டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 4

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இரண்டு செயல்கள் தேவை. ஒன்று விளம்பரம். மற்றொன்று விநியோகம்.

கந்த சஷ்டிக் கவசத்துக்கான விளம்பரத்தை தேவராயசுவாமிகள் செய்தார். விநியோகத்தை இறைவன் செய்தான்.

விளம்பரத்தின் மூலம் ஒரு பொருளைப் பிரபலப்படுத்தலாம். ஆனால் அது தொடர்ந்து மக்களின் மனதில் இருப்பதற்கு தரம் ஒன்று மட்டுமே அடிப்படையாக இருக்க முடியும்.

காசு கொடுத்து வாங்கும் பொருட்களுக்கே இப்படியென்றால், நமக்குக் கவசமாக எப்போதும் இருந்து காத்தருளும் இறைவனின் மந்திர நூலுக்கு விளம்பரம் வேண்டாமா?

கந்த சஷ்டி கவச நூலைத் தொடங்கும் பொழுதே சிறிய விளம்பரம் கொடுக்கிறார் தேவராயசுவாமிகள்.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தர்
சஷ்டிக் கவசந் தனை
அமரர் இடர் தீரச் சமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

நூலுக்கான விளம்பரமே இவ்வளவுதான். நல்ல காப்பிக்கு நறுமணம் மட்டுமே விளம்பரம். அது போலச் சுருக்கமாக இரண்டே இரண்டு வெண்பாவில் விளம்பரத்தை முடித்துக் கொண்டு விடுகிறார். இந்த விளம்பரத்தின் பொருள் என்ன? கொஞ்சம் எளிமையாக விளக்குகிறேன்.

நிமலர் அருள் கந்தர் – நிமலர் என்றால் சிவபெருமான். அந்த நிமலர் அருளிய கந்தர் என்பது இந்த வரிக்குப் பொருள்
(கந்தர்) சஷ்டிக் கவசந்தனை – நிமலர் அருளிய கந்தப் பெருமானின் சஷ்டிக் கவசம் என்னும் இந்த நூலினை
துதிப்போர்க்கு – துதித்து வணங்கி ஓதுவோருக்கு
வல்வினை போம் – பிறப்பில் உண்டாகும் கொடிய வினைகள் தொலைந்து போகும்
துன்பம் போம் – வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் எத்தனையெத்தனையோ துன்பங்கள். அத்தனையும் தொலைந்து போகும்
நெஞ்சில் பதிப்போர்க்கு – கந்த சஷ்டிக் கவசத்தை நெஞ்சத்தில் பதித்துச் சிறப்பித்த அன்பர்களுக்கு
செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும் – செல்வம் உண்டாகி, அந்தச் செல்வமும் செழித்து ஓங்கி வளரும்.
நிஷ்டையும் கைகூடும் – நிஷ்டை/தவம்/தியானம் ஆகிய மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை வழிபடும் முறைகளும் கைகூடும்

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் வினைகளின் தொல்லையின்றியும் துன்பங்களின்றியும் இருந்தால் போதாது. வாழ்வு சிறக்க செல்வம் வேண்டும். நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் என்று ஆண்டாளம்மை சொல்தும் இதேதான். இவை அத்தனையும் இருந்தாலும் போதாது. இறைவனை மனம் ஒன்றி வழிபடவும் வேண்டும். இப்படி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையுமே கந்தர் சஷ்டிக் கவசம் கொடுக்கும் என்பது தேவராயசுவாமிகள் வாக்கு.

இதற்குப் பிறகு வருவதெல்லாம் முருகன் புகழ் தாங்கும் கவச மந்திரங்கள்.

சரி. இந்த சஷ்டிக்கவசத்தினால் உண்டாகும் பயன் என்னவென்று தெரிந்து கொண்டும். இதை எப்படி துதித்து ஓதுவது?

கந்த சஷ்டிக் கவசம் என்பது மந்திரம் என்பதை முன்பே தெரிந்து கொண்டோம். ஆகையால் ஓத வேண்டும். தேவார நூல்களைக் கோயிலில் ஓதுகின்றவர்களுக்கு ஓதுவார் என்றே பெயர். அது போல சஷ்டிக் கவசத்தையும் ஓத வேண்டும்.

சரி. ஓதுவது என்பது சரி. எப்படி ஓத வேண்டும்? அதையும் தேவராய சுவாமிகள் தெளிவாகக் குறித்து வைத்திருக்கிறார்.

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவதுவாகி
கந்தர் சஷ்டிக் கவசமிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

காலையிலும் மாலையிலும் நீராடி நீறாடி, முருகக்கடவுள் மீது உண்மையான அன்பு கொண்டு ஒரு மனதாகக் கந்தர் சஷ்டிக் கவசத்தை சிந்தை மாறாது தியானிக்க வேண்டும். இதைத்தவிர வேறெந்த சடங்குகளும் தேவையில்லை.

இல்வாழ்க்கையில் இருப்பவர்கள் இதைச் செய்து வந்தாலே எல்லா நன்மைகளும் உண்டாகும். இது உறுதி.

இந்த சஷ்டிக் கவசம் என்னும் மந்திரத்தை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

திருநீறு, நீர் போன்றவைகளுக்கு மந்திர உரு ஏற்றலாம். அந்தத் திருநீறும் நண்ணீரும் நற்பயன்களைக் கொடுக்கும். சஷ்டிக் கவசம் ஓதிய பலனை நாம் அடுத்தவர்களுக்கும் கொடுக்கலாம்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

திருநீறு அல்லது நல்ல நீரை ஒரு தூய கிண்ணத்தில் வைத்து, முப்பத்தாறு முறைகள் கந்தர் சஷ்டிக் கவசத்தை ஓதினால் அந்த நீர்/நீறு மந்திரிக்கப்பட்டு விடும். அதைப் பூசிக் கொள்வது அனைவருக்கும் நற்பலன்களைக் கொடுக்கும்.

ஒரு நாள் முப்பத்தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கருளுவர்
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்

இதையும் தேவராய சுவாமிகள் கந்த சஷ்டிக் கவசத்தில் பதிவு செய்து வைக்கிறார்.

பாம்பன் சுவாமிகளை நாம் அறிவோம். இராமநாதபுர மாவட்டத்துப் பாம்பன் என்னும் ஊரில் பிறந்து முருகனருளால் புகழடைந்த இவர் சமாதியானது சென்னையில் திருவான்மியூரில்.

கலாஷேத்திரா நடனப்பள்ளிக்கு அடுத்த கோயிலில்தான் பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. அங்கு அழகியதொரு சிறு முருகன் கோயிலும் உள்ளது. காலையிலும் மாலையிலும் அங்கு செல்வது மிக உகந்தது.

அந்த பாம்பன் சுவாமிகள் ஒவ்வொரு நாளும் முப்பத்தாறு முறை கந்த சஷ்டிக் கவசத்தை ஓதினாராம். திருச்செந்தூர் கவசத்தை மட்டுமல்ல. ஆறு கவசங்களையும் முப்பத்தாறு முறை ஓதும் வழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது.

அந்த அருளினால் அவரே இன்னொரு கவசத்தை நமக்கு அருளிச் சென்றார். அதுதான் சண்முகக் கவசம்.

இந்த சண்முகக் கவசத்தை திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் அருள்பொங்கப் பாடியிருக்கிறார்கள். அவரைத் தவிர யார் பாடியிருந்தாலும் சிறப்பாக இருந்திருக்காது என்னும் அளவிற்கு அருமையான ஓதுதல் முறைப் பாடல்.

அந்த அருமையான இசையை இங்கே கேட்டு அருள் பெறுங்கள்.

நாமும் முருகன் அருளால் தேவராய சுவாமிகள் நமக்களித்த கந்த சஷ்டிக் கவசத்தையும் ஒவ்வொரு நாளும் ஓதி நற்பயன் பெருவோம்.

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

18 Responses to டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 4

 1. அருமையாக முடித்துள்ளீர்கள். மிக்க நன்றி! க. ச. கவசம் இசை நயத்தையும், பாடிய சூலமங்கலம் சகோதரிகள் (வேறு யாரும் பாடி புகழ் அடித்ததாக தெரியவில்லை) பற்றியும் கூட சொலிருக்கலாம்.

  இது போல வேறு சில தொடர்கள் எழுதுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்.

  🙂

  • GiRa ஜிரா says:

   பாராட்டுகளுக்கு நன்றி குருபரன். இது போன்ற ஊக்கங்கள்தான் ஆக்கங்களை தொடர்ந்து படைக்க உதவுகிறது. 🙂

   டகுடகு டிகுடிகு முதல் பதிவிலேயே சூலமங்கம் பாடியது குறித்து படத்தோடு எழுதியாகிவிட்டது. அதனால் இந்தப் பகுதியில் மறுபடியும் குறிப்பிடவில்லை

 2. என். சொக்கன் says:

  மிக்க நன்றி ராகவன். அருமையான தொடர்.

  • GiRa ஜிரா says:

   நன்றி நாகா. இந்தப் பதிவு எழுதியதற்கு தூண்டுகாரணமாக இருந்தது நீங்களே. இப்பிடி இன்னும் நெறைய தூண்டி விடுங்க 🙂

 3. Kumaran says:

  அருட்பாடல்களின் இறுதியில் தான் பயனைக் கூறும் பகுதிகள் வருவது இயல்பு. இந்த திருச்செந்தூர் கவசத்தில் மட்டும் தான் முதலிலேயே வந்துவிடுகிறது. புதுமை தான். இன்று உங்கள் இடுகையைப் படிக்கும் போது தான் அது தோன்றுகிறது.

  சண்முகக் கவசத்தை முன்பு படித்திருக்கிறேன். ஆனால் மற்றவர் பாடிக் கேட்டதில்லை. டி.எம்.எஸ். பாடிய சுட்டியைத் தந்ததற்கு நன்றி இராகவன்.

  • GiRa ஜிரா says:

   சண்முகக் கவசத்தை நான் முதலில் கேட்டேன். கேட்டதும் மனதில் பதிந்து விட்டது. பிறகுதான் படித்து ரசித்தேன்.

   டி.எம்.எஸ் வீடு ஒங்களுக்குப் பக்கத்து வீடுதான? நீங்களும் அப்படிப் பாடுவீங்களா? 🙂

 4. சுட்டிக்கு நன்றி ஆன்மீகச் செம்மலே!

  • GiRa ஜிரா says:

   ஆன்மீகச் செம்மலா? எனக்குத் தெரிஞ்ச ஒரே செம்மல் செக்கிழுத்த செம்மல் தூத்துக்குடி வழக்குரைஞர் வ.உ.சிதம்பரம்பிள்ளைதான். 🙂

 5. a href=http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html>நல்ல பதிவு !

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

  Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி நண்பரே !

  • GiRa ஜிரா says:

   வாங்க நண்பரே. வருகைக்கு நன்றி. உங்கள் பதிவுகளையும் படிக்கிறேன்.

 6. kavinaya says:

  ஜிரா, உங்களுக்கு இங்கே ஒரு பரிசு காத்திருக்கிறது. வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  (பதிவு இன்னும் படிக்கவில்லை… சீக்கிரம் வருகிறேன்)

  • GiRa ஜிரா says:

   பரிசுக்கு மிக்க நன்றி கவிநயாக்கா 🙂

 7. கவிநயா அக்கா பரிசு பதிவின் மூலம் ஜிராவை மீண்டும் கண்டுபிடித்தேன்…..தொடரை முழுவதுமாக படித்துவிட்டு வருகிறேன் ;-))

  • GiRa ஜிரா says:

   வாங்க கோபி. ரொம்ப நாள் கழிச்சு புது வலைப்பூக்கு வந்திருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி. 🙂 அடிக்கடி வாங்க

 8. kavinaya says:

  தமிழ், படிக்கப் படிக்கப் பரவசம். ‘முப்பத்தாறுருக் கொண்டு’ பொருள், இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றிப்பா! சஷ்டி கவசத்தில் இது போல பொருள் சரியாகப் புரியாத இடங்கள் நிறைய இருக்கு. நீங்க முழு கவசத்திற்கும் பொருள் எழுதினா உதவியா இருக்கும். செய்வீங்களா? (தூண்டுதல் வேலை செய்யுதான்னு பார்ப்போம் 🙂 முருகா!

  • GiRa ஜிரா says:

   நான் எழுதுறத விட நண்பர் குமரன் எழுதுனா நல்லாருக்கும்னு நெனைக்கிறேன். 🙂 நீங்க ஒரு மயில் அவருக்கு அனுப்புங்க. அதே மயில்ல நானும் அவர் கிட்ட கேக்குறேன் 🙂

 9. ஒரு சின்ன விளம்பரம். முழு கந்தர் சஷ்டி கவசத்திற்கும் இராகவன் சொல்லும் பொருளைக் கேட்க முருகனருள் பதிவிற்கு வாருங்கள்! 🙂

  muruganarul.blogspot.com

 10. dr.k jayashree moorthy says:

  ராகவன் நீ வடித்த இந்த சிலை மிகஅழகு . மேலும் எங்கள் தோட்டது முல்லை நீ உலகமெல்லாம் உன்தமிழ் மணம் பரவட்டும் வாழ்கவளமுடன்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s