பிரதீபாவளி – சில பிசினஸ் யோசனைகள்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். பலகாரங்களும் இனிப்புகளையும் வகைவகையாக விழுங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தீபாவளிக்கு ஒரு பதிவு. இதை நகைச்சுவை வகையில் சேக்கலாம்னு நெனச்சேன். ஆனா கட்டுரையில் இருக்கும் விவகாரங்கள் இப்ப நாட்டுல நடக்குறதாலே நகைச்சுவை உணர்வோட இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம்னு கேட்டுக்கிறேன்.

Image

அடிச்ச புயல்ல கரைக்கு ஒதுங்குன கப்பல மறுபடி கயித்தக் கட்டி கடல்ல இழுத்து விட்டுட்டாங்க. அத நெனச்சு ரொம்ப வருத்தப் பட்டேன். பின்னே.. எப்பேர்ப்பட்ட பிசினஸ் வீணாப் போகுது! கரையோரமா நின்னதுக்கே கடற்கரைக்கு மக்கள் கூட்டம் அள்ளுச்சே! நான் சொல்லப் போற திட்டங்களையெல்லாம் செயல்படுத்தியிருந்தா நல்லா கல்லா கட்டியிருக்கலாம்.

சரி. பிரதிபா காவேரிதான் கடலுக்குள்ள மறுபடியும் போயிருச்சு. இனி புயலுக்கு ஒதுங்குற கப்பல்கள நான் சொல்ற திட்டங்களைப் பயன்படுத்தி சம்பாதிக்கப் பாருங்க. கப்பலுக்கு டீசல் ஊத்துற செலவையும் மிச்சம் பிடிக்கலாம்.

ஆன் ஷோர் ஹோட்டல் & ரெஸ்டாரண்ட் (On Shore Hotel & Restaurant)

கப்பல்லதான் பயணிகள் தங்க அறைகள் இருக்குமே. சமைக்க அடுப்படி இருக்கும். உக்காந்து சாப்பிட இண்டோர் வசதிகள் இருக்கும். காத்தடிக்கிற இடமா பாத்து டேபிள் சேர் போட்டா கடலைப் பாத்துக்கிட்டே சாப்பிடலாம். நீச்சல்குளமும் இருக்கு. வேற என்னய்யா வேணும்!

கப்பலே பாக்காத மக்கள் கூட அங்க வந்து தங்கிட்டுப் போவாங்க. 3ஸ்டார்  4ஸ்டார் ரேட்டிங் வாங்கிட்டா வாடகைய எப்படி வேணும்னாலும் வெச்சுக்கலாம். இதையெல்லாம் கொஞ்சமும் யோசிக்காம கடலுக்குள்ள கப்பல இழுத்தவங்கள என்ன சொல்றது!

ஒரு வாட்டி அமெரிக்கால இருந்து ஹிலாரி மாதிரி ஆட்களை வரவழைச்சு தங்க வெச்சுட்டா சட்டுன்னு பிரபலம் ஆயிரும்.

சீ விண்ட் சினிமாஸ் (Sea Wind Cinemas)

கொஞ்சம் ரீமாடல் பண்ண வேண்டியிருக்கும். அத மட்டும் பண்ணிட்டா ஒரு நாலு ஸ்கிரீன்களோட மல்டிபிளக்சா மாத்திரலாம். பார்க்கிங் பிரச்சனை இல்லை. பெசண்ட் நகர் பீச்சுல ஒரு போர்ஷன அரசாங்கத்துக்குத் தள்ள வேண்டியத் தள்ளி பார்க்கிங்கா மாத்திடலாம்.

உள்ளயே ரெஸ்டாரண்ட் வெச்சுக்கனும். வெளியிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகள் அனுமதிக்கப்பட மாட்டாதுன்னு சொல்லிட்டா என்ன வெலை வேணும்னாலும் வெச்சு வித்துக்கலாம்.

குழந்தைகள சினிமாவுக்குக் கூட்டிட்டு வந்தா சாப்பிடாமப் போக முடியாது. உள்ளயே சரவணபவனுக்கு கொஞ்சம் எடம் குடுத்தா காப்பிய அம்பது ரூபாய்க்கு மக்கள் யோசிக்காம வாங்கிக் குடிப்பாங்க. பிட்சா பர்கர் கடைகளும் இருக்கனும். லாபம் கத்தை கத்தையா அள்ளலாம்.

திருமுருகன் திருக்கோயில்

இந்த ஐடியாவை நான் சொல்றதால… கப்பலை ஒரு முருகன் கோயிலா மாத்திட்டா நல்லது. இப்பல்லாம் கோயில்கள்ள நல்ல வருமானம். குன்றுதோறாடும் குமரன் இன்று முதல் கடலாடும் குமரன் என்று அழைக்கப்படுவான். திருச்செந்தூரில் கடற்கரையில் இருப்பவன் இங்கு கடலிலேயே இருக்கிறான்னு புகழ் பரப்புனா கூட்டம் அள்ளும்.

திருப்பிரதீபம்னு அந்தக் கோயிலுக்குப் பேர் வெச்சு… திருப்பிரதீப முருகன்னு கூப்பிடலாம்.

நான் திருப்பிரதீப முருகன் மேல ஆறு பாட்டு எழுதித்தாரேன். இளையராஜாவையும் எம்.எஸ்.விசுவநாதனையும் சேத்து வெச்சு இசையமைச்சிட்டா ஹிட்டாயிரும். நானும் அப்படியே ஹிட் ஆயிருவேன். அப்புறமென்ன ராஜா ரசிகர்களையெல்லாம் லேசா கோயிலுக்கு இழுத்திறலாம்.

கப்பல்லயே ஒரு ராஜா சார் கச்சேரி வெச்சிட்டா, அதுக்கும் கூட்டம் வரும். கார்த்திகை மாசத்துல கர்நாடக சங்கீதம் பாடுறவங்களையெல்லாம் வரவெச்சி தொடர் கச்சேரிகள் வெச்சா.. விளம்பரத்தயும் அவங்களே கவனிச்சுக்குவாங்க. அப்படிப் பாடுறவங்களுக்கு சண்முகப்ப்ரிய பிரதீப சங்கீத கலாபூஷன் விருது குடுத்துட்டா போதும்.

அடுத்து இந்தக் கோயில்தான் ஏழாவது படைவீடுன்னு சொல்லிக்கலாம். ஏற்கனவே மருதமலையை ஏழாவது படைவீடுன்னு சொல்லிக்கிறதால.. பிரச்சனையைத் தவிர்க்க இது எட்டாம் படைவீடுன்னு சொல்லிறலாம்.

சூரசம்காரத்தை ரெண்டு படகுல வெச்சு கடல்ல நடத்துனா எப்படியிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. அடேங்கப்பா. அடேங்கப்பா. டிவியில் லைவ் டெலிகாஸ்ட் பண்ணியும் காசு பாக்கலாம்.

பள்ளிகொண்ட பெருமாள் கோயில்.

இன்னொரு கிளாஸ் ஐடியா, கப்பலைப் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலா மாத்துறது. கப்பலின் வெளிப்புறத்தைப் பாம்புப் படுக்கை போலவே பெயிண்ட் அடிக்கனும். அஞ்சு தலைப் பாம்பு மாதிரி பெருசா செட்டப் செஞ்சு சேத்துட்டா அட்டகாசமா இருக்கும். பாக்குறவங்களுக்கு பாம்பு கடல்ல படுத்துருக்குறது போலவே இருக்கும்.

முருகன் கோயிலுக்குச் சொன்ன பல பாயிண்டுகளை சிற்சில மாற்றங்களோடு இங்கயும் செய்யலாம்.

இந்தக் கோயிலை வட அரங்கம்னு சொல்லிக்கலாம். இல்ல… வடவில்லிபுத்தூர்னு சொல்லலாம். என்னோட சாய்ஸ் வடவில்லிபுத்தூர். பேர் சொல்றதுக்குப் பொருத்தமா இருக்கு. ஆனா வடவில்லிபுத்தூர்ல வடகலை தென்கலை பிரச்சனை வராமல் இருக்கனும். தென்வில்லிபுத்தூர்ல என்ன கலை இருக்கோ. அதே கலை இங்கயும் இருக்கட்டும்.

கோயில்ல யானைக்குப் பதிலா டால்பின் வளக்கலாம்.  நீச்சல் குளத்தை தெப்பக்குளமா மாத்தி அதில் டால்பின் வளக்கலாம். டால்பினுக்குப் பொரிவாங்கிப் போட ஒரு கடை வெச்சுக்கலாம்.

முருகன் கோயில்ல கார்த்திகை மாசக் கச்சேரின்னா இங்க மார்கழி மாசத் திருப்பாவை. ஆண்டாளுக்குத் தனி சன்னதி இருக்கனும். அது ரொம்ப முக்கியம்.

இதே போல எந்தக் கடவுளை வெச்சும் செய்யலாம். நல்லா கல்லா கட்டலாம். சர்ச்சாவும் மாத்திக்கலாம். கடல்லயே ஒரு பெரிய கிருஸ்மஸ் மரம் வெச்சு டெக்கரேட் பண்ணா அதப் பாக்கவும் கூட்டம் வரும்.

இப்பிடி இத்தனை வழிகள் இருக்க… அந்தக் கப்பலை எக்சிபிஷனாவோ ம்யூசியமாவோ மாத்துனா ஒரு கூட்டமும் வராது. கப்பல் துருப்பிடிச்சுதான் போகும்.

சொல்றதச் சொல்லிட்டேன். இத பேட்டண்ட்டும் பண்ணி வெச்சிட்டேன். இந்தத் திட்டங்களை யார் செயல்படுத்தினாலும் வர்ர லாபத்துல எனக்கு 10%.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in நகைச்சுவை. Bookmark the permalink.

6 Responses to பிரதீபாவளி – சில பிசினஸ் யோசனைகள்

 1. நல்ல ஐடியாக்களை அள்ளித் தெளிச்சிருக்கீங்க … 10 % ரொம்ப குறைச்சல்.!

  • GiRa ஜிரா says:

   வாங்க தருமி சார். நல்லாருக்கிங்களா? 10% கொஞ்சம் தான். புரியுது. ரொம்பவும் ஆசைப்படக்கூடாதுன்னு புத்தர் சொல்லியிருக்காராமே! அனைத்துக்கும் ஆசைப்படுன்னு பட்டா அவர் வருத்தப்பட மாட்டாரா? 🙂

 2. அனு says:

  சூரசம்காரத்தை ரெண்டு படகுல வெச்சு கடல்ல நடத்துனா எப்படியிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. அடேங்கப்பா. அடேங்கப்பா//
  அரு​மையான ஐடியா ​பேசாம அறநி​லையத்து​றை விளம்பர பிரிவு ​மேலாளரா உங்கள ​போட்டுடலாம் 🙂

  • GiRa ஜிரா says:

   பாருங்க… இப்பிடி லட்டு மாதிரி ஐடியாக்கள் ஆயிரம் இருக்கு. அத விட்டுட்டு யார் யாரையோ அறநிலையத்துறையில்…. .சரி.. விடுங்க. பல் இருக்குறவன் பட்டாணி மெல்றான். பணம் இருக்குறவன் பழனி பஞ்சாமிர்தம் சாப்பிடுறான். 🙂

 3. sivagnanam g says:

  why dont you go to delhi?

  • GiRa ஜிரா says:

   Welcome sir. Hope you are doing good. Happy to see your comment in this blog.

   Delhi? Why sir? I am happy in Chennai. 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s