ஒரு இந்திய போலீஸ்

வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது எளிதான வேலையல்ல. ஏனென்றால் உலகளாவிய அளவில் இரண்டாம் பாகங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்ததுதான் வரலாறு.

ஆனால் சிங்கம்-2 வெற்றிப் படமானதில் ஹரியின் விறுவிறுப்பான திரைக்கதை முதல் காரணமென்றால் அந்தக் கதையைத் தோளில் சுமந்த சூர்யா இரண்டாம் காரணம்.

சில படங்களை தியேட்டரில் பாத்தாதான் அதை முழுமையா ரசிக்கவே முடியும். படத்தில் இருக்கும் பிரம்மாண்டங்களினால் அல்ல. ஒட்டு மொத்த மக்களின் மனநிலையோடு கலந்து பார்ப்பதில் இருக்கும் மகிழ்சி. சிங்கம்-2 அப்படிப்பட்ட படம்.

என்னைக் கேட்டால் மூன்று வருடங்களுக்குப் பிறகு சிங்கம்-3 கண்டிப்பாக எடுக்கலாம்.

படம் வந்ததிலிருந்து இப்போது வரை சில விமர்சனங்களை ட்விட்டரில் பார்த்தேன். விமர்சிக்க வேண்டும் என்ற கோணத்திலேயே படத்தைப் பார்த்திருப்பார்கள் என நினைக்கிறேன். எதையும் குறை சொல்ல முடியாமல் சூர்யாவின் உயரத்தின் மேல் இந்த ஹ்ரித்திக் ரோஷன்கள் பாய்ந்ததுதான் பரிதாபம்.

படத்தில் குறிப்பிட்டு குறை சொல்ல வேண்டியவர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தேவிஸ்ரீ பிரசாத் என்று பெயர். அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை இசையமைப்பாளர் வேலை. ஆனால் அவர் அந்த வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை. குறிப்பாக பாடல்கள். Better Luck nextt time.

அந்த ஆப்பிரிக்க வில்லனின் நடிப்பு அட்டகாசம். முகத்தில் வெறுப்பைத் தேக்கி வைத்துக் கொண்டு கடப்பாரையை சூர்யாவின் நாற்காலி மேல் வீசும் போது…அப்பப்பா! வில்லாதி வில்லன்.

தூத்துக்குடியோடு காரைக்குடியைக் கலப்படம் செய்து விட்டாலும் இடைவேளை விடும் போது தூத்துக்குடி மினிசார்லஸ் தியேட்டரில் உட்கார்ந்திருப்பது போலத் தோன்றியது உண்மைதான்.

ஹன்சிகா மோத்வானி தூத்துக்குடி பிள்ள மாதிரி இல்லையென்றாலும் கொடுத்த பாத்திரத்துக்கு செய்ய வேண்டியதைச் செய்திருக்கிறார்.

பொங்கலில் தட்டுப்படும் முந்திரிப் பருப்பைப் போல படத்தில் அங்கங்கே வந்து காதல் செய்யும் அனுஷ்கா அட்டகாசம். பாடல் காட்சிகளில் உடம்பு பிரபுதேவாவாய் வளைகிறது. அனுஷ்காவுக்கு திரையுலகம் இன்னும் சில வருடங்கள் ஆராதனை செய்யும்.

விவேக் காலியாகி விட்டார். சந்தானம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். படத்தின் ஓட்டத்தினால் அவர்கள் பிழைத்துக் கொண்டார்கள். இவர்கள் இருவரையும் விட கரீம்பாயாக வரும் மன்சூர் அலிகான் ரசிக்க வைத்தார்.

சண்டைக் காட்சிகளை பொதுவாகவே நான் விரும்பி ரசிக்கின்றவனில்லை. ஆனாலும் இந்தப் படத்தில் ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் ரசித்தேன். இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அதீத ரத்தம் தெறிக்கும் காட்சிகள் படத்தில் இல்லை என்பதே உண்மை. இயல்பாக படம் எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு திரையை ரத்தக்காடாக்கிய திரைப்படங்களை விட சிங்கம் போன்ற திரைப்படங்களையே மக்கள் விரும்புவார்கள்.

சுருக்கமாக விமர்சிக்க வேண்டுமென்றால்…. சூர்யாவுக்கு போலீஸ் வேடம் மிகப் பொருத்தம். He has got a style.

பின்குறிப்பு: அடுத்து தலைவா-வுக்காக காத்திருக்கிறேன். இயக்குனர் விஜய்யின் படம் என்பதையும் மீறி.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம். Bookmark the permalink.

3 Responses to ஒரு இந்திய போலீஸ்

  1. amas32 says:

    நல்ல விமர்சனம் 🙂

    amas32

  2. Venkatesh A R says:

    Good 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s