ஈரோடு போனா திருச்சி வரும் – 1

திட்டமிட்ட குடும்பம் மட்டுமல்ல திட்டமிட்ட பயணமும் தெவிட்டாத இன்பந்தான். அப்படி ஒரு பயணத்தைத் திட்டம் போட்டு வெச்சிருந்தேன். ஊர்ல குலதெய்வமான வீரம்மா கோயில்ல குடமுழுக்கும் கெடா வெட்டும். சென்னைல இருந்து அங்க போயிட்டு அங்கிருந்து திருச்சி தஞ்சாவூரெல்லாம் போயிட்டு திரும்பவும் சென்னைக்கு வர்ரதுன்னு திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சு. ரயில்ல முதல் வகுப்புல போகனும்னு ஆசப்பட்டு முதல் வகுப்புல டிக்கெட்டு எடுத்தாச்சு.

ஆனா நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைன்னு கவியரசர் கண்ணதாசன் சொன்னத எல்லாத் தெய்வங்களும் திரும்பத் திரும்ப நிரூபிக்கிறதப் பாக்குறோமே. அதுதான் இந்தத் திட்டத்துக்கும் நடந்துச்சு.

ஒடம்புக்கு முடியலை. ஒருவாரம் மருத்துவமனையில் படுக்கை. பயணத்திட்டம் விட்டத்துக்குப் போயிருச்சு. கொடுத்து வெச்சது இவ்வளவுதான்னு நெனச்சிக்கிட்டேன். காட்டுக்குப் போகச் சொன்னதும் கறிசோறு திங்கமுடியாதேன்னு வருத்தப்பட்ட வால்மீகி ராமனைப் போல எனக்கும் கெடா வெட்டுல கலந்து கறிச்சோறு திங்க முடியலையேன்னு வருத்தம். என்னதான் வீட்ல செஞ்சாலும்… கோயில் கொடைக்குச் செய்யும் கறிக்கொழம்பு போல வருமா?!

சரின்னு இருக்குறப்போ ஒரு திடீர் திட்டம் போட்டு ரெண்டு நாள் திருச்சியச் சுத்தலாம்னு கெளம்பியாச்சு. சகோதரி குடும்பமும் வந்திருப்பதால கலகலன்னு கெளம்பியாச்சு. ஞாயித்துக்கெழம மதியம் கெளம்பிப் போயி செவ்வாக்கெழமை மதியம் திரும்பக் கெளம்பீறனும்னு ஒரு குபீர்த் திட்டம். ஒவ்வொரு வேளைக்கு இந்தக் குபீர் திடீர்த் திட்டங்கள்ளாம் நல்லாவே வேல செஞ்சிருது.

திருச்சில உச்சிப் பிள்ளையார் கோயில் எல்லாம் ஏற முடியுமா, கோயில்களோட துப்புரவுத்தனம் வேற, செருப்பில்லாம நடக்கனுமே, கொஞ்ச நாளைக்குச் சுத்தபத்தமா இருக்கச் சொல்லீருக்காங்களே, வெளிய திங்குறதெல்லாம் கொறச்சிக்கச் சொல்லீருக்காங்களேன்னு மண்டைக்குள்ள ஆயிரத்தெட்டு எண்ணங்கள். அதுக்கு மேல முருகன் இருக்கான்னு பொறப்பட்டாச்சு.

ஒடம்பு நோகுறதப் பாத்தா உக்காந்த எடத்துலயிருந்து நகரக்கூட முடியாது. வேண்டிய மருந்துகளை முன்னேற்பாடா எடுத்துக்கிட்டு கெளம்பியாச்சு.

திருச்சில கோயில்களுக்குப் போறதுதான் திட்டம். என்னென்ன கோயில்கள்னு விவரங்கள் அடுத்தடுத்த பகுதிகள்ள சொல்றேன். முந்தி அப்பா அங்க வேலை பாத்தாங்க. அப்போ நான் பள்ளிக்கூட விடுமுறைகள்ள அப்பா, அம்மா, தங்கைகளைப் பாக்கப் போவேன். அதாவது அப்பா வந்து தூத்துக்குடியில அத்த வீட்டுலயிருந்து கூட்டீட்டுப் போவாங்க. அவங்கள்ளாம் அங்கயே இருந்தாலும் எனக்குத் திருச்சின்னா விடுமுறை நினைவுகள்தான்.

அதுனால வீட்டுல எல்லாருக்கும் பழைய நினைவுகள் “நெஞ்சம் மறப்பதில்லை”ன்னு பி.சுசீலா மாதிரிப் பாடுது.

ஞாயித்துகெழமை மதியம் 12 மணிக்கு மேல சென்னைல இருந்து கெளம்பினோம். சரியா ரெண்டு மணிக்கு ஆரியாஸ்னு ஒரு ஓட்டல்ல சாப்பாட்டுக்கு நிறுத்தினோம்.

ஏண்டா போனோங்குற நெலமைல இருந்துச்சு கழிப்பறைகள். ஒரே ஈக்கள் கூட்டம். நான் ஈ படம் போடுறாங்கன்னு அந்த ஈக்கள் கிட்ட யாரோ சொல்லீட்டாங்க போல. ஓரே ஓட்டமா வெளிய ஓடி வந்துட்டேன். இந்தக் கழிப்பறைகளாலயே பல நோய்கள் மக்களுக்கு வந்துரும். இதுக்குத் திறந்தவெளிக் கழிப்பிடங்களே தேவலைன்னு நெனைக்க வெச்சிருது.

இந்த எரிச்சலோட சாப்பிடப் போனோம். சாப்பாடு நல்லாவே இருக்காதுன்னு முடிவு கட்டீட்டுத்தான் நுழைஞ்சோம். சுமாரான ஓட்டல். ஆனா நல்ல சாப்பாடு. முழுச்சாப்பாடு ரூ.60. சாம்பார், கொழம்பு, வெஞ்சன வகைகள் எல்லாமே அருமை. ஊறுகாயும் அருமை. தயிரும் மோரும் கூட நல்லாருந்தது. துப்புரவா வெச்சுக்கிறதுல கொஞ்சம் மெனக்கிட்டால் நல்ல ஓட்டலாக மாற வாய்ப்பிருக்கு.

Imageஇந்தப் பயணத்தைப் பத்திச் சொல்றப்போ நாற்கரச் சாலைகள் எனப்படும் fourlane highways பத்திச் சொல்லியே ஆகனும். மிக மிக அருமையான சாலைகள். எந்த ஊருக்குள்ளயும் நுழையாம சர்ர்ர்ர்ருன்னு போய்க்கிட்டேயிருக்கலாம். ஆனா வழியெல்லாம் வரி கட்டனும். அந்தக் காலத்துல ஒரு நாட்டுல இருந்து இன்னொரு நாட்டுக்குப் போனா சுங்கம் கட்டனும். அது மாதிரி ஆறேழு எடத்துல சுங்கம் கட்ட வேண்டியிருக்கு. திருச்சி போகனும்னா தோராயமா ரூ.250க்குச் சுங்கம் கட்டனும். போக வர ரூ.500.

அரசாங்கம் மக்களுக்குச் செஞ்சு குடுக்க வேண்டிய அடிப்படை வசதிக்கு நாம காசு குடுக்க வேண்டியிருக்கு. இன்னைக்கு ஊருக்கு வெளியதான் காசு குடுக்குறோம். நாளைக்கு ஊருக்குள்ளயும் குடுக்க வேண்டிய நிலமை வந்தாலும் வரலாம். இருபது வருசத்துக்கு முந்தி குடிக்கிற தண்ணிய விலை கொடுத்து வாங்க வேண்டி வரும்னு சொன்னா சிரிச்சிருப்பாங்க. ஆனா இப்போ? இதுக்குக் காரணம் பொறுப்பில்லாத மக்களும் அரசாங்கமும் தான்.

சென்னைல இருந்து வழி நெடுக நூத்துக்கணக்கான ஹைவே சிட்டிகள். சினிமா டீவி மக்கள் விளம்பரம் பண்றாங்களே… சென்னைக்கு மிக அருகில்னு. அந்த ஹைவே சிட்டிகள்தான். இங்கயும் வந்து வாங்குவாங்களான்னு யோசனை வந்ததையும் சொல்லனும். சில எடங்கள்ள நிலம் வாங்குனா தங்கக்காசு பரிசுன்னு விளம்பரங்கள் வேற. விளைச்சல் நிலங்களும் வீட்டுமனைகள் ஆவது வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்றது!

சரி. நம்ம கதைக்கு வருவோம். கெளம்பிய ஞாயித்துக் கெழமையே போற வழியில சமயபுரம் மாரியம்மனைப் பாத்துறனும்னு திட்டம். மொத நாள்லயே ஒரு கோயிலை முடிச்சிட்டா அடுத்த நாள் கொஞ்சம் ஓய்வா இருக்கும்னுதான். அதுவுமில்லாம சமயபுரமெல்லாம் திருச்சியில் இருந்தப்போ அடிக்கடி போன கோயில்கள். அதுனால கோயிலுக்குச் சீக்கிரமாப் போயி கும்பிட்டுட்டு வந்துறலாம்னு ஒரு நம்பிக்கை.

இப்பிடித் தெரியும் தெரியும் தெரியும்னு போயி நின்னது வேறொரு கோயில்.

 

இந்தப் பயணத் தொடரின் அடுத்த பகுதியை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

தொடரும்…

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திருச்சி பயணம், பயணம் and tagged , , , . Bookmark the permalink.

14 Responses to ஈரோடு போனா திருச்சி வரும் – 1

 1. நல்லாத்தான் ஆரம்பிச்சு இருக்கீர்! சென்னையில் இருந்து கிளம்பி தாம்பரம் போகவே ஒரு ஒன்னரை மணி நேரம் ஆயிருதே அப்புறம் ரெண்டுமணிக்கு ஆர்யாஸ் போனேங்கறீங்க? இது எங்கனக்குள்ளெ இருக்கு?

  • GiRa ஜிரா says:

   நன்றி டீச்சர், ரொம்ப நாள் கழிச்சு பயணக்கட்டுரை எழுதுறேன். முதல் பின்னூட்டம் உங்க பின்னூட்டமா இருப்பது மகிழ்ச்சி. 🙂

   ஆர்யாஸ் ஓட்டல் சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 96 கிமீ தொலைவில் திண்டிவனம் அருகில் உள்ளது.

  • GiRa ஜிரா says:

   நீங்க கேட்ட இன்னொரு கேள்விய நான் கவனிக்கல. 12 மணிக்குக் கெளம்புன இடம் மடிப்பாக்கத்துல உறவினர் வீடு. ஒரு வேலையாப் போயிட்டு அங்கிருந்து கெளம்புனோம். மடிப்பாக்கத்துல இருந்து தாம்பரத்துக்கு ஒரு ரோடு போகுது. அன்னைக்கு ஞாயித்துக் கெழமை. கூட்டமும் இல்ல. டிரைவரும் ஒரு அழுத்து அழுத்தீட்டாரு.

 2. அந்த வீரம்மா கோவில் எங்குள்ளது?

  கொளக்கட்டாங்குறிச்சி கதைகள் ஏதும் இல்லையா?

  • GiRa ஜிரா says:

   கொளக்கட்டாங்குறிச்சி பத்தி ஒங்களுக்கு எப்படித் தெரியும்? 🙂 வீரம்மா கோயில் கொளக்கட்டாங்குறிச்சிய ஒட்டித்தான் இருக்குது.

 3. அடுத்த பதிவை படிக்க ஆவலை ஏற்படுத்தி விட்டீர்களே…. நன்றி…

  • GiRa ஜிரா says:

   நன்றி தனபாலன் 🙂 தொடர்ந்து படித்து ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

 4. lovely to read waiting for rest of ur posts 🙂

 5. //காட்டுக்குப் போகச் சொன்னதும் கறிசோறு திங்கமுடியாதேன்னு வருத்தப்பட்ட வால்மீகி ராமனைப் போல//

  நெசமாவா?

  //விளைச்சல் நிலங்களும் வீட்டுமனைகள் ஆவது வருத்தமாத்தான் இருக்கு.//

  வயத்தெரிச்சலா இருக்கு. இன்னும் சில வருஷங்களில் மனுசங்கல்லாம் என்னத்தைச் சாப்பிடப் போறாங்களோ. (ஒரே ஒரு ஆறுதல், நான் இருக்க மாட்டேன் அதையெல்லாம் பார்க்க)

  //இப்பிடித் தெரியும் தெரியும் தெரியும்னு போயி நின்னது வேறொரு கோயில்.//

  அப்படின்னா சமயபுரத்தாளைப் பார்க்கலயா?

  • GiRa ஜிரா says:

   // //காட்டுக்குப் போகச் சொன்னதும் கறிசோறு திங்கமுடியாதேன்னு வருத்தப்பட்ட வால்மீகி ராமனைப் போல//

   நெசமாவா? //

   நெசமாவேத்தான். 🙂

   வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் இருபதாவது சாகையில் இருபத்தொன்பதாவது சுலோகத்தில் இந்தத் தகவல் இராமன் வாயால் சொல்லப்படுகிறது.

   சுருக்கமாகச் சொல்கிறேன்.
   சத்துர்தஷா ஹி வர்ஸாநி வத்ஸயாமி விஜனே வனே
   மது மூல பலய்ஹ் ஜீவன் ஹித்வா முனிவத் ஆமிசம்

   பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும். தேலும் கிழங்கும் பழமுமே வாழ்க்கை. முனிவரைப் போல மாமிசம் விலக்க வேண்டும்.

   இதை வெறும் தகவல் என்ற வகையில் இராமன் சொல்லவில்லை என்பதை முன்னும் பின்னுமுள்ள சுலோகங்களைப் படித்தால் உணரலாம்.

 6. ரொம்ப நாள் கழிச்சி பயணக்கட்டுரை….கூடவே வருவோம்ல்ல…இப்போ உடல் நலன் எப்படி இருக்கு !?

  • GiRa ஜிரா says:

   வாங்க வாங்க. நீங்கள்ளாம் கண்டிப்பா வரனும். 🙂

   இப்போ ஒடம்பு நல்லாருக்கு. அதான் கோயில் கொளம்னு போயிட்டு வந்தாச்சுல்ல 🙂

 7. சுவாரஸ்யமா இருக்கு. யு கன்டிநியு

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s