Monthly Archives: February 2015

ராகுல் – ஒரு பார்வை

ஒரே நாள்ள ரெண்டு நண்பர்கள் ராகுல் பத்தி ரொம்ப நம்பிக்கையோட சொன்னதால என்னோட கருத்தையும் சொல்லலாம்னு இந்தப் பதிவை எழுதுறேன். இன்னைக்குத் தமிழ்நாட்டுல அதிகளவு கிண்டல் செய்யப்படுறது விஜயகாந்த். இந்திய அளவுல ராகுல்காந்தி. இந்த மாதிரியான அளவுக்கு மீறிய கிண்டல்கள் எனக்கு எரிச்சலைத்தான் உண்டாக்குது. இதுக்கும் bullyingகும் வேறுபாடு இல்ல. பிடிக்காதவன அடக்கி ஒடுக்கி வாயடைக்க … Continue reading

Posted in அரசியல் | Tagged , | 4 Comments

மாலையில் ராஜா மனதோடு பேச

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”ன்னு எம்.எஸ்.வி பாட்டு ஒன்னு உண்டு. கண்ணதாசன் எழுதுனதுதான். ஆனா நினைக்குறது நடக்குறதுக்கும் தெய்வத்தோட அருள் தேவைதான். ஒரு கனவு. கனவுல இளையராஜாவைப் பாக்குறேன். அவர் கால்ல விழுந்து கும்பிடுறேன். அவரும் ஆசி கொடுத்தாரு. யார்னு அவர் கேட்டதுக்குச் சாதாரண ரசிகன்னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். அப்புறம் அவரோட ஒரு செல்பி எடுத்துக்கிட்டேன். இத … Continue reading

Posted in அனுபவங்கள், இசைஞானி, இசையரசி, எம்.எஸ்.விசுவநாதன், திரையிசை, பி.சுசீலா, மெல்லிசைமன்னர் | Tagged , , | 2 Comments

மாருகோ மாருகோ மார்கழி

விடியக்காலைல டிவியப் போட்டா, “மாதங்களில் நான் மார்கழின்னு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதைல சொல்லிருக்கார்”னு உபன்யாசர் பக்திப்பழத்தப் பிழிஞ்சிட்டிருந்தாரு. சட்டுன்னு ஒன்னு தோணுச்சு. அனேகமா இந்தக் கிருஷ்ணர் தமிழ்நாட்டுலதான் பொறந்திருக்கனும். ஏன்னா எப்பவும் வெயிலடிக்கிற தமிழ்நாட்டுல மார்கழிலதான் கொஞ்சமாவது குளிரும். அந்த சமயத்துல வடக்க எல்லாம் குளிர் தாங்காம பல்லு பல்லாங்குழி ஆடுமே. அப்படியிருக்க மாதங்களில் மார்கழின்னு … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , | 4 Comments

அண்ணாமல – விமர்சனம்

அண்ணாமலை ரொம்பப் பழசாச்சே. அதுக்கு இப்பத்தானா விமர்சனம் எழுதுறதுன்னு நீங்க கேக்குறது எனக்கு நல்லாவேப் புரியுது. ஆனா அண்ணாமலை பழசானாலும் புதுசாப் பாக்குவனுக்குப் புதுசுதானே. அதான். ரஜினி நடிச்ச அண்ணாமலை படத்தைப் பத்திப் பேசல. ரஜினி கும்பிடப் போற அண்ணாமலையைச் சொன்னேன். திருவண்ணாமலை. ரொம்ப நாளாத் திட்டம் போட்டு சென்னைக் கம்பன் கவிமன்றத்து ஆட்கள்ளா சேந்து … Continue reading

Posted in அனுபவங்கள், திருவண்ணாமலை, பயணம் | Tagged | 16 Comments