யாமிருக்க பயமே(ன்)

தமிழ்க்கடவுளான முருகரு வாட்சப்புல இருந்தா அவரோட ஸ்டேட்டஸ் “யாமிருக்க பயமேன்”ன்னு வெச்சிருப்பாரு. வாட்சப்பு வர்ரதுக்கு முன்னாடியே காலண்டர்ல ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்ட முருகனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ! யாமிருக்க பயமேன்னு 1980களில் ஒரு முருகன் படமே வந்திருக்கு.

அந்தப் பேர்ல கடைசி எழுத்த எடுத்துட்டு “யாமிருக்க பயமே”ன்னு தலைப்பு வெச்சு புதுசா ஒரு படம். பேய்ப் படந்தான். ஆனா சிரிப்புப் பேய். பேய்ச்சிரிப்புன்னா பயமா இருக்கும். சிரிப்புப் பேய்னா ஜாலியா இருக்கும்.

சின்ன வயசுல அரைக் கண்ண மூடிக்கிட்டுதான் பேய்ப் படங்களப் பாத்தேன். இப்பவும் அப்படித்தான். ஆனா அதெல்லாம் வேண்டாம். கண்ணத் தொறந்துக்கிட்டே பேய்ப் படம் பாக்கலாம்னு காஞ்சனாவுக்குப் பிறகுதான் தெரிஞ்சது.

அந்த வகையில் வந்திருக்கும் படந்தான் யாமிருக்க பயமே.

The quite familyங்குற கொரியப் படத்தோட தழுவல்தான் இந்தப் படம்னு சொன்னாங்க. அந்தக் கொரியப் படத்தின் கதையை இணையத்துல தேடி படிச்சேன். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் எடுத்துக்கிட்டு முழுப்படமா நகைச்சுவை பிரியாணியா சமைச்சிருக்காங்க. கொரியப் படம் பேய்ப்படமே இல்லை. அதுனால இந்தப் படத்த எடுத்த இயக்குனர் டீக்கே-யைத் தாராளமா பாராட்டலாம்.

சிரிக்க வைக்கனும்னு முடிவு கட்டியாச்சு..பெறகென்ன..என்னல்லாம் கெடைக்குதோ அதெல்லாம் வெச்சு சிரிக்க வைக்கிறாங்க.

படத்தின் பலவீனத்தை முதல்ல சொல்லிர்ரேன். ஒரேயொரு பாட்டைத் தவிர மத்த பாடல்களை எல்லாம் அப்படியே வெட்டிப் போட்டுறலாம். மத்தபடி முழுப்படத்தையும் ரசிச்சேன்.

கிரெஷ்ணா.. அப்படித்தான் இங்கிலீஷ்ல அவர் பேர எழுதுறாரு. அவருதான் ஹீரோ. படத்துல எல்லார் கிட்டயும் அடி வாங்குறாரு. அடியாள்னு தாராளமா பட்டம் குடுக்கலாம். மக்கயாலா மக்கயாலா பொண்ணுதான் ஹீரோயின். முகமெல்லாம் நசுங்கிப் போயிருக்கு. ரூபா மஞ்சரின்னு பேரு. எனக்கென்னவோ விட்டலாச்சாரியா எடுத்த மதன மஞ்சரி படந்தான் நினைவுக்கு வந்துச்சு.

அப்போ ஓவியா ஹீரோயின் இல்லையான்னு நீங்க கேக்கலாம். ஓவியாவும் ஹீரோயின் தான். கடவுள் எல்லாருக்கும் எல்லாத்தையும் குடுக்குறதில்ல. அப்படி தன் கிட்ட என்ன இருக்கோ அதை வெளிக் கொண்டு வருவதில் ஓவியாக்கு இந்தப் படத்தில் வெற்றி. என்ன… இனிமே நல்ல படங்கள் கெடைக்காதுன்னு தோணுது.

படத்துல ஓவியா அடிக்கடி சிக்கன் பிரைடு ரைஸ் செஞ்சு படம் பாக்குறவங்க பசியைத் தூண்டுறதால…படம் பாக்கப் போறப்பவே திங்குறதுக்கு எதாவது வாங்கீட்டுப் போயிறவும்.

சூது கவ்வும் படத்துல அருமைநாயகமா நடிச்ச கருணாகரணுக்கு இதுவும் கலக்கல் வெற்றிதான். சூடு கைச் சுந்தரமா அவர் வந்து பம்ப் செட் பத்மினிகளோட நடத்துற காமெடியெல்லாம் வயித்துவலி. படத்துல அவர் சொல்றதெல்லாம் நடக்குற காட்சிகள்ளாம் அதிர்ச்சிச் சிரிப்புகளுக்கு உறுதியான உத்திரவாதம். அதுலயும் ”இந்தக் கொலைய மேடம் கணக்குலதான வெச்சுக்குவீங்க சார்”னு கேக்குறப்போ கொன்னுட்டாரு.

இவங்கள விடுங்க… மயில்சாமியைச் சொல்லனும். Breath in… Breath out..னு பிரதர் அடைக்கலமா யோகாசனம் கத்துக்குடுக்கும் காட்சியிலேயே சிரிக்க வைக்கத் தொடங்குறாரு. அதுக்குப் பிறகு அவர் வரும் காட்சியெல்லாம் சிரிப்புதான். படம் முழுக்க வந்துதான் மக்கள் மனசுல பதியனும்னு இல்ல. வர்ர கொஞ்ச நேரத்துல பதிய வைக்கிறதுதான் திறமை. மயில்சாமி ராக்ஸ். சுவாச பாசம் ராக்ஸ். “அடைக்கலம் வந்தாரே அடைக்கலம் தந்தாரே” பாட்டு ராக்ஸ்.

படத்துல சோனாவுக்குச் சின்ன பாத்திரம். பெரிய சோனாவுக்குச் சின்ன பாத்திரமான்னு ஆத்திரப்படாதீங்க. படம் பாத்தா நல்லவேளைன்னு நெனைப்பீங்க. சோனாவுல னா இல்ல. அதுக்கு பதிலா தா போட்டுக்கோங்க.

விக்கிரமாதித்தன் கதை படிக்குறப்போ கதைக்குள் கதைன்னு வரும். அது மாதிரி இந்தப் படத்துல வரும் பன்னி மூஞ்சி வாயன் கதையும் சிரிப்பு ஆம் ஆத்மி.

கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசனும் படத்துல இருக்காரு. அவரும் கதைக்குள் கதைதான். இன்னும் நல்ல நடிக்கனும் தம்பி. இதெல்லாம் சினிமாக்குப் பத்தாது. பத்தவே பத்தாது. அதே கதைக்குள் கதைல வர்ர பாப்பா அழகு. லேசா சமந்தா மாதிரி இருக்கு. பேர் என்னன்னு தேடுனா அனஸ்வரான்னு போட்டிருக்கு. பாத்த எத்தன பேர் தூக்கத்துல அனஸ்வரா அனஸ்வரான்னு அனத்துறான்னு தெரியலையே. அனஸ்வரா மஞ்சள் தாவணியில் அழகு. ஆனா அந்த மஞ்சள் தாவணி மர்மம் பயங்கரம்.

அதெல்லாம் இருக்கட்டும். இன்னும் விமர்சிச்சா படத்தோட கதையையே முழுசாச் சொன்ன மாதிரி ஆயிரும். விமர்சனம் செஞ்சா படத்தோட கதை தெரியக் கூடாதாமே. ஆனாலும் ஒன்னு சொல்லிக்கிறேன். படம் முழுக்க சிரிக்காட்டி கூட படத்தோட முடிவுல சிரிச்சுருவீங்க. அப்படியும் சிரிக்கலைன்னா.. நீங்க லீவு போட்டுட்டு ரிலாக்ஸ்டா கொஞ்ச நாள் டூர் போயிட்டு வாங்க.

படத்தோட வசனங்கள நான் எழுதுனேனான்னு நண்பர்கள் கேட்டாங்க. பிளாகு ட்விட்டர்னு டீஜண்டா நல்ல பேர் வாங்கியிருக்கேன். அதக் கெடுக்க இந்த நண்பர்களே போதும். எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். நண்பர்களிடமிருந்து காப்பாற்று முருகா!

பி.கு. பீனிக்ஸ் மால் ஓனர் யாரோ அவருக்கு நேத்து கண்டிப்பா வயித்தால போயிருக்கும். ஸ்கூட்டர் நிறுத்த ஒரு மணி நேரத்துக்கு அம்பது ரூபாயாம். பாவிகளா! EA Mall ப்ரீமியம் கார் பார்க்கிங் கூட இவ்வளவு இல்லையேடா! அதான் சாபம் விட்டுட்டேன். பீனிக்ஸ் மால் ஓனரை ஒங்களுக்குத் தெரியும்னா..அவரு கிட்ட பேசி வயித்தால போனதை உறுதிபடுத்தவும்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , . Bookmark the permalink.

2 Responses to யாமிருக்க பயமே(ன்)

  1. amas32 says:

    நன்றி ஜிரா, படத்தைப் பார்க்கிறேன் :-))

    amas32

  2. எனக்கும் திரைப்படங்களுக்கு ‘ஸ்னானப் ப்ராப்தி’ இல்லை. ஆனாலும் உங்கள் விமர்சனத்தால் கதை புரிந்துவிட்டது போல் ஓர் திருப்தி.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s