சைவ முண்டாசு டிராகன் – 2

ஒவ்வொரு சமயம் மாசக் கணக்குல சினிமாவே பாக்காம இருந்திருக்கேன். ஆனா கடந்த ஏழு நாட்கள்ள மூனு சினிமாக்கள். அதிசயந்தான். ஒவ்வொன்னும் ஒவ்வொரு வகை. தனித்தனி விமர்சனம் எழுதத் தேவையில்லாத காரணத்தால இந்தத் திரீ-இன்-ஒன் விமர்சனம். நான் படம் பாத்த வரிசைலயே விமர்சனத்தையும் சொல்றேன்.

முண்டாசுப்பட்டி படம் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்த படம். கலைஞர் டிவில நாளைய இயக்குனர்லயே பாத்திருக்கேன். நல்லாயிருக்கும் அந்தக் குறும்படம். அதையே பெருசா முழுநீளப்படமா எடுத்திருக்காங்க.

டிவிட்டர்ல மக்கள் ஆ ஊன்னு சொன்னதால பெரம்பூர் எஸ்2 வரைக்கும் போய் பாத்தேன். தொடக்கம் கொஞ்சம் வித்யாசமா இருந்ததென்னவோ உண்மைதான். ஆனா போகப் போக ஊகிக்க முடிஞ்ச மெதுவான காட்சிகள். இன்னும் சொல்லப் போனா கிளைமாக்ஸ்ல நடக்குறத இடைவேளையிலேயே எதிர்பார்த்தேன்னா பாத்துக்கோங்க.

ஆனா படத்துல அங்கங்க சில நல்ல சிரிப்பு வெடிகள் இருந்தது. குறிப்பா ஆனந்தராஜ் வீட்டில் நடக்கும் காட்சிகள் அட்டகாசம். அடுத்து ஊர்ச் சாமியாரும் அவருடைய கள்ளக்காதலியும் தொடர்பான காட்சிகள். கதாநாயகியா நடிச்ச நந்திதா நல்லா நடிச்சிருந்தாங்க. விஷ்ணு…ஏதோ ஒன்னு கொறையுதே.

இனிமே குறும்படங்களை முழுப்படங்களா மாத்தாதீங்க. முழுப்படத்துக்குன்னு கதைய உருவாக்குங்க. குறும்படத்த பெரும்படமா மாத்துறவங்களோட தேனிலவு முடிஞ்சு போச்சு. புதுக்கதையோட வாங்கப்பூ!

கார்ட்டூன் அனிமேஷன் படங்கள்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிக்சார், வால்ட் டிஸ்னி, சோனி பிக்சர்ஸ் படங்கள்ளாம் அப்படிப் பாத்திருக்கேன். பெரும்பாலான படங்களோட டிவிடி எங்கிட்ட இருக்கும்னா பாத்துக்கோங்க. அப்படியொரு ஆசைல திருவான்மியூர் எஸ்2 தியாகராஜால பாத்ததுதான் How to tain your dran 2.

படத்துல முதல்ல சிலபல காட்சிகள் புரியல. முதல் படத்தைப் பாத்திருக்கனும் போல. இங்கிலீஷ் படத்துல இல்லாத இடைவேளைய பாப்கார் விக்குறதுக்காக நம்மாளுங்க விடும்போதுதான் கதை புரிஞ்சது. அதுக்கப்புறம் சுறுசுறு விறுவிறுதான்.

படத்துல எனக்கு ரொம்பப் பிடிச்சது இறுதிக்காட்சிகள் தான். செண்டிமெண்ட் + கிராபிக்ஸ் + நல்லவன் வாழ்வான் டைப் முடிவு. குழந்தைகளுக்குப் பிடிக்கும். என்னைப் போன்ற குழந்தைகளுக்குப் படம் சுமார்தான். டிரையாலஜியாம் இது. அப்போ இன்னொரு படம் வேற வரப்போகுதா! அதுக்காகத்தானே மெயின் வில்லன் தப்பிச்சிருக்கான்!

நேத்து பாத்த படம் சைவம். ரிலீஸ் ஆன மொதநாள்ள சினிமாவுக்குப் போற வழக்கமெல்லாம் இல்ல. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், ஹாரி பாட்டர் படங்களுக்குக் கூட முதல்நாள் போய்ப் பாத்த நினைவில்ல. ஆனா எதோ ஒரு சூழ்நிலைல சிட்டி செண்டர் ஐநாக்ஸ்ல சைவம் படம் பாக்க வேண்டியதாப் போச்சு.

சின்ன வயசுல படிச்ச ரெண்டு சிறுகதைகள் நினைவுக்கு வருது. அதுல ஒன்னு ஒரு பொண்ணு ஆசையா வளத்த கோழியக் கோயில்ல பலி குடுத்ததும் அவளுக்குக் காச்சல் வந்துரும். அப்புறம் குடும்பமே சைவம் ஆயிரும். ஆர்னிகா நாசர் எழுதுன இன்னொரு கதைல கோழிக்குப் பதிலா ஆடு. ஆட்டைக் கொன்னுட்டாங்கன்னு சின்னப்பையன் அழுதுக்கிட்டிருப்பான். இந்தாடா கண்ணான்னு பிரியாணிய ஊட்டுறப்போ அந்தச் சுவைல அவன் ஆட்டை மறக்குறமாதிரி கதைய முடிச்சிருப்பாரு.

என்னோட வாழ்க்கைல கிட்டத்தட்ட ரெண்டாங் கதைல வர்ர மாதிரி நடந்தது. கோயில்ல கெடா வெட்டுறதப் பாத்து கொஞ்ச நேரம் கண்ணக் கெட்டி விட்டாப்புல இருந்தது. சித்தப்பா சமைக்குற எடத்துக்குக் கூட்டீட்டுப் போயி வெந்து முடியப் போற கொழம்புல இருந்து கறித்துண்டுகளைக் கரண்டில அள்ளிச் சாப்பிடக் கொடுத்தப்போ நானும் பழையபடி ஆயிட்டேன்.

சைவம்னா சமயமா உணவுப்பழக்கமான்னு பெரிய கொழப்பம். இன்னைக்கு நெலமைல வைணவர்கள்ளயும் சைவர்கள் உண்டு. மரக்கறி உணவு சாப்பிடுறதைச் சொல்றேன். இதுல எதுல நல்லது கெட்டதுன்னு சண்டை போடுறது தொடர்ந்து நடக்குறதுதான். இந்த நெருப்புல எண்ணெய் ஊத்துற படந்தான் சைவம்.

படம் தொடங்குறப்பவே அதோட முடிவு என்னன்னு நண்பன் கிட்ட சொல்லிட்டேன். நான் சொன்னது சரியா இருந்தது. நாசரையும் வேலைக்காரரா நடிச்ச நடிகரையும் தவிர படத்துல அத்தனை பேரும் புதுமுகங்கள். அதுவே படம் பார்க்குறதைக் கொஞ்சம் சுவாரசியமாக்குச்சு.

ஆனா நீளநீளமான காட்சிகள். நாசரோட பேத்தியா நடிச்ச பாத்திரத்தைத் தெய்வக் கொழந்தை மாதிரி காட்டுனது உறுத்தல். அந்தப் பொண்ணை விட ஷ்ரவன் aka சரவணனா நடிச்ச பையன் ரே பவுல் நல்லா நடிச்சிருந்தான். மூக்கு வெடைக்க கோவத்தோட இருக்கும் போதும் சரி… படம் முடியுறப்போ கோவம் தீர்ந்து சிரிக்குறப்போவும் சரி.. அருமை. அந்தப் பொண்ணு முகம் நினைவுக்கு வரலை. இந்தப் பையன் முகந்தான் இப்ப யோசிச்சாலும் நல்லா நினைவுக்கு வருது.

உன்னி கிருஷ்ணனோட பொண்ணு உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய அழகு அழகு பாட்டு அழகு. ஆனா.. அந்த மாதிரியான ஒரு குடும்பச் சூழல்ல இருக்கும் குழந்தைகள் பாடும் பாட்டு இப்படியா இருக்கும்? இந்தத் தப்பை சுகாசினிதான் இந்திரா படத்துல தொடக்கி வெச்சதுன்னு நெனைக்கிறேன். மத்த பாட்டெல்லாம் சொல்லிக்கிற மாதிரி இல்ல.

அதே மாதிரி எப்பவும் பட்டுப்பாவாடை சட்டையோட எந்தப் பெண் கொழந்தையும் இருக்குறதில்ல. தூக்கத்துலயும் அழியாத திருநீறு. கலையாத பொட்டுன்னு அந்தப் பேத்தி பாத்திரத்தை அதீத புனிதமயமாக்கல். அதே மாதிரி பேபி ஷாலினித் தனமான வசனங்கள்.

சேவலைத் தேடிப் போய் சண்டை போடுற காட்சிகள் நல்லாருந்துச்சு. சண்முகராஜன் வெத்தலைல மை போட்டுப் பாக்குற காட்சிகளும் அருமை. அதைவிட அருமை கணவன் மனைவியான வேலைக்காரர்கள் நடிப்பு. ஒவ்வொருத்தரும் கோவிச்சிக்கிட்டு சாப்பிடாம உக்காந்திருக்கும் போது சாப்பிடக் கூப்பிடும் காட்சியில் அவங்க நடிப்பு ஏ கிளாஸ்.

ஒரு காட்சில மனைவி கணவன் கிட்ட ஆறுதலப் பேசுறப்போ, “கவலப்படாதீங்க. அந்த மேனேஜர் வேற எங்கயாவது போயிருவான்”னு சொல்றப்போ விழுந்து விழுந்து சிரிச்சேன். இப்படி ஜோக் சொல்ற அளவுலதான் பெரும்பாலான இந்திய மேனேஜர்கள் இருக்காங்கங்குறதும் உண்மை.

ஒரு நல்ல குடும்பத்தோட கொஞ்ச நேரம் உக்காந்து பேசிட்டு வந்த திருப்தி இருக்கு. ஆனா நல்ல படமான்னு சொல்லத் தெரியல. மறுபடியும் பாக்க படத்துல ஒன்னுமில்ல.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , . Bookmark the permalink.

3 Responses to சைவ முண்டாசு டிராகன் – 2

  1. amas32 says:

    :-)) ஒரே கல்லில மூணு மாங்காய்!

    amas32

  2. super reviews.. first paathaachu.. 2nd paakkura aarvam illa… saivam parkalama vendama.. namakku neeeelamaana padangal paakura porumaiyai thaada murugaaa:-)

  3. //. இங்கிலீஷ் படத்துல இல்லாத இடைவேளைய பாப்கார் விக்குறதுக்காக நம்மாளுங்க விடும்போதுதான் கதை புரிஞ்சது//

    :-)))))))))))))))))

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s