ஜீவாவுக்கு ஒரு தாமதமான விமர்சனம்

jeeva-movie-super-hit-songs-posterஇப்பல்லாம் படம் வந்ததும் பாக்க முடியுறதில்ல. ரெண்டு வாரம் ஆனாத்தான் போகவே முடியுது. அதுலவொரு வசதி படம் நல்ல படமான்னு உறுதியாத் தெரிஞ்சிக்கிட்டுப் பாக்க முடியுது.

அப்படிப் பாத்ததுதான் ஜீவா. பொதுவாவே சுதீந்திரன் படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுல ஒரு இயல்பான ஓட்டம் இருக்கும். ஊகிக்க முடியுற ஓட்டம்னு சிலர் சொல்வாங்க. ஆனாலும் இயல்புத்தன்மை அப்படியே கட்டிப் போட்டுரும்.

ஜீவாவும் அப்படிக் கட்டிப் போட்ட படந்தான். எனக்குப் பிடிச்சிருந்தது.

சார்லியை நம்ம எவ்வளவு வீணாக்கியிருக்கோம்னு இந்தப் படம் பாக்குறப்பதான் தெரியுது. ஒரு அருமையான குணச்சித்திர நடிகரைப் பயன்படுத்தாம அவமானப்படுத்தியிருக்கோம். வெற்றிக் கொடி கட்டுக்குப் பிறகு இதுதான் சார்லிக்கு அடுத்த நல்ல படம்.

ஜீவாவை பேட் வாங்கிக் கொடுக்கக் கூட்டிட்டுப் போறப்பவும்… ஜீவாவோட அப்பா எடுத்தெறிஞ்சு பேசுறப்பவும்.. அட.. ஒவ்வொரு காட்சியிலும் சார்லி சிக்சர் அடிச்சிருக்காரு.

என்னடா .. நாயகன் நாயகியை விட்டு குணச்சித்திர நடிகரைப் பத்தி பேசுறேன்னு பாக்குறீங்களா? சார்லிக்கு இந்த மாதிரி பாராட்டி எழுது அடுத்த படம் எப்ப வருமோ! அதான்.

அடுத்து ஸ்ரீதிவ்யா. ஒரே பொண்ணு பள்ளிக்கூடப் பொண்ணாவும் காலேஷ் பொண்ணாவும் ஐடில வேலை பாக்குற பொண்ணாவும்… நல்ல பொருத்தம். நல்ல நடிப்பு. சின்ன வயசுதான். ஒழுங்கா நல்ல பேர் வாங்கி நல்ல படமாப் பாத்து நடிச்சா நல்ல எதிர்காலம் இருக்கு. நெறைய செலவு வைக்கிறதாப் பேச்சு வருதே.

ரொம்ப நாளைக்கு அப்புறம் சூரி சுமாரா சிரிக்க வைக்கிறாரு. சில இடங்கள்ள மொக்கையா இருந்தாலும்….. டயலாக் டெலிவரி முன்னேறியிருக்கு. கிரிக்கெட் விளையாட்டு வீரர் பாத்திரத்துக்கு ஏத்த உச்சரிப்பு வந்திருந்தா நால்லாயிருந்திருக்கும்.

விஷ்ணுதான் படத்தோட ஹீரோ. பள்ளிக்கூட மாணவனாப் பாக்கப் பொருந்தலை. உப்பிய கன்னம், முரட்டுத் தோல், அதீத வளர்ச்சின்னு பொருந்தாம இருந்தாலும் போகப்போக பொருந்தி வர்ராரு. கிரிக்கெட் பேட் கைக்கு வந்த பிறகு கிரிக்கெட் வீரராவே மாறியிருக்காரு. சுசீந்திரன் கேக்கும் அளவான நடிப்பு. முண்டாசுப்பட்டி மாதிரி இதுல மொக்க போடல. பேர விஷ்ணு விஷால்னு மாத்திக்கிட்டிங்க போல. ஒங்க ஒரிஜினல் பேரு விஷால் குடாவாலா தான?

லக்‌ஷ்மண்.. இவருக்கு அன்னக்கொடி தான் மொதல் படம். ஆனா யோசிக்காம ஜீவாதான் மொதப்படம்னு சொல்லிக்கலாம். கொஞ்சம் நடிச்சிருக்காரு. உச்சரிப்புல கொதறினாலும் மன்னிச்சிறலாம். அதுலயும் பார்த்தசாரதி கிட்ட பேசும் காட்சிகள் அருமை.

இமான் அண்ணாச்சி… பாட்டெல்லாம் ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கு. பின்னணி இசையெல்லாம் ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கு. எம்.எஸ்.வி, ராஜா, சங்கர் கணேஷ்னு கலந்து கட்டி பழைய பாட்டெல்லாம் நெறைய கேக்குறீங்களோ?

ஒரேயொரு பாடல்தான் நல்ல வரிகளோட இருந்ததுன்னு என் கருத்து. பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன்னு போட்டிருந்தது. எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கும் பாட்டு யார் எழுதுனான்னு வீட்டுக்கு வந்து இணையத்துல தேடினேன். கவிப்பேரரசு வைரமுத்துன்னு போட்டிருந்தது.

என்ன மறந்தேன் என்னை மறந்தேன்னு விக்ரம் பிரபுவோட பாட்டுப் பாடிய சுரபிய ஒரேயொரு காட்சிக்காக வீணாக்கியிருக்கீங்களே சுசீந்திரன் சார். இதெல்லாம் தப்பு.

படத்தோட கதை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்னா ஏதோ அரசாங்க அமைப்புன்னு ரொம்பப் பேர் நெனச்சிக்கிறாங்க. BCCIங்குறதே ஒரு தனியார் அமைப்பு. நாட்டுக்காக கிரிக்கெட் வெளையாடுறாங்கன்னு சொல்றது எவ்வளவு பெரிய நகைச்சுவைன்னு எனக்குச் சமீபத்துலதான் புரிஞ்சது. ஒரு தனியார் நிறுவனத்துக்காகதான் கிரிக்கெட் விளையாண்டு சம்பளம் வாங்குறாங்க இந்தக் கிரிக்கெட் தெய்வங்கள்.

தனியார் நிறுவனத்துல இருக்கும் எல்லா ஊழலும் தவறுகளும் கிரிக்கெட் சங்கத்துலயும் இருக்கு. முதுகைத் தடவிப்பாத்து ஜாதி பாக்குறாங்கன்னு சொல்றத ஆட்சேபிக்கிறாங்க சிலர். உங்க எண்ணம் புரியுது. நீங்க நல்லவங்க. அப்படிப் பாக்குறவங்க இல்ல. ஆனா சிலர் பாக்கதான் செய்றாங்க. ஐடி இண்டஸ்டிரியேலே எனக்கு இந்த அனுபவம் உண்டு. அதுவரைக்கும் தமிழ்ல பேசிய மேனேஜர் அதுக்கப்புறம் முழுக்க முழுக்க ஆங்கிலத்துக்கு மாறுன காமெடியெல்லாம் நடந்திருக்கு. இது நான் வேலைக்குச் சேந்து இரண்டாம் வருடம் நடந்துச்சு. இது ஒரு அனுபவம் நான் சொல்றது. சொல்லாதது எவ்வளவோ இருக்கு. அதெதுக்கு இப்ப.

அனுபவிச்சவங்க எரிச்சல் மத்தவங்களுக்குப் புரியாது. இதெல்லாம் போதாதுன்னு இன்னொரு காமெடி. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு அலுவலகத்துல ஒருத்தர் என் நண்பன் கிட்ட “இவரு சேடா இருந்துக்கிட்டு எவ்வளவு நல்லாத் தமிழ் பேசுறாரு”ன்னு சொல்லிருக்காரு. கேட்டுட்டு விழுந்து விழுந்து சிரிச்சிருக்கான் அவன். இதுல பாருங்க.. என்னோட இன்னொரு நண்பன் மார்வாடி. ஆனா அட்டகாசமாத் தமிழ் பேசுவான். சென்னைல படிச்சு வளந்தவன்.

எல்லா இடத்துலயும் இந்தப் பிரச்சனைகள் இருக்கு. நம்ம அடுத்தவங்க பண்ற தப்பச் சொல்லிக் காட்டாமலா இருக்கோம். அது மாதிரிதான் இதையும் எடுத்துக்கனும். யோசிச்சுப் பாத்தா தமிழ்நாட்டு டீம் ரொம்ப காலமா டொக்காத்தான் இருக்கு. அதை எப்படி முன்னேத்தப் போறாங்கன்னு தெரியல. முன்னேறும்னு தோணலை. முன்னேறித்தான் ஆகனுமான்னும் தெரியல.

என்னைக் கேட்டா உண்மையிலேயே நாட்டுக்காக விளையாடும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு நல்லது நடந்தா பெருமைப்படுவேன்.

மொத்தத்துல சொன்னா… ஜீவா படம் எனக்குப் பிடிச்சிருந்தது. சுசீந்திரன் உங்கள் இயல்பான கதைப் போக்கையும் பாத்திரங்களையும் மிகவும் ரசிச்சேன்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம். Bookmark the permalink.

One Response to ஜீவாவுக்கு ஒரு தாமதமான விமர்சனம்

  1. yarlpavanan says:

    சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s