கௌசல்யா சுப்ரஜா ராமா…

இது எம்பி3 காலம். நம்மள்ள எத்தன பேருக்கு டேப்ரெக்கார்டர் இன்னும் நெனைவிருக்கு? எத்தன பேர் டேப்ரெக்கார்டரப் பாத்திருக்கீங்க?

டேப்ரெக்கார்டர் இருந்தப்போ பல தமிழர்கள் வீட்டுல ரெண்டு கேசட் தவறாம இருக்கும். அடிக்கடி போட்டுக் கேக்குறாங்களோ இல்லையோ, கந்தசஷ்டி கவசமும் வேங்கடேச சுப்ரபாதமும் கண்டிப்பா இருக்கு. சஷ்டிகவசம் சூலமங்கலம் சகோதரிகள் பாடியது. வேங்கடேச சுப்ரபாதம் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியது.

ஒன்னு தமிழ். இன்னொன்னு வடமொழி. மொழி புரியாட்டியும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிய சுப்ரபாதம் தமிழ்நாட்டுல மிகப்பிரபலம்.

இப்போ சஷ்டிகவசமும் சுப்ரபாதமும் எம்பி3யாவே இருக்குது.

சுப்ரபாதம் எல்லா சாமிகளுக்கும் பாடுவாங்க. ஆனாலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி வேங்கடேச சுப்ரபாதம் மிகமிகப் பிரபலமாயிருச்சு.

இந்த வெங்கடேச சுப்ரபாதத்தைப் பத்தித் தெரிஞ்சிக்கலாம்னு அங்கங்க தேடிப்பாத்தேன். அந்தத் தகவல்களை அப்படியே ஒங்களோட பகுந்துக்கிறேன்.

அதுக்கு முன்னாடி வேங்கடேச சுப்ரபாதத்தோட மொதல் ரெண்டு வரிகளைப் பாப்போம்

கௌஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நர ஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமாநிகம்

அடுத்தடுத்த வரிகளையும் கொஞ்சம் பாப்போம். அப்புறமா விவரங்களுக்குப் போவோம்.

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலாகாந்தா த்ரிலோக்யம் மங்களம் குரு

இதுல மொதல் ரெண்டு வரிகளுமே ரொம்பப் பழசு. அதுக்கப்புறம் வர்ர வரிகள் எல்லாம் புதுசு.

வடமொழியில் எடுத்துக்கிட்டோம்னா வேதமந்திரங்களிலேயே ரொம்ப உயர்ந்த மந்திரமா ஏத்துக்கொள்ளப்பட்டது காயத்தி மந்திரம். நாலே நாலு வரிதான். ஆனா மத்த மந்திரங்களை விட இத உசத்தின்னு சொல்றாங்க. மகாமந்திரம்னு எங்க ஆபீஸ்ல இருக்கும் ஒரு உத்திரப்பிரதேச பிராமணர் சொன்னாரு.

இந்த மந்திரத்தை அருளியது விசுவாமித்ர மகாமுனிவர். இவரு பிராமணர் கெடையாது. பிறப்பால மன்னர். ஆனா அரசனாகப் பிறந்து துறவியானவரு. புத்தரும் இப்படித்தான். அரசனாப் பிறந்து துறவியானவரு. பிறப்பால் பிராமணரான வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் எப்பவும் சண்டைன்னும் சொல்றாங்க. அந்தக் கதையெல்லாம் இப்ப நமக்கெதுக்கு. Always there are fights between established setups and the new setups those want to establish. It is matter of survival and these conflicts usually go nastiest.

இந்த விசுவாமித்திரர்தான் சுப்ரபாதத்தில் வரும் முதல் இரண்டு அடிகளைப் பாடியது. எப்ப பாடுனாருன்னு கேக்குறீங்களா?

ராமாயணத்துல பாலகாண்டத்துல ராமனையும் லெச்சுமணனையும் தாடகையக் கொல்ல விசுவாமித்திரர் கூட்டீட்டுப் போறாருல்ல. அப்போ காட்டுல இரவு தூங்கி எந்திரிச்சதும் தூங்கீட்டிருக்கும் ராமனை விசுவாமித்திரர் பாடி எழுப்புறாரு.

கோசலையின் தவப்புதல்வா ராமா கிழக்கில் விடியல் வருகின்றதே
எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை

இதுதான் அந்த முதல் ரெண்டு வரிக்கும் பொருள். இதை விசுவாமித்திரர் பாடுனது தெரிஞ்சு வால்மீகி ராமாயணத்துல எழுதுனாரா… அல்லது வால்மீகியே விசுவாமித்திரர் இப்படித்தான் பாடியிருப்பாருன்னு யோசிச்சு எழுதுனாரான்னு நமக்குத் தெரியாது. எப்படிப் பாத்தாலும் இது விசுவாமித்திரர் வாய்வாக்கு.

இந்த ரெண்டு வரிய எடுத்துக்கிட்டு வெங்கடேஷுக்கு ஒரு சுப்ரபாதம் பாடுனாரு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார். ராமனையும் கோவிந்தனையும் அருமையா ஒட்ட வெச்சிருக்காருல்ல. இவரு இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராம். மேல் விவரங்கள் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

சரி. மொதல் ரெண்டு வரிக்கு வருவோம். அந்த வரிகள் வால்மீகி ராமாயணத்துல வருதுன்னு தெரிஞ்சிக்கிட்டோம். அப்ப கம்பராமாயணத்தோட ஒப்பிட்டுப் பாக்க வேண்டியதுதானே அடுத்த வேலை. 🙂

புரட்டிப் பாத்தா கம்பன் சுப்ரபாதம் பாடவேயில்லை. அட..ன்னு ஒரு நொடி ஆச்சரியப்பட்டு அப்புறமா எதுனாலன்னு யோசிச்சேன்.

ராமனையும் லெச்சுமணனையும் விசுவாமித்திரருக்கு உதவி செய்யத்தான் தசரதரு அனுப்பி வெச்சாரு. அப்படியிருக்க கூட வந்த முனிவர் எழுப்ப வேண்டிய அளவுக்கும் கடமைகளை நினைவுபடுத்த வேண்டிய அளவுக்கும் ராமன் அசமந்தமா தூங்குனார்னு நெனச்சுக்குவாங்களேன்னு கம்பர் யோசித்திருக்கலாம்.

சரி. எனக்குத் தெரிஞ்சதச் சொல்லீட்டேன். இது தொடர்பா ஒங்களுக்குத் தெரிஞ்ச கருத்துகளைச் சொல்லுங்க. நான் கேட்டுக்கிறேன்.

அன்புடன்,
ஜிரா

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இறை, சுப்ரபாதம், பக்தி, விஷ்ணு and tagged , . Bookmark the permalink.

9 Responses to கௌசல்யா சுப்ரஜா ராமா…

  1. I have heard about the subrabatham and its significance in ramayana, if you want to know more try listening to velukudi discourses on this subject, he loves kambar as well and compares the two ramayana in a nice way. ahdu enna nadula english ? see you finally got that its easy to communicate in english at times 😛

    • GiRa ஜிரா says:

      வேளுக்குடியைக் கொஞ்சம் கேட்டிருக்கேன்.

      தமிழில் சொல்ல முடியாம ஆங்கிலத்தில் அதைச் சொல்லல. இனிமே தமிழ்ப்பதிவில் தமிழிலேயே சொல்ல முயல்கிறேன் 🙂

  2. “சுப்ரஜா” என்பதன் பொருள் “அழகான குழந்தை” “கௌசல்யை யின் அழகான குழந்தை” என்று பொருள் வரும் (என் மகளின் பெயரும் இதுதான்).

    இரண்டாவது வரிக்கான பொருள்
    “எழுந்திரு,எழுந்திரு கோவிந்தனே!
    எழுந்திரு கருட கொடியை உடையவனே !
    எழுந்திரு மலர்மகளுக்கு பிரியமானவனே !
    மூன்று உலகங்களுக்கும் நன்மைகளை அருளும் பொருட்டு எழுந்திருப்பாயாக!” (இது என்னுடைய கெஸ் தான். யாராவது இது சரியா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.)

    • GiRa ஜிரா says:

      சுப்ரஜா மிக அழகான பெயர். தங்கள் மகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 🙂
      .
      பொதுவா வடமொழியில் சு என்ற முன்னெழுத்து சிறப்பான/உயர்ந்த/உத்தமமான என்ற பொருளில் வரும்.

      சுநயநி – நயனம்னா கண். சுநயனி என்றால் மங்கலமான தூய்மையான பார்வையை உடையவள் என்று பொருள்.

      கிட்டத்தட்ட அந்த பொருளை ஒட்டியே தவப்புதல்வா என்று சொன்னேன்.

      கமலாகாந்தா – மலர்களுக்குப் பிரியமானவன் என்று வராது என நினைக்கிறேன். திருமகளுக்கு கமலா என்றும் பெயர். திருமகளின் காந்தனே என்ற பொருளில் வரும். மற்றபடி நீங்கள் சொன்ன பொருள் சரியென்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

  3. என். சொக்கன் says:

    ஆஹா, அப்படியே அந்தக் கந்தர் சஷ்டி கவசம் பற்றியும் எழுதுங்கள், யார் இந்த ‘பாலன் தேவ ராயன்’? எந்தக் காலகட்டத்தில் எழுதினார்? (மிக எளிதில் புரியும் தமிழ்)

  4. thanaithalaivi says:

    sariya padinga saar! naan malar magalukku piriyamanavane endru than type seithirukkiren.

  5. உங்கள் வலைப்பதிவை இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரமிருப்பின் பார்த்து கருத்திடவும்.
    http://blogintamil.blogspot.in/

  6. உங்கள் வலைப்பதிவை இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரமிருப்பின் பார்த்து கருத்திடவும்.
    http://blogintamil.blogspot.in/2012/06/5.html

  7. சீனிவாசன் says:

    நல்ல கருத்துகளை நல்ல செந்தமிழிலேயே எழுதினால் இன்னும் அருமையாக இருக்கும். கொச்சை தமிழ் வேண்டாம் ஐயா

Leave a reply to GiRa ஜிரா Cancel reply