ஒரு நாள் ஒரு கனவு

ரெண்டு நாளைக்கு முன்னாடி பயங்கர வேலைப்பளு. ஆபீசில் கொஞ்சம் பிரச்சனைகள். எல்லாத்தையும் மூளையில அடைச்சிக்கிட்டு தூங்கப்போனேன். தூக்கத்துல ஒரு கனவு வந்தது.

மலேசியா மாதிரி ஒரு எடம். அதுல பாரா செய்லிங் மாதிரி ஒரு செட்டப். பலூன் எல்லாம் கெடையாது. கரண்டு கம்பி மாதிரி இருக்கும்.

அந்தக் கம்பிகள்ள ஒன்னுல கால வெச்சி இன்னொன்ன கையால பிடிச்சிக்கனும். அவ்வளவுதான். இது ரொம்ப ரொம்ப ஒயரத்துல இருக்கும்.

அந்தக் கம்பி அப்படியே பெரிய ரவுண்டு அடிக்கும். அங்கருந்து பாத்தா கீழ கடல், ஏரி மலையெல்லாம் தெரியுது. கொஞ்சம் கைய விட்டா அவ்வளவுதான். கால் தடுமாறுனாலும் அவ்வளவுதான்.

பயமாவும் இருக்கு. ஆனா அங்கருந்து பாக்க எடங்கள் அழகாவும் இருக்கு. அப்பன்னு பாத்து ஒருத்தன் அந்தக் கம்பியில் கம்பி போட்டு தவ்வி ஏறுறான்

நான் நிக்கிற கம்பி கிடுகிடுன்னு ஆடுது. எனக்கு ஒரே பயம். சமாளிச்சிக்கிட்டு பிடிச்சிக்கிட்டு நிக்கிறேன். ஒரு வழியா ரவுண்டு முடிஞ்சு தொடங்குன எடம் வந்ததும்தான் நிம்மதியாச்சு

எறங்குன எடத்துல சின்னதா ஒரு கோயில். என்னோட குடும்பத்து மக்கள் இருக்காங்க. கோயிலுக்கு முன்னாடி ஒரு பக்கமா மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி உக்காந்திருக்காரு.

திடீர்னு எம்.எஸ்.வி பாடத் தொடங்கிட்டாரு. ஏதோ சாமிப் பாட்டு. ரொம்பப் புதுமையாவும் இருக்கு. இனிமையாவும் இருக்கு. அங்கயிருக்கும் எல்லாரும் ரசிக்கிறாங்க. என்னோட மனசெல்லாம் உருகி பயமெல்லாம் போயிருச்சு. அவ்வளவு அருமையா இருந்துச்சு அந்த பாட்டு.

அவ்வளவுதான் கனவு. எல்லாக் கனவுகளும் நினைவிருப்பதில்லை. இந்தக் கனவு மட்டும் நல்லா நினைவிருக்கு.

கனவுகள ஆராய்ச்சி பண்றவங்க இதைப் பண்ணலாம். அந்த ஆராய்ச்சி முடிவுல என்ன கண்டுபிடிச்சிங்கன்னும் சொல்லுங்க. 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in எம்.எஸ்.விசுவநாதன், பொது. Bookmark the permalink.

2 Responses to ஒரு நாள் ஒரு கனவு

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_28.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  2. கவிநயா அறிமுகத்தைப் பிடித்துக் கொண்டு இங்கே வந்து சேர்ந்தேன். பதிவின் பெயரும் நந்தியின் விளக்கமும் மேலோட்டமாகப் பார்த்த சில பதிவுகளும்.. பிரமித்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை நாள் தவற விட்டிருக்கிறேனே!

    எம்எஸ்வி கனவா.. வயசாயிருச்சுல்லா..(அவருக்கு). சுவாரசியமாத்தான் இருக்கு கனவு.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s