அவியல் – 01

பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஆறு மாசங்களுக்கு முன்னாடியே வந்துட்டாலும் சாமன்களெல்லாம் அங்கதான் இருந்துச்சு. ஆள் பிடிச்சு வீட்டை வாடகைக்கு விடவும் சாமான்களைச் சென்னைக்குக் கொண்டு வரவும் மூன்று நாட்கள் பெங்களூர்ப் பயணம்.

பெங்களூரில் குளிர் இருக்கிறது
பெங்களூரில் கரண்ட் இருக்கிறது
இதையெல்லாம் விட பெங்களூரில் மலைமலையாகக் குப்பை இருக்கின்றது

எப்படியிருந்த பெங்களூர் இப்பிடி ஆயிருச்சு. ம்ம்ம்ம்ம்ம்!

*****************************************************

பெங்களூருக்குள் வெள்ளிக்கிழமை காலை ஐந்து மணிக்கு நுழையும் போது கடும் குளிர். நல்ல வேளையாக போர்வையைக் கொண்டு வந்திருந்தேன். பெங்களூருக்குள் வள்ளலாரைப் போல நுழைந்தேன். அவருடைய கருத்தைப் பின்பற்றாவிட்டாலும் ஒருமுறை அவரது தோற்றத்தைப் பின்பற்றியாகிவிட்டது.

இன்று காலை சென்னைக்குத் திரும்ப வந்தாகி விட்டது. சென்னை சொர்க்கம். 🙂

*****************************************************

வெள்ளிக்கிழமை நண்பர் நாகாவை அவரது வீட்டில் சந்தித்தேன். அவரைப் பார்க்கப் போனேனா குழந்தைகளைப் பார்க்கப் போனேனா என்பதே மறந்து விட்டது. நாகாவோடு நான்கைந்து வார்த்தைகள் பேசியிருப்பேன். என்னுடைய சகோதரியின் குழந்தைகளைப் போல என்னிடம் மிகுந்த உரிமையெடுத்துக் கொண்டு பழகினார்கள். என் கண்ணே பட்டுவிடும். சகோதரியிடம் சுற்றிப் போடச் சொன்னேன்.

நாகாவுக்குப் எழுத்தாளர், பேச்சாளர், ட்வீட்டர் என்று பல முகங்கள் உண்டு. அத்தனையையும் விடக் குறிப்பிட வேண்டியது. அவர் ஒரு நல்ல தந்தை.

வாழ்க வளமுடன்.

*****************************************************

மூன்று நாட்களுமே நிறைய வேலை. பேக்கர்ஸ் & மூவர்ஸ் வைத்துதான் வேலை வாங்கினாலும் அலைச்சலும் ஒதுங்க வைப்பதிலும் அலுப்படைந்து விட்டது உடம்பு. இதெல்லாம் முன்பு தூசி தட்டுவது போல. உடம்பு வலி. அதனால் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன்.

இந்த அலுப்பில் என்னுடைய ஒரு மொபைலை பெங்களூர் வீட்டில் மறந்து வைத்து விட்டேன். இன்னொரு மொபைலை பஸ்சிலோ ஆட்டோவிலோ தவற விட்டு விட்டேன். 😦 எப்படி நடந்தது என்றே நினைவில்லை. தூக்கமின்மை வேறு.

நேற்றிரவு பத்துமணிக்குக் கிளம்ப வேண்டிய கே.பி.என் பதொனொன்றரைக்குதான் கிளம்பியது. அதுவரைக்கும் மடிவாளாவில் குப்பை மேட்டுக்கு அருகில் கூட்டத்தோடு கூட்டமாக எலியோடு புலியாக நின்றேன். கே.பி.என் ஒவ்வொரு முறையும் இதைத்தான் செய்கிறது. டி.நகரில் இறங்கலாம் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அதில் பயணம். அடுத்த பெங்களூர்ப் பயணம் எப்போதோ!

*****************************************************

மூன்று நாட்களாக ராஜா க்விஸ்சில் கலந்து கொள்ள முடியவில்லை. இரண்டு பாட்டுகள் எனக்குப் பிடித்த 80களில் இருந்து போட்டிருக்கிறார். Sorry Rex. I will try to be punctual further. 🙂

*****************************************************

கீச்சுலகத்திலும் நிறைய பிரச்சனைகள். குறிப்பாகப் பின்னணிப் பாடகி விவகாரம். Bullying என்பது மிகக் கொடுமையானது. அடிக்கடி பள்ளி மாற்றியதால் ஒவ்வொரு பள்ளியிலும் புதிதாகச் சேரும் போது bullying இருக்கும். பிறகு சரியாகி விடும். ஆனால் பட்டவர்களுக்குத் தெரியும் அதன் கொடுமை. அந்த நேரத்து மனவுழைச்சல். Bullying யார் செய்தாலும் தவறுதான்.

முதலில் என்னுடைய ஆதரவு பாடகி பக்கம் இருந்தது. ஆனால் சிறிது சிறிதாக நடுவில் வந்து நிற்கிறது.

நானெல்லாம் கொசு. என்னுடைய ஆதரவும் எதிர்ப்பும் யாரையும் ஒன்றும் செய்துவிடமுடியாது. ஆனாலும் என்னுடைய கருத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

வீடணனாகவோ சுக்ரீவனாகவோ இருப்பதை விட “கும்பிட்டு வாழ்கிலேன் யான். கூற்றையும் ஆடல் கொண்டேன்” என்று சொல்வதே எனக்குப் பிடித்திருக்கிறது.

கீச்சுலகத்துல கருணாநிதியை ஜெயலலிதாவை சோனியாவை மன்மோகன்சிங்கை ராகுல்காந்தியை அசிங்கமா எல்லாரும் என்னென்னவோ பேசியிருக்கோம். அதுக்கு யாரும் கேஸ் போட்டிராதீங்கப்பா. 🙂

*****************************************************

சரி. ஜில்லுன்னு ஒரு பாட்டு. எப்பவுமே எம்.எஸ்.வி, ராஜா, ரஹ்மான் தானா? ஒரு மாறுதலுக்கு கங்கையமரன் பாட்டு பாக்கலாமே.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அவியல் and tagged , , , , . Bookmark the permalink.

9 Responses to அவியல் – 01

 1. Loved your lovely post 🙂 I too would love to meet Mr.Chokkan and his beautiful family 🙂 Get a new phone, don’t feel bad!

  amas32

 2. For some reason, Kamal looks like Mohan to me in the song. Or, did Mohan copy Kamal later?

  • GiRa ஜிரா says:

   in some angles… yes Kamal looks like Mohan. But I couldnt take my eyes out of Madhavi. Especially with blue churidhar… wow… and how easily she dances.

 3. reader says:

  //அதுவரைக்கும் மடிவாளாவில் குப்பை மேட்டுக்கு அருகில் கூட்டத்தோடு கூட்டமாக எலியோடு புலியாக நின்றேன். கே.பி.என் ஒவ்வொரு முறையும் இதைத்தான் செய்கிறது. //

  It is better to go to bommanahalli directly. Madiwala pickup sucks!

  • GiRa ஜிரா says:

   இதுல பாருங்க… இந்திரா நகர் பிக்கப். அங்கயிருந்து வேன் வெச்சி மடிவாளாவுக்கு கூட்டிட்டு வந்து இந்தப் பாடு. இந்திரா நகர்லயே வேன் லேட்டு. மடிவாளால பஸ் லேட்டு.

 4. || நேரத்து மனவுழைச்சல். ||

  மன உளைச்சல்

 5. ஓய்வெடுத்தாச்சா? புது செல் போன் வாங்கியாச்சா? நல்ல காலம் கீச்சுலகத்துக்கெல்லாம் நான் வரதில்லை! உங்க சந்திப்பு பற்றி அங்கேயும் வாசிச்சேன் 🙂 நீங்க மாதவி பற்றி சொன்னதைப் பார்க்கிறதுக்காகவே மெனக்கெட்டு வீடியோ பார்த்தேன்!

  • GiRa ஜிரா says:

   வாங்கக்கா நல்லாருக்கிங்களா?

   தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.

   ஃபோனெல்லாம் வாங்கியாச்சு. எல்லாம் நல்லபடியா பழைய நிலைக்கு வந்தாச்சு 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s