பேங்களூர் டேஸ்

என் மூளையோட hard diskன் memoryல கொஞ்சம் கொஞ்சமா தேஞ்சு மறைஞ்சிக்கிட்டிருக்கும் ஊருதான் பெங்களூரு. இத்தனைக்கும் தூத்துக்குடிக்குப் பிறகு அதிக ஆண்டுகள் இருந்த ஊர் பெங்களூருதான்.

அந்த பெங்களூரை அடிப்படையா வெச்சு ஒரு மலையாளப் படம். அதுவும் அஞ்சலி மேனன் இயக்கத்துல. உஸ்தாத் ஓட்டல் பாத்தப்பயே எதிர்பார்ப்பை ஏத்தி வெச்ச இயக்குனர். அந்த எதிர்பார்ப்பைச் சரியா நிறைவேத்தியிருக்காரு.

வெளிப்படையா ஏத்துக்காட்டியும் உள்ளுக்குள்ள எல்லாரும் ஏத்துக்குற உண்மை உண்டு. எல்லாருக்கும் நிறைவேறாத ஆசைகள் உண்டு. எல்லாருக்கும் நிறைவேற விரும்பும் ஏக்கங்கள் உண்டு. இத அடிப்படையா எடுத்துக்கிட்டு.. இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு நம்மள நெனைக்க வைக்கும் படங்களுக்கு வெற்றி உறுதி. இந்தப் படத்துக்கும் அதுதான் அடிப்படை.

இந்தப் படத்துல இருக்குற மாதிரி நட்புணர்வு மிக்க பெரியப்பா மாமா பசங்கள்ளாம் இப்ப ரொம்பவே அபூர்வம். அது நிறைவேறாத ஆசை. அவங்களோட வாழ்க்கையில உண்டாகும் காதல் படம் பாக்குறவங்களுக்கு உண்டாக்கும் ஏக்கம்.

கேரளாவுல இருந்து மூன்று காரணங்களுக்காக பெங்களூருக்கு வரும் மூன்று சொந்தக்காரப் பசங்களோட வாழ்க்கைதான் திரையில நிரம்பி வழியும் காட்சிகள். இன்னும் சொல்லப் போனா படத்துல எதுவுமே புதுசில்ல. எல்லாக் காட்சிகளுமே ஒவ்வொரு படங்கள்ள பாத்ததுதான். அதை ஒழுங்கான திரைக்கதையாக்குனதுல கெடச்சதுதான் இந்தப் படத்தோட வெற்றி.

அப்பாவியான ஊர்ப்புற மலையாளியாய் “சேட்டா”ன்னு கூப்பிடுற மனைவி வேணும்னு விரும்புற மென்பொருளாளன் குட்டன் (நிவின்)
பைக்குல சுத்துறது சொவத்துல கிறுக்குறதுன்னு பொறுப்பில்லாம திரியும் அர்ஜுன் (துல்கர் சல்மான்)
பாதி மலையாளமும் பாதி ஆங்கிலமும் கலந்தடிச்சு பெரிய பெரிய ஆசைகளை வெச்சிருக்கும் துள்ளல் குஞ்ஞு/திவ்யா (நஸ்ரியா நசீம்)
பழைய காதலிய மனசுல வெச்சுக்கிட்டே திவ்யாவைத் திருமணம் செஞ்சுக்கிட்டு ஒழுங்கா வாழாத கடுகடுப்பு தாஸ்(பஹத் பாசில்)
காதலையும் காமத்தையும் பிரிச்சுப் புரிஞ்சிக்க முடியாம நினைச்சது போல நடத்தும் மீனாஷி(இஷா தல்வார்)
ஆங்கில ரேடியோவில் RJ ஆக துள்ளலுடன் இருக்கும் சாரா(பூ பார்வதி)வும் அவளுடைய மறுபக்கமும்
ரேஸ் பிரியனான காதலனோடு துள்ளலும் கொண்டாட்டமுமாய் வாழ்ந்த நடாஷா(நித்யா மேனன்)
குட்டனின் அம்மாவும் புதுமைவிரும்பியுமான தொணதொண கல்பனா
நடாஷாவைப் பெத்தவங்களா வரும் சோக பிரதாப் போத்தனும் வினயா பிரசாத்தும்
தன்னோட மகளான சாராவுக்கு மட்டுமே நல்லது விரும்பும், ஆனா எது அவளுக்கு நல்லதுன்னு புரியாத தாயா வரும் ரேகா
தாஸ் பாப்பா தாஸ் பாப்பான்னு தாஸ் மேல் பாசத்தோடு திவ்யாவை வெறுத்து மூதேவின்னு திட்டும் தமிழ் வேலைக்காரி (வேலைக்காரியாகத் தமிழ் பாத்திரத்தை வைத்தது நெருடல்தான்)

இவங்க எல்லாரும் மிக இயல்பா வாழ்ந்த வாழ்க்கையைக் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ரசிக்கலாம். பெரிய படமான்னு கேக்கலாம். பிட்சா சாப்பிட பத்து நிமிசம் போதும். எலை போட்டு உப்பு இனிப்புன்னு தொடங்கி அஞ்சு வகை கூட்டு வெச்சு பருப்பு, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், பாயாசம், தயிர்னு கலந்து கட்டி அடிக்க நேரம் பிடிக்கும்ல. அதுதான் இங்கயும்.

பெங்களூரை ரொம்ப அழகாக் காட்டியிருக்காங்க. ஆனா படத்துல வர்ர மாதிரி பெங்களூர் இப்ப இல்லைங்குறதுதான் உண்மை. காயப்போட்ட துணி காயவே மாட்டேங்குதேன்னு நான் செல்லமா அலுத்துக்கிட்ட இருபதாம் நூற்றாண்டு பெங்களூருக்கும் நேரம் எழுதி வெச்சு அப்பார்மெண்டில் தண்ணி விடும் இருப்பத்தொன்னாம் நூற்றாண்டு பெங்களூருக்கும் நெறைய வேறுபாடுகள்.

பாட்டெல்லாம் நல்லாருக்கு. அதுலயும் ஒரு பாட்ட நஸ்ரியாவே பாடியிருக்குறது அழகு. கோபி சுந்தர் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் மாதிரி எறங்கி அடிச்சிருக்காரு. தூணைப் பிடிச்சிக்கிட்டு தரவாட்டில் குளக்கரையில் ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளி விட்டுவிட்டுப் பாடுற மலையாளப் பாட்டெல்லாம் காணமப் போயிருச்சு. ஏது கரி ராவிலும்னு ஹரிசரண் பாடுன பாட்டு எனக்குப் பிடிச்சிருக்கு.

நான் விமர்சனத்துல கதையெல்லாம் சொல்லல. அது ஒங்களுக்குப் படத்தைச் சரியா அறிமுகப் படுத்தி நீங்க பாக்கும் போதும் ரசிக்க வைக்கிறதுக்காகத்தான்.

நேர்மறையான ஏக்கங்களை உண்டாக்கும் பெங்களூர் நாட்கள் கண்டிப்பா பாக்க வேண்டிய படம்னு சொல்லி இந்த விமர்சனத்த இங்க இப்ப முடிச்சிக்கிறேன். 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , , . Bookmark the permalink.

2 Responses to பேங்களூர் டேஸ்

  1. amas32 says:

    ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ஜிரா. மென்மையான அந்தப் படத்தைப் போலவே மென்மையா இருக்கு உங்க விமர்சனம். எனக்குத் திரும்ப அந்தப் படத்தையே பார்த்தா மாதிரி இருக்கு, very nice 🙂

    amas32

  2. Kaarthik Arul says:

    A feel good Movie with an ensemble star cast. I was expecting this film not only for the ensemble star cast, but for Anjali Menon. More than her script in Ustad Hotel I liked her directorial debut Manjadikkuru a lot. Do watch it when you get time. If Bangalore Days deals with 3 cousins in a City, Manjadikkuru captured the moments of 3 kids (cousins) during their vacation in a village.

    Personally I liked the portions of Dulquer and Parvathy. Dulquer is emerging as a wonderful actor. I felt Nithya Menen’s should have been given some more screen space in an otherwise long movie.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s