Monthly Archives: March 2013

தருமனும் தருமமும் – பாகம் 1

அந்தப் புட்பக விமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்து உயர உயரப் போய்க் கொண்டிருந்தது. அழகிய பொன் விமானம். அதற்கு முத்து விதானம். பவழ நாற்காலிகள். அவற்றில் அமர்வதற்கு பட்டு மெத்தைகள். தருமனும் தருமதேவதையும் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் முகத்திலும் அளவில்லாத பெருமிதம். பின்னே. நான்கு தம்பியருடனும் திரவுபதியுடனும் நாட்டைத் துறந்து சொர்க்கம் புக … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , | 6 Comments

சமீபத்தில் ரசித்த பாடல் – பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

இன்று ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் ஆயிரம் வசதிகள் வந்துவிட்டன. ஆனால் என்னுடைய சிறுவயதில் பேருந்தும் புகைவண்டிகளும் தான் பயணங்களுக்கு உதவின. அப்படிப் பேருந்திலோ புகைவண்டியிலோ ஏறினால் ஜன்னலோரத்து இருக்கைக்கு எப்போதும் அடிதடி இருக்கும். அதிலும் குழந்தைகள் கத்திக் கதறி சண்டை போடுவதும் உண்டு. கடைசியில் முதுகில் இரண்டு அடிகளையும் வாங்கிக் கொண்டு ஜன்னலோரத்தில் உட்கார்ந்ததெல்லாம் … Continue reading

Posted in திரையிசை | 5 Comments

பெண்ணைப் பெற்றவன்

பெண்கள் வீட்டின் கண்கள். ஏன் தெரியுமா? கண்ணீருக்குக் காரணம் இந்த இரண்டும்தான். ஆனந்தக் கண்ணீரோ! அழுகைக் கண்ணீரோ! பெண்களைப் பெற்றாலே கொஞ்சமாவது கண்களைக் கசக்க வேண்டும் என்பது உண்மை போல. நானும் பெண்ணைப் பெற்றவன்தான். ஆகையால்தான் அடித்துச் சொல்கிறேன். இல்லையென்று சாதிக்க வராதீர்கள். விளக்கமாகச் சொல்கிறேன். உங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையைப் பேணி … Continue reading

Posted in இறை, கதை, சிறுகதை, விஷ்ணு | 14 Comments

விசுவரூபம் அல்லது விஸ்வரூபம் அல்லது Vishwaroopam

பலப்பல தடைகளையும் பிரச்சனைகளையும் தாண்டி விசுவரூபம் படம் பாத்தாச்சு. அதுவும் சத்யம் திரையரங்கத்துல. “யானோ அரசன் யானே கள்வன்” மாதிரி டக்குன்னு தீர்ப்பு சொல்லனும்னா “நான் படத்தை ரசித்தேன்”ன்னுதான் சொல்லனும். ஆனா அப்படிச் சொல்லி நிறுத்திட்டா சுவாரசியமா இருக்காதுல்ல. அதுக்குதான் இந்த விமர்சனம். படத்தின் கதை கத்தி மேல நடக்குற மாதிரியானதுதான். சமாளிச்சிட்டாரு கமல்னுதான் சொல்லனும். … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , | 13 Comments