pk – சூப்பர் பாடம்

PKஎத்தனையோ படங்கள் பாக்குறோம். சில படங்கள்தான் மனசுக்குள்ள சோபா போட்டுச் சொகுசா உக்காருது. அப்படி உக்காந்த சமீபத்தைய படம் pk.

கடவுள் நம்மைக் காப்பாத்துவார்னு நெனைக்கிறீங்களா?
கடவுளை நம்மதான் காப்பாத்தனும்னு நெனைக்கிறீங்களா?
கடவுளே இல்லைன்னு நெனைக்கிறீங்களா?

அப்ப நீங்க இந்தப் பதிவையும் படிக்கனும். படத்தையும் கண்டிப்பாப் பாக்கனும்.

கடவுள் எங்க இருக்காரு? நம்ம சொல்றது அவர் காதுல விழுந்ததா? இந்தக் கேள்வி உலகத்துல ரொம்பப் பேரு மனசுல தோணியிருக்கும். அவ்வளவு சேவை செஞ்ச அன்னை தெரசாவுக்கே இந்த சஞ்சலம் எழுந்துச்சுன்னு எழுதியிருக்காராம்.

அதெல்லாம் சரி. இந்தக் கேள்விக்குப் பதில் உண்மையிலேயே இருக்கா? அந்தக் கடவுள் வந்துதான் பதில் சொல்லனும். அந்தக் கடவுள் கிட்ட எப்படிக் கேக்குறது?

உருவங்கள் மாறலாம் படத்துல ஒரு அழகான வசனம் வரும். “There is no need of mediator between me and my maker.”

இதை எப்படி எளிமையாச் சொல்லிப் புரிய வைக்கிறது? அதுதான் pk திரைப்படம்.

அமீர்கான்…. இது ஒங்க படம். கடைசியா நீங்க நடிச்சு நான் பாத்த படம் 3 இடியட்ஸ். அதுக்கப்புறம் இதுதான். அருமையான நடிப்பு. எதைப் பாராட்டி எழுதுறதுன்னு எனக்குத் தெரியல. அந்த அளவுக்குப் படம் முழுக்க உங்க நடிப்பை ரசிச்சேன். போஜ்பூரியைப் பேசுறதாகட்டும், தத்தக்கா பித்தக்கா நடையாகட்டும், காதல் தோல்வியில் கலங்கும் போதும்.. அடேங்கப்பா. அடேங்கப்பா. நீங்க சிக்கன்65ல போடுற செயற்கை நிறம் மாதிரி பச்சக்குன்னு ஒட்டிக்கிட்டீங்க.

ரப்னே பனாதே ஜோடி படத்துலதான் அனுஷ்கா ஷர்மாவை முதன்முதலாப் பாத்தேன். அந்த அனுஷ்கா ஷர்மாவுக்கும் இந்த அனுஷ்கா ஷர்மாவுக்கும் எவ்வளவு வித்யாசம். அந்தப் படத்துல சுத்தமாப் பிடிக்கல. இந்தப் படத்துல அட்டகாசமாப் பிடிச்சிருக்கு. நடிப்பைச் சொன்னேன். நடிப்பைச் சொன்னேன். நடிப்பை மட்டுந்தான் சொன்னேன்.

பொம்மன் இராணி நல்லா நடிச்சார்னு சொன்னா அது கிளீஷே. சூனா சாமியும் ரானா பக்‌ஷேயும் கூட்டுக் களவானிங்கன்னு சொல்ற மாதிரி. பொம்மன் இராணி எந்தப் படத்துல மோசமா நடிச்சார்னு எனக்குத் தெரியல. அப்படிப் படம் வந்திருக்காதுன்னு என் உள்ளுணர்வு சொல்லுது.

சௌரப் ஷுக்லா….. ஹேராம் படத்துல மொத்தக் குடும்பத்தையும் இழந்துட்டு இரயில்வே கேட்டுல மிட்டாய் விப்பீங்களே. அத யாரும் கவனிச்சாங்களான்னு தெரியல. நான் கவனிச்சேன். அதான் இப்பவும் என்னால அதை நினைவுபடுத்திச் சொல்ல முடியுது. நீங்க இந்தப் படத்துல இப்படி நடிக்கலைன்னா மத்த பாத்திரங்கள்ள யார் எவ்வளவு நல்லா நடிச்சிருந்தாலும் படம் எடுபட்டிருக்காது. சூப்பரப்பு.

சஞ்சய் தத்தா அது? உங்களுக்கு நடிக்கத் தெரியும்னு இன்னைக்குதான் எனக்குத் தெரியும். ஒரு சிவாஜிய உங்ககிட்ட பாத்தேன். நல்ல நடிப்பு. பிசிறில்லாத உடல்மொழி. வயசுக்கேத்த பாத்திரங்கள்ள நடிக்கிறதுன்னா என்னன்னு எங்கூர் நடிகர்கள் பலருக்குப் புரியலையேய்யா!

உலகம் முழுக்க மதங்கள் தவறான மனிதர்களின் கைகளில் இருக்கிறது. அதை அவர்கள் தவறாகவே பயன்படுத்துகிறார்கள்.

மதம் என்பதே கற்பிதம் என்னும் போது மதமாற்றம் என்பது கோமாளித்தனம். இது எந்த மதத்திலிருந்து எந்த மதத்துக்கு மாறினாலும்தான் கோமாளித்தனம் தான். கடவுளை விட மதத்தை நம்புற மடமைத்தனந்தான் இதுக்கெல்லாம் காரணம். நம்ம இந்த மதத்தைத்தான் பின்பற்றனும்னு கடவுள் விரும்பினா அந்த மதத்துலயே பொறக்க வெச்சிருக்கலாமேன்னு படத்துல ஒரு வசனம் வரும். அது நமக்குப் புரிஞ்சிருச்சுன்னா போதும்.

கடவுள் இல்லைன்னு சொல்ற பகுத்தறிவுவாதிகளே.. உங்களால கடவுள் நம்பிக்கையை விமர்சிக்கவே முடியாது. உங்களால மதங்களைத்தான் விமர்சிக்க முடியும். மிஞ்சிப் போனா கடவுள் ஏன் இந்தக் கொடுமையைத் தடுக்கலன்னு கேள்வி கேக்கலாம்.

ஆனா கடவுள் நம்பிக்கையால எத்தனை பேர் நல்லது நடக்கும்னு நம்பி வாழ்க்கையை முன்னெடுத்துக்கிட்டுப் போறாங்க தெரியுமா?

அறிவியல் சிந்திக்க வைக்கும். உண்மை.
அறிவியல் பல பிரச்சனைகளைத் தீர்த்திருக்கிறது. உண்மை.
அறிவியல் இன்னும் வளரும். உண்மை.
அறிவியல் மக்கள் வாழ்க்கையில் பலவகையில் உதவும். உண்மை.
அறிவியல் மக்களுக்குத் துன்பத்தையும் தரும். அதுவும் உண்மை. இதுக்கு எடுத்துக்காட்டு கேக்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேன். ஒங்களுக்கே நெறையத் தெரியும்.

அறிவியலால் துவண்டிருக்கும் மனதுக்கு ஆறுதல் தரமுடியாது. அறிவியலை அனுபவிக்க காசு வேணும். இக்கட்டான சூழ்நிலையில் நம்பிக்கையைக் கொடுக்கும் கடவுளுக்குக் காசு வேண்டாம்.

புரியலையா? அறிவியல் எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடிச்சிருக்கு. ஆனா அந்த நோய் உள்ளவங்களை எல்லாம் அந்த மருந்து சென்றடைஞ்சதா? ஏன் அடையல? உங்க பகுத்தறிவால அந்த மருந்து ஏன் நோயாளிகளை அடையலன்னு வேணா சொல்ல முடியும். ஆனா அந்த மருந்து நோயாளிகளை அடைய வைக்க முடியாது. முடிஞ்சிருந்தாதான் செஞ்சிருப்பீங்களே. பகுத்தறிவுங்குறது கடவுள் இல்லைன்னு சொல்றது மட்டும் கெடையாது.

என்ன… இது உங்களுக்கு மட்டுமில்ல.. கடவுள் நம்பிக்கை உள்ளவங்களுக்கே இன்னும் சரியாப் புரியல. புரிஞ்சிருந்தா மதத்தை வளக்காம ஆன்மிகச் சிந்தனையை வளத்திருப்பாங்க. உங்க நேரம்.. நீங்க கொற சொல்ல மாதிரிதான் அவங்களும் வெச்சிருக்காங்க.

மதத்தின் பேரால அடுத்தவன் பேரில் உண்டாகும் வெறுப்பைத்தான் இந்தப் படம் சாடுது. எல்லா மதத்தையும் சமமாத்தான் குறிப்பிட்டிருக்காங்க.

உங்க கடவுள் நம்பிக்கை எல்லா மக்களின் மேலயும் அன்பை வளர்க்கலைன்னா… உங்க நம்பிக்கையை மறுபரிசீலனை செய்யனும். ஏன்னா நீங்க நம்புறது கடவுளை இல்ல.

பி.கு… தயவு செஞ்சு கார்பரேட் சாமியார்களை நம்பாதீங்க. துறவிக்கு வேந்தனே துரும்பு. பணமெல்லாம் அதவிடக் குப்பை உண்மையான துறவிகளுக்கு.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம். Bookmark the permalink.

4 Responses to pk – சூப்பர் பாடம்

  1. Nice and Brief comments…Superb :)))

  2. அற்புதமான பதிவு நண்பரே.

  3. இனிமேதான் இப்படத்தை பார்க்கனும். நல்ல சினிமா வெகுஜன மக்களை எளிதில் சென்றடையும் ஊடகம். இப்படத்திற்கு சீனாவில் பயங்கர வரவேற்பாமே!

    • GiRa ஜிரா says:

      சீனாக்காரனும் ரசிச்சாங்களா. பரவால்லையே. ஒருவாட்டி நீங்களும் பாத்துருங்க படத்த.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s