மெல்லிசை பிறந்தநாள்

நேற்று (ஜூன் 24ம் தேதி) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனின் பிறந்தநாள். அன்றுதான் அவரது ஆருயிர் நண்பர் கவியரசர் கண்ணதாசனுக்கும் பிறந்தநாள்.

இசையும் கவிதையும் ஒன்றாகத்தான் பிறக்கும் என்பதைச் சொல்லும் விதமாக இருவரின் பிறந்தநாட்களும் ஒரே நாளில் அமைந்தது வியப்பே இல்லை.

அந்நாளில் மெல்லிசை மன்னர் இசையமைத்த சில பாடல்களை டிவிட்டரில் கொடுத்தேன். அந்தப் பாடல்களை இங்கும் தருகிறேன்.

நேற்று இன்று நாளை என்று ஊருக்கு உழைப்பவன் என்று பாடி பாடலைச் சொல்லிக் கொடுக்கிறார் மெல்லிசை மன்னர். வரிகள் அவருக்கு மிகப் பொருத்தம்.

திசை மாறிய பறவைகள் படத்தில் ஒரு கன்னியாஸ்திரி வீணை வாசித்துக் கொண்டு படுக்கையில் கிடக்கும் ஒரு வயதான பாட்டிக்காக முருகன் பாடல் பாடும் காட்சி. வாணி ஜெயராம் குரலில் மிக அபூர்வமான முருகன் பாடல்

மெல்லிசை மன்னர் முருக பக்தராக இருக்கலாம். ஆனால் கவியரசர் கிருஷ்ணபக்தராயிற்றே. கிருஷ்ணகானத்துக்காக இசையரசி பி.சுசீலா குரலில் “குருவாயூருக்கு வாருங்கள்”

சக்தி இல்லாமல் உலகேது? அதைச் சொல்ல வருகிறது இந்தப் பாடல். இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த தேவி தரிசனம் திரைப்படத்தில் பி.ஜெயச்சந்திரன் இனிய குரலில் உருக்கும் பாடல். இந்தப் பாடலை எழுதியவரும் கவியரசர்தான்.

அன்னை மேரியின் புகழைப் பாடும் ஒரு அருமையான இசைத்தொகுப்பு மெல்லிசை மன்னர் இசையில் வந்தது. வண்ண வண்ண லில்லி மலர் என்றொரு பாடலை அவரே பாடியும் இருக்கிறார். அலைகடலின் ஓரத்திலே என்ற பாடல் பி.சுசீலாவின் குரலில் மிகச் சிறப்பாக இருக்கும். எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம், ஏசுதாஸ் குரலிலும் இனிய பாடல்கள் உண்டு. இதோ.. வாணி ஜெயராமும் ஏசுதாசும் இணைந்து பாடும் “அன்னையே ஆரோக்ய அன்னையே”

”அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை. நீதானே உலகின் எல்லை.” சோ எழுதி இயக்கிய முகமது பின் துக்ளக் திரைப்படத்தின் இந்தப் பாடலை வேறு யாரேனும் பாடியிருக்க முடியுமா?

இசைஞானி இளையராஜா இசையில் மெல்லிசை மன்னர் நான்கு முதல் ஐந்து பாடல்கள் வரை பாடியிருக்கிறார். அதிலும் முதலாகப் பாடியது தாய்மூகாம்பிகை திரைப்படத்தில். இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பு மெல்லிசை மன்னரோடு இணைந்து பாலமுரளி கிருஷ்ணாவும் சீர்காழி கோவிந்தராஜனும் பாடியிருப்பது.

அண்ணன் இசையில் பாடியவர் தம்பி கங்கையமரன் இசையிலும் பாடியிருக்கிறார். நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்துக்காக ”ஓடமெங்கே போகும் நதி வழியே”

தென்னிந்தியாவின் டாப்-5 இசையமைப்பாளர்கள் என TV5 Telugu TV எம்.எஸ்.வியை முதலில் வைத்து பாராட்டியது. இத்தனைக்கும் மெல்லிசை மன்னர் தெலுங்கில் அதிக பட்சமாக நூற்றைம்பது படங்களுக்கு இசையமைத்திருந்திருப்பார். ஆனாலும் சரியான நபரை சரியாக மரியாதை செய்தது TV5 தொலைக்காட்சி.

மெல்லிசை மன்னர் இசையில் ஜெயதேவர் அஷ்டபதியை பி.சுசீலா பாடியிருக்கிறார். இது தெனாலிராமன் திரைப்படத்தில் இடம் பெற்றது.

ஐயர் தி கிரேட் மலையாளப் படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் எஸ்.ஜானகி. சலனம் ஜ்வலனம். மம்முட்டி நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்துக்கு இசை மெல்லிசை மன்னர். இதே பாடல் ஜெயச்சந்திரன் குரலிலும் உள்ளது.

”ஹ்ருதயவாஹினி ஒழுகுன்னு நீ, முதுர ஸ்னேக தரங்கிணியாய்” மெல்லிசை மன்னர் இசையமைத்துப் பாடிய மலையாளப் பாடல் கேட்பவர் மனதை உருக்கும்.

சீர்காழி கோவிந்தராஜனுக்கு தேசிய விருது தந்த மெல்லிசை மன்னர்களின் பாடல் மணியோசை திரைப்படத்திலிருந்து

பெண்பாடகிகளுக்கான முதல் தேசிய விருதை பி.சுசீலாவுக்குப் பெற்றுத் தந்த எம்.எஸ்.வியின் பாடல். அதுவரையில் பாடகிகளுக்கு தேசிய விருதே இல்லையென்பது வியப்புதான். இருந்திருந்தால் சுசீலாம்மா இன்னும் பல விருதுகளை அள்ளியிருப்பார்.

பி.சுசீலாவுக்கு இரண்டாம் தேசிய விருதைப் பெற்றுத்தந்த எம்.எஸ்.வியின் பாடல் சவாலே சமாளி படத்திலிருந்து

வாணி ஜெயராமுக்கு முதல் தேசிய விருது வாங்கித்தந்த எம்.எஸ்.வியின் பாடல் அபூர்வராகங்கள் திரைப்படத்திலிருந்து

ஜெயச்சந்திரனுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த மெல்லிசை மன்னரின் மலையாளப் பாடல். கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த பனி தீராத்த வீடு திரைப்படப் பாடல்கள் அனைத்துமே அருமையானவை. நீலகிரியுடே ஷிகிகளே ஜ்வாலாமுகிகளே பாடலுக்கு ஜெயச்சந்திரனுக்கு விருது கிடைத்ததில் வியப்பே இல்லை.

கவியரசர் கண்ணதாசனுக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குழந்தைக்காக திரைப்படப் பாடல். <a

இப்படி எல்லாருக்கும் தேசிய விருது வாங்கித்தந்த மெல்லிசை மன்னருக்கு இதுவரையில் தேசியவிருது கிடைக்கவில்லை என்பது தேசிய விருதுக்குத்தான் கௌரவக் குறைச்சல். ஆனால் அவருடைய ரசிகர்களின் அன்பு விருதை விடப் பெரிய விருது இல்லை.

மெல்லிசை மன்னரே, நீர் நீடு வாழ்க. பீடு வாழ்க. திரையிசைச் சக்கரவர்த்தியே அன்றும் இன்றும் என்றும் உங்கள் இசை எங்களை மகிழ்வித்துக் கொண்டுதான் இருக்கும். நன்றி.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இசையரசி, இளையராஜா, எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஏழிசைவேந்தர், கே.ஜே.ஏசுதாஸ், ஜெயச்சந்திரன், டி.எம்.சௌந்தரராஜன், திரையிசை, பி.சுசீலா, மெல்லிசைமன்னர், வாணிஜெயராம். Bookmark the permalink.

5 Responses to மெல்லிசை பிறந்தநாள்

 1. rajnirams says:

  சூப்பர் தொகுப்பு. இசை தட்டுக்கு HMV,இசை மெட்டுக்கு MSV .

 2. அருமையான தொகுப்பு.

  உங்களுடன் சேர்ந்து நாங்களும் அவர்கள் இருவரையும் வாழ்த்துகின்றோம்.,

 3. ranjani135 says:

  பாடகர், பாடகிகளுக்கு தனது இசை மூலம் தேசிய விருதுகள் வாங்கித்தந்தவருக்கு இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது வருத்தமான செய்தி. ஆனால் அதனால் அவருக்கு எந்தக் குறையும் வரப்போவதில்லை. தேசிய விருதுக்குத் தான் நஷ்டம்.

  நல்ல தொகுப்பு.
  பல விடீயோக்கள் சரியாக இல்லை. Error என்று வருகிறது. கொஞ்சம் கவனியுங்கள், ப்ளீஸ்!

 4. வாவ். மிக அருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். முருகன் பாட்டும் சக்தி பாட்டும் ரொம்பப் பிடிச்சது.

  //இசைஞானி இளையராஜா இசையில் மெல்லிசை மன்னர் நான்கு முதல் ஐந்து பாடல்கள் வரை பாடியிருக்கிறார். அதிலும் முதலாகப் பாடியது தாய்மூகாம்பிகை திரைப்படத்தில். இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பு மெல்லிசை மன்னரோடு இணைந்து பாலமுரளி கிருஷ்ணாவும் சீர்காழி கோவிந்தராஜனும் பாடியிருப்பது.//

  இந்த வீடியோ மட்டும் ‘not available’னு வருது.

  மெல்லிசை மன்னருக்கு அன்பான வாழ்த்துகளும் வணக்கங்களும். மிகவும் நன்றி ஜிரா.

 5. Rajanand says:

  tamilpdffree.wordpress.com is now as http://tamilpdffree.com/ follow us for latest updates

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s