பூஜைக்கு வந்த மலர்

படம் வந்து ரெண்டு வாரமாச்சு. போகாம தப்பிச்சிக்கிட்டிருந்த நேரத்துல விதி கழுத்தப் பிடிச்சுத் தள்ளுச்சு. நீதிபதி ரத்னமாலா கிட்ட ஜாமீன் கெடச்சிறும்னு நம்பி கோர்ட்டுக்குப் போற அரசியல்வாதி மாதிரிதான் போனேன்.

கொஞ்சம் நேரமாயிருச்சு.. தியேட்டருக்குள்ள நுழையுறப்போ ஓஓஓஓஓஓம் நமோ நாராயணாய நமகன்னு தசாவதாரப் பாட்டோட ஸ்ருதி அறிமுகக் காட்சி.

அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னே தெரியாம படம் முடிஞ்சப்பதான் முழு உணர்வும் திரும்ப வந்தது. வெளிய வரும் போது லிப்டுல தொணதொணன்னு பேசிக்கிட்டே வந்த ரெண்டு ஆட்கள பளார்னு அறஞ்சு, ரெண்டு கையால தூக்கி வீசி நழுக்குன்னு மிதிக்கனும் போல இருந்துச்சு. கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கிட்டு வீட்டுக்கு வந்தேன்.

போன படத்துல வில்லன்களை தூத்துக்குடில தூக்கிப் போட்டு மிதிச்ச ஹரி இந்த வாட்டி கோயமுத்தூர்ல குமுறியிருக்காரு. பொள்ளாச்சியில பொறட்டியெடுத்துருக்காரு. அதுக்குத் தோதா ஒயரமா விஷால். என்னதான் திங்கு திங்குன்னு குதிச்சு ஆடுனாலும் மாங்கு மாங்குன்னு வில்லன்கள மாத்து வாங்குனாலும் கண்ணுல ஒரு களைப்பு தெரியுதே. அப்பப்ப ஓய்வு எடுத்துக்கோங்க. மத்தபடி பாத்திரத்துக்கு என்ன தேவையோ அதைச் சரியா செஞ்சிருக்காரு விஷால்.

ஸ்ருதி குரலைத்தான் ரொம்பப் பேர் கிண்டல் பண்ணிருந்தாங்க. அவங்களுக்கு கண்ணு சரியா வேலை செய்யலைன்னு நெனைக்கிறேன். வாசு வாசுன்னு ஸ்ருதி படம் முழுக்க கூப்டுட்டேயிருந்தது இன்னும் காதுல இருக்கு. அதே போல ஸ்ருதியின் இடது காதுக்குப் பின்னாடி இருக்கும் மியூசிக்கல் நோட் டேட்டூ ரொம்பவே அழகு. இந்தப் படத்தைக் கமல் பாத்தாரான்னு கேக்கனும். ஸ்ருதிக்குத் தமிழ்ல இன்னும் நெறைய படங்கள் கிடைக்கட்டும்.

சூரியோட காமெடி இந்தப் படத்துல கொஞ்சம் முன்னேறியிருக்கு. அசிங்கப்பட்ட பிறகு ஒன்னுமே நடக்காத மாதிரி வந்து குசலம் விசாரிக்கிறதெல்லாம் நல்லாயிருந்தது. இமான் அண்ணாச்சியையும் பாண்டியையும் சேத்துக்கிட்டு கவுண்டமணி செந்தில் பாணியில பண்ணுன காமெடியும் நல்லாருந்தது.

படத்துல எத்தன பேரு… அத்தன பேருக்கும் குறைஞ்சது ஒரு முக்கியமான சீன் இருக்கு. வில்லனோட அடியாளா வர்ரவனுக்கும் ஒரு முக்கிய காட்சி. வில்லனோட வாத்தியாருக்கும் ஒரு முக்கிய காட்சி. படம் பாக்குறவங்களுக்கு எல்லாமே முக்கிய காட்சிகள் தான். அவ்வளவு முக்கல். ஆனா நோ முனகல். ஏன்னா ஹீரோ கிட்ட அடி வாங்குன பிறகு யாரும் முனகக் கூட இல்ல. ஒரேடியா ஆள் காலி.

படத்துல சத்தியராஜும் இருக்காரு. நல்ல பாத்திரப் படைப்புதான். இன்னும் கொஞ்சம் நல்லா மெருகேத்திருக்கலாம் ஹரி. அதுலயும் “செத்த பொணத்தச் சுட வெச்சிட்டியே”ன்னு நக்கல் விடுறது நச் நச்.

சிங்கத்தை தென்னாபிரிக்கா அனுப்பிய ஹரி, இந்தப் படத்துல விஷாலை பாட்னாவுக்கு அனுப்புறாரு சண்டை போட. வழக்கம் போல தனியாளாப் போய் வில்லனோட மொத்தக் கூட்டத்தையும் அழிச்சி ஒழிச்சி வெற்றியோட திரும்பி வர்ராரு. சரி. I always like happy ending. அதுனால சரியாப் போச்சு. படத்துல பாட்னாவுல இருந்து நரேஷ்னு ஒரு பையன் வர்ரான். அடுத்த தமிழ்ப் படங்கள்ள வில்லனா நடிக்கச் சரியா இருப்பாருன்னு நெனைக்கிறேன். டைரடக்கர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

படத்துல பாடல் காட்சியெல்லாம் அவ்வளவு அழகாப் படமாக்கியிருக்காங்க. ஆனா அதுக்கேத்த மாதிரி பாடல்கள் இல்ல. ஒரே சொதப்பல். தசாவதாரத்துல வரும் கல்லை மட்டும் கண்டால் பாட்டையெல்லாம் அப்படியே சுட்டிருக்காங்க. இசை யாருன்னு பாத்தா யுவன் சங்கர் ராஜா. இதுக்குப் பேசமா தேவிஸ்ரீ பிரசாத்தையே கூப்டிருக்கலாம்.

நா.முத்துக்குமாருக்கும் முடிஞ்ச நியாயத்தைச் செஞ்சிருக்காரு. ”அட்ராசிட்டி லூட்டி அப்புறம் அவுந்து கெடக்கும் வேட்டி”ன்னு எழுதீட்டு அடுத்த வரியிலேயே “மருதமல முருகனுக்குத் தத்துப் பிள்ளடா”ன்னு எழுதீட்டாரு. இப்ப வர்ர படத்துல இதெல்லாம் சகஜமப்பா.

மொத்தத்துல இன்னொரு ஹரி படம். படம் ஓரளவு வெற்றின்னுதான் நெனைக்கிறேன். ஆனா இன்னொரு படம் இதே பார்முலாவுல வேண்டாம் ஹரி. கொஞ்சம் வித்யாசமா யோசிங்க. இதே விறுவிறுப்பு இருக்கட்டும். ஆனா கதைய மாத்துங்க.

இடைவேளைல படத்தோட விமர்சனத்த அனுப்புங்கன்னு விஷால் கேக்குறாரு. அவர் சொன்ன இணைய முகவரி மறந்து போச்சு. நினைவிருக்குறவங்க இந்த விமர்சனத்தை அவருக்கு அனுப்பிருங்க.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s