Monthly Archives: September 2012

செந்தில்நாதனும் கார்காலமும்

ஒரு குடும்பத் தலைவனின் விடியல் நல்ல விடியலா என்பது காப்பி டம்ளரிலேயே தெரிந்து விடும். வழக்கதை விட காப்பி நன்றாக இருந்தாலும் மோசமாக இருந்தாலும் கணவர்களுக்கு அது எச்சரிக்கை மணி. அப்படியொரு எச்சரிக்கை மணிதான் செந்தில்நாதன் மண்டைக்குள் அடித்தது. காப்பியைக் குடுத்து விட்டு வழக்கமாக நகர்ந்து விடும் வந்தாளே மகராசி இன்று அருகிலேயே நின்றது அவன் … Continue reading

Posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை | Tagged , , | 17 Comments

டாக்டர் சாம்பன், ஃபெவிக்கால் ஸ்பெஷலிஸ்ட்

அனுமாரு எந்த மலையத் தூக்குனாரு? சஞ்சீவி மலையத் தூக்குனாரு. சரி. தூக்குனாரு. எதுக்குத் தூக்குனாரு. அதுல இருக்கும் மூலிகையால இறந்து போன ராமலக்குவனர்களையும் குரங்குகளையும் காப்பாத்தத் தூக்குனாரு. நம்மள்ள பெரும்பாலனவங்களுக்குச் சஞ்சீவி மலையத்தான் அனுமாரு தூக்குனாருன்னு தெரியும். ஆனா கம்பரு தன்னோட ராமாயணத்துல வேறொரு பேரைப் போட்டுச் சொல்றாரு. அதென்ன பேரு? அந்தப் பேருதான் மருந்துமலை. … Continue reading

Posted in இலக்கியம், கம்பராமாயணம் | Tagged , | 3 Comments

இப்பிடியும் ஒரு கனவு வந்தது

கனவு எல்லாருக்கும் தெனமும் வருமாம். ஆனா பெரும்பாலும் நினைவிருக்குறது இல்லை. முந்தியெல்லாம் கனவுகள் நினைவிருக்கும். இப்பக் கொறஞ்சு போச்சு. நாள் கூடக்கூட வயசும் கூடுதுல்ல. 🙂 நேத்துத் தூக்கத்துல, அதாவது இன்னைக்குக் காலை ஆறு மணி வாக்குல ஒரு கனவு. எங்க தொடங்குச்சுன்னு தெரியாது. நினைவுல இருக்குறத எழுதுறேன். என்னென்னவோ நடந்தது. அப்புறம் பாத்தா திருவேங்கடமுடையானுக்கு … Continue reading

Posted in பொது, முருகன் | Tagged , | 2 Comments

வாராவாரம்-கேசரி-பஜ்ஜி-கிரிக்கெட்-1-09-2012

கேசரியும் பஜ்ஜியும் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் போயிருந்தேன். கலைமணி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ராவ் பகதூர் சிங்காரம் புத்தகத்தை வாங்கனும்னுதான் போனேன். ஆனா அது கெடைக்கலை. அதுக்குக் காரணம் புத்தகங்களின் பதிப்புரிமை விகடன் கைக்குப் போனதுதான். ஐம்பதுகளில் ஆனந்த விகடனில் வெளியான சூப்பர் ஹிட் தொடர்களான தில்லானா மோகனாம்பாளும் ராவ்பகதூர் … Continue reading

Posted in பொது | Tagged , , , , , | 7 Comments