Monthly Archives: June 2012

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 4

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இரண்டு செயல்கள் தேவை. ஒன்று விளம்பரம். மற்றொன்று விநியோகம். கந்த சஷ்டிக் கவசத்துக்கான விளம்பரத்தை தேவராயசுவாமிகள் செய்தார். விநியோகத்தை இறைவன் செய்தான். விளம்பரத்தின் மூலம் ஒரு பொருளைப் பிரபலப்படுத்தலாம். ஆனால் அது தொடர்ந்து மக்களின் மனதில் இருப்பதற்கு தரம் ஒன்று மட்டுமே … Continue reading

Posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் | Tagged , , , , , , , , , , , , , , | 18 Comments

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 3

இந்தப் பதிவின் முந்தைய பதிவு இந்தச் சுட்டியில் உள்ளது. திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டத்திலொரு கடற்கரை ஊர். தமிழ் இலக்கியங்கள் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது திருச்செந்தூர். “சீர்கெழு செந்திலும்” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். சீரலைவாய் என்று தொல்காப்பியம் முதலான நூல்கள் குறிப்பிடுகின்றன. ஊர்களில் செம்மையான ஊர் செந்தூர். அந்தச் செந்தூரிலே செம்மையான இல்லம் … Continue reading

Posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், பக்தி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் | Tagged , , , , , , , , , , , , | 12 Comments

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 2

இந்தப் பதிவின் முந்தைய பாகத்தை இந்தச் சுட்டியில் படிக்கலாம். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு பிற்காலக் கம்பர் என்றே பெயர். தமிழ் நூல்களை இவர் தேடித் தேடி வெளிக்கொண்டு வந்த ஆர்வம்தான் பின்னாளில் உ.வே.சாவிற்கு ஓலைச்சுவடி தேடத் தூண்டுகோலாக இருந்தது என்றால் மிகையாகாது. தெருத்தெருவாக பிச்சையெடுத்து உண்ணும் ஒருவருக்குத் தண்டியலங்காரம் என்னும் நூலறிவு உண்டு என்பது அறிந்து … Continue reading

Posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், பக்தி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் | Tagged , , , , , , , , , | 15 Comments

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 1

“ராகவன், டி.வி.எல்.எஸ் பஸ்ல ஏறி உக்காந்ததும் பாட்டு போடுவாங்க. ஒன்னும் புரியாது. ஆனாலும் ஏதோ மாதிரி நிம்மதியிருக்கும். பாட்டு மாதிரியும் இல்லாம வசனம் மாதிரியும் இல்லாம ஒருவிதமா நல்லாருக்கும்ல.” கல்லூரி காலங்கள்ள ஒரு தோழி இப்படிச் சொன்னதுதான் இந்தப் பதிவு எழுத உக்காந்ததும் நினைவுக்கு வந்தது. அந்தத் தோழிக்கும் பிறந்த ஊர் தூத்துக்குடிதான். அவர் ஒரு … Continue reading

Posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், பக்தி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் | Tagged , , , , , , , , , | 24 Comments

கௌசல்யா சுப்ரஜா ராமா…

இது எம்பி3 காலம். நம்மள்ள எத்தன பேருக்கு டேப்ரெக்கார்டர் இன்னும் நெனைவிருக்கு? எத்தன பேர் டேப்ரெக்கார்டரப் பாத்திருக்கீங்க? டேப்ரெக்கார்டர் இருந்தப்போ பல தமிழர்கள் வீட்டுல ரெண்டு கேசட் தவறாம இருக்கும். அடிக்கடி போட்டுக் கேக்குறாங்களோ இல்லையோ, கந்தசஷ்டி கவசமும் வேங்கடேச சுப்ரபாதமும் கண்டிப்பா இருக்கு. சஷ்டிகவசம் சூலமங்கலம் சகோதரிகள் பாடியது. வேங்கடேச சுப்ரபாதம் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியது. … Continue reading

Posted in இறை, சுப்ரபாதம், பக்தி, விஷ்ணு | Tagged , | 8 Comments