நட்சத்திரம் என்ன சொல்லுங்க

பொதுவாக பாலகாண்டத்தின் திரு அவதாரப் படலத்தை யாரும் விரிவாக எடுத்துப் பேசுவதில்லை. வால்மிகி ராமாயணத்தை மூலமாகக் கொண்டு எழுதிய கம்பனே வால்மிகி சொன்னதில் நிறைய தகவல்களை நீக்கி விட்டே சொல்கிறாள்.

குறிப்பாக வால்மிகி விளக்கும் அசுவமேதயாகக் காட்சிகளை தமிழில் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக கம்பர் அந்தத் தகவல்களை மறைத்திருக்கலாம்.

கம்பராமாயணத்தில் கலைக்கோட்டு முனி வருகிறார். வேள்வி செய்கிறார். வேள்வியில் பூதம் வந்து பொன் தட்டில் பிண்டத்தைக் கொடுக்கிறது.

முதற் பங்கை பட்டத்தரசியான கோசலைக்குக் கொடுக்கிறான் தயரதன்
இரண்டாம் பங்கை இரண்டாம் மனைவியும் ஆசை மனைவியுமான கைகேயிக்குக் கொடுக்கிறான்.
மூன்றாம் பங்கைக் கடைசி மனைவியான சுமித்திரைக்குக் கொடுக்கிறான்.
தட்டில் எஞ்சியிருந்த பருக்கைகளை ஒன்று திரட்டி சுமித்திரைக்குக் கொடுத்து விடுகிறான் தயரதன்.

கோசலை இராமனைப் பெற்றெடுக்கிறாள்
கைகேயி பரதனைப் ஈன்றெடுக்கிறாள்
சுமித்திரை இலக்குவனையும் சத்துருக்கனையும் பெறுகிறாள்.

இந்த நான்கு குழந்தைகள் பிறந்த நட்சத்திரங்களும் ராசிகளும் என்னென்ன?

இராமன்    – புனர்பூசமும் விண் உேளார் புகழ் தூய கர்க்கடகமும்    – புனர்பூசம்/கடகம்
பரதன்        – பூசமும் மீனமும் பொலிய நல்கினாள்            – பூசம்/கடகம்
இலக்குவன்    – அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற        – ஆயில்யம்/கடகம்
சத்ருகனன்    – மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட            – மகம்/சிம்மம்

இதைச் சொல்வதற்கா ஒரு வலைப்பதிவு?

இல்லை. இந்தப் பாடல்களில் சில சுவையான தகவல்கள் உள்ளன.

இராமன் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்ததில் ஏதேனும் சிறப்பு இருக்கிறதா?

புனர் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? புனர் ஜென்மன் என்றால் மறுபிறவி. அதுபோல புனர்வசு/புனர்பூசம் என்றால் மறு ஓளி.

அதாவது திரும்பவும் வாழ்வில் வந்த ஒளி. இறைவன் மனிதனாக அவதராமாகத் திரும்பி வந்ததைக் குறிக்கும். முன்பும் அவதாரமாக வந்தார். ஆனால் திரும்பிப் போய் விட்டார். அப்படி திரும்பிச் சென்ற ஒளியானது இராமன் உருவில் மறுபடியும் வருவதுதான் இதற்கு உட்பொருள்.

அதுபோல வாழ்வு இழந்தவரைக் காப்பாற்ற வருகின்ற கடவுள் என்ற பொருளிலும் கொள்ளலாம்.

புனர்பூசம் என்பது இரட்டை நட்சத்திரம். ஒன்றோடொன்று கூடவே இருக்கும். எல்லா அவதாரங்களிலும் தனியாக வந்த திருமால் இராமனாக வந்த பொழுது கூடவே மனைவியைக் கூட்டிக்கொண்டும் வந்தார்.
அதைக் குறிப்பால் உணர்த்துவதற்குதான் புணர்பூச நட்சத்திரம் கடக லக்கினத்தில் சீதைக்கும் இராமனுக்கும் திருமணம் நடந்தது.

இராமாயணத்தில் கைகேயி குற்றமற்றவள் என்று பலப்பல இடங்களில் கம்பர் கூறியிருந்தாலும் இன்றளவும் அவள் மக்களில் பலரால் வெறுக்கப்படுகின்றவள். கதையின் தொடக்கத்திலேயே ஒரு பாத்திரத்தை நல்ல பாத்திரமாகக் காட்டி விட்டால், அந்தப் பாத்திரம் ஏதேனும் தவறு செய்யும் போது நமக்கு வெறுப்பை விட அனுதாபமும் வருத்தமும் உண்டாகும்.

இதைக் கம்பரும் செய்கிறார். பரதனை கைகேயி பெற்றதைச் சொல்லும் பாடலைப் பாருங்கள்.
பூசமும் மீனமும் பொலிய நல்கினாள்
மாசு அறு கேகயன் மாது மைந்தனை
இந்த மகனுக்காக இவள் சில செயல்களைச் செய்யப் போகிறாள். ஆனால் அவள் மாசற்றவள். அவளை நீங்கள் தவறாகக் கருதாதீர்கள் என்று காவியத்தின் தொடக்கத்திலேயே அழுத்தமாகக் குறிப்பிட்டு விடுகிறார்.

இன்னொரு விதமாகவும் யோசிக்கலாம். இராமயணத்தில் இராமனை விட பரதன் உயர்ந்தவன் என்று கோசலையே பல இடங்களில் சொல்லியிருக்கிறாள். அப்படியிருக்க இராமனைப் பெற்ற கோசலை பெரும் புண்ணியவதியாக இருந்திருக்க வேண்டும். அதற்குதான் இராமனைப் பெரும் பொழுது “திறம் கொள் கோசலை” என்கிறார் கம்பர். திறம் = புண்ணியத் திறம்.

இதைச் சற்று வேறுமாதிரி சொல்கிறேன்.

இராமன் போன்ற மகனைப் பெற எக்கச்சக்கமாக புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் பரதனைப் போன்ற மகனைப் பெற குற்றமே இல்லாத மாசறு உள்ளம் இருந்தால் மட்டுமே  முடியும்.

இலக்குவனும் சத்துருக்கனும் ஒரே நேரத்தில் பிறந்ததாக வால்மிகி சொல்கிறார். இருவருக்கும்  ஒரே ஜாதகம்தான். ஆனால் கம்பர் மாறுபட்டு ஆளுக்கொரு ஜாதகம் கொடுக்கிறார்.
இலக்குவன் ஆயில்ய நட்சத்திரம், கடகராசி. சத்துருக்கன் மக நட்சத்திரம் சிம்ம ராசி.

ஆயில்யத்துக்கு அடுத்தது மக நட்சத்திரம். ஆயில்யம் முடியப் போகின்ற பொழுது இலக்குவன் பிறந்திருக்க வேண்டும். கொஞ்ச நேரத்திலேயே மகம் தொடங்கி சத்துருக்கன் பிறந்திருக்க வேண்டும். இலக்குவனும் சத்துருக்கனும் குணத்தால் வேறுபட்டவர்கள்.

ஆயில்ய நட்சத்திரத்தின் குறியீடு பாம்பு. பாம்பு சீறுவது போலச் சீறுகின்றவன் இலக்குவன். நால்வரில் சீற்றம் மிக்கவன் இலக்குவன்.

கைகேயி காட்டுக்குப் போகச் சொன்னால் சீறுவான்
பரதன் திரும்பவும் நாட்டுக்குக் கூப்பிட வந்தால் சீறுவான்
சுக்ரீவனிடம் போய்ச் சீறுவான்
இலங்கையிலும் சீறுவான்

ஆயில்ய நட்சத்திரத்தை வடமொழியில் அஸ்லேஷா என்பர். அது ஆதிசேடனைக் குறிக்கும். ஆதிசேடனே இலக்குவனாக வந்ததால் பொருத்தமான நட்சத்திரத்தில் பிறந்தான்.

அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற
அரவு = பாம்பு = ஆயில்ய நட்சத்திரத்தைக் குறிக்கும்
அலவன் = நண்டு = கடகராசியைக் குறிக்கும்

பூச நட்சத்திரத்துக்கு உரியதும் கடகராசிதான். ஆனால் பரதன் பிறந்ததைச் சொல்லும் போது கம்பர் ”பூசமும் மீனம்னு பொலிய” என்று சொல்கிறார். மீன ராசியாக இருக்க உத்திரட்டாதியிலோ ரேவதியிலோ பிறந்திருக்க வேண்டும். பிறகு ஏன் மீனம் என்று சொல்கிறார்?

உண்மையில் பரதனுக்கு என்ன ராசியென்றே கம்பர் சொல்லவில்லை. புனர்பூசம் 4ம் பாதத்திலிருந்து ஆயில்யம் முடியும் வரைக்குமே கடகராசிதான்.

ஆனால் பரதனுடைய உயர்வைச் சொல்வதற்காக பூசமும் மீனமும் பொலிய பரதன் பிறந்தான் என்கிறான்.

புரியவில்லையா? விவரமாகச் சொல்கிறேன்.

இராமாயணக் கதை முழுக்க முழுக்க இராமனைப் பற்றிப் புகழ்ந்து சொன்னாலும் கதைக்கு நடுநடுவே பரதன் இராமனை விட உயர்ந்தவன் என்று சொல்லப்பட்டே வந்திருக்கிறது.

அனைத்திற்கும் மேலாக கதை முடியும் வேளையில் “எண்ணில் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ” என்று கோசலை வாயால் சொல்ல வைக்கிறார் கம்பர்.

அதாவது எண்ண முடியாத கோடி இராமர்கள் இருந்தாலும் பரதனுடைய அருளுக்குப் பக்கத்தில் வர முடியாது என்பது கருத்து.

ஆகையால்தான் பரதன் பிறந்த பொழுது பூச நட்சத்திரம் மட்டுமல்ல எல்லா நட்சத்திரங்களும் பொலிந்தன என்கிறார் கம்பர். மீனம் என்பது நட்சத்திரம் என்றும் பொருள் படும்.

இராமனும் இலக்குவனும் சத்துருக்கனும் பிறந்த போது அந்தந்த நட்சத்திரங்கள் மட்டுமே மகிழ்வுற்றன. ஆனால் பரதன் பிறந்த போதுதான் எல்லா நட்சத்திரங்களும் மகிழ்வுற்றன என்பது கம்பன் கூற்று.

இந்தப் பதிவை சொற்பொழிவாகக் கேட்க…

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இலக்கியம், கம்பராமாயணம் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

16 Responses to நட்சத்திரம் என்ன சொல்லுங்க

 1. sivagnanam g says:

  fantastic….

 2. அருமை அருமை பகிர்வுக்கு நன்றி

 3. அருமையான அலசல்.

  பூசத்தின் பெருமை கண்டு மனம் குளிர்ந்தது. மகள் பூசம்தான்!

  • GiRa ஜிரா says:

   வாங்க டீச்சர். பயணமெல்லாம் நல்லா நடந்திருக்கும்னு நெனைக்கிறேன்.

   பூசம் எவ்வளவு பெரிய விஷயம் பாத்தீங்களா? பரதனோட நட்சத்திரம்.

 4. அருமையான பதிவு…

  \\இராமன் – புனர்பூசமும் விண் உேளார் புகழ் தூய கர்க்கடகமும் – புனர்பூசம்/கடகம்\\ ;))) சேம் பிளட் ;))

  • GiRa ஜிரா says:

   ஆகா. நாம் வாழும் காலத்தில் ஒரு கலியுக இராமன் இருக்காருன்னு பெருமைப் படுறோம். 🙂 வில்லு அம்பு ஒடச்சிதான் கல்யாணம் பண்ணிங்களா?

 5. Samudra says:

  பகிர்வுக்கு நன்றி

 6. அத்தனையும் முத்தான வார்த்தைகள். பரவசம் அடைந்தோம் அருமையான பதிவு அண்ணா.

  • GiRa ஜிரா says:

   வாங்க மயூரேசன். நம்ம பிளாகு பக்கத்துல வந்து ரொம்ப நாளாச்சு. நானும் புது பிளாக்கு தொடங்கிட்டேன். பழைய நண்பர்கள் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 🙂

 7. //ஆகையால்தான் பரதன் பிறந்த பொழுது பூச நட்சத்திரம் மட்டுமல்ல எல்லா நட்சத்திரங்களும் பொலிந்தன என்கிறார் கம்பர். மீனம் என்பது நட்சத்திரம் என்றும் பொருள் படும்.//

  அருமையான விளக்கத்திற்கு நன்றி!

 8. p.shanthiramathy says:

  eanaku rasi natchaththiram theriyathu, dob1991.08.02time theriyathu pls raasi, natchathiram sollunga & tell me about my studies

 9. s.darshan says:

  Kadaka rasi poosam natchathiram en magan padippu Sariyaga varavillai .

 10. vengat says:

  Really very good message about star poosam,because my star is poosam

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s