Monthly Archives: May 2013

ஒரு நாள் ஒரு கனவு

ரெண்டு நாளைக்கு முன்னாடி பயங்கர வேலைப்பளு. ஆபீசில் கொஞ்சம் பிரச்சனைகள். எல்லாத்தையும் மூளையில அடைச்சிக்கிட்டு தூங்கப்போனேன். தூக்கத்துல ஒரு கனவு வந்தது. மலேசியா மாதிரி ஒரு எடம். அதுல பாரா செய்லிங் மாதிரி ஒரு செட்டப். பலூன் எல்லாம் கெடையாது. கரண்டு கம்பி மாதிரி இருக்கும். அந்தக் கம்பிகள்ள ஒன்னுல கால வெச்சி இன்னொன்ன கையால … Continue reading

Posted in எம்.எஸ்.விசுவநாதன், பொது | 2 Comments

ஒரு பிரியாணியின் கதை – உஸ்தாத் ஹோட்டல்

உஸ்தாத் ஓட்டல் படம் வந்து ரொம்ப நாளாச்சு. என்னோட டக்கு படி இப்பத்தான் பாத்தேன். பாக்குறதுதான் டக்குன்னு பாத்தோம்… விமர்சனத்தையாச்சும் ஒடனே எழுதீறலாம்னு முடிவு பண்ணி எழுதி முடிச்சிட்டேன். ஆமா. அதத்தான் நீங்க இப்போ படிக்கிறீங்க. பிரியாணின்னா அண்டாவுல வேகுறதுன்னு நெனச்சிங்களா? நம்ம வாழ்க்கையே பிரியாணிதான். அப்படி ஒரு பிரியாணித்தனமான கதைதான் உஸ்தாத் ஓட்டல். நாலு … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | 13 Comments

சின்னதா ஒரு முருகன் பாட்டு

கோயிலுக்குப் போற வழக்கம் உண்டுண்டாலும் வாரந்தவறாம மாதந்தவறாம கோயிலுக்குப் போறவனில்ல நான். முருகான்னு சொல்லி திருநீறை நெத்தியில் பூசிக்கிற மகிழ்ச்சி காசு குடுத்து திருநீறு வாங்கும் கோயில்களில் எனக்குக் கிடைப்பதில்லை. அப்படியே கோயிலுக்குப் போனாலும் கூட்டமில்லாம நெரிசலில்லாம அருமையா பொறுமையா பாத்து வணக்கம் சொல்லனும். போனோமா… கும்பிட்டோமா.. தட்டுல காசப் போட்டோமா… திருநீறோ தீர்த்தமோ வாங்குனோமா … Continue reading

Posted in இறை, முருகன் | 13 Comments

சூது கவ்வும் – விமர்சனம்

World has changed. ஆம். உலகம் மாறித்தான் போய் விட்டது. திரைப்படங்கள் அந்த மாற்றங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. சூது கவ்வும் படமும் அப்படித்தான். இன்றைய காலகட்டத்தையும் இளைஞர்களின் மனநிலையையும் ஒருவிதத்தில் பிரதிபலிக்கிறது. புதுமை என்பது புதிதாகத் தருவதல்ல. பழையதையே புதுமையாகத் தருவது. அதுதான் சூது கவ்வும். ஆயிரம் முறை பார்த்துச் சிரித்து … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | 12 Comments