விசுவரூபம் அல்லது விஸ்வரூபம் அல்லது Vishwaroopam

பலப்பல தடைகளையும் பிரச்சனைகளையும் தாண்டி விசுவரூபம் படம் பாத்தாச்சு. அதுவும் சத்யம் திரையரங்கத்துல. “யானோ அரசன் யானே கள்வன்” மாதிரி டக்குன்னு தீர்ப்பு சொல்லனும்னா “நான் படத்தை ரசித்தேன்”ன்னுதான் சொல்லனும்.

ஆனா அப்படிச் சொல்லி நிறுத்திட்டா சுவாரசியமா இருக்காதுல்ல. அதுக்குதான் இந்த விமர்சனம்.

Viswaroopamபடத்தின் கதை கத்தி மேல நடக்குற மாதிரியானதுதான். சமாளிச்சிட்டாரு கமல்னுதான் சொல்லனும். உண்மையத்தான எடுத்தாங்கன்னு லேசாச் சொல்லலாம். ஆனா அவங்கவங்க பண்ற தப்பப் படமா எடுத்தாதான் உண்மைக்கு ஒவ்வொருத்தரும் எவ்வளவு மதிப்பு குடுக்குறாங்கன்னு புரியும். அதே நேரத்துல சிலதுகளை எதிர்க்காமல் விட்டாலே காணமல் போயிரும். எதிர்த்தா அது பிரபலமாயிரும். சரி. நமக்கெதுக்கு அரசியல். படத்துக்கு வருவோம்.

படத்துல இவர் ஏன் நடிச்சாருன்னு என்ன யோசிக்க வெச்சிட்டாரு ஒருத்தர். அவர்தான் நாசர். ஏன்? ஏன்? ஏன் இப்பிடி கெக்கேபிக்கேன்னு நடிச்சிருக்கீங்க நாசர்? நீங்க சண்டை போடுறீங்களா துப்பாக்கியத் தூக்கிட்டு ஆடுறீங்களான்னே ஒரு கட்டத்துல தெரியல. செம டான்ஸ் ஸ்டெப் அது.

ராகுல் போசுக்கு எதாச்சும் ஒரு விருது குடுத்துருங்கப்பா. என்ன நடிப்பு… உண்மையிலேயே படம் முழுக்க இவருதான் ஒலக நடிப்பு நடிச்சிருக்காரு. இந்தியில் இவர் வேக வெச்ச பருப்பு ரொம்ப நாளாவே வேகல. இவர் மட்டும் வில்லனா தமிழுக்கு வந்துட்டா நல்ல வாழ்விருக்கு. அப்புறம் இந்திக்கும் போய்க்கலாம். எப்ப வர்ரீங்க ராகுல்?

அதிலும் விரல்களையே துப்பாக்கி மாதிரி வைத்துக் கொண்டு விஷுக் என்று துப்பாக்கி சுடுவது போலச் சுட்டுவிட்டு கெக்கென்று சிரிக்கும் போது… நயம் ரக வில்லன். இவருடைய ஒவ்வொரு கண்ணும் ஒவ்வொரு பக்கம் பார்ப்பது போல எப்படி எடுத்தார்களோ!

கமல் படத்துல கமலைப் பத்திப் பேசாம எப்படி?

“மாமா அவ அனுப்பிச்ச அந்தத் தடியன் பின்னாடியே வர்ரான்” என்று சிணுங்கிக் கொண்டே ஓடுவதாகட்டும்
“ஆயா மாயா” என்று நளினமாக மாணவிகளோடு சேர்ந்து ஆடுவதாகட்டும்
“மணவாட்டியே மணவாளனின் பாக்கியம்” என்று நொடித்துக் கொள்வதாகட்டும்
”எங்களுக்குப் புத்ரபாக்யமே இல்லாமப் போயிடப் போறது” என்று கலங்குவதாகட்டும்
“கதவ ஷாத்துங்கோ. குளிர்ரது” என்று சிலிர்த்துக் கொள்வதாகட்டும்… கதக் மாஸ்டர் ரோலில் பிச்சு உதறியிருக்கிறார் கமல்.

அதே போல கஷ்மீரி பாத்திரத்திலும் அப்படியொரு கச்சிதம். அதிலும் அந்த இளம் வாலிபனை ஊஞ்சலில் வைத்து ஆட்டி விடும் போதும், “கஷ்மீரி உன்னோட சகோதரன் நெலமையப் பாத்தியா” என்று எந்த உறவும் இல்லாத அந்த அரபுத்தாய் கதறி அழும் போதும் நமக்கே நெஞ்சை ஏதோ செய்கிறது.

பேண்ட் போட்ட கமலைப் பல படங்களில் பார்த்து விட்டதால்… அந்த பாத்திரத்தையும் நன்றாகச் செய்திருக்கிறார் என்று சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

ஆனால் கமலின் இத்தனை மெனக்கிடலையும் தாண்டி மனதில் நிற்பவர்கள் ராகுல் போசும் பூஜா குமாரும்தான். ரசிகர்கள் மனதில் உட்கார படம் முழுக்க வரவேண்டியதில்லைன்னு கமலுக்கு யார் புரிய வைக்கிறது? தேவர்மகன் படத்துல நடிகர் திலகம் வந்தது சில காட்சிகள்தான். ஆனா அவர் காட்சிகளில் அப்படியொரு ஆளுமை. Kamal, we dont want Tamil version of Eddy Murphy.

ஐயோ.. நான் கெட்டவ இல்ல டாக்டர்” என்று பூஜா குமார் பதறும் ஒரு காட்சி போதும். அதற்குப் பிறகு படத்தில் அவர் வரும் காட்சியெல்லாமே அருமைதான். ஒட்டுமொத்தப் படத்தில் கலகலப்பூட்டுவதே அவர் ஒருவர்தான்.

அதே போல சில நொடிகளில் கமல் மொத்த எதிரிக் கூட்டத்தையும் அழித்துவிட அதை ரீவைண்ட் பண்ணி நினைத்துப் பார்த்து அதிசயப்பட்டுப் போகும் காட்சியிலும் பூஜா குமார் முகபாவங்கள் கிளாஸ்.

வன்முறை படத்தில் மிகமிக அதிகம். குழந்தைகளோடு பார்க்கக் கூடாத படம். ஆனால் சத்யம் திரையரங்கத்தில் ஞாயிற்றுக் கிழமை ஏழு மணிக் காட்சியில் குழந்தைகளோடு பலர் வந்திருந்தார்கள்.

இன்னொரு தகவல். அபின் கருப்பு நிறத்தில் இருக்குமென்று இந்தப் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். பாரதியாருக்குப் புதுச்சேரியில் இருந்த போது சாப்பிட்டிருக்கிறார் என்று படித்திருக்கிறேன்.

ஷேகர் கபூர்.. இன்னும் இவர் பாத்திரத்தை மெருகேற்றியிருக்கலாம். கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். மாத்திரையைப் போட்டு விட்டு.. “நண்பன் எறந்து போயிட்டான்னு ஹார்ட் அட்டாக் வந்துறக் கூடாதில்லையா. உயிரோட இருக்கனுமே. வேலையிருக்கே” என்று சொல்லும் காட்சி போதும் அவர் நடிப்புக்கு விளக்கம் சொல்ல.

வில்லன் ஓமரின் மனைவியாகவும் மகனாகவும் வரும் நடிகர்கள் மிகமிகத் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணும் பையனும் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் என்று காட்டப்படும் இடங்கள் மிக அழகு. அந்த மணற்குன்றுகளும் அவைகளுக்கிடையில் இருக்கும் வெறுமைகளும் காட்சியமைப்புக்குத் தீனி. ஜோர்டானில் எடுத்திருக்கிறார்களாம்.

அலட்சியமான பாத்திரம் ஆண்டிரியாவுக்கு. கால் மேல் கால் போட்டுக் கொண்டு அந்த வெள்ளைக்கார போலீஸ்காரியை விசாரிக்கவிடாமல் தண்ணி குடிக்க வைக்கும் காட்சிகள் நல்லா இருந்தது. அதே போல பக்பக்பக்பக் என்று கோழி போல கத்திக் கொண்டு வந்து சிக்கன் ரோஸ்ட்டை சுவை பார்க்கும் கட்டத்திலும் நன்றாகச் செய்திருந்தார். இந்த காட்சிகளையும் ஆயா மாயா பாட்டையும் விட்டுவிட்டுப் பார்த்தால் அவருக்கு வேறு வேலையில்லை.

நீ இல்லாமல் நான் இல்லையே பாடல் படமாக்கப்பட்ட விதம் மிக மிக அழகு. பிர்ஜு மஹராஜின் கதக் நடன அமைப்புகள் மிக நேர்த்தி. பாடல் எப்படி படமாக்கப்பட்டது என்றொரு வீடியோ யுடியூபில் இருக்கிறது. அதுவும் அருமை.

படம் தொடங்குறப்போ டாக்டரா வர்ரது ஜரீனா வஹாபாம். இவர் நவரத்தினம் படத்தில் எம்.ஜி.ஆரோடு நடித்தவர். அதை விடுங்கள். இவர் நடித்த ஏதோ ஜன்ம கல்பனையில் என்ற மலையாளப் பாட்டை பார்த்து விட்டு.. இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் போது காலத்தின் கோலம் புரிகிறது.

என்னோட பேர்தான் இம்தியாஸ். என்னோட மதமில்லை”ன்னு சொல்றவரு யார்னு தெரியல. அந்தக் காட்சியில் கமலை விடவும் நல்லா நடிச்சிருக்காரு.

இப்பல்லாம் கொட்டையாம்பட்டி பின்னணியில் படமெடுத்தாலும் உலக இசைதான் எல்லாருக்கும் பிடிக்குது. ஆனா அந்த அளவுக்கு மெனக்கிடாமல் பொருத்தமான பின்னணி இசை ஷங்கர் எஹ்சான் லாயிடம் இருந்து.

படத்தோட இரண்டாம் பாகத்தை எடுத்து முடிச்சிட்டாங்கன்னு தெரியுது. படம் முடிஞ்சு எழுத்துப் போடும் போது அந்தக் காட்சிகள் கொஞ்சம் வருது. கமல் படத்துல முத்தக் காட்சி இல்லையேன்னு வருத்தப்பட்டவங்களுக்கெல்லாம் அதை விடப் பெரிய காட்சி ரெண்டாம் பாகத்தில் இருக்குதுன்னு தெரியுது.

விமர்சனத்தை முடிக்கும் முன்னாடி ஒரு கருத்து. இந்தியாவோ அரேபியாவோ ஜெருசெலேமோ இலங்கையோ… மதம்னு வந்துட்டாலே.. அதுல மாட்டி கஷ்டப்படுறதுல பெண்களே பெரும்பான்மை. கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் வெவ்வேறன்னு உலக மக்களுக்குப் புரியட்டும்.

கட்டுரையில் பேசப்பட்ட சில சுட்டிகள்.
நீ இல்லாமல் நானில்லையே பாடல் படமாக்கப்பட்ட விதம் – http://youtu.be/Qo7dHH5k1OM
எம்.ஜி.ஆரோடு ஜரீனா வஹாப் நடித்த காட்சிகள் – http://youtu.be/YVui4Spl3TU
எனக்கு மிகவும் பிடித்த ஏதோ ஜன்ம கல்பனையில் பாடல் – http://youtu.be/51HnWmtaQzk

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

13 Responses to விசுவரூபம் அல்லது விஸ்வரூபம் அல்லது Vishwaroopam

 1. நல்லவிமர்சனம்…

 2. n_shekar says:

  நீங்கள் மீரா குமார் ரசிகனாகவே ஆனதாக தோன்றுகிறது – நானும் ரசித்தேன் ஆனால் உங்கள் அளவு இல்லை – படத்தை நன்கு ரசித்து பார்த்ததாக தோன்றுகிறது – ஆனால் ஒன்றுமே குறை இல்லையா? எல்லோரும் டெக்னாலஜி பற்றி சிலாகித்து இருந்தார்கள் – உங்களுக்கு அதை பற்றிய அபிப்ராயம் என்ன?

  • GiRa ஜிரா says:

   அடடா மீரா குமாரா? நான் பூஜா குமார்னு நெனச்சுக்கிட்டேன் 🙂

   குறைகள் இருக்கு. கிராபிக்ஸ் கொஞ்சம் நல்லாயிருந்துருக்கலாம். சின்னச் சின்ன லாஜிக்கல் மிஸ்டேக்ஸ் இருக்கு. ஆனா அதெல்லாம் எல்லா படத்துலயும் இருக்குறதுதான்.

   ஆனா படமாக்கல் நிச்சயமா உலகத்தரத்துல இருக்குது. அதைக் குறிப்பிட்டு சொல்லியே ஆகனும்.

  • GiRa ஜிரா says:

   கமலோட இயக்கம் பத்தியும் சொல்லியிருக்கனும். விட்டுப்போச்சு. நல்ல திறமையான திரைக்கதை + இயக்கம்.

 3. Pandian says:

  அன்பின் ஜிரா,
  பேசாப்பொருள் – எனவே இதை எடுத்ததற்காக முதலில் அவருக்கு பெரிய கைத்தட்டல். அரசியலை குண்டூசி மாதிரி ஓரிரண்டு சீன்களில் ஏற்றியதற்கா இவ்வளவு கலவரம். அப்ப ஒட்டு மொத்தமா தாலிபன்கள் யாரென்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. சரி அது இங்க வேண்டாம்.

  கதக் மாஸ்டராக நீங்கள் ரசித்த கமல் காட்சிகள்…. அனைவருக்கும் பிடித்தவை. அத்துடன் “குருதக்ஷனையா நிமோனியாவைக் குடுத்துடாதீங்க. போய்சேருங்கோடி அம்மா” – ஆவ்வ்வ்வ்வ்வ்.. அந்த 20 நிமிட கதக் மாஸ்டருக்கு முதலிடம்

  பூஜாகுமாரின் சரவெடிக் காட்சிகள் அனைத்திற்குமே பெரிய கைதட்டல்கள்.

  பாடல் காட்சிகள் – ஆப்கன் காட்சிகள் – போர் காட்சிகளின் பிரம்மாண்டத்திற்கு இன்னும் பெரிய கைதட்டல்கள்.

  ஃஃஃஃஃஃ
  கமல் படத்துல முத்தக் காட்சி இல்லையேன்னு வருத்தப்பட்டவங்களுக்கெல்லாம் அதை விடப் பெரிய காட்சி ரெண்டாம் பாகத்தில் இருக்குதுன்னு தெரியுது.
  ஃஃஃஃஃஃஃஃஃ

  யா. அயாம் வெயிட்டிங் 😉

 4. Arun Rajendran says:

  நீங்க சொன்ன மாதிரி ராகுல் போஸ் நடிப்பு அபாரம்..இந்த மாதிரி திறமையான நடிகர்கள தமிழுலகுக்கு இழுத்து வருவதற்காகவே பாராட்டலாம்…திரைக்கதை சறுக்கிற்று என்றே எண்ணுகிறேன்..வசனங்கள் படு கூர்மை..அமெரிக்க சூழல் என்பதாலோ என்னவோ “cleavage” சர்வ சாதாரணமாகக் காட்டப்படுகிறது….காட்சியமைப்புகள் தரமானதாக இருப்பது உண்மை..

  விமர்சனம் முழுமையாய் இருக்குங்க சார்…

 5. sivagnanamji says:

  are you in chennai now?

 6. நல்ல விமர்சனம் ஜிரா. படம் பார்த்து விட்ட மாதிரியே இருக்கிறது, இனி பார்க்கத் தேவையில்லை! 🙂

 7. Pingback: விடுதலைப் புலிகள் | கடைசி பெஞ்ச்

 8. Ram Mohan says:

  விமர்சனம் நல்ல யதார்த்தமா இருக்கு. படத்தில் பூஜா குமார் கமலை பாத்து “நீங்க நல்லவரா கெட்டவரா ” என்று கேட்பாரே. அதை கவனிதிர்களா. அதை பாக்கும் போது என்னில் நாயகன் “தென்பாண்டி சீமையிலே ” இசை ஓடியது.

  • GiRa ஜிரா says:

   நீங்க சொல்லும் காட்சியை நானும் கவனிச்சேன். ஆனா எழுதும்போது மறந்துட்டேன். அதான் நீங்க சரியா எடுத்துக் கொடுத்துட்டிங்களே 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s