திக்திக்கிலிருந்து தித்திக்கும் திருச்சிக்கு

இந்தப் பயணத் தொடரின் முந்தைய பாகத்தை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

நல்லா யோசிச்சுப் பாருங்க. பெரிய கார் வாடைக்கு எடுத்திட்டு வந்திருக்கோம். பையெல்லாம் காருக்குள்ள இருக்கு. காமிரா பை வேற உள்ள இருக்கு. அத்தோட கோயிலுக்குப் போறதால செருப்பெல்லாம் காருக்குள்ள விட்டுட்டுப் போயிருக்கோம். இந்த நிலைல காரைக் காணோம். டிரைவரையும் ஃபோன்ல கூப்பிட முடியல.

கோயில் வாசல்ல எறங்கிக்கிட்டு “எங்கயாச்சும் வண்டியப் போட்டுக்கப்பா”ன்னு சொன்னது தப்பாப் போச்சு. வண்டி எங்கயிருக்குன்னு தெரியல. வழக்கமா வண்டிகள் நிக்கும்னு சொல்லப்பட்ட எடங்கள்ள தேடுனாலும் வண்டியக் காணோம். மருமகப்பிள்ளைகளுக்கு பசி வேற ஆரம்பிச்சிருச்சு. ஏற்கனவே அப்பாவுக்கு பயங்கர கடுப்பு+ஆத்திரம். குழந்தைகள் முணுமுணுக்கத் தொடங்குனதும் ஜிவ்வுன்னு கோவம் ஏறுது. ஆனாலும் என்ன பண்ண முடியும்?

எங்களுக்கிருந்த ஒரே வழி கார் புக் பண்ண கம்பெனியோட நம்பர்தான். தெரிஞ்சவங்கதான். அவங்களுக்கு ஃபோன் பண்ணி விவரத்தைச் சொன்னோம். அவங்களும் டிரைவர் நல்ல பையன்னு சொல்லி எதுக்கும் பயப்பட வேண்டாம்னு சொன்னாங்க.

நேரம் போயிட்டேயிருக்கு. இன்னும் திருச்சிக்குப் போயி தங்குற எடத்தைக் கண்டுபிடிக்கனும். சாப்புடனும் வேற.

நாங்க “மாத்தி யோசிக்க” மறந்தத டிரைவர் யோசிச்சிட்டாரு. ஆமா. அவர் மொபைல்ல இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்புனாரு. என்னடா கோயிலுக்குப் போனவங்க இவ்வளவு நேரமாக் கூப்புடலையேன்னு அவருக்குக் கவலை. அந்த எஸ்.எம்.எஸ் பாத்ததும் டிரைவருக்குக் கால் பண்ணோம். இப்ப ஃபோன் கால் ஒழுங்காப் போச்சு. வண்டிய நிறுத்த எடமில்லாம ஏதோ பஸ் நிக்கிற எடத்துல நிப்பாட்டி வெச்சிருந்தாராம்.

இப்பல்லாம் அலைபேசியில் இந்தப் பிரச்சனைகள் நிறைய வருதாம். நேத்துக்கூட பாருங்க. மதியம் ஒரு நண்பரோட பேசினேன். எட்டு மணிக்கு அவர் கிட்டயிருந்து ஒரு அழைப்பு. அப்ப எடுக்க முடியலை. எட்டரைக்கு அவரைக் கூப்பிட்டா “மிஸ்டு கால் குடுத்திருந்த, அதுனால கூப்டேன்”னு அவர் சொல்றாரு. என்னோட மொபைல்ல இருந்து மிஸ்டு கால் போகவே இல்ல. Ghost in the machine மாதிரி இது Ghost in the mobile network போல.

அப்புறமென்ன மடமடன்னு திருச்சிக்கு வண்டிய விட்டோம். அந்தக் காவிரிப் பாலத்துல உச்சிப்பிள்ளையார் கோயிலைப் பாத்துக்கிட்டே திருச்சிக்குள்ள நுழைஞ்சோம். திருச்சி புதுசா இருந்துச்சு. அங்கங்க எடங்கள் புரியுது. ஆனா முழுசாப் புரிஞ்சிக்க முடியல. இருட்டு வேற.

1860ல் திருச்சி மலைக்கோட்டையின் தோற்றம்மலைக்கோட்டை (மெயின்கார்ட் கேட்) வந்தப்புறம் எங்களுக்கு எடங்கள் புரிஞ்சது. அந்த பெரிய கோட்டைச் சுவர் இப்பவும் அழகுதான். பொன்னியின் செல்வனுக்காக மணியம் வரைந்த கடம்பூர் அரண்மனைக் கோட்டை வாசல் இப்படித்தான் இருக்கும். அந்தக் கோட்டைக்குள்ள போறப்போ ஏதோ அரண்மனைக்குள்ள நுழைய மாதிரியே இருக்கும்.

இம்பால ஓட்டல் இருந்த எடத்தை வருத்தத்தோட பாத்துக்கிட்டே போனேன். பழைய ஓட்டல் இம்பாலா எனக்குப் பிடிச்ச ஓட்டல். இந்த வாட்டி சென்னைக்கு வர்ர வரைக்கும் சைவச் சாப்பாடுதான்னு கடுமையான கட்டுப்பாடு.

திருச்சியிலும் ஒரு வழிப்பாதைகள் வந்துருச்சு. அத்தோட சின்னதா மேம்பாலங்கள். சென்னை பெங்களூர் மாதிரி ஊர்கள்ள இருந்துட்டு திருச்சியைப் பாக்குறப்போ திருச்சி டிராபிக் ரொம்ப நல்லாயிருந்தது. சிக்னல்ல மக்கள் ஒழுங்கா நிக்குறாங்க. ஒருத்தருக்குப் பின்னாடி ஒருத்தர் நிக்கத் தயங்குறதில்ல. திருச்சிக்காரங்களே நீங்க இப்பிடியே இருங்க. God bless you all.

அடுத்தது சாப்பாட்டுப் பிரச்சனை. மெயின் பஸ்டாண்டு பக்கத்துல நெறைய ஓட்டல்கள் இருக்கும்னு அங்க போனோம். ஓட்டல் சங்கீதாஸ் பாக்குறதுக்குப் பப்பள பளபளன்னு இருந்தது. அத்தோட கூட்டமாவும் இருந்தது. ஒரு நம்பிக்கையோட உள்ள நுழைஞ்சோம். உக்கார எடம் கெடைக்கிறதே பெரும்பாடாப் போச்சு. சாப்பாட்டு லிஸ்ட் பெரிய லிஸ்டா இருந்தது. 70எம்.எம் தோசைன்னு கூட ஒரு தோசை. இப்பிடி நெறைய ஜில்பான்சியோ குல்பான்சி ஐட்டங்களா இருந்தது.

சாப்பாட்டு ஐட்டங்கள் முன்னப்பின்ன இருந்தாலும் கவனிப்பு ரொம்பவே சுமார். அடுத்து அங்க போகக்கூடாதுன்னே முடிவு பண்ண வெச்சிருச்சு. கூட்டத்தை எப்படிச் சமாளிக்கனும்னு தெரியலை. வழக்கமான ஐட்டங்களா இல்லாம வித்யாசமான ஐட்டங்களைச் சாப்பிட திருச்சிக் கூட்டம் அந்தக் கடைக்குப் போறாங்கன்னு புரிஞ்சிக்கிட்டோம்.

அடுத்து நாங்க போக வேண்டிய எடம் காஜாமலையில் ஒரு கெஸ்ட் ஹவுஸ். அது வெள்ளைக்காரன் காலத்து கெஸ்ட் ஹவுஸ். உள்ள நெறைய மரங்கள். இருட்டு வேளைல உள்ள போனா மருமகப் பிள்ளைகள் “பூத் பங்களா பூத் பங்களா”ன்னு குதியாட்டம். ஆனா நல்ல முறையில் பராமரிக்கப்படும் கெஸ்ட் ஹவுஸ். உள்ள போனதும் எல்லாருக்கும் அசதி. சீக்கிரமே தூங்கீட்டோம். காலையில் எந்திரிச்சு திருவானைக்காவல் போகனுமே.

திருச்சியில் காலை இனிய காலையாக இருந்தது. மருமகப்பிள்ளைகளுக்கு அந்த கெஸ்ட் ஹவுசில் இருந்த மரங்கள் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நாம எந்த உயிரினத்துல இருந்து வந்திருப்போம்னு எனக்கு ஆயிரத்து நூறாவது தடவையா புரிஞ்சது. அப்படியொரு ஆட்டம். அங்கிருந்த வாட்ச்மேன் வீட்டு ஆடு கோழிகள்ளாம் தெரிச்சு ஓடுது.

ஒரு வழியா எல்லாரையும் கெளப்பி சாப்பாட்டுக்குப் போனோம். ஆனா சங்கீதாவுக்குப் போகக்கூடாதுன்னு ஒரே முடிவுல இருந்தோம். சங்கீதாசுக்குப் பக்கத்துலயே ஓட்டல் ஆனந்த் இருக்கு. லாட்ஜிங்கும் இருக்கு. அதுல இருக்கும் சின்ன ஓட்டலுக்குப் போகலாம்னு நுழைஞ்சோம். எங்க எதிர்பார்ப்பு வீண் போகலை. இட்லி, தோசை, பூரி, பொங்கல், வடை, சப்பாத்தின்னு வழக்கமான ஐட்டங்கள்தான். ஆனா நல்ல சுவை. அத்தோட நிறைவான கவனிப்பு. குறிப்பா அந்தக் காப்பி… அடடா! மதியம் அங்கதான் வரனும்னு வீட்ல எல்லாரும் முடிவே பண்ணீட்டாங்க.

சாப்பிட்டுக்கிட்டேயிருந்தா எப்படி? மதியத்துக்குள்ள ரெண்டு கோயில் மிச்சமிருக்கே. மொதல்ல திருவானைக்காவல். அடுத்து வயலூர்.

தொடரும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, திருச்சி பயணம், பயணம், விஷ்ணு and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to திக்திக்கிலிருந்து தித்திக்கும் திருச்சிக்கு

 1. நம்மூர்லே மாற்றங்கள் வேகமாத்தான் வந்துக்கிட்டு இருக்கு கட்டிடங்களைப்பொறுத்தவரை! போன வருசம் பார்த்த அதே இடம் இப்பப்போனா வேறமாதிரியில்லே இருக்கு!!

  சங்கீதாலே நாங்களும் சாப்பிட்டோம். நல்லாத்தான் இருந்துச்சு. அது 3 வருசத்துக்கு முந்தி.

  ஆனா ஒன்னு….. ருசி கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் உபசரிப்பு நல்லா இருந்தால் நமக்கு சாப்பாடு ரொம்பப்பிடிச்சுப்போகுதுல்லே?

  நமக்கு விளம்புனவர் அருமையா உபசரிச்சு சோறு போட்டார்!

  . கோபால் சாப்பிடும் அளவைப் பார்த்துட்டு, அந்த பரிமாறுனவருக்கே பொறுக்கலை…… குழந்தையைக் கேக்கறதுபோல விரல்களைக் குவிச்சு… ‘இன்னும் கொஞ்சமே கொஞ்சம், ஒரே ஒரு வாய் போடவா’ன்னு கெஞ்சறார்.

  நான் வழக்கம்போல் வெறும் சோறு.
  விட்டுருந்தால் அவர் அழுதே இருப்பார் போல. ஸ்வீட்டாவது கொஞ்சம் சாப்புடும்மா. புதுசா ஜிலேபி இப்பத்தான் போட்டுக்கிட்டு இருக்காங்க. கொண்டுவரேன்னு ஓடுனார். உண்மைக்குமே இவ்வளவு அன்பான உபசரிப்பை நாங்க எதிர்பார்க்கவே இல்லை. வீட்டுலே கெஞ்சறா மாதிரி…ஆனாத் தலையில் ஒரு குட்டுதான் வைக்கலை…சாப்புடுற லட்சணமா இதுன்னு:-)))

 2. இனிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா…

 3. stavirs says:

  every post is making us want to read more 🙂 thanks for the trip 🙂

 4. அந்த b&w படம் நல்லாருக்கே! சுவாரஸ்யமா சொல்லிக்கிட்டு வரீங்க. சீக்கிரம் திருவானைக்காவலுக்கு கூட்டிப் போங்க 🙂

 5. Pingback: சிலந்திக்கும் யானைக்கும் சண்டை « GRagavan’s Weblog

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s