நாலு வரியிலிருந்து மூன்று புத்தகங்களுக்கு…

”என்ன சொல்றீங்க?” என்று நாகா கேட்ட போது சரி நான் சொன்ன போது தொடங்கிய பயணம் மோகனையும் கூட்டிக் கொண்டு இன்று மூன்று புத்தகங்களாக மாறியுள்ளது.

சினிமாப் பாட்டுகளை வைத்து ஒரு 365 புராஜெக்ட்டா? அதுவும் இசையமைப்பாளரைப் பற்றிப் பேசாமல்… பாடகரைப் பற்றிப் பேசாமல்..வரிகளையும் கவிஞர்களையும் மட்டும் முன்னிறுத்தியா? தொடக்கத்தில் இருந்த தயக்கம் முழுமையாக மறைந்து மூன்று லட்சம் பதிவுகள் எழுதலாம் என்று முடிக்கும் போது புரிந்தது.

இசையை ரசித்துவிட்டு இசையமைப்பாளரைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் பாடலை ரசித்து விட்டு பாடலாசிரியனைக் கொண்டாடுவதில்லை. பழைய பாட்டென்றால் கண்ணதாசன்.. அதற்குப் பிறகு வைரமுத்து.. நடுநடுவே வாலி என்பதோடு மட்டும் நின்று விடுகிறது. ஆனால் பாடல் வரிகளைத் தோண்டியெடுத்துப் பார்க்கும் போதுதான் பலப்பல கவிஞர்கள் செய்திருந்த அதிசயங்கள் புரிந்தன. அதையெல்லாம் எடுத்து எழுதியது மகிழ்ச்சிதான்.
4variwrappers
இத்தனை பதிவுகளை எழுத வைத்த தமிழ்த் திரைப்படக் கவிஞர்களுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன். பயணத்தில் உடன் வந்து பதிவுகளை புத்தகம் வரை கொண்டு வந்த நண்பர்கள் நாகாவுக்கும் மோகனுக்கும் நன்றி. பெரியாரைத் துணைக்கோடல் என்று சொல்வார்கள். பெரியாரை என்றால் விவரம் தெரிந்தவர்களை என்றும் கொள்ளலாம். அந்த வகையில் எழுத்துத் துறையில் விவரம் தெரிந்த நாகாவும் அங்கு இங்கு எங்கு என்று எல்லாப் பக்கத்திலும் செயல் முடிக்கும் மோகனுக்கும் தான் புத்தக வடிவம் வந்ததற்குக் காரணமாகச் சொல்ல வேண்டும்.

சின்னச் சின்ன தடைகளையெல்லாம் தாண்டி முன்னேர் பதிப்பகத்தின் முதற்பதிப்பாக வெளிவந்திருக்கும் புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி ஸ்டால் எண் 386ல் வாங்கலாம்.

எழுத்து அச்சாக மாறியிருக்கும் அதிசயம் ஒருவித மயக்கமான மகிழ்ச்சியைக் கொடுப்பது உண்மைதான்.

நண்பர் நாகா ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அந்தப் பதிவையும் படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அதன் சுட்டி இங்கே.

இந்தப் புத்தகங்களை ஆன்லைனிலும் வாங்கலாம். அதற்கு இந்தச் சுட்டியைப் பயன்படுத்தவும்.

ஒரு புதிய பதிப்பகம். மூன்று புதிய புத்தகங்கள். இவை இன்னும் சிறப்படைந்து பெருக நண்பர்கள் நாகாவோடும் மோகனோடும் சேர்ந்து உங்கள் ஆதரவைக் கேட்கிறேன்.

நன்றி.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in தமிழ், புத்தகங்கள். Bookmark the permalink.

7 Responses to நாலு வரியிலிருந்து மூன்று புத்தகங்களுக்கு…

 1. ஓஜஸ் says:

  வாழ்த்துகள் 🙂

 2. மகிழ் திகழ் முதற்குழவி வாழ்த்துக்கள்!

  சில மயக்க மகிழ்வைச் சொல்லத்..
  தெய்வத் தமிழிலும் சொல் இல்லை!:(

  நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே? – எனைத்தொன்றும்
  எவ்வநோய் தீர்க்கும் மருந்து!
  ———

  வாழ்வியல் நல்கிய:
  தூத்துக்குடி, மதுரை, கரூர், கோயில்பட்டி, பெங்களூரு, Amsterdam, சென்னை
  – இந்த “எழுபடை வீட்டுக்கும்” நன்றி!

 3. //இசையை ரசித்து விட்டு இசையமைப்பாளரைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம்
  பாடலை ரசித்து விட்டுப் பாடலாசிரியனைக் கொண்டாடுவதில்லை//

  *இயல் தமிழ் = சான்றோர்/ நூலோர் போற்றுவர்
  *இசைத் தமிழ் = கலை உள்ளம் கொண்டோர் போற்றுவர்
  *நாடகத் தமிழே = மக்கள் அனைவரும் போற்றுவர்:)

  (இயலை) -உள்ளடக்கியது= இசை
  (இயலை + இசையை) -உள்ளடக்கியது = நாடகம்

  ஆக, இயல் எப்பவும், உள் “அடங்கியே” தான்:)
  ———

  அதான் போலும்..
  நடிகர்-நடிகையரை முதலில் கொண்டாடி,
  இசையமைப்பாளர்/ பாடகரை அடுத்துக் கொண்டாடும் சமூகம்..
  சினிமாக் கவிஞர்களை அதிகம் கொண்டாடுவதில்லை!

  ஆனால் ஆனால் ஆனால்..
  இயல் தமிழின் மதிப்பு என்ன தெரியுமா?

  சிலப்பதிகாரம் = இயல் + இசை + நாடகக் காப்பியம்!

  இளங்கோ காலத்திலேயே, இசை கூட்டி, நாடகமாகவும் நடிக்கப் பெற்றது.. மக்கள் ஆர்ப்பரித்து மகிழ்ந்தார்கள்!
  ஆனால் இன்னிக்கு? = எது தங்கி இருக்கு?

  *இசை= காலத்தால் மறைந்து/ மாறி விட்டது
  *நாடகம்= காலத்தால் மறைந்து/ மாறி விட்டது
  ஆனால் இயல்?

  இன்னிக்கும் சிலப்பதிகாரம்-ன்னா = “தேரா மன்னா” -ன்னு அதன் வரிகள் தான் நிற்கிறது!
  ———

  இயல் தமிழ் = விதை போல!

  இசையும் நாடகமும் தான் அதிகம் வெளியில் தெரியும்; பூத்துக் குலுங்கும்! ஆனால் பருவம் மாற மாற, மாறி விடும்!
  இயல் தமிழ் விதையோ, காலங் கடந்து, மண்ணுக்குள் ஊன்றி இருக்கும்! மனசுக்குள்ளும் தான்!

  வாழி இயல் தமிழ்!

 4. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்,
  தரத்தினில் குறைவதுண்டோ? – உங்கள்

  அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
  அன்பு குறைவதுண்டோ?
  —–

  இந்த வரிகள் இல்லாமல்…
  இசையை மட்டும் கேளுங்கள், Prelude/Interlude எல்லாமே கலக்கல் தான்!
  MSV எனும் மாய மந்திர மோகனம்;
  மிருதங்கத் தாளம் multiple beat-ஆ இல்லாம, constant one beat தான் பாட்டு முழுக்க..

  சுசீலாம்மா குரல் வேற கேக்கணுமா?
  சிவாஜி நடிப்பும் வேற!
  ஆனா, இத்தனை இருந்தும், இந்தத் தலைமுறை “கொண்டாடியா” பாக்குது?

  இன்னும் நாலு தலைமுறை கழிச்சி??

  MSV யாரோ? சுசீலாம்மா யாரோ?
  Sivaji one actor (overacting) ya; 3 centuries back he very famous ya!:)) | இப்படிப் பேசினாலும் பேசும்:)
  ஏன், இந்தப் பாட்டு எழுதன கண்ணதாசனைக் கூட மறந்து போகலாம்!
  —–

  ஆனா, ஆனா, ஆனா..
  யாராச்சும் அன்புக்கு உரியவர்கள்..
  Deep Love! = விபத்தில்/ நோயில், அவங்க அழகு கொறைஞ்சிட்டா?
  அப்போ, அந்தத் தலைமுறை கிட்ட, இந்த வரிகளை நீட்டுங்கள்!

  அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
  அன்பு குறைவதுண்டோ? – whattay line man!
  – is this what, they call sanga tamizh?
  – really kewl; xoxo (hugs n kisses) -ன்னு சொன்னாலும் சொல்லும்:)

  *audio/video க்குப் புறக் கருவி தேவைப்படலாம்!
  *வரிக்கு, மனக் கருவியே போதும்!

  மனம் என்னும் பாறையில்,
  வரிகளே அதிகம் தங்கி விடுகின்றன!
  ——

  கண்கள் இரண்டும்..
  என்று உன்னைக் கண்டு பேசுமோ?
  காலம் இனி மேல்..
  நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?
  கண்கள் இரண்டும் என்று..?

  இயல் தமிழ் வாழி!

 5. pvramaswamy says:

  Very happy. Congrats and best wishes to all three of you.

 6. மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் ஜிரா.

  பயணத்தில் இருந்ததால், இப்போதுதான் பார்த்தேன்..

 7. வாழ்த்துக்கள்… சூப்பர்…!! டி.ஆர் ஐ பற்றி எந்த புத்தகத்திலாவது வருகிறதா ?

  நேரம் கிடைத்தா உங்கள் ஆம்ஸ்டர்டாம் நினைவுகள், பதிவுகளை தொகுத்து ஒரு PDFஆ குடுங்க… ம்ம்ம்… அந்தக்காலம் அந்தக்காலம் தான்… 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s