புத்தகக் கண்காட்சியும் நானும் – 2013

புத்தகங்கள் மீது எனக்குத் தணியாத ஆர்வமுண்டு. தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய புத்தகங்களை விரும்பிப் படிக்கின்ற நான் சமீபகாலமாக படிப்பது குறைந்துள்ளது. அதற்குக் காரணம் சங்க இலக்கியங்களிலும் தமிழ்க் காப்பியங்களிலும் சற்று ஆழமாக இறங்கியதாகக் கூட இருக்கலாம். அதுவுமில்லாமல் காலமாற்றங்களும் இடமாற்றங்களும் கூடக் காரணமாக இருக்கலாம்.

ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்குப் போவது ஒரு பண்டிகை கொண்டாடுவது போலவே ஆகி விட்டது. இந்த ஆண்டும் அப்படித்தான்.

படிக்கும் பழக்கம் அம்மாவிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும். அப்பாவுக்கு செய்திகள் படிக்கக் கிடைத்தால் போதும். என் அம்மா நாவல்களின் தோழி. நிறைய வாசிக்கின்றவர். ஆனால் அவருக்குச் சில பெரிய எழுத்தாளர்களின் எழுத்துகள் பிடிப்பதில்லை. ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். அவருக்குப் பிடிக்காத எழுத்தாளர்கள் என்னையும் பெரிதும் கவர்ந்ததில்லை. ஒரு எழுத்தாளர் கவர்ந்திருக்கிறார். ஆனால் அவருடைய எழுத்து கொள்கையளவில் எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

என் அம்மாவின் அம்மாவும் வாசிக்கும் வழக்கம் இருந்தவர்தான். அவர் ஒரு கதை சொல்லி. படித்த கதையையோ பார்த்த திரைப்படத்தையோ எங்களுக்குச் சொன்ன முறையை நினைத்துப் பார்க்கும் பொழுது நான் படித்த எழுத்தாளர்கள் அவர் முன்னே தோற்றுப்போகின்றார்கள். வயதும் வாழ்வும் அவர் மீது பல மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தாலும் நான் முதன்முதலில் ரசித்த கதை சொல்லியும் மிகமிக ரசித்த கதை சொல்லியும் அவரே.

சரி. சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருவோம். என்னென்ன புத்தகங்கள் வாங்கினேன் என்ற பட்டியல் கீழே இருக்கிறது. அதற்கு முன் சில கருத்துகள்.

நடந்து செல்கின்றவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது. முதல் முறை ஸ்கூட்டரில் சென்றதால் நீண்ட தூரம் நடக்க வேண்டியதாகி விட்டது. நடப்பது நல்லதுதான். ஆனால் நடக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள். அவரவர்களுக்கு ஆயிரம் காரணங்கள்

புத்தகக் கண்காட்சியின் கடைகள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. கடைகளைச் சுற்றி வருவது எளிமையாகவே இருந்தது.

முத்து காமிக்ஸ் கடையைப் பார்த்து எனக்கு மிகமிக மகிழ்ச்சி. சின்ன வயதில் லயன் காமிக்ஸ் படிப்பதற்காகவே நான் நண்பனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் வெளியிட்டிருந்த காமிக்ஸ்களைப் பார்த்ததும் யோசிக்காமல் வாங்கி விட்டேன். சிலந்தி, ஆர்ச்சி போன்ற சிறுவயதுக் கதாநாயகர்களை மீண்டும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

எவ்வளவு தேடியும் கிடைக்காத புத்தகம் பந்தநல்லூர் பாமா. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவல் அது. முன்பு பழனியப்பா பிரதர்சில் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது விகடனிடம் உரிமம் இருக்கிறது. ஆனால் அவர்கள் தில்லானா மோகனாம்பாளைக்கூட பதிப்பிக்கவில்லை. மிஸ்.ராதாவும் ராவ்பகதூர் சிங்காரமும் மட்டுமே கிடைக்கிறது. இப்படி பதிப்பதற்கு ஏன் உரிமத்தை வாங்கினார்களோ!

முதன்முறை சென்ற போது இயக்குனர் வசந்தையும் எழுத்தாளர் பாலகுமாரனையும் சந்தித்தேன். அவர்களோடு நண்பர்களுக்கு நல்ல படங்கள் எடுத்துக் கொடுத்தேன். என்னை வைத்து எடுத்த படங்கள் எல்லாமே தெளிவில்லாமல் வந்துவிட்டன. இரண்டாம் முறை சென்ற போது விவேக் வந்திருந்தார். குமுதம் புத்தகக் கடையில் இருந்த அவரை நான் முதலில் கவனிக்கவேயில்லை. படக்கென்று அவரைக் கூட்டம் சூழ்ந்து கொண்டது.

சென்னை தொலைக்காட்சி நிலையமும் அகில இந்திய வானொலி நிலையமும் கடை வைத்திருப்பது மிகச் சிறப்பு. சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் முன்பு ஒளிபரப்பப்பட்ட மலரும் நினைவுகள் போன்ற நிகழ்ச்சிகளை டிவிடிகளாக வெளியிடலாம். நிச்சயமாக நல்ல வரவேற்பு இருக்கும்.

நான் நிறைய கடைகளை பார்க்கவே இல்லை. அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம்.

ராஜ் வீடியோ விஷனும் கடை வைத்திருந்தார்களாம். விளம்பரத்தைப் பார்த்தேன். ஆனால் தேடிப் போகவில்லை. போனால் வீட்டிலிருந்து நான் துரத்தப்படுவேன் என்பதால். அவ்வளவு டிவிடி/விசிடிகள் வீட்டில்.

சாப்பிட வாங்க என்ற சாப்பாட்டுக் கடை விளம்பரங்களோடு இருக்கிறது. ஆனால் அங்கு ஏன் சாப்பிட்டேன் என்று வருத்தப்பட வேண்டியதானது. சாப்பாடும் சரியில்லை. இது போன்ற இடங்களில் விலையை அதிகமாகத்தானே வைப்பார்கள். அத்தோடு ஒரு பக்கம் வாசல் மூன்று பக்கங்களில் அடுப்பு வைத்து சமைத்துக் கொடுக்கிறார்கள். உலைக்குள் உட்கார்ந்து சாப்பிடுவது போல இருந்தது. சாம்பார் சாதத்தையும் தயிர்சாதத்தையும் கூடச் சாப்பிட முடியாமல் படபடப்பாக இருந்தது. ஆனால் மக்கள் அந்த அனலிலும் பஜ்ஜி, பக்கோடா, சென்னாபூரி என்று எண்ணெய்ப் பலகாரங்களை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

கண்காட்சிக்குள்ளேயே கிடைத்த டீயும் வருக்கியும் நன்றாகவே இருந்தன. அதை வைத்து பசியைத் தணித்து விட்டு வெளியே எங்கேயாவது போய்ச் சாப்பிடுவது நல்லது என்பது என் கருத்து.

”எல்லா கடையிலும் பொன்னியின் செல்வன் இருக்கே” என்று அம்மா அதிசயப்பட்டது உண்மைதான். 200 ரூபாயிலிருந்து விகடன் பதிப்பகத்தில் 1000ரூபாய் வரை பொன்னியின் செல்வன் பல வடிவங்களில் கிடைக்கிறது.

கிழக்கு பதிப்பகத்தில் பத்ரி இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் நான் போன நேரம் அவர் அங்கு இல்லை.

வாங்கிய புத்தகங்களின் பட்டியல். முதன் முறை சென்ற போது வாங்கிய சில புத்தகங்கள் விடுபட்டுள்ளன.

பதிப்பக பெயர் நினைவில்லை
கோபல்ல கிராமம் – கிரா aka கி.ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள் – கிரா aka கி.ராஜநாராயணன்

திருமகள் புத்தக நிலையம்
மணிபல்லவம் – நா.பார்த்தசாரதி
கபாடபுரம் – நா.பார்த்தசாரதி
அம்மா எனக்காக – லஷ்மி
இதோ ஓர் இதயம் – லஷ்மி
ஆயிரம் கண்ணி – பாலகுமாரன்
புருஷவதம் – பாலகுமாரன்

ஸ்ரீ யுனிவர்சல் புக் ஹவுஸ்
English Pronunciation in Use – Mark Hancock (அப்பா வாங்கியது)

விகடன் பதிப்பகம்
தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் ஒன்று – சில்பி
தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் இரண்டு – சில்பி
ஆனந்த விகடன் – பொக்கிஷம்

கிழக்கு பதிப்பகம்

ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார்
சின்மயி விவகாரத்தில் மறுபக்கத்தின் குரல் – விமலாதித்த மாமல்லன்

கண்ணதாசன் பதிப்பகம்
நான் ரசித்த வர்ணனைகள் – கவியரசர்
அர்த்தமுள்ள இந்துமதம் – கவியரசர்
மனவாசம் – கவியரசர்
வனவாசம் – கவியரசர்
நான் பார்த்த அரசியல் – கவியரசர்
சந்தித்தேன் சிந்தித்தேன் – கவியரசர்
கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு -கவியரசர்

முத்து காமிக்ஸ் பதிப்பகம்
கேப்டன் டைகரின் தங்கக் கல்லறை
பரலோகப் பாதை பச்சை
சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் (ஸ்பைடர் + ஆர்ச்சி + மாயாவி)
முத்து காமிக்ஸ் 40ம் ஆண்டு மலர் (பத்து காமிக்ஸ் கதைகள்)

வானதி பதிப்பகம்
கம்பராமாயணக் காட்சிகள் – புலவர் கீரன்
ராஜ்யஸ்ரீ – சாண்டில்யன்
கல்லுக்குள் புகுந்த உயிர் – இந்திரா சௌந்தரராஜன்
ஒரு மின்னல் ஒரு தென்றல் – இந்திரா சௌந்தரராஜன்
மார்கழி ரோஜா – இந்திரா சௌந்தரராஜன்
மாயத்தீவு – கௌதம்குமார்
மாஜிக் மாலினி – விசாகன்
சிரிக்காத மனமும் சிரிக்கும் – பாக்கியம் ராமசாமி

ஏகம் பதிப்பகம்
சட்டினி & துவையல் வகைகள் – மீனாட்சி இலட்சுமணன்
கீரைச் சமையல் – மீனாட்சி இலட்சுமணன்
ஆரோக்கியமான வாழ்வுக்கு எளிய யோகாசனங்கள் (புத்தக அட்டையில் வாழ்விற்கு என்று அச்சிடப்பட்டுள்ளது) – அரிமா ஆர்.எம்.சிவானந்தம்
நீரிழிவு நோயைத் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள் – டாக்டர் எஸ்.ராஜா
இதய நோய் இரத்த அழுத்தத்தை தவிர்க்க -டாக்டர் எஸ்.ராஜா
சுக்கு மிளகு திப்பிலி எளிய மருத்துவம் – சித்த மருத்துவர் எஸ்.ஏ.வனஜாதேவி
பயனுள்ள பாட்டி வைத்தியம் – சித்த மருத்துவர் எஸ்.ஏ.வனஜாதேவி
(இந்தப் பதிப்பகத்தில் வாங்கிய அனைத்துமே பத்து ரூவாய் விலையுள்ள சிறிய கையடக்கப் புத்தகங்கள்)

இப்படிக்கு,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in புத்தகங்கள் and tagged , . Bookmark the permalink.

5 Responses to புத்தகக் கண்காட்சியும் நானும் – 2013

 1. Ragavan Visiri from twitter says:

  தங்கள் பதிவினையும் ரீடரில் போட்டுக்கொண்டேன். இனி நானும் இராகவன் வாசகன் என்று நாலு பேரிடம் பீற்றிக்கொள்வேன். இதைவிட உங்களை யாரலும் அவமானப் படுத்த முடியாது

  • GiRa ஜிரா says:

   ஐயா, நீங்க யாருன்னு தெரியலையே. உங்களக் கொஞ்சம் காமிச்சுக்கோங்களேன். விசிறியெல்லாம் ரொம்பப் பெரிய வார்த்தை. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. 🙂

 2. கோபல்ல கிராமம் & கோபல்லபுரத்து மக்கள் , புருஷவதம் (தலைப்புக்காகவே வாங்குனேன்) இது மூணும் என்னிடம் இருக்கு. அவை நீங்கலாக மற்றவைகளை நீங்கள் வாசிச்சு முடிக்கக் காத்திருக்கிறேன்.

  எதுக்கு?

  அது ரகசியம்:-)

  • GiRa ஜிரா says:

   ரகசியமா? ஆகா. எனக்கு மண்டை கொடையுதே இப்போ! ரகசியத்தைச் சொல்லிருங்க டீச்சர் 🙂

 3. @anuatma says:

  “சின்ன வயதில் லயன் காமிக்ஸ் படிப்பதற்காகவே நான் நண்பனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். ” உண்மை. நானும் பாலமித்ரா, அம்புலிமாமா மற்றும் பைண்ட் செய்யப்பட்ட காமிக்ஸ் புத்தகங்களுக்காகவே சிலர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்படி செல்வதால் நட்பும் வளரும். இப்பொழுதுள்ள குழந்தைகளிடம் புத்தகங்களுக்காக நட்பு வளருகிறதா என்று தெரியவில்லை. புத்தகப் பரிமாறல் இப்பவும் உள்ளதா?

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s