Monthly Archives: January 2015

தாயா தாரமா…

தாயா தாரமா என்ற கேள்வி எழாத நாளுமில்லை. நாடுமில்லை. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் சிலர். தாரத்தால் தாயாக முடியும். ஆனால் தாயால் தாரமாக முடியுமா என்றும் கேட்பர் சிலர். இரண்டுமே தவறு. தாய் வேறு. தாரம் வேறு. தாய் தாரமாவது மட்டும் கொடுமையன்று. தாரம் தாயாவதும் கொடுமைதான். ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் … Continue reading

Posted in இறை, கதை, சிறுகதை, சிவண் | Tagged , | 6 Comments

நாட்டுக்குள்ளே திருவிழா 2015

வழக்கமா புத்தகக் கண்காட்சின்னா ரெண்டு மூனு வாட்டியாவது போய் அள்ளிக்கிட்டு வர்ரது வழக்கம். கூடவே வலையுலக நண்பர்களையும் சந்திக்கிறதுன்னு பொழுது நல்லாப் போகும். இந்த முறை எப்படியெப்படியோ தடைப்பட்டுப் போக முடியாமப் போச்சு. நடக்குமோ நடக்காதோன்னு தடுமாறிக்கிட்டிருந்தப்போ ஒருவழியாக் கடைசி நாள் போயிட்டு வந்தேன். அதே ஒய்.எம்.சி.ஏ கிரவுண்ட். அதே கார் பார்க்கிங். அதே புழுதி. … Continue reading

Posted in அனுபவங்கள், புத்தகங்கள் | 12 Comments

Iயப்பாடு

வாரநாள்ள மதியக் காட்சி சத்யம்ல நிரஞ்சு வழிஞ்சதே படம் வெற்றிங்குறதுக்கு அறிகுறி. படத்த யோசிச்சா நினைவுக்கு வர்ர நல்ல விஷயங்கள்னு சொன்னா நிறங்களைத்தான் மொதல்ல சொல்லனும். பலநூறு பெயிண்டு டப்பாவைக் கொட்டி விட்ட மாதிரி உணர்ச்சி! லேசா பச்ச மையைக் கரைச்சு விட்டாப்புல இருக்கும் சீன ஏரிகள்! பொட்டுப் பொட்டாய் வெச்சது மாதிரியான சுங்கிடிச் சேலை … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , | 8 Comments

அணிபட்டு அணுகி – பழனி திருப்புகழ்

வணக்கம் நண்பர்களே! இனிய பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நண்பர் ரவிக்குமார் கேட்டுக்கிட்டதால இன்னொரு திருப்புகழுக்கு விளக்கம் எழுதுறேன். வழக்கம் போல எளிய நேரடியான விளக்கந்தான். தூண்டி விட்ட நண்பருக்கு நன்றி. குற்றங்குறை இருந்தா முருகனே பொறுப்பு. அணிபட்டு அணுகின்னு தொடங்குற திருப்புகழ் பழனிக்கான திருப்புகழ். நம்ம செய்ற எதாவது குற்றத்துல இருந்து … Continue reading

Posted in இறை, திருப்புகழ், முருகன் | Tagged , , , , , | 8 Comments