தேவன்டி வந்தியத்தேவன்டி

இன்னைக்கு அலுவலகத்தில் காபி இடைவேளையின் போது எதையோ பேசப் போய் எதையோ பேசி… எங்கெங்கோ தாவி பொன்னியின் செல்வனை சினிமாக எடுத்தால் எப்படியிருக்கும் என்று வந்து நின்றது.

படம் மட்டும் எடுத்தாப் போதுமா… படத்துக்கு நல்ல பாட்டுகள் வேணும். சரித்திரப் படத்துல பாட்டு ஜிவ்வுன்னு இருந்தாதான் அள்ளும். கர்ணன் பட ரேஞ்சுக்கு இருக்கனும்ல.

சரி… கொறஞ்சது அஞ்சாறு பாட்டுகளாச்சும் இருக்கனும். சின்னச் சின்னதா ரெண்டு மூனு பொடிப் பாட்டுகளும் இருந்துக்கலாம். என்னென்ன கட்டத்துல பாட்டுகள் வரலாம்?

மொதல்ல முழுப்பாட்டுகள் பட்டியல்
1. டைட்டில் சாங் – வந்தியத்தேவன் குதிரையில் வர்ரப்போ பாட்டு
2. தேவராளன் தேவராட்டி ஆடும் குறவைக் கூத்து
3. ஆழ்வார்க்கடியனும் ஒரு சிவாச்சாரியாரும் பாடும் காமெடி போட்டிப் பாட்டு
4. வந்தியத்தேவன் – குந்தவை கனவுப் பாட்டு
5. சோகப்பாட்டு – பூங்குழலி ஒரு பக்கமாவும் அரண்மனையில் நந்தினி ஒரு பக்கமாவும் மணிமேகலை ஒருபக்கமாவும் பாடனும்
6. வானதி – அருள்மொழிவர்மன் கனவுப் பாட்டு (இது கிளைமாக்சுக்கு முன்னாடி வரனும்)

அடுத்து பொடிப் பாட்டுகள் பட்டியல்
1. சேந்தன் அமுதன் பாடும் பக்திப்பாட்டு
2. இலங்கையில் புத்தபிட்சுகள் பாடும் பாட்டு
3. சூறாவளிக் காட்சியில் ஆவேசப்பாட்டு

ஒவ்வொரு பாட்டாப் பாப்போம்.

மொதல்ல டைட்டில் சாங். குதிரைக் குளம்படிதான் பாட்டுக்குத் தாளம். ஆனா நடுநடுவுல குதிரைய விட்டு எறங்கி தண்ணியெடுக்க வந்த பொண்ணுங்களோடும் ஏர்தூக்கிட்டுப் போற உழவர்களோடயும் ஆடனும். ஆகையால குத்துப்பாட்டுக்கும் மெலடிக்கும் நடுவுல இருக்கனும்.
ஒருவன் ஒருவன் தூதுவன்
நல்லவர்க்கெல்லாம் சாது இவன் – டைப்ல பாட்டு ஆரம்பிக்கனும்.
பொண்ணுங்களோட ஆடும் போது கொஞ்சம் சுறுசுறுன்னு இருக்கனும்.
தேவன்டி வந்தியத்தேவன்டி
நீ ஏறித்தான் பாக்கனும் என் வண்டி – மாதிரி வரிகள் இருந்தா மக்கள் ரசிப்பர்.

தேவராளன் தேவராட்டி குறவைக் கூத்து நல்லா விறுவிறுப்பா இருக்கனும். பாட்டு ரொம்பப் புதுமையா இருக்க வேண்டியது அவசியம். அதுக்காக பழைய இசைக்கருவிகளான கொட்டு, முழவு, செண்டை, மேளம், பறையெல்லாம் பயன்படுத்தனும். அப்போதான் பாட்டு மார்டனா இருக்கும். தேவைப்பட்டா சைனாவுக்குப் போய் அங்கிருக்கும் பழைய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி புதுமை படைக்கலாம். சைனால வந்த பழைய பாட்டையே திருடிப் போட்டாலும் யாருக்கும் தெரியாது.

காமெடிப் பாட்டு கண்டிப்பாத் தேவை. அதுவும் ஆழ்வார்க்கடியனை வெச்சுக்கிட்டு காமெடிப் பாட்டுப் போடாம இருக்க முடியுமா? ஆழ்வார்க்கடியன் சிவனைக் கிண்டலடிக்கிற மாதிரியும் சிவாச்சாரியார் விஷ்ணுவைக் கிண்டலடிக்கிற மாதிரியும் இருக்கனும். ஆனா அது பிரச்சனையாயிரக் கூடாது.

இந்து முன்னடி இராமகோபாலன் தியேட்டர் முன்னாடி ஆர்ப்பாட்டம் பண்ணவும் வாய்ப்பிருக்கு. அதுவும் ஒரு விளம்பரந்தானாலும்.. எதுக்குப் பிரச்சனை. அதுனால இந்தப் பாட்டை வாலியை விட்டு எழுதச் சொல்லனும். இராமகோபாலன் ஒன்னும் சொல்ல மாட்டார். நிந்தாஸ்துதி அழகா வந்திருக்குன்னு பாராட்டு அறிக்கை விடுவாரு. கைலாசத்து ஆண்டியா கலாஷேத்ரா ஆண்ட்டியா ரேஞ்சுக்கு வாலியும் பிரமாதப்படுத்திருவாரு.

வந்தி-குந்தவை டூயட் ரொம்ப ரிச்சா இருக்கனும். இதுவரைக்கும் சினிமா கேமராவே போயிருக்காத அலமிட்டோமியா, லாசிரிசியா மாதிரி வரைபடத்துலயே இல்லாத நாடுகள்ள படமாக்கனும். இந்தப் பாட்டு புதுமையான பழந்தமிழ் லிரிக்சா இருந்தா நல்லாருக்கும். வைரமுத்துதான் அதுக்கு பெஸ்ட்.
சோழன் மகளே சோழன் மகளே
வந்தியத்தேவன் விழி நோக்காய்
எகிப்து நாட்டின் பிரமிட்டை
தமிழன் எனக்கு நீ காட்டாய்
சண்முகப்பிரியா ராகத்தையும் கரஹரப்பிரியா ராகத்தையும் கலந்து ஜாஸ் இசையில் பாட்டு இருந்தா பிச்சிக்கும். டாப்10ல இதுதான் ரொம்பநாளைக்கு நிக்கும். உதித் நாராயணனும் சாதனா சர்க்கமும் பாடனும். அதுதான் பாட்டுக்கு ரொம்ப முக்கியம்.

எத்தன பாட்டு இருந்தாலும் நல்ல சோகமான மெலடி இருக்கனும். கதையில பூங்குழலி, நந்தினி, மணிமேகலை….மூன்று பெண்களும் ஒரே மனநிலையில் இருக்காங்க. அவங்க மூனு பேருக்கும் ஒரே பாட்டு.

உனது மலர்க் கொடியிலே எனது மலர் மடியிலேன்னு பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈசுவரியும் பாடுன மாதிரி ஒரு சிச்சுவேஷன். படத்த 80கள்ள எடுத்திருந்தா பி.சுசீலா(பூங்குழலி), எஸ்.ஜானகி(நந்தினி), வாணிஜெயராம்(மணிமேகலை)ன்னு பாட வெச்சிருக்கலாம். இப்போ அதுக்குச் சான்ஸ் இல்ல. ஷிரேயா கோஷல், சாதனா சர்க்கம், சின்மயி பாட வேண்டியதுதான். கேக்க வேண்டியது நம்ம தலையெழுத்து.

வானதி-அருள்மொழிவர்மன் டூயட் முழுக்க முழுக்க இலங்கையில்தான் எடுக்கனும். வானதி பீச்சில் ஓட… அருள்மொழி துரத்த… தாவணியைப் பிடிச்சு இழுக்க… வெள்ளைத் துணியோட வானதி கடல்ல விழுந்து நீந்த.. ஐயோ… ஐயோ.. அருள்மொழி இடுப்பில் ஒரு வேட்டி மட்டும் கட்டிக்கிட்டு சிக்ஸ் பேக் காட்ட… அதிபயங்கர ரொமாண்டிக்கா இருக்கனும். இதப் பாத்துட்டு பேஸ்புக்ல காலேஸ் பசங்கள்ளாம் வேட்டி மட்டும் கட்டிக்கிட்டு சிக்ஸ்பேக் காட்டுற படங்களைப் போட்டு மக்களைச் சாகடிக்கனும். ஹையோ பத்திக்கிச்சு பாட்டை இன்ஸ்பிரேஷனாவோ.. இல்ல அந்தப் பாட்டையோ கொஞ்சம் முன்னப்பின்ன மாத்தியோ பயன்படுத்திக்கலாம். இந்தப் பாட்டு கிளைமாக்சுக்கு முன்னாடி வந்தா நல்லாயிருக்கும்.

பொடிப்பாட்டுகள் ரொம்பவே லேசு. சேந்தன் அமுதனுக்கு ஒரு தேவாரப் பாட்டு குடுத்துட்டா நல்லாயிருக்கும். நாலு வரிகள்தானே. பொன்னார் மேனியனே பாட்டு பெஸ்ட் சாய்ஸ்.

புத்த பிட்சுகள் பாடுறது…புத்தம் சரணம் கச்சாமின்னு சும்மா ரெண்டு மூன்று வரிகள் இருந்தாப் போதும். பாட்டு சிங்கள மொழியில் இருந்தா நல்லது. அதுக்கு ஒரு எதிர்ப்பு உருவாகும். பப்ளிசிட்டின்னும் வெச்சுக்கலாம். ரொம்பப் பிரச்சனையாச்சுன்னா ”தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து” அந்தப் பாட்டை வெட்டி எடுத்துறலாம். வின்-வின் சிச்சுவேஷன் ஆயிரும்.

சூறாவளி ஆவேசப் பாட்டு படத்துல முக்கியக் காட்சி. பாட்டு வரிகள் மக்களுக்குக் கேக்கனும்னு அவசியமில்ல. வந்தியத்தேவனையும் கப்பலையும் சூறாவளியையும் கிராபிக்ஸ்ல கலந்தடிக்கனும். ஹைபிட்ச்சுல யாராச்சும் கத்தனும். நாலஞ்சு வரி போதும். பாட்டு முடியும்போது ரொம்பவே மென்மையா இசை மாறி… சூறாவளி முடிஞ்சிருச்சுன்னு காட்டனும்.

பொன்னியின் செல்வன் படத்துக்கு மியூசிக் கம்போசிஷனே முடிஞ்சது. 🙂

என்ன மக்களே… தலை சுத்துதா… ஒங்க கற்பனையையும் இந்தப் பதிவு தூண்டியிருக்கும். எந்த மாதிரி பாட்டுகள் இருந்தா நல்லாருக்கும்… யாரு பாடனும்… யாரு இசையமைக்கனும்னு ஒங்க கருத்துகளை எடுத்து விடுங்க.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in நகைச்சுவை and tagged , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to தேவன்டி வந்தியத்தேவன்டி

 1. எல்லாஞ்சரி. ஆனால்….. உடிட் நாராயணனைக் கட்டாயம் போட்டே ஆகணுமா?

  அதுவும் வந்தியத்தேவனை வச்சே தமிழைக்கொல்லணுமா?

  அச்சச்சோ……….

  • GiRa ஜிரா says:

   வேற வழியே இல்ல டீச்சர். பாட்டு ஹிட் ஆகனும்னா உதித் நாராயணன் தான் பாடனும்னு யுவன், ஜி.வி.பிரகாசு மொதக்கொண்டு எல்லா இசையமைப்பாளர்களும் சொல்லிட்டாங்களே. 🙂

 2. கொத்துக்கறி போடும் அளவுக்கு பொன்னியின் செல்வன் மேல் என்ன கோபம் உங்களுக்கு?

  • GiRa ஜிரா says:

   நோ டென்ஷன் பிளீஸ். இதெல்லாம் ஒரு ஜாலிக்கு. இலக்கியத் தரத்தோட பாட்டு எழுதுனா நாலு பேர் ரசிப்பாங்க. இத நானூறு பேரு ரசிப்பாங்க. 🙂

 3. ம்ம்ம், பாட்டெல்லாம் நல்லாவே வந்திருக்கு (டைரக்டர் மாதிரி பேசுறேனா?!).,

  படத்துல கரிகாலன் இறந்த பிறகு பேத்தாஸ் சாங் ஒன்னு சேத்துக்கோங்க‌. “ஆஆஆஆ ஆஆ வானம் தொட்டு போன” பாட்டு மாதிரி, spb குரல்ல, சோகம் நெஞ்ச பிழியனும்..

  உதித் நாராயன் பாடுனா “சோலன் மகலே சோலன் மகலே” பாட்டு நல்ல ஹிட் ஆகும் பாத்துக்கோங்க.
  சரியா தேர்வு!!

 4. இத்தன பாட்டு போட்டதுதான் போட்டீங்க. அப்டீயே நம்ம பழுவுக்கும் நந்தினிக்கும் ஒரு ஜொள்ளு (பழுவுக்கு) /சோகம் கலந்த ஆனால் பழுவிடம் காதல் உள்ளது போல கண்ணீரும் புன்னகையும் கலந்த பாட்டு ஒண்ணும் போட்டா என்ன குறஞ்சா போவுது.. ? அப்டீயே வீரபாண்டியன்/ஆதித்தகரிகாலன்/வந்தியத்தேவன்/கந்தமாறன்னு நந்தினி ஜொள்ளுவிட்ட/நந்தினிக்கு ஜொள்ளுவிட்ட விடலபசங்களையெல்லாமும் மாண்டேஜ் ஷாட்கள்ள காட்டினா.. கதையோட இணைஞ்ச பாட்டா ஜனங்களக் கட்டிப் போடாது? இதுக்கு ஒரே பாட்டிலேயே இரண்டு விதமான ட்யூனையும் கலந்து கட்டிப்போடலாமே

 5. ada pavigala……..kalkiya kooda veeda matengala…..room pootu yosipingala?

 6. Pingback: ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில்… | மாணிக்க மாதுளை முத்துகள்

 7. sathu says:

  hi,
  Is there any videos of Magic Lantern – ponniyin drama in online to watch?

  Thanks,
  Sat

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s