திருச்சி பயணம் – சிறு குறிப்பு வரைக

முந்தியெல்லாம் எதாச்சும் ஊருக்குப் போனா பத்துப் பதினஞ்சு பாகம் வர்ர மாதிரி பயணத் தொடர் எழுதுறது வழக்கம். இந்த வாட்டி சுருக்கமா ஒரே பதிவு.

திருச்சி எப்பவும் போல அமைதியாக இருந்தது. மக்கள் சிக்னலில் ஒழுங்காக நின்று சென்றார்கள். இதை வேறு ஊர்களில் (சென்னை முதற்கொண்டு) காண்பது அரிது.

அதே போல மற்ற ஊர்களை விட திருச்சி துப்புரவாகவும் இருக்கிறது. தெருவில் குப்பை கூட போட முடியாத அளவுக்கு மக்கள் சோம்பேறியாகிவிட்டார்களோ என்று ஒரு நொடி பயந்ததும் உண்மை.

திருச்சியில் இறங்கியதுமே கண்ணில் பட்டது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனுக்கு அன்று நடக்க இருக்கும் பாராட்டு விழாவுக்கான போஸ்டர். பாராட்டப்பட வேண்டிய கலைஞருக்கு பாராட்டு நடப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இத்தனை வயதில் இந்தப் பெருமை வேறு எந்தத் தமிழ் இசையமைப்பாளருக்கும் இதுவரை கிடைத்ததில்லை. இனியும் கிடைப்பது ஐயமே.

விராலிமலை மிக மிக அழகான சிறிய ஊர். எவ்வளவு மயில்கள்! எவ்வளவு குரங்குகள்! வாழ்க்கையிலேயே மயில் ஆடுவது என்பதை விராலிமலையில் செப்டம்பர் 7, 2013ல் தான் பார்த்தேன். என்னவொரு அழகு! என்னவொரு அகவல். முருகன் நல்ல வரவேற்பு கொடுத்தான்.
DSC00403
கோயிலில் கூட்டமே இல்லை. மாலாசை கோபம் ஓயாதே நாளும் என்ற திருப்புகழை மனமுருகிப் பாடினேன். தீபாராதனை முடிந்து திருநீறெல்லாம் வாங்கிய பிறகு முருகன் மேல் சார்த்தியிருந்த மாலையை எடுத்து வந்து ஐயர் என் கழுத்தில் போட்டுவிட்டார். என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றேன்.

விராலிமலை போன்ற கோயிலைப் பார்த்துக் கொள்வதுதான் பொறுப்பு என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். தினமும் மலையேற உடல் வலுவாகும். முருகன் தொண்டில் மனம் வலுவாகும்.

விராலிமலையில் இருக்கும் மயில்களை அங்கிருக்கும் சிறுவர்கள் துன்புறுத்துகிறார்கள். கல்லெடுத்து எறிகிறார்கள். துரத்துகிறார்கள். கண்முன்னே இவ்வளவு நடக்க… யாருக்கும் தெரியாமல் என்னென்ன நடக்கிறதோ என்று வருந்தினேன்.

மலைக்கோட்டையிலிருந்து காவிரி காண்பதற்களவு. அதன் காற்று உணர்வதற்கழகு. அந்தச் சூழல் மனதுக்கழகு. உச்சிப் பிள்ளையாரை விட நான் காவிரித் தாயைத்தான் ரசித்தேன்.

தாயுமானவர் சன்னதியில் எக்கச்சக்கமாக வாழைப்பழங்களை வருகின்றவர்களுக்குக் கொடுக்கிறார்கள். ஐந்தாறு வாழைப்பழங்களை கோயிலுக்குள்ளேயே அமுக்கினேன். வாழைப்பழத் தொலியை போடுவதற்காக அங்கங்கே தொட்டி வைத்திருக்கிறார்கள்.

ஆதிகுடி காபி கிளப்பில் இரவு உணவு. ரவாதோசை மட்டும் இருந்தது. குறை சொல்ல முடியாத சுவை. ஆனால் காப்பி அட்டகாசம். காப்பின்னா அதான் காப்பி. ஓட்டல் சிறப்பாக நடக்கவில்லை என்று தெரிகின்றது. விரைவில் சுதாரிப்பார்கள் என்று நம்புவோம்.

மெயின்கார்டுகேட்டில் முன்பு இருந்த இம்பால ஓட்டல் மூடப்பட்டு விட்டது. அந்த ஓட்டலை வேறொரு இடத்தில் மீண்டும் செப்டம்பர் 9ம் தேதி திறந்திருக்கிறார்கள். போகத்தான் முடியவில்லை. சிறுவயதில் எங்கப்பா அங்கே கூட்டிக் கொண்டு போவார்.

வாசன் மெடிக்கல்ஸ் ஊரெங்கும் இருக்கிறது. கடையின் பெயர்ப்பலகையைப் பார்த்தால் ஓட்டல் கடை போல இருக்கிறது. சட்டென்று பார்க்கிறவர்களுக்கு மருந்துக்கடை போலத் தெரியாமல் போகும்.

மயில் மார்க் பூந்தி பார்சல் வாங்கிக் கொண்டேன். நல்ல பெரிய பூந்தி. சிறுவயதில் சாப்பிட்ட நினைவு வந்தது.

திருவானைக்கா பார்த்தசாரதி விலாஸ் தோசையும் சாம்பாரும் செம செம. “ரெண்டு மாவு மூனு மாவு” என்று பரிமாறுகிறவர் சரக்கு மாஸ்டருக்கு ஆர்டர் அனுப்புவது அழகு.

ஆனால் பார்த்தசாரதி விலாசில் நான் காப்பி ஆர்டர் செய்தும் குடிக்கவில்லை. நிறைய ஆடைகள். காப்பியில் ஆடை இருந்தால் என்னால் குடிக்க முடியாது. குமட்டி விடும். ஆகையால் குடிக்காமல் வைத்துவிட்டேன்.

திருவானைக்கா கோயில் வழக்கம் போல பிரம்மாண்டம் + அழகு. அகிலாண்டேஸ்வரி வழக்கம் போல ஆசிர்வதித்தாள். திருவானைக்காகாரியும் மதுரைக்காரியும் தஞ்சைக்காரியும் என் மனதுக்கு மிக நெருக்கம்.

பொதுவாகவே பெண் தெய்வங்கள் என் மேல் கருணைப் பார்வை பார்ப்பது வழக்கம். திருவரங்கத்திலும் அப்படியே. திருவரங்கத்தில் செங்கமலவல்லித் தாயார் கோயில்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அடித்துப் பிடித்து ஜருகண்டி கேட்பதை விட. அமைதியாய் வணங்குவது எனக்குப் பிடிக்கும்.

சென்ற முறை அரங்கனுக்குத் தைலக்காப்பு என்று காலை மூடி வைத்திருந்தார்கள். இந்த முறை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்தாகி விட்டது.

திருவரங்கப் புளியோதரை முன்பு போல் இல்லை. ஆனால் வடை மிகப்பிரமாதம்.

வெயிலின்றி தூரலோடு இனிமையான சூழ்நிலையில் ஊரைச் சுற்றிப் பார்க்க வாய்ப்பளித்த திருச்சிக்கு நன்றி.

பின்குறிப்பு.
1. திருச்சியில் சாப்பாட்டுக் கடைகளைப் பற்றிய தகவல்களைக் கொடுத்து உதவிய நண்பர் ச.ந.கண்ணனுக்கு மிக்க நன்றி. 🙂
2. தங்குவதற்கு தனியாக இடம் தேடித் தவித்த போது உதவிய நண்பர் சுப்பு அவர்களுக்கும் எனது நன்றி பல. 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திருச்சி பயணம், பயணம். Bookmark the permalink.

12 Responses to திருச்சி பயணம் – சிறு குறிப்பு வரைக

 1. amas32 says:

  very nice 🙂

  amas32

 2. அருமை!
  நான் அன்றாடம் கடந்து செல்லும் இவ்வூர்களின் சிறப்பை கண்முன் நிறுத்தியிருக்கிறீர்கள். ;-}


  அரங்கனுக்குத் /தைலக்காப்பு/

 3. uma chelvan says:

  Though I born and grew up In Madurai, I like Trichy very much. Trichy is much better then Madurai In many ways. Nice write up.

 4. விராலிமலை முருகன் பிடிக்கும் சுருட்டு பீடி, கண்டீர்களா?:))

  மயில் சூழ் விராலி உறைவோனே! – ஜிராவுக்கு
  மயில் ஆட்டம் தந்த பெருமாளே!!
  ——-

  திருப்பரங்குன்றத்தில், மயில்கள், நாய்களால் (மனித நாய்கள் + நிஜ நாய்கள்) படும் வேதனை:(((
  ——-

  //உச்சிப் பிள்ளையாரை விட நான் காவிரித் தாயைத்தான் ரசித்தேன்//

  நடந்தாய் வாழி காவேரி!
  நலமே வாழி காவேரி!
  பொலிந்தாய் வாழி காவேரி!
  வளமே வாழி காவேரி!
  ——-

  தாயே அகிலா, நீ நலமா?
  உன் உயரத்தில் முக்கால் பாதி, உன் குத்து விளக்கு நலமா?

  //திருவரங்கத்தில் செங்கமலவல்லித் தாயார்//

  என்றுமே செங்கமலத்தில் இருப்பவள் தான்!
  இருப்பினும், அரங்கத்தில் அவள் பெயர் = அரங்க நாச்சியார்
  மன்னார்குடியில் = செங்கமல வல்லி:)

  • //முருகன் மேல் சார்த்தியிருந்த மாலையை எடுத்து வந்து… என் கழுத்தில்//

   ஐயா…
   என் ஐயா…

   மாலாசை கோபம் ஓயாதே – நாளும்
   மாயா விகார வழியே செல்
   மாபாவி காளி தானேனும்
   மாதா பிதாவும் = இனி நீயே !!

   மாதா பிதாவும் = இனி நீயே !!

   வேலா விராலி வாழ்வே
   (மறந்து போச்..)
   வேளே சுரேசப் பெருமாளே!!

 5. //முருகன் மேல் சார்த்தியிருந்த மாலையை எடுத்து வந்து… என் கழுத்தில்//

  அணி “மாலை” தந்து..
  குறை தீர வந்து குறுகாயோ?
  —–

  அறிவால் அறிந்து – உன் இரு தாள் இறைஞ்சும்
  அடியார் இடைஞ்சல் களைவோனே

  அழகான செம்பொன் மயில் மீது அமர்ந்து
  அலைவாய் உகந்த பெருமாளே!!

  குற வாணர் குன்றில் – உறை பேதை கொண்ட
  கொடிதான துன்ப மையல் தீர

  குளிர் மாலையின் கண், அணி “மாலை” தந்து
  குறை தீர வந்து குறுகாயோ?
  குறை தீர வந்து குறுகாயோ?

 6. வணக்கம்…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_27.html) சென்று பார்க்கவும்… நன்றி…

 7. Pandian says:

  இப்ப எல்லாம் சுறுக்கமா கூட எழுதறதில்ல. புத்தக வேலையில பிசி ஆகிட்டீங்க போல

 8. Pandian says:

  *சுருக்கமாக* என்று மாற்றி வாசிக்கவும்.

 9. இந்தப் பதிவை இப்பதான் பார்த்தேன்!

  அதென்ன தஞ்சைக்காரி? பங்காரு காமாக்ஷியா? நான் இன்னும் தரிசிக்கவில்லை 😦

  திருவரங்கம்… செங்கமலவல்லி? நம்ம உறையூர் கமலவல்லிதானே?

  • GiRa ஜிரா says:

   தஞ்சாவூர்க்காரின்னா புன்னைநல்லூர் மாரியம்மன். அலங்காரி.
   திருவரங்கம் செங்கமலவல்லித் தாயார் தான்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s