வாங்க மக்கா வாங்க

காவியத்தலைவன் ஒரு குடும்பப் படம். ஆமா. திடீர்னு குஷ்பு டெல்லிக்குப் போய் எல்லாரோடயும் வரிசையா நின்னுக்கிட்டு போஸ் குடுத்த மாதிரி… திருவான்மியூர் எஸ்2 தியாகராஜால ஒரு வரிசை முழுக்க ஒரே குடும்பத்தாளுங்க உக்காந்து பாத்தா குடும்பப் படந்தானே? 🙂

kaaviya-thalaivan-movie-stills12படம் வந்து ரெண்டு நாள் கழிச்சு பாக்கப் போறதுக்குள்ள டிவிட்டர்லயும் பிளாகுலயும் படத்தப் பத்தி எவ்வளவு சண்டைகள். ஆனாலும் எந்த விமர்சனமும் படிக்காமப் போய் படம் பாத்தேன்.

எழுத்து போடும் முன்னாடி நன்றி போடுறப்போ தமிழ் வளர்த்த பெரியவங்களுக்கு நன்றி போடுறாங்க. அட்டகாசம். அதுல ஒரேயொரு திருத்தம் செஞ்சிருக்கலாம். சூரிய நாராயணார்னு சாஸ்திரியை விட்டுட்டுப் பேர் போட்டது சரி. ஆனா அவரே பேரைப் பரிதிமாற்கலைஞர்னு மாத்தி வெச்சிக்கிட்டாரே. அந்தப் பேரையே போட்டிருக்கலாமே. ஒருவேள இது வேற சூரியநாராயணாரோ?

எழுத்து போடும் போது தொடங்கும் ரகுமானின் இசைச் சாகசம் படம் முடியுற வரைக்கும் தொடருது. இந்தப் படத்துக்கு இசையமைச்சதுக்கு ரகுமான் காலரைத் தூக்கிவிட்டுக்கலாம். அந்த ஈரானிய இயக்குனருக்கு துணிச்சலாப் படத்தப் போட்டுக்காட்டுங்க சார். பின்னணி இசையெல்லாம் அருமை. அதுலயும் திருப்புகழ் இசையை வேதிகாவின் காதலுக்குப் பயன்படுத்தியிருக்கும் அட்டகாசம்… இறுதிக்காட்சியின் இசை. படம் முழுக்க காட்சிகளை அமுக்காத அழகான அளவான இசை. மிகமிக இரசித்தேன்.

மொத்தத்துல படத்த ரொம்பவே ரசிச்சேன். எனக்குப் படம் பிடிச்சிருந்தது. என்னென்ன ஏதெதுன்னு தொடர்ந்து பாக்கலாம்.

திருப்புகழை எல்லாம் சினிமால பயன்படுத்துவாங்களான்னு கேக்குற காலம் இது. எழுத்து போடுறப்போ பாடல்கள் அருட்தொண்டர் அருணகிரிநாதர்னு முதல் பேராப் போட்டு வாணி ஜெயராமைப் பாடவெச்சு… கை குடுங்க வசந்தபாலன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எம்.எஸ்.வி காலத்தோட போச்சுன்னு நெனச்ச ஒரு நிகழ்வை மீண்டும் கொண்டு வந்திருக்கீங்க. திருப்புகழ் பாட்டைத் திரையில் பாக்கும் போது கண்ணுல தண்ணி நிக்காமக் கொட்டுச்சு. அந்தப் பரவசத்தையெல்லாம் விளக்க முடியாது. உச்சநீதிமன்றத்துல ஜாமீன் கெடைச்ச மாதிரியான பரவசம் அது. ரகுமான் சார்.. ஒங்களுக்கும் ஒரு பெரிய வணக்கம்.

வேதிகாவோட முகபாவங்களும் ஆடலும் அம்சமோ அம்சம். கானகோகிலம் வடிவாம்பாளா மிகப் பொருத்தம். இன்னுமாய்யா இந்தப் பொண்ணச் சரியாப் பயன்படுத்தாம விட்டுவெச்சிருக்கீங்க? வெறும் சாயத் தாவணி கட்டிக்கிட்டு வந்தாலும் சரி… வானவில் மாதிரி நிறநிறமா கட்டிக்கிட்டு வரும் போதும் சரி… என்ன அழகு! என்ன அழகு! அதுலயும் குறிப்பா யாருமில்லாத் தனியரங்கில் பாட்டுல… செம. அந்தச் சேலையும் அதன் மடிப்புகளும் இன்னும் கண்ணுல இருக்கு.

பிருத்விராஜ்… எல்லாம் சரியாயிருந்தும் எல்லார் கிட்டயும் அடிவாங்குற வைகோ மாதிரியான பாத்திரம் ஒங்களுக்கு. நல்லாவே நடிக்கிறீங்க. ஆளும் ஓங்குதாங்கா இருக்கீங்க. ளகரத்தை மட்டும் சரியா உச்சரிச்சீங்கன்னா பிரமாதமா இருக்கும். ழகரம் வர்ர வாய்ல ளகரம் வரமாட்டேங்குதே! ஏன்? ஏசுதாசுக்கும் இதே பிரச்சனைதான். மத்தபடி அடிப்பொளி சாரே.

உங்களோட விதவிதமான முகபாவங்கள் பிரமாதம். சூரனா வசனம் பேசுன பெருமை, தேர்வாகாத சிறுமை, சித்தார்த் மேல பொறாமை, வேதிகாவின் மேல் காதல் வரும் இனிமை, சித்தார்த் மேல் உண்டாகும் வெறுப்பு, கான கலாதர கோமதிநாயகம் பிள்ளையா வரும் பெருமை… அடுக்கிக்கிட்டே போலாம். நவரசங்களையும் ஈயச் சொம்புல காச்சுல ரசம் மாதிரி நயமா காட்டியிருக்கீங்க.

சித்தார்த்… ஒங்களைப் பொருத்த வரைக்கும் காளிதாச பாகவதர் பாத்திரம் குருவி தலைப் பலாக்காய் தான். என்ன முடியுமோ அதைச் செஞ்சிருக்கீங்க. ஆடும்போது கொஞ்சம் நளினம் கூடுதலாத் தெரியுது. கொறைச்சுகிட்டா நல்லாருக்கும். கதைப்படி நீங்க பிருத்விராஜை விட நல்லா நடிக்க வேண்டிய பாத்திரம். ஆனா அவர்தான் நல்லா நடிச்சாருன்னு தெளிவாத் தெரியுது. கர்ணமோட்சத்துல அவ்வளவு பாடி ஆடி குதிச்சு பாத்தவங்களை அழ வெச்சதெல்லாம் சரிதான். அது முடிஞ்சதும் பிருத்விராஜ் எரிச்சல கண்ணுலயே காட்டீட்டுப் போயிருவாரு. அதுதான் கதைல சிவதாச சுவாமிகள் சொல்லும் மனோதர்மம்.

ஆனா சித்தார்த்… ஒரு காட்சி ஒங்க காட்சிதான். ரொம்பவே அட்டகாசமான அள்ளும் நடிப்பு. எதுன்னு தெரியலையா? குருவுக்கே சாபம் விடும் காட்சியைத்தான் சொல்றேன். நல்ல காப்பி ஒரு வாய் சாப்டாலே தித்திப்பு நாக்கில் இருக்கும். அது மாதிரியான நடிப்பு. ஒங்க பிரச்சனையே நீங்க பாக்க சின்னப் பையன் போல இருக்குறதுதான். கொஞ்சம் ஆம்பளை லுக் வேணும் பாஸ். எதாச்சும் பண்ணுங்க.

ஜமீந்தார் மகளாக அனைக்கா சோட்டி. தமிழ்நாட்டுக்குத் தேறாதுன்னு நெனைக்கிறேன். இன்னும் ரொம்பவே முன்னேறனும். சோகக் காட்சியில மட்டும் நடிப்பு நல்லாருக்கு.

சிவதாச சுவாமிகளா நாசரோட நடிப்பும் அருமை. அதிலும் விடிய விடிய காத்திருந்து பேசும் காட்சி. பேச்சு வராமல் வாய் குழறும் காட்சி. எல்லாமே நல்ல நடிப்பு. பொன்வண்ணனுக்கு லட்டு மாதிரி பாத்திரம். கெடைச்ச வாய்ப்புல அதகளம். தம்பி இராமையாவுக்கு அல்லக்கை பாத்திரம். மிகப் பொருத்தம். சிங்கம்புலி குயிலின்னு சின்னச் சின்ன பாத்திரங்கள். நிறைவான நடிப்பு.

சில நடிகர்கள் ரெண்டு மூனு காட்சிகள்ள வருவாங்க. ஆனா படத்துல அவங்கதான் முக்கியப் பாத்திரம் போல அழுத்தத்தைக் கொடுத்துட்டுப் போயிருவாங்க. வழக்கமா மயில்சாமி, சார்லி வகையறாக்கள் பண்ற வேலை அது. இந்தப் படத்துல அந்த வேலைய மன்சூர் அலிகான் பண்ணிருக்காரு. நல்ல நடிப்பு.

ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியே ஆகனும். சித்தார்த்தும் வேதிகாவும் வர்ர காட்சிகள்ள வேதிகாதான் நடிப்பில் பளிச் பளிச். பிருத்திவிராஜும் வேதிகாவும் சேந்து வர்ர காட்சிகள்ளதான் நடிப்புப் போர் தெரியுது. அதுலயும் அந்த ஒப்பனையறைக் காட்சி. வேதிகா முன்னாடியிருக்கும் கண்ணாடியில் பிருத்திவிராஜ் தெரியுறதையும் பிருத்திவிராஜ் முன்னாடியிருக்கும் கண்ணாடியில் வேதிகா தெரியுறதையும் எத்தனை பேர் கவனிச்சாங்கன்னு தெரியல. மங்கல்யான் செவ்வாய்ல எறங்குற மாதிரியான காட்சி அது.

கொஞ்சம் தப்பினாலும் எங்கையாவது ஒரு மூலைல டிரான்ஸ்பார்மரோ எலக்ட்ரிக் லைனோ கண்ணுல பட்டு… ஒரே அடியில் உயிரை விட்ட பிலிப் ஹியூஸ் மாதிரி படமும் ஒடே அடியில் படுத்திருக்கும். அப்படியெல்லாம் ஆகாம காட்சிகளை அழகா அமைச்சிருக்காங்க. நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு பளிச் பளிச்.

விமர்சனம்னா கொறையையும் சொல்லனும்ல. அதத்தான் இப்பப் பாக்கப் போறோம்.

சுதந்திரப் போராட்டக் காலகட்டக் காட்சிகள்ள அழுத்தம் தேவை. அந்த எடத்துல கதையைக் கொஞ்சம் விறுவிறுப்பாக்கியிருந்தா படம் பின்னியிருக்கும்.

ஜெமோ வசனங்கள் சில எடங்கள்ள சுருக்குன்னு இருக்கு. ஆனா படம் முழுக்க அந்த சுருக்கைக் கொண்டு வந்திருக்கலாம். என்னாச்சு சார்?

படம் அந்தக் காலத்துல நடக்குற மாதிரி இயல்பா இல்லன்னு ஒரு விமர்சனம் இருக்கு. உண்மைதான். கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கு. ஆனா இந்தப் மாதிரிப் படங்களை ரொம்பவே இயல்பா எடுத்தா தமிழன் பாப்பானா? இந்தப் படத்துலயே தமிழனுக்கு போர் அடிச்சிரும்னு நாடகக் காட்சிகளை நறுக்கி நறுக்கிக் கொறைச்சிருக்காங்க. அதுக்கே தியேட்டர்ல ஒரு கூட்டம் விசிலும் கிண்டலும். இவங்கள்ளாம் இயல்பா எடுத்தா பாத்திருவாங்களா? விமர்சனம் பண்ணனும்னு பண்ணக்கூடாது.

இன்னும் சிலர் ஒரு படி மேல போயி… அவங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர் இசையமைக்காததால படம் ஓடவே கூடாதுன்னு வேண்டாத தெய்வம் இல்ல. ஒங்களையெல்லாம் நம்பித் தமிழ்ப் படம் எடுத்து…… போங்கய்யா நீங்களும் ஒங்க நேர்மையும்.

இன்னைக்குத் தமிழ் சினிமா இருக்குற சூழ்நிலைல நாலு கொரியன் படமும் அஞ்சு ஈரானியப் படமும் பாத்து சினிமா எடுக்காம…. கொஞ்சமாவது முயற்சி பண்ணி வித்தியாசமா படம் எடுக்கனும்னு நெனச்ச காரணத்துக்காகவே இந்த முயற்சிகளை வரவேற்க வேண்டாமா?

இந்த மாதிரி முயற்சிகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தாட்டி ஒங்களுக்கெல்லாம் ஒலக சினிமால திருடுன சினிமாதான் கெடைக்கும். இந்தப் படத்துல வந்து அது சொத்தை இது சொள்ளைன்னு விமர்சனம் பண்றவங்கள்ளாம் நூத்துக்கு நூறு இயல்பான சினிமாவா பாக்குறீங்க? இந்த மாதிரிப் படங்களை ஊக்கப்படுத்துனா… அடுத்தடுத்து யாராச்சும் இன்னும் சிறப்பா எடுக்க முயற்சி செய்வாங்க. அடிவேர்லயே வென்னீர் ஊத்துற மாதிரி நடந்துக்கிட்டா சுப்பிரமணிய சுவாமி ராஜபக்‌ஷே நாடகத்தனத்தோடதான் படங்கள் வரும்.

அடப் போங்கய்ய்யா! மசாலா விழுங்கிகளா!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம். Bookmark the permalink.

10 Responses to வாங்க மக்கா வாங்க

 1. N. Shekar says:

  GiRa

  A genuine, fantastic review. This must be seen by Vasanthabalan. You have thoroughly enjoyed the movie as can be seen from your enumeration of various points. Awesome. These kind of movies must be appreciated and made successful for others to have courage to such movies. Another thing – there are no fight scenes. You have spoken as a true lover of cinema and cine music and most importantly as a Tamil lover. Great job.

  Shekar

 2. amas32 says:

  ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜிரா 🙂 நீங்க இங்கே சொல்லியிருக்கிற அத்தனை பாயிண்டுகளும் உண்மை. இந்த மாதிரி படங்கள் புது முயற்சிக்காகவேப் பாராட்டப் படவேண்டியவை. மேலும் படத்தில் பின்னணி இசை நன்றாக இருந்தது. அதை நான் என் விமர்சனத்தில் சொல்லத் தவறிவிட்டேன். நீங்கள் கவனித்துக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

  amas32

  • GiRa ஜிரா says:

   விமர்சனம்னாலே நீங்கதான். அதுனாலதான படம் பாத்துட்டு ஒங்க விமர்சனம் படிச்சேன் 🙂

 3. Venky says:

  Fantastic review. Appreciated telling more about Prithviraj. Another music director for this movie, wouldnt make a difference!

 4. Shun mugam says:

  ப்ருத்விராஜ் எவ்ளோ கத்தி பேசினாலும் மலையாளம் வாடை தான் அடிக்குது. அதுவும் தமிழ் நாடகத்தில் #கொடுமை

 5. எங்கூர்லே தியேட்டரில் ஒரு ஷோ போடப்போறாங்க. தமிழ்சங்கத்தின் கைங்கர்யம். அன்னிக்கு நம்மூர் சாண்ட்டாபரேடு இருக்கு என்பதால் போலாமா வேணாமான்னு ரோசனை:(

  நல்லாத்தான் பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க!

  • GiRa ஜிரா says:

   போயிட்டு வாங்க டீச்சர். சாண்டா ஆண்டாண்டு காலமா வர்ராரு. இனிமே இந்த மாதிரியான படம் எடுக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s