சின்னதா ஒரு முருகன் பாட்டு

கோயிலுக்குப் போற வழக்கம் உண்டுண்டாலும் வாரந்தவறாம மாதந்தவறாம கோயிலுக்குப் போறவனில்ல நான். முருகான்னு சொல்லி திருநீறை நெத்தியில் பூசிக்கிற மகிழ்ச்சி காசு குடுத்து திருநீறு வாங்கும் கோயில்களில் எனக்குக் கிடைப்பதில்லை.

அப்படியே கோயிலுக்குப் போனாலும் கூட்டமில்லாம நெரிசலில்லாம அருமையா பொறுமையா பாத்து வணக்கம் சொல்லனும். போனோமா… கும்பிட்டோமா.. தட்டுல காசப் போட்டோமா… திருநீறோ தீர்த்தமோ வாங்குனோமா வந்தோமான்னு இருந்தா எனக்கு ஒவ்வாது.

அப்பப்ப பூசையறைல நின்னு முருகான்னு சொல்றப்போ நானா இட்டுகட்டி ரெண்டொரு வரி பாடுவேன். அப்படிப் பாடுறப்போ சுரம் ராகம் தாளம் எல்லாம் பாதளத்துல இருக்கும். ஆனாலும் நம்மளா ரெண்டு வரி பாடுனோமேன்னு திருப்தி. பொதுவா என்ன பாடுனோம்னு வரிகள் மறந்துரும். எப்படிப் பாடுனோம்னு மெட்டு மறந்திரும்.

ஆனா இன்னைக்கு டக்குன்னு பாடுன வரிகளை உங்களோட பகுந்துக்கிறேன். பாட்டுல சுத்தம் நிறை குத்தம் குறைன்னு எது இருந்தாலும் முருகனைப் பிடிச்சுக்கங்க. என்ன விட்டுருங்க. 🙂

மலை மீது நிற்கின்ற முருகா முருகா
எங்கள் நெஞ்சதில் நீ இன்று வருவாய் முருகா
அலையாடும் செந்தூரின் வடிவேல் முருகா – உன்னைக்
கலை மேவும் தமிழ் கொண்டு புகழ்வேன் முருகா

குறவள்ளி மொழி கேட்கும் முருகா முருகா
திங்கள் முடி கொண்ட அரன் கேட்கும் ஒலியே முருகா
நிலையான பொருளாகும் அறிவாய் முருகா – எங்கள்
சிரம் தோறும் நிறைந்திருக்க மகிழ்வோம் முருகா

இந்தப் பாடலை சுப்புத்தாத்தா பாடி வலையேத்தியிருக்காரு. கேட்டு ரசிக்கலாம் இங்கே

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, முருகன். Bookmark the permalink.

13 Responses to சின்னதா ஒரு முருகன் பாட்டு

 1. tcsprasan says:

  அழகென்ற சொல்லுக்கு முருகா.. பாட்டின் மெட்டுக்கு அருமையா பொருந்தி வருது….

  • GiRa ஜிரா says:

   அதை அப்படியே நீங்க பாடி வலையேத்துனா கேப்போம். 🙂

 2. surya says:

  முருகன் மேல் இசைத்த பாடலா ? இல்லை

  முருகா என நீங்கள் எழுதிய பாடல் கேட்டு
  உருகாத நெஞ்சம் இருக்குமோ இச்சன்னதியில்

  ஒரு கணம் கேட்டேன்.
  மறு கணம் பாடினேன்.
  இருவரையுமே நீ அழைத்து வா.
  முருகா .என்னை அழைக்க வா.

  சுப்பு தாத்தா.

  கானடாவில் நான் பாடி உங்களுக்கு லிங்க் அனுப்புகிறேன்.
  உங்கள் அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன்.
  முருகன் அருள் இருப்பின் அது கிடைக்கும் என நம்புகிறேன்.

  • GiRa ஜிரா says:

   ஆகா… என்ன கேள்வி! பாடுங்கள். முருகனைப் பாடும் பணியே பணி. உங்கள் குரலில் இந்தப் பாடலைக் கேட்க காத்திருக்கிறேன். 🙂

 3. surya says:

  இங்கேயும் நீங்கள் கேட்கலாம்

  subbu thatha

  • GiRa ஜிரா says:

   சுப்பு தாத்தா… முருகா என்றதும் உருகாதா மனம்! அப்படியிருக்க இப்படி அருமையாக உருகிப் பாடியிருக்கின்றீர்கள். உங்களுக்கு நன்றி பல. முருகனருள் முன்னிற்கட்டும். 🙂

 4. அருமையான பாடல். இதை நம்ம சுப்புரத்தினம் ஐயா பாடி வலை ஏத்தி இருக்கார்.

  வரிகளோடு அவர் பாடலையும் கேட்டு ர்சிச்சேன்.

  நம்மூட்டு முருகபக்தர் வாசிச்சுட்டுப் பாராட்டினார்.

  • GiRa ஜிரா says:

   ஆகா டீச்சர். முருகன் சுப்புத்தாத்தா வழியா ஒங்களையும் கூட்டிட்டு வந்துட்டான். அவனுக்கு நன்றியோ நன்றி. அப்படியே படிச்சுப் பாராட்டிய உங்கூட்டு முருக பக்தருக்கும் நன்றி 🙂

 5. pkandaswamy says:

  ரசித்தேன்.

 6. சின்னதா இருந்தாலும் முருகு மாதிரியே அழகு. சுப்பு தாத்தா அனுபவிச்சுப் பாடினதையும் கேட்டேன். மிக்க நன்றி ஜிரா, தாத்தா.

  • GiRa ஜிரா says:

   வாங்க கவிநயா. சட்டுன்னு தோணுனத டக்குன்னு எழுதிப் போட்டேன். சுப்புத்தாத்தா அருமையா பாடிக் கொடுத்துட்டாரு. முருகனுக்கு நன்றி 🙂

 7. Pandian says:

  ஃஃஃஃஃஃஃஃஃஃ
  குறவள்ளி மொழி கேட்கும் முருகா முருகா
  ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

  தெய்வானை வீட்டார் சார்பில் இந்த வரிக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
  இப்படிக்கு
  ஜிரா கவிழ்ப்பு அரசியலாளர்கள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s