நாட்டுக்குள்ளே திருவிழா 2015

skpkarunaவழக்கமா புத்தகக் கண்காட்சின்னா ரெண்டு மூனு வாட்டியாவது போய் அள்ளிக்கிட்டு வர்ரது வழக்கம். கூடவே வலையுலக நண்பர்களையும் சந்திக்கிறதுன்னு பொழுது நல்லாப் போகும். இந்த முறை எப்படியெப்படியோ தடைப்பட்டுப் போக முடியாமப் போச்சு.

நடக்குமோ நடக்காதோன்னு தடுமாறிக்கிட்டிருந்தப்போ ஒருவழியாக் கடைசி நாள் போயிட்டு வந்தேன்.

அதே ஒய்.எம்.சி.ஏ கிரவுண்ட். அதே கார் பார்க்கிங். அதே புழுதி. அதே கூட்ட நெரிசல். அதே பத்து ரூபா டிக்கெட்.

எத்தன பேர் டிக்கெட் வாங்குனாலும் நூறு ரூபாய்க்குச் சில்லரையில்லைன்னு எப்படிச் சொல்ல மனசு வருது கவுண்ட்டர்காரப் பசங்களே!

போனவாட்டி சாப்பாட்டுக்கடையெல்லாம் ரொம்ப எடஞ்சலா இருந்தது. இந்தவாட்டி நல்லவேளையா வசதியா எடம் மாத்தி வெச்சிட்டாங்க. ஆனாலும் நான் வெளிய எதுவும் சாப்பிடல. தண்ணி கூடக் குடிக்கலை.

பாம்பே அப்பளத்த வெளிய வாங்கித் தின்னா வாயோட மேலன்னத்துல நமநமன்னு இருக்கு. அதுனால பொரிக்காத பாக்கெட் வாங்கீட்டு வருவேன். இந்தவாட்டி அதுவும் வாங்கல.

நாலு மணிக்கு எவ்வளவு கூட்டம். உண்மையிலேயே நம்ம மக்கள் புத்தகம் படிக்கிறாங்க போல. திருவிழாவுக்குக் கூட இவ்வளவு கூட்டம் வராது. காலேஜ் முடிச்சிட்டு வந்த கூட்டம் பாதி, காலேஜ் கட்டடிச்சுட்டு வந்த கூட்டம் பாதின்னு ஒரே கலகலப்பு.

இந்த வாட்டி எல்லாக் கடைலயும் சிறுதானியச் சமையல் புத்தகம் கண்ணுல பட்டது. மக்களோட மனநிலை கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பக்கம் போகுது போல. நானுமே ஒரு புக்கு எடுத்தேன்.

வழக்கம் போல இப்பத்தைய சூடான விஷயங்களைப் புத்தகம் போட்டு விக்கிறதும் சுடச்சுட நடந்தது. ஒரு பதிப்பகத்துல ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்குன்னு ஒரு புத்தகம். அதுக்குப் பக்கத்துலயே கருணாநிதி கடவுளான்னு ஒரு புத்தகம். அதுக்கு இது சரியாப் போச்சு. என்னவொரு நுண்ணரசியல்.

புள்ள பிடிக்கிற கடையொன்னு இருந்தது. கொழந்தைகளோட வர்ரவங்கள உள்ள இழுத்து இங்கிலீஷ்ல கொழந்தைகளைக் கேள்வி கேட்டு… வர்ர பதில்களை வெச்சே அறிவு வளர்க்கும் புத்தகங்களைத் தலையில் கட்டுனாங்க. வியாபாரத் தந்திரங்கள்தான் எத்தனை வகையடா!

ஊட்டி வறுக்கி கடைகள் இந்தவாட்டியும் இருந்தது. போன வாட்டி நெறைய வாங்கினேன். இந்த வாட்டி வாங்கல.

நாங்க பீனிக்ஸ் பறவைடான்னு கொஞ்சம் கூட சளைக்காம நித்தியானந்தா ஆட்களும் கடை போட்டிருந்தாங்க. ஒனக்கு நான் என்ன மிதமான்னு இஷா ஆட்களோட கடை வேற. இது போதாதுன்னு இங்கிலீஷ்ல தத்துவம் பேசுற உயர்தர ஞானவியல் ஓட்டல் கடை வேற. அவங்க வீடியோ ஒன்னு வாட்சப்புல சுத்துது. பாத்து கவனமா இருந்துக்கோங்க. மொத்தத்துல எல்லா மதங்களும் அங்க விற்பனைக்கு இருந்துச்சு.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொன்னியின் செல்வன் (உபயம் ஜெமோ) எல்லாக் கடைகள்ளயும் இருந்துச்சு. தமிழ்நாட்டு வாசகர்கள் அஞ்சாம் வகுப்பைக் கூடத் தாண்டலைன்னு பிஎச்டி புத்தகம் போடும் ஜெமோ வருத்தப்பட்டிருக்காரு. அவர் குடுத்து வெச்சது அவ்வளவுதான். கூடவே சிவகாமி சபதமும் நிறைய வித்துக்கிட்டிருந்தது. வாரியார் இன்னும் பிரபலமாத்தான் இருக்கார்னு குகஸ்ரீ பதிப்பகக் கடையப் பாக்குறப்போ தெரிஞ்சது.

வாங்க நினைச்சு வாங்க முடியாமப் போனது நண்பர் லக்கியோட சரோஜாதேவி புத்தகம். பேருக்காகவே மடமடன்னு வித்துருச்சுன்னு அவர் தன்னடக்கத்தோட சொன்னாரு. ஆனா அந்தப் பேரை வைக்கனும்னு வேற யாருக்கும் தோணலையே. வாழ்த்துகள் லக்கி. ரெண்டாம் பதிப்புல வாங்கிக்க வேண்டியதுதான்.

ஒரு பதிப்பகத்துல திடீர்னு ஒரு பையன் வந்து, “நாங்க ஒரு சர்வே எடுக்குறோம். அஞ்சு நிமிஷம் பேச முடியுமா?”ன்னு கேட்டாரு. சரின்னு சொன்னதும் தொ.பரமசிவனோட புத்தகத்துல ஒரு பக்கத்தைப் படிக்கச் சொன்னாரு. அது நான் முந்தியே புத்தகத்துல தொடரா வந்தப்போ படிச்சிருக்கேன். வரைவு கடாதல் பத்திய கட்டுரை அது. நான் ஏற்கனவே படிச்சிருக்கேன்னு சொன்னேன். அவர் ஆச்சரியப்பட்டு, “இளைஞர்களுக்கு தொ.பரமசிவனோட எழுத்துகளை அறிமுகப்படுத்த இதச் செய்றோம்”னு சொன்னாரு. விசாரித்ததுல அந்தப் பையன் டிவிட்டர் வேதாளம் அர்ஜுனோட நண்பராம். என்னை இளைஞன்னு சொன்னப்போ கூட வந்த நண்பர்கள் சிரிச்சதை நானும் கவனிச்சேன். ஆனா கண்டுக்கலை. 🙂

வால்மிகி இராமாயண மொழிபெயர்ப்பு வாங்கலாம்னு கடைகடையாத் தேடுனேன். பாலகாண்டத்துல அவங்களே நெறைய எடிட்டிங் செஞ்சு புத்தகம் போட்டிருந்தாங்க. தெரிஞ்சதையே எடிட்டிங் பண்ணீருக்காங்களே, தெரியாத எதையெதை எடிட் பண்ணீருப்பாங்களோன்னு எதையுமே வாங்கல. I didn’t find even a single translation of unabridged Valmiki Ramayan. I better settle with valmikiramayan.net

இவ்வளவு சுத்திப்பாக்குறதுக்குள்ளயே நாக்கு தள்ளீருச்சு. போதும்டா சாமின்னு முடிவு பண்ணி புழுதிப்புயல்ல நிறம் மாறியிருந்த காரைக் கண்டுபிடிச்சு வெளிய வந்தேன். இருட்டுல எல்லாக் கார்களும் வழி தவறித் தடுமாறி முட்டுச்சந்துல போய்த் திரும்பிக்கிட்டிருந்தாங்க. நானுந்தான். சைதாப்பேட்டைக்கு வந்து சேந்ததுக்கப்புறந்தான் சென்னைக்குள்ள இருக்கோங்குறதே புரிஞ்சது. அடுத்தவாட்டி அம்புக்குறியெல்லாம் போட்டு வைங்கப்பா. முடியல.

நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இதுதான். கொஞ்சந்தான் வாங்கினேன். இதுல எதாவது விட்டுப் போயிருக்கும்னு நெனைச்சீங்கன்னா அதை எனக்கு அன்பளிக்கலாம். கூச்சமேயில்லாம நான் வாங்கிக்குவேன்.

நான் சுவாசிக்கும் சிவாஜி -ஒய்.ஜி.மகேந்திரா
அரசு பதில்கள் 1981
கமல் சிறப்பு மலர்
சில்லரை வர்த்தகம் – பி.வி.ராமஸ்வாமி
தலைமுறைகள் – நீல.பத்மநாபன்
அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
நளபாகம் – தி.ஜானகிராமன்
சிறுதானிய உணவு செய்முறைகள் – செப் ஸ்ரீதர்
கவர்னரின் ஹெலிகாப்டர் – எஸ்.கே.பி.கருணா

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், புத்தகங்கள். Bookmark the permalink.

12 Responses to நாட்டுக்குள்ளே திருவிழா 2015

 1. amas32 says:

  //புள்ள பிடிக்கிற கடையொன்னு இருந்தது. // ROFL
  நீங்க மார்க்கண்டேயர் தான் ஜிரா 🙂
  நல்ல தொகுப்பு 🙂

  amas32

 2. நன்றி சுவைபட சொல்லியிருக்கிறீர்கள். இந்த வருடம் என்னால் வர இயலவில்லை. நிச்சயம் ஒரு நாள் போதாதுதான். கால் வலி நிச்சயம் வரும். கடைசி தெருவரை நடந்துபோய் நாம் தேடிய நூல் கிடைக்காமல் பின்னொருநாள் செல்லும்போது முதல் தெருவிலேயே அந்த நூலைக்கண்டு வாங்கும் பாக்கியம் பெற்ற பொழுது எரிச்சலும் சந்தோசமும் ஒரு சேர கிடக்கும் அனுபவம் எல்லாருக்கும் கிட்டும்.
  அங்கு டவர் கிடைப்பதில்லை. அதனால் நண்பர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடும் சிரமம் இப்பொழுதும் தொடருகிறதா?
  நடக்கும்போது தரை விரிப்புக்கு கீழே பலகைகள் மேடும் பள்ளமுமாக இருந்து சவுண்டு கொடுக்கிறதா ?
  தெருவில் இரண்டு பக்கமும் இருக்கும் ஸ்டால்களுக்கு நடுவே, நீளவாட்டமாக கடைசி வரைக்கும் பெஞ்சுகள் போட்டிருந்தால் அப்பப்ப உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்ணலாம் . ஏற்பாட்டாளர்கள் செய்யணும்
  நன்றி வாழ்த்துகள்

  • GiRa ஜிரா says:

   டவர் சரியாகக் கிடைக்கவில்லை. அதைவிடக் கூத்து இலவச வைஃபை என்று சொல்லி ஏமாற்றியது. முதல் நாளிலிருந்தே அது வேலை செய்யவில்லையாம்.

   நீங்க சொன்ன பெஞ்சு ஐடியா நல்ல ஐடியா. நானும் ஒத்துக்கிறேன்.

 3. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜிரா.புத்தகக் கண்காட்சிய ஒரு ரவுண்ட் அடிச்சமாதிரி இருக்கு.பழைய நினைவுகளையும்தான்.

  • GiRa ஜிரா says:

   வாங்கம்மா. அடுத்த வருஷம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வாங்க. எல்லாரும் சேந்து போகலாம். 🙂

 4. இன்னோருமுறை புத்தக கண்காட்சி போகலையேங்கற ஆதங்கத்தை இந்த போஸ்ட் மூலமா ஈடுகட்டியாச்சு 😉

 5. http://janakikrishnan.wordpress.com- இதில் படித்து பாருங்களேன். என்னுடைய முயற்சி. ஜானகி.

 6. வால்மிகி இராமாயண மொழிபெயர்ப்பு வாங்கலாம்னு கடைகடையாத் தேடுனேன். பாலகாண்டத்துல அவங்களே நெறைய எடிட்டிங் செஞ்சு புத்தகம் போட்டிருந்தாங்க. தெரிஞ்சதையே எடிட்டிங் பண்ணீருக்காங்களே, தெரியாத எதையெதை எடிட் பண்ணீருப்பாங்களோன்னு எதையுமே வாங்கல. I didn’t find even a single translation of unabridged Valmiki Ramayan. I better settle with …

  அன்புடையீர்,
  வால்மீகி ராமாயணத்தை unabridged – படிக்க விரும்புவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
  என் குடும்பத்தினருக்காக நான் மொழி பெயர்த்து எழுதியது.
  Srimadhvalmikiramayanam tamil.com என்ற site ல் இருந்ததை சமீபத்தில் என்னுடைய wordpress site ல் பதிவு செய்தேன். உத்தர காண்டம் முடிய ஸ்ரீமத் ராமாயணத்தின் வரி விடாமல் மொழி பெயர்த்திருக்கிறேன். விரும்பியபடி படித்து அநுபவிக்க வாழ்த்துக்கள். ஜானகி கிருஷ்ணன்.

 7. உங்க லிஸ்டுலே ரெண்டு நம்மிடம் இருக்கு. அம்மாவந்தாள் & நளபாகம்.

 8. pvramaswamy says:

  Dear GiRa, I was pleasantly surprised to see a mention of my book. Have you published a review? If not yet, please do and let me know.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s