துப்பாக்கி – ஒரு டக் விமர்சனம்

துப்பாக்கி படம் எப்படியிருந்தது?

நல்லா இருந்தது.

துப்பாக்கி படம் வெற்றிப் படமா?

ஆமா. வெற்றிப்படம் தான்.

நானும் துப்பாக்கி படம் பாத்துட்டேன்னு சொல்ல விமர்சனம் எழுதுறதும் ஒரு வழி. நம்ம டக்கு ஊரறிஞ்ச டக்கு. அதே டக்கு வேகத்தில் படத்தையும் பாத்துட்டு அதே டக்கில் விமர்சனத்தையும் எழுதுறேன்.
துப்பாக்கி விறுவிறுப்பா நல்லாவே இருந்தது. படத்தின் மிகப்பெரிய பலம் இரண்டு விஷயங்கள். ஒன்று விஜய். இன்னொன்று திரைக்கதை.

படம் வந்து ரெண்டு மூன்று வாரங்கள் ஆச்சுல்ல. அதான் தியேட்டரில் ஏழே பேர். பகல் காட்சிக்குச் சென்றதால் கூட இருக்கலாம்.
ஆனா ஒரு சராசரி திரைப்பட ரசிகனா படத்தை நான் ரசிச்சேன்.

விஜய்யா… மிலிட்டரி மேனான்னு மொதல்ல ஒரு தயக்கம் இருந்தாலும் படத்துல அது ஒரு விஷயமாகவே தெரியல. விஜய் பாத்திரத்துக்கு என்ன தேவையோ அதைச் செஞ்சிருக்காரு.

படம் பாக்கும் போது எனக்குப் பிடிச்ச இரண்டு காட்சிகளை மனதில் குறிச்சு வெச்சிருந்தேன். படம் பாத்து ரெண்டு நாளாச்சுல்ல. அதான் மறந்து போச்சு.

ஆங்.. ஒன்னு நினைவுக்கு வந்துருச்சு. தப்பிச்சு ஓடுற தீவிரவாதி கூடவே விஜய்யும் பக்கத்துலயே ஓடும் காட்சி. தீவிரவாதியின் முகபாவமும் விஜய்யின் முகபாவமும் அட்டகாசம்.

இன்னொரு காட்சி என்னது?!!! அடடா! நினைவுக்கு வர மாட்டேங்குதே! படத்தில் எழுத்து போடும் காட்சியில் பின்னணி ஓவியங்கள் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் அதல்ல நான் சொல்ல வந்தது.
ஏ.ஆர்.முருகதாசுக்கு ஒரு பிரச்சனை இருக்கு. அதைச் சரி செய்யலைன்னா அடுத்த படம் கண்டிப்பா அடிவாங்கும். கதையெல்லாம் நல்லாத்தான் தொடங்கும். ஆனா கிளைமாக்ஸ் சொதப்பும். இந்தப் படத்திலும் அதுதான். கஜினியிலும் அதுதான். ஏழாம் அறிவில் முதல் அரைமணி நேரம் தவிர முழுக்க முழுக்கவே சொதப்பல்தான்னு வெச்சுக்கோங்களேன். அந்தச் சொதப்பலிலும் ஆகக்கொடிய சொதப்பல் கிளைமாக்ஸ். நல்ல அசிஸ்டண்ட் டைரக்டர் கிட்ட சொல்லி நல்ல கொரிய ஆங்கிலப் படங்கள்ள இருந்து நல்ல கிளைமாக்சாக அடுத்த படத்தில் சுடுமாறு ஒரு சினிமா ரசிகன் என்ற வகையில் கேட்டுக் கொள்கிறேன்.

மகள்ள்ள்ள் ஜரீரி என்று ஒருத்தர் கத்தும் போதே ஹாரிஸ் ஜெயராஜ் மேல வன்கொடுமைச் சட்டத்தைப் பாய்ச்சனும்னு ஒரு வெறி. இதுக்காக அவர் என் மேல சுழியக் குற்ற வழக்கு பாய்ச்சினாலும் அதைப் பரிசாக ஏற்பேன். எப்படி இன்னும் இவருக்கும் வாய்ப்பு குடுக்குறாங்கங்குறதுதான் புரியல. படத்தில் மிகமிகமிகக் கொடிய பகுதி இசைதான்.

காஜல் அகர்வால்தான் கதாநாயகியாம். மொதல்ல கதாநாயகனோட தம்பியோன்னு நெனச்சேன். இதுக்கு மேல நான் என்ன சொல்ல வந்தாலும் காஜல் அகர்வாலைக் காஜர் ஹல்வா ரேஞ்சுக்கு ரசிக்கும் ரசிகர்கள் என்னைத் தேடி ஆட்டோ அனுப்புவார்கள் 🙂

எம்.ஜி.ஆர் ஃபார்முல என்று ஒன்று உண்டு. லூசு ஹீரோயின். எல்லாம் தெரிஞ்ச ஹீரோ. அதிபுத்திசாலியான கேணை வில்லன். ஒரு காமெடி நண்பன் (முதலில் நாகேஷும் பின்னர் தேங்காயும் பிரபலப்படுத்திய பாத்திரம் இது). அத்தோடு அங்கங்கு தூவிய கடமையுணர்ச்சி என்னும் உப்பு. நாட்டுப்பற்று என்னும் மிளகுத்தூள். மசாலா சூப் ரெடி.

இந்த மசாலா சூப் தான் துப்பாக்கி. கண்டிப்பாக முதல்முறை பார்க்கும் போது பொழுது போக்கும். இரண்டாம் முறையெல்லாம் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. மாபெரும் வெற்றி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் சராசரி வெற்றி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இதுவரையில் விஜய்யின் கடைசி மாஸ் படம் போக்கிரிதான். ஏ.ஆர்.முருகதாசுக்கு கஜினிதான். இருவரும் அந்த உச்சத்தை துப்பாக்கியில் தொடவில்லை. ஆனால் முந்தைய தோல்விகளில் இருந்து ஒரு நல்ல மீட்சி.

படம் பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

அன்புடன்,

ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in விமர்சனம் and tagged . Bookmark the permalink.

4 Responses to துப்பாக்கி – ஒரு டக் விமர்சனம்

  1. Murugesan says:

    The title card is heavily inspired from sherlock holmes title card which depicts sherlock/london in such diffetent shades

  2. bharathvaz says:

    படத்துல 2 அல்லது 3 பாடல் காட்சிகளை கட் பண்ணி இருக்கலாம்:-)

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s