அபூர்வ ராகங்கள் – 2 – ஒரு அவியல் ஒரு பொரியல்

தமிழ்ல இத்தன படம் வந்திருக்கு. எத்தன பாட்டு வந்திருக்கு. ஆனா எத்தன சாப்பாட்டுப் பாட்டுகள் வந்திருக்கு? ரொம்ப லேசா விரல் விட்டு எண்ணலாம்.

ரொம்பப் பிரபலமான சாப்பாடுப் பாட்டுகளும் உண்டு. இதுல முன்னணில இருக்குறது இந்த ரெண்டு பாட்டுகள்.
1. கல்யாண சமையல் சாதம் – மாயாபஜார் படத்திலிருந்து திருச்சி லோகநாதன் பாடியது
2. நித்தம் நித்தம் நெல்லிச் சோறு – முள்ளும் மலரும் படம் மலையாளத்திலும் எடுக்கப்பட்டது. அதுக்கு இசை மெல்லிசை மன்னர். எல்லாமே புது மெட்டுகள். அதுல வரும் அயிலா பொறிச்சதுண்டு பாட்டு கேரளாவைக் கலக்கிய பாட்டு. எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாட்டு.

இந்த ரெண்டு பாட்டுக்கு அப்புறந்தான் மத்த பாட்டெல்லாம் வருது.
1. என்ன சமையலோ – உன்னால் முடியும் தம்பி
2. சமையல் பாடமே – மணிப்பூர் மாமியார். இது என்ன சமையலோ பாட்டின் மூலம். கேட்டா வித்யாசம் தெரியாது. மணிப்பூர் மாமியார் படம் ஓடலை. பாடல்களும் பிரபலம் ஆகலை. அதுனால அந்தப் பாட்டைப் பின்னாடி உன்னால் முடியும் தம்பி படத்துக்காக பயன்படுத்திக்கிட்டாரு இளையராஜா
3. வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா – இது பாபு படத்துல வரும் பாட்டு. இந்தப் பாட்டும் நல்லா கலக்கலா இருக்கும். ஒரு மாதிரி குத்துப்பாட்டு. இன்னைக்கும் புதுசாயிருக்கும் பாட்டு.
4. சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன் – இது என் மனைவிங்குற பழைய படத்துப் பாட்டு. இந்தியா சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னால வந்த படம். இந்தப் படத்தின் படி, கோடம்பாக்கம் ஊரை விட்டு ரொம்பத் தள்ளியிருக்காம். “பட்டணத்தை விட்டு இவ்வளவு தள்ளி வந்து பட்டிக்காட்டுல வீட்டைக் கட்டீருக்கீங்களே”ன்னு ஒரு வசனம். கேட்கப்பட்டவர் முன்னாடி மயிலாப்பூர்ல இருந்தாராம். இப்படியாப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் படத்துல நெறைய. சில பாட்டுகளை ஓட்டுனா, அந்தக் கால சென்னை பத்தி நெறைய தெரிஞ்சிக்கலாம்.
5. முத்துச் சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும் – அன்னகிளியில் கல்யாணப் பாட்டுதான். ஆனா சாப்பாட்டை விட கல்யாண விவரிப்பு நெறைய இருக்கும்.

என்னைப் பொருத்த வரைக்கும் இந்தப் பாட்டுகளுக்குப் பிறகுதான் மத்த சாப்பாட்டுப் பாட்டுகள்.
1. தூக்குச்சட்டியத் தூக்குப் பாத்து மோப்பம் புடிப்போம் – எஜமான்
2. சோறு தின்னு நாளாச்சு கோழி தின்னு நாளாச்சு – நினைவுச் சின்னம்
3. மட்டன் கறி கொண்டு வரட்டா – பிஸ்தா
4. தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா – ஏதோ ஒரு விஜய் படம்
5. கருவாட்டுக் கொழம்பு கனகச்சிதமா வச்சதாரு – ராசய்யா

இன்னும் ஒன்னு ரெண்டு பாட்டுகள் இருக்கலாம். ஆனா அவ்வளவா பிரபலமாகாத பாடல்கள்.

இந்தப் பட்டியல்ல ஒரு அபூர்வமான பாட்டு விடுபட்டுப் போயிருக்கு. அந்தப் பாட்டைத் தற்செயலாத்தான் கண்டுபிடிக்க நேர்ந்துச்சு.இது மாதிரி இன்னும் எத்தன விடுபட்டுப் போயிருக்கோ தெரியலை. ( எங்கள் தங்கம் படத்துல எம்.ஜி.ஆர் கதாகாலாட்சேபம் பண்ற மாதிரி கூட பாட்டு உண்டு. அதையும் தேடீட்டிருக்கேன். )

சரி. பாட்டுக்கு வருவோம். நீரும் நெருப்பும் படம் எம்.ஜி.ஆர் நடிச்சு ஓடாத படங்கள்ள ஒன்னு. அதுக்குக் காரணம் இருக்கு. வழக்கத்தை விடவும் எல்லாத் துறையிலும் மூக்கை நுழைச்சாரு எம்.ஜி.ஆர். இதுல மாட்டீட்டு ரொம்பப் பட்டது எம்.எஸ்.விஸ்வநாதன். யாரு பாடனும், என்ன மாதிரி இசைக்கருவி பயன்படுத்தனும்னுங்குற வரைக்கும் எம்.ஜி.ஆரோட தலையீடு போச்சு. அதுனால இந்தப் படத்துல ஒரு பாட்டு கூட பிரபலமாகலை. இதுனால அடுத்த படத்துக்கு இசை அமைக்கவே மாட்டேன்னு மெல்லிசை மன்னர் சொல்லீட்டாராம். இனிமே தலையிட மாட்டேன்னு எம்.ஜி.ஆர் உறுதி கொடுத்த பிறகுதான் மெல்லிசை மன்னர் ஒத்துக்கிட்டாராம். இதுனால உலகம் சுற்றும் வாலிபன் படத்துல கூட சுதந்திரமா இசையமைக்க வாய்ப்பு கிடைச்சது.

நீரும் நெருப்பும் படத்துல ஒரு சாப்பாட்டுப் பாட்டு உண்டு. கதாநாயகி சமையல்காரி வேடம் போட்டு வில்லன் கிட்ட இருந்து தப்பிக்கனும். வில்லனோட ஆட்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மொழி பேசுறவங்க. அவங்க கிட்ட நைசா வேலைய ஒன்னொன்னா தலையில கட்டீட்டு தப்பிக்கிறாங்க கதாநாயகி.

இது எல்.ஆர்.ஈஸ்வரியோட பாட்டு. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு கலந்து கட்டி கலக்கீருப்பாங்க. பொதுவாவே எல்.ஆர்.ஈஸ்வரியம்மா குரல் ஜெயலலிதாவுக்குப் பொருத்தமா இருக்கும். அந்தந்த மொழி நகைச்சுவை நடிகர்களையும் பாட்டில் பயன்படுத்தியிருப்பாங்க. அதே மாதிரி ஒவ்வொரு மொழிக்கும் பின்னணி இசைக்கருவிகளும் மெட்டு, தாளம் எல்லாமே மாறும். இந்தப் பாட்டப் பாருங்க. உங்க கருத்தச் சொல்லுங்க. 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in எம்.எஸ்.விசுவநாதன், எம்.ஜி.ஆர், எல்.ஆர்.ஈசுவரி, ஜெயலலிதா, திரைப்படம், திரையிசை and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அபூர்வ ராகங்கள் – 2 – ஒரு அவியல் ஒரு பொரியல்

 1. பாஸ் .. கொஞ்சம் கொஞ்சமா மெருகேருது… அப்படியே நூல் பிடிச்சு ஏறிடுங்க..! நம்ம கட்டுரையும் வந்திரும்..! “அவியல், பொரியல், மசியல், துவையல்”.. ஆஹா..சமையல் செய்முறையை வைத்தே பேரும் கொடுத்த அந்த புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க..! இந்த பாட்டை கேட்டிருந்தாலும்.., ஏறக்குறைய கால் நூற்றாண்ட்டுக்கு பின் செவி வழி பாய்ந்தோடும் எல் ஆர் ஈஸ்வரி யின் குரல்..! “ஞான் கேரள நாரியும் ஆவேன்” … ..!! நாக்கூறும் ஆந்திரா “குங்குறு” சட்னி.., கர்நாடகாவுக்கு ஏதும் இல்லையோ.. ஒன்லி ஊரு ஸ்பெஷல் ..!?
  அருமையான பதிவு பாஸ்..! தொடரட்டும் .

 2. Kris says:

  மோசமான MGR படங்களில் மிக முக்கியமான மோசமான படமென்பதால் ,நீரும் நெருப்பும் படத்தை தீண்டியதே இல்லை..இப்படி ஒரு வித்தியாசமான் பாடலும் அதில் உண்டு என்பதே இன்றுதான் தெரியும்..

 3. KRISHNA says:

  எம்.ஜி.ஆர். அவர்களின் தோல்வி படங்கள் மற்ற நடிகர்களின் வெற்றி படங்களுக்கு சமம் என்று சொல்லப்படுவது உண்டு …
  எம்.ஜி.ஆர். தலையீட்டால் தான் நீரும் நெருப்பு திரைப்படம் தோல்வி அந்த படத்தின் பாடல்கள் பிரபலம் அடையவில்லை என்று சொல்வது அபத்தத்தின் உச்சம்….கடவுள் வாழ்த்து பாடும் இளம் காலை நேரக் காற்று என்ற அற்புத பாடல் இல்லையா? கத்தி கம்பு என்று தமிழரின் வீர விளையாட்டுக்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டே உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி அவசியம் என்று எம்.ஜி.ஆர். பாடும் விதம் அருமையா இருக்கும்.

  மெல்லிசை மன்னரின் இசை இன்று வரை இனி என்றுமே சாகா வரம் பெற்று இருக்கும் என்பதற்கு அடிப்படை காரணமே எம்.ஜி.ஆர். என்ற தலையீடே முக்கிய காரணமாய் இருந்திருக்கிறது!
  இதை 2 விதமாக ஆதாரத்துடன் சொல்ல முடியும்.
  ஒன்று : மெல்லிசை மன்னர் தந்த தேனிசை பாடல்களிலே அதிகம் புகழ் பெற்றது சிரஞ்சீவித்தனம் உடையது எம்.ஜி.ஆர். பட பாடல்களே.
  இரண்டு : மெல்லிசை மன்னர் இசை அமைக்காத படங்களிலும் மெல்லிசை மன்னருக்கு நிகரான இசையை எம்.ஜி.ஆர். படங்களில் காணலாம். உதாரணம் படம்: நான் ஏன் பிறந்தேன் ? (பாரதிதாசனின் கவிதை மிக கடினமான பாடல் சித்திரை சோலைகளே / நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் / உனது விழியில் எனது பார்வை உலகை காண்கிறேன்) படம் இதய வீணை (பொன் அந்தி மாலை பொழுது / காஷ்மீர் பியுட்டிபுல் காஷ்மீர்) இசை சங்கர் கணேஷ்..

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s