அல்லிக்கேணி

சென்னையில் இவ்வளவு நாளா இருக்கேன்னு பேரு. ஆனா இதுவரைக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப் போனதில்லை. போகனும்னு திட்டமெல்லாம் போட்டும் நடக்காமப் போயிருக்கு. அப்படித் திட்டம் போட்டு போகமுடியாமப் போன திருவல்லிக்கேணிக்கு ஒரு திடீர்ப் பயணம் இன்னைக்கு நடந்தது.

நண்பர் நாகாவோட பேசிக்கிட்டிருந்தப்போ “அருளிச்செயல் அமுதமும் தொல்புகழ் அமுதமும்” என்ற புத்தகத்தைப் பத்திச் சொன்னாரு. அது சென்னைலதான் கிடைக்குங்குறதால விளம்பரத்துல இருந்த தொலைபேசிய அழைச்சுப் பேசினேன். திருவல்லிக்கேணியில் வீட்டுக்கு வந்து வாங்கிக்கச் சொன்னால ஆறுமணிக்குக் கெளம்பிப் போனேன்.

அந்த நேரத்தில் கூட்டத்துக்கு பயந்து காரில் போக மனசு எடங்குடுக்கலை. கோட்டூர்ல இருந்து டிரெயின் போகுதே. ஏறிக் கெளம்பியாச்சு.

திருவல்லிக்கேணி ஸ்டேஷன் பக்கத்துல அவ்வளவு நெருக்கமா வீடுகள். ஒரு வீட்டுக்கு இன்னொரு வீடுதான் ஆதாரங்குறதப் போல வீடுகள். அந்தச் சந்துகளில் நுழைந்து வளைந்து தோராயமா தெப்பக்குளத்துக்கு வந்தாச்சு.

எப்ப வரக்கூடாதோ அப்பதான் வரும் இயற்கை அழைப்புகள். அவசரத்துக்கு என்னடா பண்றதுன்னு நெனச்சேன். தெப்பக்குளம் பக்கத்துல கோயில் சார்பா ஒரு இலவசக்கழிப்பறை வெச்சிருக்காங்க. ஓரளவு நல்ல பராமரிப்பும் கூட. இந்த வசதிகளை எல்லாக் கோயில்களிலும் செய்யனும்.

சரி. வந்தது வந்துட்டோம். பார்த்தசாரதியைப் பாத்துட்டுப் போகலாம்னு நுழைஞ்சேன். சனிக்கிழமை வேற. கூட்டம் எப்படியிருக்குமோன்னு யோசனையாத்தான் நுழைஞ்சேன். அதிசயத்துலயும் அதிசயமா கூட்டமேயில்ல. கோட்டூர்புரத்துப் பெருமாள் கோயில்ல கூட சனிக்கிழமை கூட்டம் குவியும். பொதுவழியிலேயே என்னை விறுவிறுன்னு வரவெச்சான் பார்த்தசாரதி.

அப்போது மனதில் தோன்றியவைகளைச் சிறிய கவிதை போல கீழே கொடுத்துள்ளேன்.

புள் சுமக்கும் கள்ளளைச்
சொல் சுமந்து புகழேத்த
தொல் சுமந்த செந்தமிழில்
மாயவன் மாலவன்
திரு கமழும் மார்பன்
உலகளந்த நெடியவன் என்றும்
மறை சுமந்த வடமொழியில்
கேசவன் மாதவன்
வடமலை ரிஷிகேசன்
குறை களை கோவிந்தன்
என்றெலாம் செப்பிடப் புகுந்தாலும்
சொல்லிடப் போதாமல் வாயுலர்ந்தேன்
அல்லி நிறைக் கேணியூர் சாரதியே – வெறும்
அல்லல் குறை புலம்பல்களை
என் வாய் விலக்கி வைத்திடுவாய் பெருமாளே!

அப்படியே வேதவல்லித் தாயரையும் யோகநரசிம்மரையும் பாத்துட்டு புளியோதரைப் பொட்டலங்களை வாங்கிப் பைல போட்டுக்கிட்டு நடந்தேன்.

வழியில் ஒரு வீட்டுல ஒரு பக்கமா அப்பளம் வகைகள வித்துக்கிட்டிருந்தாங்க. அரிசி அப்பளம் தீந்து போச்சேன்னு ஒரு பாக்கெட் அரிசி அப்பளம் வாங்கிக் கிட்டேன்.

அப்புறம் அந்த புத்தகம் விக்கும் வீட்டைக் கண்டுபிடிச்சுப் போய் புத்தகமும் வாங்கினேன். அதை எழுதியவர் எம்பது வயதில் கற்றதைச் சொல்ல வேண்டும் என்று எழுதி வைத்தாகச் சொன்னார்கள்.

வாங்கிட்டு வரும் போது அதே அப்பளக்கடையில் உழுந்து அப்பளத்தையும் மணத்தக்காளி வத்தலையும் வேப்பிலைக்கட்டியும் (நார்த்தைஇலைப்பொடி) வாங்கினேன்.

வீட்டுக்கு வந்து வேப்பிலைக் கட்டிக்கு திறப்பு விழா நடத்தியாச்சு. உரைப்பு உப்பு எல்லாம் கலவையாக பிரம்மாதமாக இருந்தது. உப்பைக் குறைத்து விட்டதால் கொஞ்சமாக எடுத்துக் கொண்டேன். தயிர்ச்சோற்றுக்கு கூட்டணி அட்டகாசம்.

இந்த ஒட்டு மொதப் பயணத்தில் ரயிலில் பயணித்த நேரத்தை விட மத்த நேரமெல்லாம் கால்நடைதான். முதலில் வலிப்பது போல இருந்த கால் போகப் போக நன்றாகப் பழகி விட்டது. உடம்பும் புத்துணர்ச்சியாகி விட்டது. தினமும் இப்பிடி நடந்தால் நல்லதுதான். நடக்கனும். 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திருவல்லிக்கேணி and tagged . Bookmark the permalink.

5 Responses to அல்லிக்கேணி

 1. ஓஜஸ் says:

  Short n sweet. அது சரி நீங்களும் சொக்கன் மாதிரி தினமும் நட நடனு நடங்க, இது எல்லாம் சவகாச நலன்கள் !!!

 2. ஆஹா…. உங்களையும் வரவச்சுட்டானா மீசைக்காரன்!!!!! பொதுவழியிலே போனால் ஜாலியா ரங்கனையும் ராமனையும் போறபோக்குலே கும்பிட்டுக்கலாம்.

  இப்போதான் அவன் குடும்பம் பற்றி எழுதினேன். நேரம் இருந்தால் பாருங்க.

  http://thulasidhalam.blogspot.co.nz/2012/11/blog-post_7.html

  பின்பக்கத்தெருவில் பாரதியார் வீடு இருக்கு!!!!

  • GiRa ஜிரா says:

   வாங்க டீச்சர் வாங்க 🙂

   வரவெச்சுட்டானே அந்தத் தேர்டிரைவர்!

   நான் பொதுவழியில்தான் போனேன். கூட்டமில்லாம வசதியா இருந்தது.

   வர்ரேன். ஒங்க பதிவுக்கும் இதோ வர்ரேன்.

 3. Jawahar says:

  நானும் பார்த்தசாரதியை முதன் முதலில் பார்க்க 34 ஆண்டுகள் ஆயின! அது குறித்துப் பதிவும் எழுதியிருக்கிறேன்.

  http://kgjawarlal.wordpress.com

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s