையது. அரசு நடத்துகின்றவர்கள் அந்தப் பள்ளியில் பயின்று தேர்வெழுதி சான்றிதழ் பெறுவார்களா என்று உணர்ச்சிமிகு கேள்வியொன்றையும் எழுப்பினார். அப்பொழுது சுடாலின், குசுப்பு, பண்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர். பழகிரி மதுரையிலேயே தங்கிவிட்டதாகத் தெரிகிறது.

ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த காண்டந்துவனாரின் பாட்டான நீதியும் பேதியும் சோதியில் போகுமோ என்ற பாடலை விளக்கமாக பரசொலியில் முக்க எழுதியிருக்கிறார். கிடைத்தால் படித்துக் கொள்ளுங்கள். ”பின்”விளைவுகளுக்கு பக்ளக் பொறுப்பல்ல.

ஜெபலலிதா ஒரு டிக்காசா லுப்பிடியோ

ஜெபலலிதாவின் ஆட்சி லும்பினிக்கா நாட்டில் ஆட்சி செய்த டிக்காசா லுப்பிடியோவை நினைவு படுத்துவதாக வைக்கோல் தெரிவித்தார். இது தன்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்குவதாகக் கூறிக் கண்கலங்கினார். ஆயிரக்கணக்கான தமிழர்களை இழந்த பின்னும் நீதியைப் புறந்தள்ளிப் பாலியலைப் பாடமாக்கும் ஜெபலலிதாவை மக்கள் தண்டிப்பார்கள் என்று கதறி அழுதார். நீதிமன்றத்து ஆவணங்களை ஏற்கனவே நீதிபதிகளோடும் வழக்குரைஞர்களோடும் பேசி கலிங்கப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு மாற்றிவிட்டதைக் கூறினார். இனிமேல் சென்னை உயர்நீதிமன்றம் கலிங்கப்பட்டியிலிருந்து செயல்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். வைக்கோலின் கலிங்கப்பட்டி வீடு கால்நடை மருத்துவமனையாக மாற்றப்படலாம் என்று நம்பத்தகுந்த அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் மருத்துவமனையில் பசும்பாலையும் எருமைப்பாலையும் மிக்ஸ் செய்து விடுவார்களோ என்ற சந்தேகம் எழுதவதாக விஸ்கிகாந்த் கூறினார். மிக்சிங் பற்றி அவர் சொல்லும் பொழுது தொண்டர்கள் ஆரவாரமிட்டனர்.

நீதிமன்றத்தில் பாலியல் மருத்துவனை வைத்தால் தமது சமூகத்து மக்கள் அவ்வளவு தூரம் வருவது கடினம் என்பதால் பைலாபுரம் தோட்டத்தில் தான் ஏற்கனவே ஆண்டாண்டு காலமாக பாலியல் மருத்துவமனை நடத்தி வருவதை ராமபாஸ் சுட்டிக்காட்டினார். தானும் தன்னுடைய மகன் அன்புசனியும் மருத்துவர்கள் என்பதால் பாலியல் மருத்துவமனை நடத்துவதற்குத் தாங்களே பொருத்தமானவர்கள் என்று விளக்கினார்.

அசத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்த சண்டையில் பாலியல் மட்டுமல்லாமல் மோரியல் தயிரியல் நெய்யியல் மருத்துவமனைகளும் வேண்டும் என்று மாங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வேட்டியைக் கிழித்துக் கொண்டனர். தத்தமது வேட்டிகளைக் கிழித்துக் கொள்ளாமல் அடுத்தவர் வேட்டிகளைக் கிழித்தமை சிறப்பு. பாலியல்மருத்துவமனை நிரப்புப் போராட்டம் நடத்த தானும் மாங்கிரஸ் தொண்டர்களும் தயாராக இருப்பதாக திரு.வெங்கபாலு தெரிவித்தார். அப்போது அவர் வேட்டி நார்நாராகக் கிழிந்து போயிருந்தது.

பாலியல் மருத்துவமனை பயனுள்ளது. அங்கு தங்கள் சந்தேகங்களை நேரில் சென்று சரியான முறையில் தீர்த்துக் கொள்ள வசதி செய்ய வேண்டுமென்று “பாம் தமிழர்” ஸ்ரீமான் கேட்டுக் கொண்டார். இதற்காக தேவைப்பட்டால் அயல்நாட்டிலிருந்து பாலியல் உதவியாளர்களை தமிழக அரசு அழைத்து வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். ஆண்டுதோறும் இந்த நாளில் பாலியல் ஜெயந்தி கொண்டாட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

எத்தன பேர் சார் நீதிமன்றம் போனாங்க?

பக்ளக்கிற்குப் போட்டியாக துக்ளம் இதழ் நடத்து சே ராமஸ்வாமி அவரிடம் நமது நிருபர் கருத்து கேட்டார்கள்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லைங்க. டிரெயின்ல பஸ்ல போறப்போ எவ்ளோ போஸ்டர் பாக்குறீங்க? இதெல்லாம் பிரச்சனையிருக்குன்னு சொல்றதுக்கு ஆதாரம். பிரச்சனை இருக்குறப்போ அதைத் தீக்குறதுக்கு ஹாஸ்பிட்டல் கண்டிப்பா வேணும் சார்.

நீதிமன்றத்த மாத்தக் கூடாதுன்னு சொல்றவங்களுக்கு ஒரு கேள்வி. எத்தன பேர் சார் நீதிமன்றம் போயிருக்கீங்க? சென்னை உயர்நீதி மன்றத்துல எத்தன வாசல் இருக்குன்னு கூட இவங்களுக்குத் தெரியாது. இவங்கதான் நீதிமன்றத்துக்கே வக்காலத்து வாங்குறவங்க. என்னக் கேட்டா இவங்களை எல்லாம் புடிச்சு பாலியல் மருத்துவமனை லேப்ல டெஸ்ட்டுக்கு அனுப்பனும்.

அதான் வைக்கோல் வீட்டுக்கு நீதிமன்றத்த மாத்தீட்டாங்களே. அவரே கட்டிக்கிட்டு அழட்டும். இவ்ளோ நாள் நீதிமன்றம் இருந்துச்சு. இருந்தும் எத்தனையோ பேருக்கு நீதி கெடைக்கலை. அதுனாலயே ஜல்லிக்கட்டு படத்துல சத்யராஜும் சிவாஜியும் சேந்து வில்லன்களை அழிக்க வேண்டியதாப் போச்சு. இதெல்லாம் ஒருத்தரும் பேச மாட்டாங்க. சங்கத்தமிழ் நூல்கள் எடுத்துப் பாத்தா நீதிமன்றம் அப்படீன்னு ஒரு சொல் கெடையாது. சந்தேகம் இருந்தா எடுத்துப் படிச்சுப் பாருங்க. இதை ஏன் தமிழறிஞர்கள் பேச மாட்டேங்குறாங்க? இதெல்லாம் நாந்தான் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கு. மம ப்ரீத்தீ ஸரஸ ரசான்னு வால்மீகி சொல்லீருக்காரு. தமிழ்ல இதுக்கு “நான் பாலியலாளனா?”ன்னு பொருள். இதே பேர்ல ஒரு நாவல் எழுதீருக்கேன். படிச்சுப் பாருங்க. ஒரு கட்டிடத்துக்கு இந்த ஆர்ப்பாட்டம் பண்றது அநாகரீகம் சார்.

(இந்த வாரத்து துக்ளம் இதழில் ஆட்டோ ஸ்டாண்டு பிள்ளையார்களை இடமாற்றக்கூடாது என்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு ஆற்றல் உண்டு என்றும் சே அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார்).

பாலியல் மருத்துவமனை வேணும்னு அப்துல்லா கலாம் சொல்லீட்டா ஒத்துக்குவாங்களா சார்?

அப்படியே துக்ளம் இதழில் தாம் வெளியிட்டிருந்த நவீன சுப்ரபாதத்தை நமக்கும் கொடுத்தார்.

கௌசல்யா சுப்ரஜா ரம்பா பூர்வா சந்தியா பிரதட்சணே
ஜொள்ளிஷ்ட நரஜா நீதான் வாத்சாயனம் தெய்வமாங்கிருதம்
ஜொள்ளிஷ்ட ஜொள்ளிஷ்ட பாய்ஸ்சுக்கு கேர்ள்சே பஜ
ஜொள்ளிஷ்ட நரஜா நீதான் காண்டமே கைவல்யமாகனும்
குமுதா வினிதா சரிதா விமலா தினஸாரஸ பூஜனுதே
… இதற்கு மேலுள்ள வரிகளைப் பிரசுரிக்க பக்ளக் பத்திரிக்கையின் விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை

உச்சநீதிமன்றத்தைப் பாலியல் மருத்துவமனை/பள்ளியாக மாற்றுவது குறித்து வாசகர்கள் தங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.

இவண்
பக்ளக் ஆசிரியர் சீச்சீ சீனிவாசன்

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in பொது. Bookmark the permalink.

One Response to பக்ளக்-04-நவம்பர்-2011

  1. sudgopal says:

    தெய்வமே…முடியலை…_/\_ வி..வி..சி…ஒரு பத்தி தான் வாசிச்சி முடிச்சிருக்கேன்..மீதியும் வாசிச்சுட்டு வர்ரேன்…

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s