தேர்தல் 2014 – என் பார்வையில்

ஒருவழியா ஜனநாயகத் திருவிழா நடந்து முடிஞ்சாச்சு. ஒரு நொடி யோசிச்சுப் பாத்தா மலைப்பாதான் இருக்கு. எவ்வளவு பெரிய வேலை. குத்தங்குறை ஆயிரமிருக்கு. ஆனாலும் பாராளுமன்றத் தேர்தல நாடு முழுக்க நடத்தி முடிக்கிறது டைனோசாருக்கு சோறு ஊட்டுற வேலைதான். நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும் பங்கெடுத்த அரசியல்வாதிகளுக்கும் வாக்களித்த மக்களுக்கும் வாழ்த்துகள்.

தேர்தல் முடிவுகளே வந்தாச்சே. மோடிதான் இந்தியாவின் பிரதமர்னு முடிவாயாச்சே. வாழ்த்துகள் நரேந்திரமோடி. 1984க்குப் பிறகு ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையோட ஆட்சிக்கு வந்திருக்கு. இன்னைக்கு இருக்குற நிலைக்கு பெரிய சாதனைதான்.

தமிழகத்துலயும் அலைதான். ஆனா அந்த அலையடிக்கும்னு என்னால ஊகிக்க முடியலை. சரியோ தவறோ முறையோ.. தமிழக மக்கள் ஒரு முடிவு எடுத்துட்டாங்க. அது தமிழ்நாட்டுக்கு உதவுமான்னு போகப் போகத்தான் தெரியும்.

வாழ்த்துகள் புரட்சித்தலைவி. பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றைப் பாத்தா எம்.ஜி.ஆர் கூட தனிச்சு நிக்கலன்னு சொல்றாங்க. நீங்க நின்னு சாதிச்சிட்டீங்க. அந்த நம்பிக்கை உண்மையிலேயே உங்களுக்கு முதல்ல இருந்துச்சான்னு தெரியல. ஆனாலும் இப்போ பாராளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி நீங்கதான்.

ஒன்னு மட்டும் மனசுல வெச்சுக்கோங்க. இந்த மக்கள் அள்ளியும் குடுப்பாங்க. அள்ளியும் போட்டுருவாங்க. காங்கிரசு நிலமையப் பாத்தீங்கள்ள. மத்த கட்சிகளை அரவணைச்சுக்கிட்டு போறது எப்படிங்குறத நீங்க கத்துக்க வேண்டியது அவசியம். ஒரு ஓட்டு வித்தியாசத்துல அன்னைக்கு நீங்க தோக்கடிச்சது இன்னைக்கு வரைக்கும் உங்களை மத்திய அரசில் பங்கு பெற விடாம தடுக்குறது கொஞ்சமாச்சும் புரிஞ்சதா? டெல்லியில் இருக்குறவங்கள எல்லாம் பன்னீர்செல்வமா நடத்துனா இதுதான் ஆகும். இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா புரிஞ்சிருக்கல. பாப்போம் நீங்க எப்படி மத்திய அரசோட விட்டுக் கொடுத்து நல்லபடியா நடக்குறீங்கன்னு.

வாஜ்பேயி பிரமதரா இருந்த காலத்திலிருந்து மத்தியில் ஆட்சியில் இருந்த திமுகவுக்கு இன்னைக்கு ஒரு எம்.பி கூட கிடையாது. கலைஞரே, ஏன் எப்படின்னு யோசிங்க. அழகிரியால ஒங்க கட்சி தோத்துருச்சுன்னு நான் நம்பல. நீங்களும் நம்பலைன்னு நான் நம்புறேன். இதைவிட ஸ்டாலினுக்கு நீங்க செய்யும் உதவி இருக்க முடியாது. அவரைத் தலைவராக்குங்க. நல்லதோ கெட்டதோ அவர் கட்சியை நடத்துட்டும். மக்களை விட்டு ஏன் இவ்வளவு விலகிப் போயிருக்கு கட்சின்னு மட்டும் யோசிங்க. உங்களுக்கே புரியும்.

வைகோ அவர்களே. அரசியலை விட்டு விலகிருங்க. இல்லைன்னா இமாச்சலப் பிரதேசம் உத்திரப்பிரதேசம்னு போய் அரசியல் செய்ங்க. தமிழ்நாட்டுக்கு நீங்க இனிமே தேவையில்லை. மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள்னு யோசிச்சு அரசியல் செய்ய முடிஞ்சா செய்ங்க. இல்லைன்னா இலக்கியசேவைல இறங்கிருங்க. நல்லவனா இருக்குறது மட்டும் அரசியல்ல உதவாது. வல்லவனாகவும் இருக்கனும். இல்லாட்டி தொடர் தோல்விகள் தோல்வித் தொடர்களா மாறும்.

தேமுதிக… இந்தக் கட்சி தோக்கனும்னு தேர்தல் நேரத்துல விருப்பப்பட்டேன். அப்படியே நடந்துருச்சு. ரொம்பவே மகிழ்ச்சி.

அன்புமணி சார்… வாழ்த்துகள். எம்.பி ஆயிட்டீங்க போல. தண்ணீரை விட ரத்தம் கெட்டியானதுதான். ஒங்க கட்சியை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. எல்லாக் கட்சிகளுமே சாதி மதம் பாத்துதான் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. ஆனா அவங்களுக்கு சாதிக்கட்சின்னு முத்திரை இல்ல. ஒங்களுக்கு இருக்கு. அவ்வளவுதான். அப்பா சமாதானமாயிட்டாரா?

யாரையோ மறந்துட்டேனே… ஆங்.. காங்கிரசு. இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் குடுத்த காங்கிரசும் உங்க காங்கிரசும் வேற வேறன்னு உங்களுக்காச்சும் இனிமே புரியனும். அது இந்திய தேசிய காங்கிரசு. நீங்க இந்திரா காங்கிரசு. உங்க கட்சி தோத்துப் போகனும்னு ரொம்ப விரும்பினேன். அப்படியே நடந்துருச்சு. நல்லதே நடக்கட்டும்.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு நாடு முழுக்கவே ஏழு எம்.பிதானாமே. என்னய்யா இது சித்தாந்தத்துக்கு வந்த சோதனை. மக்களுக்குப் பயன்படாத எந்தச் சித்தாந்தமும் வீணே. தமிழ்நாட்டுல உங்கள அதிமுக அசிங்கப்படுத்திய பின்னாடியும் முன்னாடி போய் அம்மா தாயேன்னு நின்னீங்களே. உங்களுக்கு இது தேவைதான்.

தமிழகத்தில் தோல்வியுற்ற கட்சிகளே… பணம் விளையாண்டது உண்மைதான். பணம் கொடுத்து மட்டுந்தான் ஜெயலலிதா வெற்றி பெற்றார்னு நம்புனீங்கன்னா…தோல்விகள் இன்னும் உங்களைத் தொடரும்னு பொருள். நேர்மையா சுயபரிசோதனை செஞ்சு பாருங்க. புரியும். தெளியும்.

நிதிஷ், ஒமர் அப்துல்லா, மாயாவதி, முலாயம் மாதிரி ரொம்பப் பேசுனவங்களுக்கெல்லாம் மக்கள் அமைதியா இருக்கச் சொல்லி அறிவுரை சொல்லியிருக்காங்க. வாயல வட சுட்டா வாயே சுட்டுரும்.

அரவிந்த கெஜ்ஜரிவால்…வாங்கண்ணே வாங்க. அதென்ன காசிக்குப் போறப்போ ரெயில்ல போனீங்க. திரும்ப வர்ரப்போ பிளைட்ல வர்ரீங்க? நல்லா போடுறீங்க சார் நாடகம். உங்க தோல்வி இப்பதான் முடிவாச்சுன்னா நெனைக்கிறீங்க? இல்லவே இல்ல. எப்போ காங்கிரசு கட்சி ஆதரவோட டில்லி முதல்வர் ஆனீங்களோ அப்போவே முதல் ஆணி அடிச்சாச்சு. எப்போ பொறுப்பைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போனீங்களோ அப்போ ரெண்டாவது ஆணி. இந்தத் தேர்தல்ல அடிச்சது கடைசி ஆணி. இனி ரொம்பக் கஷ்டமப்பா.

மோடி சார்… கடைசியா உங்க கிட்ட பேச வந்திருக்கேன். மிகப் பெரிய வெற்றியை மக்கள் உங்களுக்குக் குடுத்திருக்காங்க. வாஜ்பேயிக்குப் பிறகு அத்வானிக்கு மக்கள் குடுக்காத வெற்றி உங்களுக்கு. காங்கிரசு கட்சியின் மீதான வெறுப்பும் ஒரு காரணம்னாலும் அந்த வெறுப்பைச் சரியாக அறுவடை செஞ்சது உங்க திறமை. வாழ்த்துகள்.

இந்துக்கள் மட்டும் ஓட்டுப் போட்டு உங்களை வெற்றிபெற வைக்கல. பலவிதமான நம்பிக்கைகள் கொண்ட மக்களுக்கும் ஓட்டு போட்டிருக்காங்க. ஜம்மு வெற்றி அஸ்சாம் வெற்றி வடகிழக்கில் பெற்ற வெற்றியெல்லாம் கொஞ்சம் யோசுச்சுப் பாருங்க. உங்க தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்க்கு வேணும்னா ராமர் கோயில் பெருசா இருக்கலாம். ஆனா எங்களுக்கெல்லாம் தேவையே இல்ல.

சாமானியனோட ஆசை என்ன தெரியுமா? நல்லதா ஒரு வேலை. மாசம் பொறந்தா சம்பளம். பொண்டாட்டி புள்ள குட்டிகளோட நிம்மதியா வாழ்க்கை. பசங்களைப் படிக்க வெச்சு வளத்து விடுறது. அதுக்குப் பிறகுதாங்க மத்ததெல்லாம். பணத்தாசை உண்டு. ஆனா அம்பானிகளைப் போல அரசியல்வாதிகளைப் போல பெரும்பாலான அரசு ஊழியர்களைப் போல பேராசை கெடையாது.

அப்படிப் பட்ட சாமானியன் ஏதோவொரு நம்பிக்கை வெச்சு உங்கள வெற்றி பெற வெச்சிருக்கான். அந்த நம்பிக்கைக்காகவாவது அவங்களுக்கெல்லாம் நல்லது செய்ங்க. கொஞ்சமாவது செய்ங்க. Please.

பி.கு அப்படி நீங்க செய்யலைன்னா… இன்னைக்கு காங்கிரஸ் இருக்கும் இடத்துல நாளைக்கு நீங்க இருப்பீங்க.

இப்படிக்கு,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

10 Responses to தேர்தல் 2014 – என் பார்வையில்

 1. Lovely sir.. the blog sums up even what i was having in mind about the election results especially on Arvind Kejriwal.. sky is still unclear… hoping a for a bright sunshine 🙂

  • GiRa ஜிரா says:

   Thanks Arun. As a common man these are the things which we can say. It is up to them further 🙂

 2. amas32 says:

  அனைத்தையும் சீர் தூக்கிப் பார்த்து எளிமையான எழுத்தில் இன்றைய அரசியல் நிலையையும் தலைவர்களின் பொறுப்புகளையும் பட்டியல் இட்டிருக்கிறீர்கள். இந்த இடுகை ஒரு பத்திரிக்கையின் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்குப் போய் சேர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  amas32

  • GiRa ஜிரா says:

   வாங்கம்மா. இதெல்லாம் அவங்களுக்குப் போய் நல்லபடி புரிஞ்சிக்கிட்டா சரிதான். நல்லது நடந்தா நாம ஏன் வேண்டாங்குறோம். 😉

 3. நல்ல ஆராய்ஞ்ச அலசல். இனிய பாராட்டுகள்.

  மோடிக்கு இன்னும் சில வருசங்கள் பயங்கரத் தொல்லைகளா இருக்கும். பாதாளம்வரை புரையோடிப்போன பலதையும் சரிக் கட்ட நேரம் பிடிக்கும். ஆனால்….. ஊடகம், எதிரிக்கட்சி இவையெல்லாம் 30 நாளாச்சு, 60 நாளாச்சு 100 நாளாச்சு இன்னும் ஒன்னும் செய்ய்லைனு ஊதிப்பெருக்கக் காத்திருக்கே:(

  எனக்கு ஒரே ஒரு சமாச்சாரம் சொல்லணும். உங்க பதிவில் சொன்னால் ரீச் அதிகம்.

  ஒரே நபர் ரெண்டு மூணு இடங்களில் நிற்பதை முதலில் தடுக்கணும். எல்லாத்திலும் ஜெயிச்சபிறகு இன்னொரு இடத்துக்கு இன்னொருமுறை தேர்தல் வைக்கறதும், அதுக்கும் ஒரு தபா மக்கள் வரிப்பணம் வீணாவதும் தவிர்க்கப்படவேண்டும்.

  ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் நின்னு ஜெயிச்சா, வேணாமுன்னு விடும் இடத்துக்குண்டான மறுதேர்தல் செலவை அந்த நபர் செய்யணுமுன்னு சட்டம் வந்தா நல்லது.

  சரியா இருக்கான்னு பாருங்க.

  • GiRa ஜிரா says:

   டீச்சர். நீங்க சொல்லிருக்குறது நியாயமானது. இதைச் செயல்படுத்தினாலும் நல்லதுதான். ஆனா தேர்தல் கமிஷன் அரசியல்வாதிகள் கைலதான இருக்கு. அதுனால மக்கள் வரிப்பணத்தைத்தான் வீணடிக்கப் பாப்பாங்க.

 4. Anbesivam says:

  Arumaiyaana padhivu! I liked vaiko portion alottttt:-))))

 5. Pandian says:

  சூப்பருங்கோ. வருங்கால முதல்வர் அண்ணன் ஜிரா வாழ்க

  • GiRa ஜிரா says:

   ஏய்யா.. ஏன் ஏன்? நாம் பாட்டுக்க ஒரு பிளாக் வச்சு செவனேன்னு நடத்திக்கிட்டிருக்கேன். ஏன் இப்பிடி?

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s