தருமனும் தருமமும் – பாகம் 4

இதன் மூன்றாம் பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது.

நகுலனும் சகாதேவனும் எங்கிருக்கிறார்கள் என்று தருமனிடம் சொன்னார் குந்தி.

“நகுலனும் சகாதேவனும் மாதரியோடும் தந்தையாரோடும் ஓடம் விளையாடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம்மோடு வந்து சேர்வார்கள். அவர்களை அழைத்து வர பிதாமகர் பீஷ்மரும் பெரிய பாட்டியார் சத்தியவதியும் போயிருக்கிறார்கள்”

குந்தியை இடைமறித்தார் திருதிராட்டிரர். “குந்தி, முதலில் தருமன் தனது களைப்பைப் போக்கட்டும். தருமா! நீ நிற்பது கற்பக மரத்தடியில். உனக்கு வேண்டியவைகளைக் கேட்டு அருந்து. நல்ல கனிகளைக் கேள். இல்லை உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள். கிடைக்கும்.”

லேசாகப் பசித்தது தருமனுக்கு. கற்பகமரத்திடம் எதையும் கேட்கலாம் அல்லவா. உண்டால் தனக்கு உண்மையிலேயே நிறைவு தரும் உணவு வேண்டும் என்று கேட்டான். ஒரு தங்கத் தாம்பாளத்தில் பலவித உணவுகள் வந்தன. காய்கறிகளைச் ஒன்றாகக் கூட்டிச் சமைத்தது, சுட்ட இறைச்சி, செந்நெற் சோறு, கிண்ணம் நிறைய நெய், நெய்யில் வெந்து குழைந்த பருப்பு, பலவிதப் பழங்கள் என்று தட்டு நிறைந்திருந்தது.

வசதியாக அமர்ந்து உண்டான் தருமன். கர்ணனும் சகுனியும் அமுதரசம் வேண்டுமென்று கற்பக மரத்திடம் கேட்டு அருந்தினார்கள்.

உண்ட பின்பு தருமன் சற்று அமைதியானான். வயிறு நிறைந்து விட்டதல்லவா. கர்ணனைப் பார்த்து கேட்டான். “அண்ணா! சொர்க்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள். மண்ணுலகத்துகும் இந்த விண்ணுலகத்துக்கும் என்னென்ன வேறுபாடு?”

“தம்பி, சொர்க்கம் என்பது இன்பபுரி. இது இறைவனின் அன்புக்குப் பாத்திரமானவர்கள் வாழும் ஊர். இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவர்களுக்கு வீடுபேறு கிடைக்குமாம். அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுத்தவர்களும் நீதிக்குப் புறம்பாக நடந்தவர்களும் நரகத்து நெருப்பில் உழல்வார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் நரகத்தை நான் பார்த்ததில்லை. அங்கு சென்றவர்களையும் சந்தித்ததில்லை. இங்கு வந்த பிறகு மண்ணுலகம்தான் நரகமோ என்று ஐயம் வருகிறது.

இந்தச் சொர்க்கத்தில் பசியில்லை. பட்டினியில்லை. வேண்டிய பொழுது வேண்டியதைச் சாப்பிடலாம். எல்லாம் கிடைக்கும். இங்கு ஊனம் எதுவும் இல்லை. ஒருவரின் அனைத்து அவயங்களும் எல்லா வகையிலும் ஒத்துழைக்கும். இரவுமில்லை. பகலுமில்லை. நமது மனம் எப்படி விரும்புகிறதோ அப்படியே பருவநிலை இருப்பதாகத் தோன்றும். நீ மழையை விரும்பினால் உனக்கு மட்டும் மழை பெய்யும். ஆனால் அருகிலிருக்கும் எனக்கு அதே இடத்தில் நிலாக்காயலாம். அல்லது வெயிலும் அடிக்கலாம்.

இங்கு அனைத்தும் நமது எண்ணங்களைப் பொருத்தது. ஆங்காங்கே கற்பகதருக்கள். வேண்டிய அனைத்தும் கிடைக்கும். அனைவருக்கும் அனைத்தும் பொதுவாக இருப்பதால் இங்கு கடனில்லை. வட்டியில்லை. வட்டியில் கொழுக்கும் வட்டில்களும் இல்லை. இங்கே பெண்கள் எப்பொழுதுமே தூயவர்கள். அவர்களோடு எப்பொழுது வேண்டுமானாலும் கூடிக் களிப்புறலாம். ஆனால் அதற்கு அவர்கள் அனுமதி வேண்டும். அப்படி அனுமதிக்காத பெண்ணைத் தொட்டவர்கள் உடனே நரகத்தில் வீழ்வார்களாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.”

கர்ணன் சொல்லச் சொல்ல தருமனுக்கு அலுப்புத் தட்டத் தொடங்கியது. அவன் மனமும் உடலும் திரவுபதிக்காக ஏங்கியது. திரவுபதி இப்பொழுது இங்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். நினைத்த இடமோ கற்பக மரத்தடி. அது திரவுபதியின் மனதை மாற்றி அங்கு வரவழைத்தது.

தொலைவில் திரவுபதி வருவது தருமனின் கண்களுக்குப் புலப்பட்டது. “எத்தனை முறை பார்த்த முகம். எளிதில் மறக்குமா! அந்த நடையும் உடையுமே சொல்லுமே பாஞ்சாலியின் பாங்கை! ஆனால் உடன் வருவது யார்? தெரிந்தவன் போல இருக்கிறது. நகுலனா? இல்லையே. நகுலன் தந்தையோடும் தாயோடும் ஓடம் விளையாடப் போயிருக்கிறானே. சகாதேவனும் உடன் சென்றிருக்கிறான் என்று அம்மா சொன்னார்களே. அருச்சுனனும் பீமனும் துரியோதனனைக் கூட்டிக் கொண்டு மானசரோவரம் வரை சென்றிருக்கிறார்கள். வேறெந்த ஆண்மகன் பாஞ்சாலியின் தோள் மீது கை போட்டுக் கொண்டு விளையாட முடியும்?”

பாஞ்சாலியும் உடன் வருகின்றவனும் இன்னும் நெருங்கி வந்தார்கள். இப்பொழுது அது யாரென்று யுதிஷ்டிரனுக்குத் தெரிந்தது. தெரிந்ததுமே தலை சுற்றியது. இரத்தம் கொதித்தது.

“பாவி துச்சாதனா! நீயா! எவ்வளவு துணிவிருந்தால் பாஞ்சாலியின் தோளில் கை போட்டுக் கொண்டு வருவாய்! குருஷேத்திரத்தில் கண்ட பீமனின் கதையின் ருசியை உனது நெஞ்சு மறந்து விட்டதா! அன்று அவை நடுவே அவளை அம்மணமாக்க நினைத்து சீலையை உறித்தாயே! அதற்காக உன் தோலைப் போர்க்களத்தில் உறித்தது மறந்து போனதா?” தருமன் மனதுக்குள் கத்திக் கதறினான். “ஆனால்………பாஞ்சாலியும் துச்சாதனனோடு குலவிக் கொண்டு வருகிறாளே! என்ன ஆயிற்று!”

தொடரும்,

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in கதை, தொடர்கதை and tagged , , , , , , . Bookmark the permalink.

5 Responses to தருமனும் தருமமும் – பாகம் 4

 1. Pandian says:

  ஆக. இங்கதான் திரைக்கதையில டிவிஸ்டு

 2. மழை!! says:

  இந்த :தருமனும் தருமமும்” படிக்கப் பிடிக்குது ரொம்ப. திகட்டாம இருக்கு.. சீக்கரம் அடுத்த பாகத்தை போஸ்ட் பண்ணவும்.

 3. மழை!! says:

  உங்க வர்ணனைப் படி தர்மனும் தெளிவா இருக்கனும்ல, அவரும் சொர்கத்துல இருக்காரு. ஏன் எல்லாரையும் பார்த்து டென்சன் ஆகறாரு?

  • Pandian says:

   அந்தாளுக்கு வந்ததில இருந்தே கவுரவர் மேல காண்டு. சொர்கத்துல அவரு இன்னும் இண்டக்ட் ஆகல. அதுக்கு முன்னரே அடி மேல் அடி அவருக்கு. பாவம்.

 4. tcsprasan says:

  ஆஹா ஆஹா சொர்க்கத்தை பற்றி கர்ணன் சொல்லும் போது இங்கும் அப்படியிருந்தால் எப்படியிருக்குமுன்னு ஏக்கம்தான் வருது

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s