ஒரு பிரியாணியின் கதை – உஸ்தாத் ஹோட்டல்

உஸ்தாத் ஓட்டல் படம் வந்து ரொம்ப நாளாச்சு. என்னோட டக்கு படி இப்பத்தான் பாத்தேன். பாக்குறதுதான் டக்குன்னு பாத்தோம்… விமர்சனத்தையாச்சும் ஒடனே எழுதீறலாம்னு முடிவு பண்ணி எழுதி முடிச்சிட்டேன். ஆமா. அதத்தான் நீங்க இப்போ படிக்கிறீங்க.

பிரியாணின்னா அண்டாவுல வேகுறதுன்னு நெனச்சிங்களா? நம்ம வாழ்க்கையே பிரியாணிதான். அப்படி ஒரு பிரியாணித்தனமான கதைதான் உஸ்தாத் ஓட்டல்.

நாலு அக்காக்களுக்குப் பிறகு அஞ்சாவதாப் பொறந்த தம்பிதான் ஃபயீஸ். துபாயில் அப்பாவுக்கு வேலை. அம்மா இல்லாம அக்காக்களால வளந்த தம்பி ஃபயீஸ்.

ஹோட்டெல் மேனேஜ்மெண்ட் படிக்கப் போறதா அப்பா கிட்ட பொய் சொல்லிட்டு ஸ்டார் ஓட்டல் செப் ஆகுறது எப்படின்னு படிச்சிட்டு லண்டண்ல வேலை செய்றான். அவனுக்கு நிக்கா செஞ்சு வெக்க ஊருக்கு வரவைக்கிறாரு அப்பா. வந்தா குட்டு ஒடஞ்சிருது. 5ஸ்டார் ஓட்டல் கட்டுற ஆசை நிராசையாப் போச்சேன்னு அவனோட பாஸ்போர்ட்ட ஒளிச்சு வெச்சிக்கிறாரு.

அந்த வீட்டுல இருக்கப் பிடிக்காம ராவோட ராவா கெளம்பி கோழிக்கோட்டுக்கு வர்ரான் பயீஸ். அங்கதான் தாத்தா கரீம் உஸ்தாத் ஓட்டல நடத்திக்கிட்டிருக்காரு. சின்ன ஓட்டல்தான். ஆனா சூப்பர் ஓட்டல். ஆனா ஓட்டலை வியாபாரமா நடத்தாம குடும்பமா நடத்திக்கிட்டிருக்காரு கரீம் இக்கா. அதுனால கடன் வேற. இப்படியான சூழ்நிலைதான் ஃபயீசு அங்க போறான்.

அங்க போனப்புறம் என்னாச்சுங்குறதுதான் மிச்சக் கதை. கதைய ஒரு வரியில் சொல்லனும்னா இப்படிச் சொல்லலாம்.

எப்படி சமைக்கனும்னு தாத்தா கிட்ட கத்துக்கிறான் பேரன். ஏன் சமைக்கனும்னு அவனுக்குத் தெரிய வரும் போது அவன் வாழ்க்கையே மாறிப் போகுது.

தாத்தா கரீம் இக்காவா நடிச்சது திலகன். கேரளத்தில் பிறந்த நடிப்பு ராட்சசன் திலகன். இவரைத் தவிர இந்த பாத்திரத்தை எடுத்து நடிக்க கேரளாவில் ஆளே இல்லைன்னு சொல்லனும்.

ஃபயீசா நடிச்சிருக்கிறது மம்முட்டியோட மகன் துல்கர் சல்மான். ஆளு நல்லா ஓங்குதாங்கா வளந்திருக்காரு. நடிப்புல இன்னும் முன்னேறுனா எதிர்காலம் சிறப்பாயிருக்கும்.

படத்தின் வசனங்கள் மிகமிக இயல்பாவும் அழுத்தமாகவும் இருக்கு. எனக்கு மலையாளத்துல எழுதத் தெரியாது. அதுனால சில வசனங்களை தமிழில் தர்ரேன்.

(வேனுக்குள் தாத்தாவும் பேரனும் உட்கார்ந்திருக்கிறார்கள். மழை கொட்டுகிறது) பாலை வனத்தில மழை பெஞ்சு பாத்திருக்கியா? நான் பாத்திருக்கேன். ராஜஸ்தான் போனப்போ பாலைவனத்தில் போய்க்கிட்டிருந்தேன். அப்போ இதே போல ஒரு மழை. நல்ல மழை. அப்போதான் எனக்குத் தோணுச்சு… சொர்க்கம்னு சொல்றாங்களே.. அதுக்கு ரொம்பப் பக்கத்தில் இருக்கோம்னு.

(பேரனிடம் தாத்தா) வயிறு நெறையுறதுக்கு யார் வேணும்னாலும் சமைக்கலாம். ஆனா மனசையும் நிறைக்கனும்.

(மகனிடம் அப்பா கோவமாக) ஏண்டா இங்க வந்து இருக்க. இந்த ஓட்டலுக்குள்ள நொழைஞ்சாலே எனக்கு மூச்சு முட்டுது. (உடனே மகன்) ஒங்க வீட்டுக்குள்ள நொழைஞ்சாலே எனக்கும் மூச்சு முட்டுது.

அதே போல மதுரையிலிருக்கும் நாராயண கிருஷ்ணனுக்கு கரீம் இக்கா பேரன் மூலம் குடுத்தனுப்பும் தமிழ்க் கடிதம்.

அன்புள்ள நாராயண கிருஷ்ணன்,

இந்தக் கடிதத்தைக் கொண்டு வர்ரது என்னோட பேரன் ஃபயீஸ். எப்படிச் சமைக்கனும்னு அவனுக்கு நான் கத்துக்குடுத்திருக்கேன். ஏன் சமைக்கனும்னு நீ கத்துக்குடு.

அன்புடன்,
கரீம் இக்கா

நாராயணன் கிருஷ்ணனா நடிச்சது தமிழ் நடிகர் ஜெயப்பிரகாஷ். வம்சம் பசங்க படத்திலெல்லாம் நடிச்சாரே… அதே ஜெயப்பிரகாஷ். படத்துல கதாநாயகியும் உண்டு. நித்யா மேனன். என்ன அழகு. என்ன அழகு. இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.

படத்தில் குறையே இல்லையான்னு கேக்கலாம். இருக்கு. கொஞ்சம் மெதுவாப் போற மாதிரி இருக்கு. பொதுவாகவே மலையாளப் படங்கள் கொஞ்சம் மெதுவாத்தான் போகும். அதை மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டு சரி செஞ்சிருந்தா படம் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.

இந்தப் படத்தை தமிழில் எடுத்தா எப்படியிருக்கும்னு நெனச்சுப் பாத்தேன். அப்புறந்தான் தமிழ்ல எடுக்கவே முடியாதுன்னு புரிஞ்சது. கரீம் இக்காவா நடிக்க நடிகர் திலகம் நம்ம கிட்ட இப்ப இல்லையே. வேற நடிகர்கள் நடிக்க முடியாதான்னு கேக்காதீங்க. முடியும். ஆனா நடிகர் திலகத்தால மட்டுந்தான் அந்தப் பாத்திரத்தைச் சுமக்க முடியும். வேற யார் நடிச்சாலும் கமர்ஷியலாயிரும். மலையாளத்துலயே திரும்ப எடுக்க முடியாதே. திலகன் இல்லையே.

படம் முழுக்கவே சாப்பாடு வாசனை. பிரியாணி கிண்டுறது, பரோட்டா தட்டுறது, கோழிய வறுக்குறது, ஆம்லெட் போடுறது, அது இதுன்னு பசியக் கெளப்பி விட்டுரும். படம் பாக்குறப்போ விருந்து சாப்பிட்டுக்கிட்டே பாக்கனும்.

என்னால இந்தப் படத்த ரொம்ப ரசிக்க முடிஞ்சதுக்கும் ஒரு காரணம் உண்டு. கதாநாயகன் ஃபயீசோட எண்ணமும் என்னோட எண்ணமும் ஒரே மாதிரி. எங்கப்பா என்னைக் கொடுமையெல்லாம் படுத்தலை. ஆனா இஞ்சினியர் ஆக்கிட்டாரு. இப்பவும் அப்பப்போ ஸ்டார் ஹோட்டல் செப்பா ஆகனும்னு உள்ளுக்குள்ள ஆசைய புதைஞ்சிருக்கு. அத்தோட எனக்கு ஓரளவு சமைக்கவும் வரும்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம். Bookmark the permalink.

13 Responses to ஒரு பிரியாணியின் கதை – உஸ்தாத் ஹோட்டல்

 1. தாத்தா பேரனிடம் சொல்லும் காதல் கதையும் பாட்டும் இன்னும் மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது, திலகனின் இளவயது ஜோடியின் கண்கள் அவ்வளவு அழகு…

  ஜெயபிரகாஷ் பாத்திரம் மதுரையில் வாழும் ஒரு நிஜ நாயகன் – http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/archive10/naryanan.krishnan.html முன்பே அறிந்திருந்தாலும் படத்தில் பார்க்கும்போது அதிர்வு இன்னும் அதிகமாக இருந்தது.

  ”அப்பங்கள் எம்பாடும்..”போன்ற கமர்சியல் வஸ்துக்களை குறைத்திருக்கலாம்…ஆனாலும் அஞ்சலி மேனனும் அன்வர் ரஷீதும் பாராட்டுக்குரியவர்கள்… நல்ல ஒரு சுகானுபவம் தந்ததற்கு…!!

  • GiRa ஜிரா says:

   ஆமா. திலகனின் இளவயது ஜோடி இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு. சரியாச் சொன்னிங்க.

   ஆனா மொத்தத்துல படம் பாஸ். கண்டிப்பா பாக்கனும்.

 2. amas32 says:

  அருமையான விமர்சனம், உங்கள் உள்ளக் கிடக்கையும் அறிந்து கொண்டேன். கலைஞன் நீங்கள் என்று தெரியும், இந்தத் துறையிலும் உங்களுக்கு உள்ள ஆர்வம் இன்று தான் அறிந்து கொண்டேன் 🙂

  இந்த மாதிரி படங்கள் மலையாளத்தில் தான் எடுபடும். நிறைய மலையாள படங்களை தமிழில் எடுத்துக் கெடுத்திருக்கிறார்கள்.

  என் தோழியின் மகன் B.COM படித்துவிட்டு வீட்டில் அடம் பிடித்து மணிப்பாலில் செப் ஆவதற்குப் பயின்று கொண்டிருக்கிறான்.

  amas32

  • GiRa ஜிரா says:

   உங்க தோழியின் மகனுக்கு என்னுடைய வாழ்த்துகள். அப்பல்லாம் எனக்குத் தெரியல. என்ன படிக்க வைக்கக் கேக்கனும்னே பெரிய புரிதல் இல்ல. இஞ்சினியரிங்குன்னு சொன்னாங்க. சரின்னேன். ஏதோ படிச்சு முடிச்சு இந்த நிலைக்கு வந்திருக்கேன். 🙂

 3. surya says:

  இங்கன எனக்குத் தெரிஞ்ச புஹாரி, தலப்பாகட்டு, இது எல்லாம் உள்ளே போயி
  ஜிரா அப்படின்னு ஒரு செஃப் இருக்காரா அப்படின்னு கேட்டேன்.

  என்ன ஒரு தினுசா பாக்குராக…

  அது கிடக்கட்டும். !!

  ச்மீபத்துலே எதுனாச்சும் நாயன்மார் கதை படிச்சீகளா ? புள்ளைக்கறி வேணும்னு
  சிவபிரானே சைலன்டா கஸ்டா வந்து கேட்டாராமே….

  அந்த கதையும் பிரியாணி கதை தானே….

  ஸாரி. அது பிரியா நீ…..

  என்றுமே இறையுடன் பிரியாது நீ இருக்கிறாய் எனச் சொல்லவந்த கதை போல …

  சுப்பு தாத்தா.
  http://www.subbuthatha.blogspot.in
  http://www.pureaanmekkam.blogspot.in
  http://www.kandhanaithuthi.blogspot.in
  http://www.vazhvuneri.blogspot.in

  • GiRa ஜிரா says:

   பிள்ளைக்கறி மட்டுமல்லாம தலைக்கறியும் கேட்டாரே. அதுவும் பிரியாணிக் கதைதான். 🙂

   கதையை அப்படியே எடுத்துக்காம சூட்சுமத்தை எடுத்துக் கொண்டால் அதுக்குள் இருக்கும் பொருள் பெரிது. நீங்க சொன்ன பிரியா நீ கதையேதான் 🙂

 4. சூப்பர் ஜிரா..எனக்கும் மலையாளப்படம் பார்க்கனும்ன்னு ஆசை..ஆனா புரியுமோன்னு டவுட் :0

  • GiRa ஜிரா says:

   பாருங்கய்யா பாருங்க.. படம் நல்லாருக்கு. கண்டிப்பா பாக்கலாம்.

 5. அருமையான பதிவு ஜிரா.
  என்னை பொருத்த மட்டில் – படத்தின் தூண்கள்
  1. கதை ,திரைக்கதை & வசனம் எழுதிய – அஞ்சலி மேனன் மற்றும்
  2. திலகன் என்ற ராட்சஷன் .
  திலகனை பற்றி நீங்கள் எழுதியது மறுக்கமுடியாத உண்மை.
  இந்த பாத்திரம் திலகனின் வயது மற்றும் ஆற்றலை ஒத்த ஒருவரால் மட்டுமே சாதிக்க கூடிய உடல் மொழி கூறுகளை கொண்டது .
  கதையின் இழையாய் ஓடும் “சூபி” motif அருமை..
  கோழிகொடோ மதுரையோ கதையை முன் நிறுத்தி நகர்த்தியது எனக்கு பிடித்தது.
  ஆனாலும் “சுலைமானி சாய் ” பற்றி நீங்கள் எழுதாது எனக்கு ஏமாற்றமே .
  மேலும் படத்தின் வேகம் குறித்து உங்கள் எண்ணம் மாற வேண்டும் அதற்க்கு நீங்கள் மேலும் சில அண்மை கால மலையாள படங்களை பாருங்கள். ;-))

  • GiRa ஜிரா says:

   ஆமா. நீங்க சொன்னதையெல்லாமும் ரசிச்சேன். எழுதாம விட்டுட்டேன்.

   வேகம் குறித்தான கருத்து மாற.. புதுப்படங்கள் பாக்கனுமா. நல்ல படமாச் சொல்லுங்க. பாத்துருவோம். 🙂

 6. அருமையான படம்….படத்தோட நாயகன் நடிகர் மம்முட்டியோட மகன்..

  நடிகர் தீலகன்..ஏன்னத்தா சொல்ல…மனுஷன் முதல் முதலில் பேரனை பார்க்க நடந்து வருவரே… இயக்குனருக்கும் ஒளிப்பதிவருக்கும் மிக ரசனை இருந்திக்க வேண்டும்.

  எனக்கு பிடித்த வசனம்

  ஓரொரு சுலைமானியிலும் ஒருதிரி மொஹப்பத் வேணும்.. அது குடிக்கும்போ லோகம் இங்கன பதுக்கேறி வந்து நிக்கணும்…;))

  அடுத்து நேரம் கிடைக்கும் போது இந்த படத்தை பாருங்கள்…தட்டெத்து மறையத்து…நடிகர் சீனிவாசன் மகன் இயக்கிய படம்.

  • GiRa ஜிரா says:

   வாங்க வாங்க வாங்க

   தட்டத்தின் மறையத்து தானே.. எடுத்து வெச்சிருக்கு. அடுத்து அதுதான். 🙂

 7. Pandian says:

  மாசக்கடைசி என்பதால் இணையத்தின் வேகம் குறைந்திட்டது. திரும்ப வரும்போது இறக்கிப் பார்த்துவிடுகிறேன். நிறையபேர் சொல்லிட்டார்கள். ஜிரா சொல்லியும் கேக்கலைன்னா அது ஒரு சரித்திரப்பிழை ஆகிவிடும்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s