ராஜவியர்வை வழிய வைத்த ராஜ குயிஜ்ஜு

RheaAndRex

இணையத்தில் பூனம்பாண்டே ரசிகரா இருக்குறது கூட லேசு. ஆனா இசை ரசிகரா இருக்குறது கஷ்டமோ கஷ்டம்.

பின்னே… தெனமும் நடக்குற சண்டைல கலந்துக்கனும். மண்டை ஒடையுதோ இல்லையோ… அடுத்த இசையமைப்பாளருக்கு ஒன்னுமே தெரியாதுன்னு சொல்லனும். ஒரு இசை ரசிகனுக்கு எவ்வளவு வேலைகள் இருக்குது.

முந்தியெல்லாம் நானும் குய்யா முய்யான்னு சண்டை போட்டுக்கிட்டிருந்தவனே. பிடிக்காத கலைஞர்களைக் குண்டக்க மண்டக்க பேசியவனே. அப்போ ஆடிட்டு இப்போ கொஞ்சம் அடங்கியிருக்கேன்.

அப்ப இணையத்துல இசைரசிகனுக்கு உருப்படியா ஒரு வேலையும் இல்லையா? இருந்துச்சு… நல்ல பாட்டை ட்விட்டர்லயோ வலைப்பூவுலையோ பகுந்துக்கிறது. அவ்வளவுதான் செய்ய முடியும்னு இருந்தது.

அதையும் மீறி தனக்குப் பிடித்த இசைக்கு இன்னும் சிறப்பான மரியாதையைப் பெற்றுத் தரமுடியும்னு நிரூபணம் செஞ்சிருக்காரு நண்பர் ரெக்ஸ் அருள்.

ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும் இளையராஜாவின் இசைச்சாதனையை குறைத்துச் சொல்லவே முடியாது. கூடவும் கூடாது. அவருடைய இசையை ரசிக்கிறேன் என்று சொல்வது பெருமை என்பதே மெல்லிசை மன்னரின் ரசிகனான என்னுடைய கருத்து.

அப்ப ஆரம்பிச்சாருய்யா ஒரு குயிஜ்ஜு (quiz). இளையராஜாவின் பாட்டிலிருந்து இடையிசையோ தொடங்கிசையோ முடிவிசையோ குடுப்பாரு. என்ன பாட்டுன்னு கண்டுபிடிக்கனும்.

மொதல்ல பத்துப் பதினஞ்சு நாளுக்கு எனக்குத் தெரியல. அப்புறம் போய்ப் பாத்தா இப்பிடியொரு வேலையச் செஞ்சிட்டிருக்காரு.

அப்ப அவர் கிட்ட சொன்னேன்… என்னய்யா குயிஜ்ஜு இது.. இசைல ஒரு இரைச்சல் உண்டா… கீறல்ல மாட்டுற சத்தம் உண்டா… பாம்பு மாதிரி இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்னு சீறல் உண்டா? இதையெல்லாம் இல்லாம நாங்க பாட்ட கேட்டதே இல்லையே. நீர் பாட்டுக்க.. எல்லாத்தை நீக்கி துப்புரவாக்கி இசைத் துணுக்கைக் குடுத்தா எங்களால எப்படி கண்டுபிடிக்க முடியும்?

கல்லிருக்கும் சோத்தையே தின்னு பழகிட்டு திடீர்னு ஒருநாள் நல்ல சோறு திங்குறவன் மாதிரி ஆயிருச்சு நெலமை.

அரிசியப் பொடைச்சிக் கல்லு உமி எடுக்குற மாதிரி தெனமும் பொறுமையா உக்காந்து பாட்டுல உமி எடுத்திருக்காரு ரெக்சு. பெரிய வேலைய்யா! ரொம்பப் பெரிய வேலை! நேத்து அந்தப் பாட்டெல்லாம் ஒரு டிவிடில போட்டுக் குடுத்தாங்க. அப்பதான் தெரியுது அதுல இருக்கும் தெளிவு.

இந்த குயிஜ்ஜுல ஒவ்வொருத்தரும் வடையச் சுடுறதுக்கு (அதான்.. விடையச் சொல்றதுக்கு) விதவிதமா மண்டைய ஒடச்சிருக்காங்க. ராத்திரி முழுக்க யோசிச்சிருக்காரு ஒருத்தரு. வீட்டுக்காரம்மா கிட்ட உதவி கேட்டிருக்காரு ஒருத்தரு. தூங்காமத் தவிச்சிருக்காரு ஒருத்தரு. இன்னும் எத்தனையெத்தனையோ!

இதுல நான் சுட்ட வடைகள் மிகக்குறைவுதான். ஒரு எழுபத்தஞ்சாவது வந்திருந்தா சந்தோசம். தெரிஞ்ச வடையா இருந்தும் சுடாத வடைகளும் உண்டு.

எல்லாம் நல்லபடி நடந்துச்சு. எல்லாரையும் அனுசரிச்சுப் போய்.. எல்லாரையும் சமாதானப்படுத்தி… எல்லாரையும் திருப்திப் படுத்தி… ரெக்சு பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா! நானே நடுவுல எகிறியிருக்கேன். புள்ளப்பூச்சியெல்லாம் சீறுதேன்னு ரெக்சு டரியல் ஆகியிருக்கலாம். ஆனா ஆகல. அங்கதான் நிக்கிறாரு அவரு.

தலைப்புலயே குறிப்புகளை ஒளிச்சு வெக்கிறார்னு பின்னாடிதான் தெரிஞ்சது. மொதல்லயே தெரிஞ்சிருந்தா கூட நாலஞ்சு வடைகளைச் சுட்டிருக்கலாம். சில பாட்டுகள் எனக்கு ரொம்பவே லேசா இருந்துச்சு. மாபியா மக்கள் கஷ்டப்பட்டிருக்காங்க. மாபியாக்கள் ரொம்ப லேசா அள்ளிய வடைகள் பல எனக்குத் தெரியவே இல்லை. இப்படி ஒவ்வொரு ரசனைக்கும் வேலையை வெச்சிருந்தாரு ரெக்சு.

நான் ரெக்சுக்கிட்ட ஒருவாட்டி சொன்னேன். ”முடிஞ்ச வரைக்கும் பெரிய பாடகர்களை எல்லாம் இழுத்துக்கிட்டு வாங்க. எல்.ஆர்.ஈசுவரி மனோரமா எல்லாம் பாடியிருக்காங்க. அவங்க பாட்டுகளும் ஒவ்வொன்னு வந்தா நல்லா இருக்கும்னு நெனக்கிறேன். “பார் ஆடை மறைத்தாலும் பார்” “கானாங்குருவிக்கு கல்யாணமா” பாட்டுகள்ளாம் போடலாம்.”னு ஐடியா குடுத்தேன். நல்ல ஒலித்தரத்தோட இந்தப் பாட்டுகள் இணையத்தில் இல்ல. அதுனால அவரால பயன்படுத்திக்க முடியலைன்னு சொன்னாரு. அவரோட நெலமையப் புரிஞ்சிக்க முடிஞ்சது. அதுவுமில்லாம இந்தப் பாட்டுகளை மக்கள் கண்டுபிடிப்பாங்களான்னு எனக்கே ஒரு சந்தேகம் இருந்துச்சு.

இன்னும் சில நாட்களுக்கு மலை 4.30 மணிக்கு மக்களுக்கு கை நடுங்கும். அந்த அளவுக்கு குயிஜ்ஜு பழகி வெச்சிருக்கே.

இணையத்துல சமீபகாலத்துல நடந்த நல்லதொரு திருவிழாவா இந்த 365ராஜா குயிஜ்ஜை சொல்லலாம். இயலை விட இசை மக்களிடம் சிறப்பாகச் சென்றடையுங்குறதுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

நண்பர் ரெக்சுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இசைஞானி, இளையராஜா, திரையிசை. Bookmark the permalink.

10 Responses to ராஜவியர்வை வழிய வைத்த ராஜ குயிஜ்ஜு

 1. amas32 says:

  நல்ல ஒரு பயணக் கட்டுரை :-

  amas32

 2. Uma Chelvan says:

  very hilarious write up !!! Congratulations to Rex and thanks to GiRa for the funny post.

 3. இவ்ளோ சொல்லிட்டு அந்த ரெக்சுக்கு ஒரு சுட்டி கொடுக்கலையே:(

  • GiRa ஜிரா says:

   மறந்துட்டேன் டீச்சர். இப்ப குடுத்திட்டேன். 365rajaquiz.wordpress.com 🙂

 4. Beautiful GiRa sir.. apart from reading your posts, the most anxious thing for me is you and Chokkan sir ganging up on Master about his quiz posts and LL clues.. i used to silently observe those sweet fights and suffer with uncontrollable laugh syndrome..at one point, Master took a sweet revenge on you two by posting “Yeh Mama kobama”… fun-filled days those are…Thank you so much for making this journey an interesting one and knowledgeable one..i have read all your posts and the information you share with each post..Alli Thandha Vaanam post is still echoing… A sweet nostalgia in store for coming years 🙂

 5. Kaarthik Arul says:

  //அரிசியப் பொடைச்சிக் கல்லு உமி எடுக்குற மாதிரி தெனமும் பொறுமையா உக்காந்து பாட்டுல உமி எடுத்திருக்காரு ரெக்சு// – Super and Kudos to his Efforts

  //இணையத்துல சமீபகாலத்துல நடந்த நல்லதொரு திருவிழாவா இந்த 365ராஜா குயிஜ்ஜை சொல்லலாம்.// – 100%

 6. Rex Arul says:

  Dear GiRa – Thanks a lot for a wonderful review. I accept it with grace on behalf of all the enthusiastic participants of #365RajaQuiz.

  I say that with deep circumspect. In part, it is also because of the person, who actually wrote this review — which is you 🙂 You are a fearless critic! Yes 🙂 That is how I had always identified you. While, I was able to face many constructive criticisms, I still didn’t know how to react, when it came to yours on one important aspect.

  That is — you complained as to how can I have so clear audio encoded clues, which sound very different that you are not able to identify the song because of its high quality.

  So, there you go! Right there, I didn’t know how to respond back to your criticism. If folks complained that my encoded clues were not up to the mark, I can work on that. What to do, when somebody complains that my encoded track sounded better and that is obfuscating the capability to identify?

  But then, that is GiRa 🙂

  So, since that day, I started adding a banner-quote that clearly said, what kind of noise-removals and to what extent they were encoded for clear and better sounds.

  So, that is just me 🙂

  In other words, I took your comments pretty seriously. 🙂

  And then, in the beginning, you wanted me to include more 1970s and 1980s. While I always stayed away from wearing my heart on my sleeves on what clues or period they may come from, I politely indicated that I will have enough variety to make the participants slowly get used to those early periods of Raaja.

  And as @Arun Rajendran has pointed out, I always respond back to criticism with some humor, fun, and jab. As you and @NChokkan had unexpectedly brought an issue regarding more lyricist-based clues, I was also receiving some anxious private messages from others asking to ignore that suggestion 🙂 My dilemma was, this sudden, unexpected googly was coming from an unexpected quarter. So, I tried to cool it down by unveiling, “Eh Maama, Kobamaa” from “Azhagiya Kanne” penned by your favorite lyricist Gangai Amaran.

  We all had a ton of laughter over this tongue-in-cheek jab. In other words, I recollect all of these very fondly because, we always had constructive discussions going on. At every point in time — just as with many others — we have heard, listened, and accorded due importance to all the suggestions you had given.

  In fact, since that incident, you may have noticed me bringing more lyricists into the “picture”.

  Now, as I said the other day in Twitter, you are one of the seminal folks behind #365RajaQuiz’s success. By your longitudinal comments with deep perspicuity, you were able to motivate others to follow your path. We suddenly started seeing comments from @prasannar_, @thachimammu, @kaarthikarul and many others. With that kind of motivation, we now got our “experts hall of fame” covered.

  The success of #365RajaQuiz is a testimony to all who participated and contributed every single day. Maestro Ilaiyaraaja’s music had the vitality. I was just an ordinary instrument, who was able to take that in a language that people could relate to. That is all.

  Thanks for being there for us. I truly appreciate your comments and feedback. You are a fantastic human-being and am proud to have known you as a friend, through this journey.

  Thank you.

  • GiRa ஜிரா says:

   It is a wonderful comment Rex. I throughly enjoyed you recalling all the incidents happened. Thanks 🙂

 7. tbr.joseph says:

  நானும் பல நாள் நினைச்சதுண்டு, எங்க போய்ட்டார் ஜிரான்னு. எவ்ளோ நாளாச்சி? திடீர்னு உங்க கமென்ட பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க?

  உங்க பதிவை பத்தி சரியா கருத்து சொல்ல முடியல. ஏன்னா இந்த க்விஜ் ப்ளாக நா இதுவரைக்கும் பார்த்ததில்ல. ஆனா உங்க பாணியிலருந்து கொஞ்சம் விலகி பேச்சு நடையில சொல்லியிருக்கறது ரொம்பவே நல்லாருக்கு. இப்ப இதுதான் ஃபேஷனாம்.

  • GiRa ஜிரா says:

   வாங்க ஜோசப் சார். நான் சென்னைலதான் இருக்கேன். நல்லா இருக்கேன்.

   உங்க கமெண்ட்டை துளசி டீச்சர் பதிவுல பாத்தேன். இன்னைக்கு தற்செயலா தமிழ்மணத்துல ஒங்க பதிவு. அதான் படிச்சு பின்னூட்டம் போட்டாச்சு.

   // உங்க பாணியிலருந்து கொஞ்சம் விலகி பேச்சு நடையில சொல்லியிருக்கறது ரொம்பவே நல்லாருக்கு. இப்ப இதுதான் ஃபேஷனாம். //
   பேஷன் டிவி பாக்குறோம்ல. அதுல தெரிஞ்சிக்கிற பேஷன் தான் 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s