இப்பிடியும் ஒரு கனவு வந்தது

கனவு எல்லாருக்கும் தெனமும் வருமாம். ஆனா பெரும்பாலும் நினைவிருக்குறது இல்லை. முந்தியெல்லாம் கனவுகள் நினைவிருக்கும். இப்பக் கொறஞ்சு போச்சு. நாள் கூடக்கூட வயசும் கூடுதுல்ல. 🙂

நேத்துத் தூக்கத்துல, அதாவது இன்னைக்குக் காலை ஆறு மணி வாக்குல ஒரு கனவு. எங்க தொடங்குச்சுன்னு தெரியாது. நினைவுல இருக்குறத எழுதுறேன்.

என்னென்னவோ நடந்தது. அப்புறம் பாத்தா திருவேங்கடமுடையானுக்கு என் கையாலே நான் சேவை செய்றேன்.

மொதல்ல பல்லாண்டு பல்லாண்டு பாடுறேன். அடுத்து ஷாந்தாகாரம் புஜகசயனம் பத்மனாபம் சுரேஷம் பாடுறேன். பாடுறேன்னா… பாட்டுப் படிக்கிறேன்னு வெச்சுக்கலாம்.

வெண்பொங்கலை சாமிக்குப் படைச்சிட்டு, இதுல நாம ஒரு வாய் எடுத்துக்கலாமான்னு நெனைக்கிறேன். வெண்பொங்கல் மொதல்ல வந்துச்சு. அது சாம்பார் சாதமா மாறுச்சுன்னு நெனைக்கிறேன். (வீட்டுல நேத்துக் காலையில் வெண்பொங்கல்)

இதுவரைக்கும் நடந்ததெல்லாம் என் கட்டுப்பாட்டுக்குள்ள இல்ல. ஆனா அடுத்து நான் நெனச்சது என் கட்டுப்பாட்டுக்குள் இருந்துச்சு.

“முருகா, திருவேங்கடமுடையானுக்குச் சேவை செய்றேனே.. ஒனக்குச் செஞ்சாதானே எனக்கு திருப்தி.” இந்த எண்ணம் மனசுல வர்ரப்போ சின்ன ஏக்கம். இந்த எண்ணம் என் மனசுக்குள்ள இருந்து வந்தது. கனவுல வரல.

ஒடனே அங்கிருந்த வேங்கடமுடையான் மறைஞ்சு முருகன் வேலும் மயிலுமா நிக்கிறான். எனக்குப் புல்லரிச்சுப் போச்சு. வேங்கடனுக்கே சேவை செஞ்சவன் முருகனுக்குக் குறைவாவா செய்வேன்?

இப்ப காட்சி மாற்றம். நான் தூத்துக்குடியில பள்ளிக்கூடத்துல படிச்சிட்டிருந்த வயசுல இருக்கேன்.

பள்ளிக்கூடத்துக்கு விடியக்காலையில் நடந்து போறேன். போற வழியில் ஒரு கோயில். அங்க ரெண்டு அண்ணன்கள் (யாருன்னே தெரியாது) கோயிலைக் கழுவிக்கிட்டிருந்தாங்க. கழுவுறதுன்னா தரைய மட்டுமில்ல. மொத்தக் கோயிலையும்.

நான் உள்ள போய் என்ன பண்றாங்கன்னு பாத்தேன். ஏதோ கேட்டேன். என்னவோ சொன்னாங்க. ஆனா நினைவில்லை.

அப்படியே பள்ளிக்கூடம் பக்கமா நடந்தேன். வளியில் ஒரு முள்ளுக்காடு. முந்தி தூத்துக்குடியில அங்கங்க முள்ளுக்காடுகள் இருக்கும். திருச்செந்தூர் போறப்போ பஸ்ல பாத்திருக்கேன்.

அப்போ அங்க இந்திராகாந்தி வர்ராங்க. சின்ன வயசு இந்திராகாந்தி. எதையோ எங்கிட்ட குடுத்து என்னவோ சொல்றாங்க. அந்தப் பொருள் அவங்க கிட்ட இருக்குறது எனக்குப் பிடிக்கலை. அதை எப்படியோ காப்பத்தனும்னு தோணுது.

அந்தப் பொருள் எங்கைக்கு வந்ததும் ஒரு எடத்துல ஒளிச்சு வெச்சுர்ரேன். இந்த எடத்துல திருச்செந்தூர் கடற்கரை மணற்பரப்பெல்லாம் வந்தமாதிரி ஒரு நினைவு.

அப்படியே தூத்துக்குடி செயிண்ட் சேவியர்ஸ் பள்ளிக்கூடத்துக்குப் போறேன். போனா.. பிரேயர் நடக்குது. லேட்டா வந்தவங்கள்ளாம் ஒரு பக்கமா நிக்குறாங்க. நானும் அந்தக் கூட்டத்துல சேந்தேன்.

லேட்டா வந்தா ஃபாதர் கிட்ட கையெழுத்து வாங்கீட்டுதான் வகுப்புக்குப் போகனும். பெரும்பாலும் பிரம்பால ஒரு அடி குடுத்துட்டுதான் கையெழுத்து போடுவாரு ஃபாதரு. இதுல ஒரு ரகசியம் பெரிய ஃபாதரு அவ்வளவா அடிக்க மாட்டாரு. சின்ன ஃபாதர்தான் பிரம்பால சுளீர்னு அடிப்பாரு. அவரு பெரிய ஹாக்கி பிளேயர். ஒரு வாட்டி ஹாக்கி பந்து கண்ணுல பட்டு ஒரு கண் பார்வை போயிருச்சு.

பிரேயர் நடக்குது. பாத்தா ஒரு டீச்சர் பிரேயரை நடத்துறாங்க. சேவியர்ஸ் ஸ்கூல்ல டீச்சர்கள் கிடையாது. எல்லாம் சார்கள்தான். எப்படி டீச்சர் வந்தாங்கன்னு யோசிக்கிறேன்.

அப்ப ஒருத்தன் டீச்சர் கிட்ட என்னவோ காட்டுறான். அவனை உள்ள போகச் சொல்லீட்டாங்க. நானும் வீட்டுலருந்து தாமதமா வந்த காரணத்தை எழுதி வாங்கிக்கிட்டு வந்திருக்கேன். அதை டீச்சரிடம் காட்டினேன்.

அவங்க அதப் பாத்துட்டு அவங்களுக்குப் பின்னாடி இருந்த சின்ன அறையில் உக்காரச் சொன்னாங்க. “ஏன் டீச்சர்”னு கேட்டேன்.

“ஒன்னோட மூஞ்சி லட்சணத்துக்குத்தான். பேசாம உக்காருன்னு”, சொன்னாங்க.

கொஞ்ச நேரம் கழிச்சுப் பாத்தா ரெண்டு போலீஸ் வர்ராங்க.

என் மேல ஏதோ திருட்டுப் பட்டம் கட்டீட்டாங்கன்னு எனக்குப் புரியுது.

”நான் திருடல. நான் திருடல”ன்னு கத்துறேன்.

அப்போ என்னோட பிரதர் இன் லா அந்தப் பக்கமா வர்ராரு. நான் சின்னப் பையனா இருக்கேன். ஆனா அவரு இப்ப இருக்குற மாதிரி பெரியாளா இருக்காரு. அவர் கிட்ட ஒன்னும் சொல்ல முடியல. போலீஸ் வேற அந்தப் பக்கம் இருக்கு.

நான் நைசா நழுவி தப்பிச்சு ஓடுறேன். போலீஸ் தொரத்துது. பக்கத்துலயே ஒரு வீட்டுப் படிக்குப் பக்கத்துல ஒளிஞ்சுக்கிறேன்.

வெளிய நாலஞ்சு போலீஸ். இன்ஸ்பெக்டர் எல்லாம் இருக்காரு.

“இந்தப் பக்கமாத்தான் அவன் போயிருக்கனும். அவனை விடாதீங்க. பிடிங்க”ன்னு கோவமாக் கட்டளையிடுறாரு இன்ஸ்பெக்டர்.

நான் இந்த வீட்டுப் பக்கமா ஒளிஞ்சிக்கிட்டிருக்கேன். அந்தப் பொருளைப் பத்திதான் இவங்க திருட்டுப் பட்டம் கட்டுறாங்கன்னு புரியுது. உயிரே போனாலும் அது அவங்க கிட்ட சேரக்கூடாதுன்னு நெனைச்சிக்கிறேன்.

இவ்வளவுதான் நினைவிருக்கு. அதுனால இங்கயே நிறுத்திக்கிறேன். 🙂

இப்பிடியும் ஒரு கனவு உண்டான்னா.. ஆமாம் என்பதே விடை. இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு என்னை யாரும் கோவிச்சுக்காதீங்க. 🙂

அன்புடன்,
ஜிரா

Photo Courtesy

1. http://media.photobucket.com/image/dream/FindStuff2/Just%20For%20Fun/Dreams/art9.jpg?o=5

2. http://news.mountlaviniahotel.com/?m=201001

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in பொது, முருகன் and tagged , . Bookmark the permalink.

2 Responses to இப்பிடியும் ஒரு கனவு வந்தது

  1. பெருமாட்களைக் கனவில் பார்த்தீரா!!!!!! ஹைய்யோ ஹைய்யோ!!!!

    என்ன ஒரு பாக்கியம் !!!!

    அந்த டீச்சர் ஒரு வேளை நானோ?????

  2. //எனக்குப் புல்லரிச்சுப் போச்சு.//

    enakkum! it is not easy to get them even in the dreams. me very ‘j’ of gira!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s