கோயிலக் காணோம் பாத்தீங்களா

இந்தப் பயணக்கட்டுரை(?!?)யின் முந்தைய பதிவை இங்கு படிக்கவும்.

திருச்சியில முந்தி நாங்க இருந்த எடத்துக்குப் பேரு சுந்தர் நகர். அங்க இருந்தப்போ சமயபுரம் போகனும்னா ஜங்சன்ல பஸ் ஏறுவோம். ஒருவேளை சத்திரம் பஸ்டாண்டுக்குப் போற பஸ் வந்துருச்சுன்னா சத்திரத்துக்குப் போய் அங்கிருந்து சமயபுரத்துக்கு பஸ் ஏறுவோம். அப்ப எங்களையெல்லாம் அடிச்சிப் பிடிச்சு பஸ்ல ஏத்திக் கூட்டீட்டுப் போன அப்பா-அம்மாவோட திறமைய இன்னமும் நினைச்சி வியக்கத்தான் வேண்டியிருக்கு.

ஹைவேக்களும் பைபாஸ்களும் இல்லாத 80களின் பின்பகுதியில், சமயபுரத்துக்குப் போன வழிதான் எங்களுக்கு நினைவிருந்தது. ஆனா இப்போ ஹைவேல போனதால தெக்கும் வடக்கும் பிடிபடலை.

மஞ்சளாடை அணிந்து கூட்டங்கூட்டமா பாதயாத்திரை போற மக்கள் பின்னாடியே போனோம். ஏன்னா, சமயபுரத்துல மஞ்சளாடை கட்டிக்கிட்டு பாதயாத்திரை போறவங்க மாரியம்மன் கோயிலுக்குத்தானே போவாங்க!

அதுனால அவங்கள அப்படியே பின் தொடர்ந்தோம். ஆனா போகப் போக வழி குறுகிக்கிட்டே போச்சு. கோயில் கண்ணுல படவேயில்ல. வழக்கமா இந்த அளவுக்கு உள்ள போன நினைவும் இல்ல.

எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு எடத்துல கேட்டோம். நேராப் போங்கன்னு சொன்னாங்க. சரீன்னு நேராப் போனா அங்க ஒரு சின்ன மாரியம்மன் கோயில். அது கண்டிப்பா வழக்கமா போற சமயபுரம் மாரியம்மன் கோயில் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு.

வந்தது வந்துட்டோம். கோயிலுக்குள்ள நுழையாமப் போக முடியுமா. அதுவும் கோயில் சுற்றுலான்னு கெளம்புன பெறகு மொதல்ல பாக்குற கோயில்.

விசாரிச்சுப் பாக்குறப்போதான் அந்தக் கோயிலுக்கு ஆதிமாரியம்மன் கோயில்னு பேர்னு தெரிஞ்சது. அதுவும் சமயபுரத்துலதான் இருக்கு. மொதல்ல கோயில் அங்கயிருந்ததாகவும் பின்னாளில்தான் இப்ப இருக்கும் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்றாங்க. அந்தக் கோயில்தான் அம்மன் பிறந்த இடம்னும் சொல்றாங்க. சொன்னதைக் கேட்டுக்கிட்டோம். கதையா பெருசு? கடவுளோட கருணைதானே பெருசு.

இந்தச் சுட்டியில் ஒரு கதை சொல்லியிருக்காங்க. அதுக்குள்ள இருக்குற மறைபொருளை புரிஞ்சிக்கிறவங்க புரிஞ்சிக்கோங்க.சின்ன கோயிலா இருந்தாலும் அம்மன் அழகு. கும்பிட்டு எலுமிச்சம்பழமும் குங்குமமும் வாங்கிக்கிட்டோம்.

கோயில் வாசல்ல அண்டால மோரு, கூழு வெச்சி வித்துகிட்டிருந்தாங்க. கடிச்சிக்க வறுத்த மெளகா, பச்சை மெளகா, வதக்குன மெளகா, வடகம், வத்தல்னு பலப்பல ஐட்டங்களும் கண்ணப் பறிச்சது. சுத்தம் சோறு போடும்னு நம்பி கூழையும் மோரையும் குடிக்காமக் கெளம்பிட்டோம்.

வண்டியத் திருப்பிக்கிட்டு நேரா சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்தோம். மொதல்ல கண்ணுல படாத கோயில் இப்பக் கண்ணுல பட்டுச்சு. அதே வழியிலதான் போயிருக்கோம். என்னவோ.. ஆத்தா கண்ணக் கட்டி அந்தக் கோயிலுக்குப் போக வெச்சிட்டா. 🙂

தெருவில் துப்பனும்னு முடிவு பண்ணப்புறமா அது கோயில் பக்கமா வீட்டுப்பக்கமான்னு எல்லாம் மக்கள் பாக்குறதில்லை. கோயிலுக்குப் போற வழி முழுக்க துப்பல்களும் குப்பைகளுமா இருக்கு. இதையெல்லாம் யாராச்சும் சுத்தம் பண்ணக்கூடாதான்னு கேக்கலாம். ஆனா துப்பவோ குப்பை போடவோ கூடாதுன்னு மக்களுக்குப் புரியும் வரைக்கும் என்னதான் சட்டம் போட்டாலும் ஒன்னும் நடக்காது.

சும்மாச் சொல்லக் கூடாது. அன்னைக்கு மாரியம்மாவோட கருணை கரைபுரண்டு ஓடியிருக்கனும். கூட்டமே இல்லாம சந்தோசமா சிரிச்சிக்கிட்டு அலங்காரத்தோட உக்காந்திருக்கா. பாக்கப் பாக்கப் பத்தலை. கும்பிட்டு வெளிய வந்து மறுபடியும் உள்ள நுழைஞ்சு கும்பிட்டுட்டு வந்தோம். சத்தியமாச் சொல்றேன். நெறைய வாட்டி சமயபுரம் போயிருக்கேன். ஆனா இப்பிடிக் கூட்டமில்லாம பாத்ததேயில்லை. நம்ம சாமியப் பாக்கப் போறோமா, நம்மள சாமி பாக்குறதுக்காகப் போறோமான்னு லேசா சந்தேகம் வந்துருச்சு. சாமிதான் எப்பவும் நம்மளப் பாத்துக்கிட்டேயிருக்கே. நாமதானே சாமியப் பாக்கனும்னு கோயிலுக்கு வர்ரோம்னு நெனச்சிக்கிட்டேன்.

மொத்தத்தில் சமயபுரத்தாள் நல்ல தரிசனம் தந்தாள். செவ்வாடைக்காரியோட சிரிப்பும் தோற்றமும் இன்னும் கண்ணில் இருக்கு.

கோயில் வாசல்ல வரிசையா கடைகள். அதுல சமயபுரத்தாளோட படத்த வாங்கீட்டு சமயபுரத்துலயிருந்து கெளம்பினோம். ஒரு அம்மனைப் பாக்க வந்துட்டு திருப்தியா ரெண்டு அம்மன்களைப் பாத்துட்டு கிளம்பினோம். நல்ல தொடக்கம்.

அப்போ ஆறுமணிதான் ஆகியிருந்ததால வழியில் திருவானைக்காவலையும் பாத்திரலாம்னு வீட்ல எல்லாரும் சொன்னாங்க.

ஆனா நான் ஒத்துக்கலை. திருவானைக்காவல்காரியைக் காலையில்தான் பாக்கனும்னு ஒரே முடிவா இருந்தேன். திருச்சியில் எனக்கு ரொம்பவே பிடிச்ச கோயில் திருவானைக்காவல். அங்கல்லாம் அவசரமாப் போய்க் கும்பிட விரும்பலை. வேணும்னா போற வழியில் சீரங்கத்தை முடிச்சிட்டுப் போகலாம்னு சொன்னேன். எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க.

சரீன்னு வண்டிய சீரங்கத்துக்கு விடச் சொன்னோம். முதலமைச்சரோட தொகுதியாச்சே. ஆனாலும் சீரங்கம் தமிழகத்தோட மத்த எல்லா ஊர்களைப் போலவுந்தான் இருந்தது.

டிரைவரை ஒரு எடத்துல வண்டியப் போடச் சொல்லீட்டு நாங்கள்ளாம் எறங்கி கோயிலுக்கு நடந்தோம். மல்லிகை, பிச்சி, முல்லைன்னு பூக்களின் விற்பனை. வரிசையா கடைகள். அசல் கோதுமை அல்வான்னு ஒரு பெரிய தட்டுல வெச்சி ஒரு ஐயங்கார் வித்துட்டிருந்தாரு. நெத்தியில நாமமும் தோள்ள பூணுலும் இருந்தா ஐயங்காராத்தானே இருக்கனும்! அந்த அசல் எனப்பட்ட அல்வாவைக் கண்ணால மட்டும் சாப்பிட்டு அப்படியே நடந்தோம்.

வெண்ணெய்க் கடையில் ஒரு சிறு பெண் வாழையிலையில் வெண்ணெய் நிறுத்து வாங்கிக் கொண்டிருந்தாள். சின்ன வயசுல நாங்களும் அப்படித்தான் வாங்கிய நினைவு. இப்பத்தான் சூப்பர் மார்க்கெட்ல பாக்கெட்ல வந்துருதே. 🙂

சின்னச் சின்ன சாப்பாட்டுக்கடைகள். ஓரளவு துப்புரவாகவே இருந்தது. குடும்பக் கடைகள்னு நெனைக்கிறேன். அந்தக் கடைகள்ள சாப்டவங்க யாராச்சும் இருந்தா எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க. தெரிஞ்சிக்கிறேன். 🙂

அதேபோல சீரங்கம் கோயில் வாசல் கடைகள்ள சமையல் பாத்திரங்களும் வாங்கலாம். பணியாரச்சட்டி, இடியாப்பம் பிழியுறது, தோசைக்கல், கொழுக்கட்டை அச்சு, சப்பாத்தி அமுக்கின்னு என்னென்னவோ கெடைக்கும். பாத்துப் பேசி வாங்கனும்.

என்னய்யா கோயிலுக்குப் போயிட்டு கடைகண்ணியில என்னயிருந்ததுன்னு அடுக்குறேன்னு நீங்க கேக்குறது புரியுது. என்ன பண்றது? பணக்கார சாமி பணக்கார சாமிதான்னு நிரூபிச்சிட்டாரே. 🙂 பணம் இருந்தாத்தானே “பொருளை” வாங்க முடியும். நாங்களும் கோயில்ல ”பொருளை” வாங்கினோம்.

தொடரும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அம்மன், இறை, திருச்சி பயணம், பயணம் and tagged , , , , , . Bookmark the permalink.

11 Responses to கோயிலக் காணோம் பாத்தீங்களா

 1. சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு போவதற்கு முன் அம்மன் பிறந்த இடத்திற்கு சென்று வந்தது சிறப்பு…

  கோயில்ல ”பொருளை” வாங்கினதை… என்ன பொருள்…? அடுத்த பகுதி படிக்க ஆவல்…
  நன்றி…

 2. இப்படித்தான் கண்ணைக் கட்டிப்புடறான். கிடைக்கணும் என்பது நமக்கு எங்கே கிடைக்காமப்போயிருமோன்ற அக்கறை!

  த்வாரகைக்குப்போனப்ப அங்கே த்வாரகைத்தீவுலே இருக்கும் கண்ணனைப் பார்க்கப்போனால் கோவிலைச் சாத்தி வச்சுக்கிட்டு நாலுமணி நேரம் நம்ம பல சுவாரசியமான இடங்களைத் தரிசிக்க வச்சுட்டான். பொதுவா யாத்திரை போறவங்க கண்ணன் கோவிலைப் பார்த்துட்டு அடுத்த படகுலே திரும்பிடுவாங்க.

  ஆனால்….. நான் உங்க எல்லோருக்கும் தகவல் எழுதணுமேன்னு செஞ்ச கருணைதான்!

  சமயபுரத்தாளின் நட்சத்திரக் காதணி எனக்கு ரொம்பப்பிடிக்கும். இன்னும் போட்டுருக்காளா?

  • GiRa ஜிரா says:

   உங்க துவாரகை பதிவு படிச்சேன். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு அனுபவம்.

   // சமயபுரத்தாளின் நட்சத்திரக் காதணி எனக்கு ரொம்பப்பிடிக்கும். இன்னும் போட்டுருக்காளா? //

   ஆகா.. அது நட்சத்திரக் காதணியா. அந்தப் பெரிய காதணியில் என்ன டிசைன்னு பாக்கலையே. அந்த திருமுகத்தையும் திருவடியும் பாத்த கண்களை நகட்டவே முடிஅலையே

 3. stavirs says:

  very lively narration, ur style is on fire 🙂 loved it ! every bit of it !

 4. Pingback: ஈரோடு போனா திருச்சி வரும் – 1 « GRagavan’s Weblog

 5. sukucon says:

  அன்னையின் மகத்துவம் மிகவும் வியப்பானது.அதை தங்களுக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.

  • GiRa ஜிரா says:

   உண்மைதான். வாய் திறந்தால் முருகா என்பேன். ஆனாலும் அன்னையின் முன் குழந்தையாவேன்.

 6. சமயபுரத்தாள் தரிசனத்துக்கு நன்றி! உங்களை நல்லாவே கவனிச்சிருக்கான்னு தெரியுது 🙂

  • GiRa ஜிரா says:

   அவ கவனிக்கிறதுனாலதான நம்மள்ளாம் நல்லாயிருக்கோம். 🙂

 7. சிரிப்பு தான் வந்தது ஆதி மாரியம்மனை தரிசித்தது.எல்லாம் நன்மைக்கே. வரும்வழியில் சமயபுரத்திர்க்கு முன்பாகவே, திருப்பட்டூர் வருமே. அங்கே தலை எழுத்தையே மாற்றும் பிரம்மனும், சிவன், மற்றும் ஒரு ஜீவா சமாதியும் இருக்கே. இவ்வளவு தூரம் வந்தவர், திருச்சி அருகிலேயே உள்ள குமார வயலூரில் வாசம் செய்பவர், கிருபானந்தவாரியார் கனவில் வந்த முருகனை விட்டு விட்ட போய்விட்டீர்களே ! பதிவு நடை வார்த்தை பிரயோகம் அருமை அலுப்பு தட்டவில்லை. வாழ்க வளர்க

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s