மாருகோ மாருகோ மார்கழி

விடியக்காலைல டிவியப் போட்டா, “மாதங்களில் நான் மார்கழின்னு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதைல சொல்லிருக்கார்”னு உபன்யாசர் பக்திப்பழத்தப் பிழிஞ்சிட்டிருந்தாரு.

சட்டுன்னு ஒன்னு தோணுச்சு. அனேகமா இந்தக் கிருஷ்ணர் தமிழ்நாட்டுலதான் பொறந்திருக்கனும். ஏன்னா எப்பவும் வெயிலடிக்கிற தமிழ்நாட்டுல மார்கழிலதான் கொஞ்சமாவது குளிரும். அந்த சமயத்துல வடக்க எல்லாம் குளிர் தாங்காம பல்லு பல்லாங்குழி ஆடுமே. அப்படியிருக்க மாதங்களில் மார்கழின்னு அறிவுள்ள நார்த் இண்டியன் யாராவது சொல்வானா? குளிர்காலம் வந்தாலே டெல்லில பிளைட் எல்லாம் பனிமூட்டத்தால கேன்சல் ஆகுறத நம்ம வருசாவருசம் பாக்குறோமே.

என்னைக் கேட்டா கிருஷ்ணர் பொறந்தது தமிழ்நாடான்னு யாராவது இலக்கியவாதிகள் ஆராய்ச்சி செய்யலாம். கிருஷ்ணர் இருந்த துவாரகைதான் இன்றைய தூத்துக்குடின்னு ஆராய்ச்சி முடிவுகள் வரவும் வாய்ப்பிருக்கு.

மார்கழி வந்தா மார்ல சளின்னு ஊர்ப்பக்கத்துப் பழமொழி. இந்தக் குளிரைக் கூடத் தமிழனால தாங்கிக்க முடியல பாருங்க. அதுக்கு முந்துன மாசம் ஊர்ல கல்யாணம்னு மார்ல சந்தனமா திரிஞ்சிக்கிட்டிருந்தவங்க எல்லாம் நம்ம பயகதான். கார்த்திகை மாசம் கல்யாண மாசமாச்சே. ஆனா ஒன்னு. சரியா மார்கழிக்கு முன்னாடி கல்யாண மாசத்த வெச்ச நம்ம முன்னோர்களைப் பாராட்டாம இருக்க முடியல. அந்த வகைல பாத்தா மாதங்களில் நான் மார்கழின்னு மன்மதன் சொல்லியிருந்தா செம பொருத்தம்.

வாக்கிங் வளையாபதி ஒரு பொதுப்பணித்துறை அதிகாரி. தெனமும் காலைல விடியக்காலைல வாக்கிங் போய் ஒடம்ப கின்னுன்னு வளையாம நேரா வெச்சிருப்பாரு. அவருக்குப் பிடிச்ச மாசம் மார்கழி மாசம். “மார்கழி மாசப் பனியில வாங்கிங் போறது என்ன சுகம் தெரியுமா? ஊட்டியை சென்னைல ஒரு மாசம் வெச்சுக்கிட்டு அனுபவிக்காம இருந்தா எப்படி”ன்னு எல்லாரையும் கிண்டல் பண்ணுவாரு.

”வளையாபதி சார், நீங்க ஊட்டியை ஒரு மாசம் மட்டும் அனுபவிச்சாப் போதுமா? ஊட்டிக்கு டிரான்ஸ்பர் வாங்கீட்டுப் போனா மார்கழி மட்டுமில்லாம எல்லா மாசமும் குளிரை அனுபவிக்கலாம்ல. ஊட்டி ஒரு தமிழக சுவிட்சர்லாந்து சார்”ன்னு யாரோ ஒரு நாரதன் ஏத்திவிட்டுட்டான். அவரும் உயரதிகாரிகள் கையக் காலப் பிடிச்சு ஊட்டிக்கே மாறிட்டாரு. ஊட்டிக்குப் போய் நாலே மாசத்துல குடும்பத்தக் கூட்டீட்டுப் போறேன்னு சொன்ன வளையாபதி ரெண்டே மாசத்துல சென்னைக்கே வளைஞ்சபதியா திரும்ப வந்துட்டாரு.

“என்ன சார்… தமிழக சுவிட்சர்லாந்தை விட்டு ரெண்டே மாசத்துல வந்துட்டீங்க”ன்னு அவரக் கேக்காத ஆளில்ல. எதையெதையோச் சொல்லிச் சமாளிச்சுப் பாத்தாரு. விடாம மடக்கிக் கேட்டப்பதான் உண்மையை உணர்ச்சியோட சேத்துக் கக்குனாரு. “ஊட்டியெல்லாம் குளிராத்தான் இருந்துச்சு. ஆனா ரொம்பக் குளிரா இருந்துச்சு. எந்திரிச்சு வாக்கிங் போகனும்னாலே ஸ்வெட்டர் மப்ளர்னு போட்டுட்டு காட்டுக் கரடி மாதிரி போக வேண்டியிருக்கு. அதெல்லாம் கூடப் பிரச்சனை இல்லப்பா. அங்க இருக்கும் குளிருக்குக் காலைல எந்திரிச்சுக் காலைக் கடனைக் கழிக்க முடியலப்பா. காத்து கூட வரலப்பா”ன்னு அவர் கண்ணீர் விட்டு அழுதப்பதான் பின்விளைவுகளை யோசிக்காம எந்த முடிவும் எடுக்கக் கூடாதுன்னு புரிஞ்சது.

இவருக்கு இப்படின்னா கும்பகோணம் குண்டலகேசி கதை வேற மாதிரி. கும்பகோணத்தில் இருந்த வரைக்கும் மார்கழி மாசம் வந்தாப் போதும். அங்கயிருக்கும் கோயில்களுக்கெல்லாம் போய் பிரசாதங்களை பிற சாதங்களா நெனைக்காம பல்லுல படாம விழுங்குவாரு. சாரங்கபாணி கோயில்ல அக்கவுண்ட் வெச்சு பிரசாதம் வாங்குற அளவுக்கு பிரசாத வெறிப் பிரபலமா இருந்தாருன்னா பாத்துக்கோங்களேன். பேரன் பேத்தி எடுத்த பிறகு சென்னைக்கு மகன் வீட்டுக்கே வந்துட்டாரு. சென்னைல மார்கழி இன்னும் கலக்கலா இருக்கும்னு அவரும் கொண்டாட்டமாதான் வந்தாரு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, அடையாறு அனந்தபத்மனாபசாமி, திருநீர்மலை, அகத்தியர் கோயில், டிநகர் கிருண்னன் கோயில்னு எல்லாக் கோயிலுக்கும் “விடாமப் போவேன். விடாமப் போவேன்”ன்னு சூளுரைச்சிட்டுதான் சென்னைக்குள்ள காலடி எடுத்து வெச்சாரு.

அவர் மனசுக்கேத்த மாதிரிதான் மார்கழியும் கோலாகலமாத் தொடங்குச்சு. மொத நாள் நாலு கோயில்னா ரெண்டாவது நாள் பத்து கோயில்னு நல்ல சுத்தல். புளியோதரை சர்க்கரைப் பொங்கல் தயிர்சாதம் கேசரின்னு பிரசாதங்கள் பலவகை. வீட்டுல காலைல டிபனே சாப்பிடுறதில்ல. எங்கெங்க எப்பப்போ சோறு போடுறாங்கன்னு குறிச்சு வெச்சு பாய்ஸ் படத்துல நடிகர் செந்தில் ஒரு டைரி தான் வெச்சிருந்தாரு. ஆனா நம்ம குண்டலகேசியோ ஒரே வாரத்துல டேட்டாபேசே டெவலப் பண்ணீட்டாரு. என்ன இருந்தாலும் படிச்சவராச்சே!

பதினோராம் நாள் காலைல அவரு கோயிலுக்குப் போகல. அதிசயமாப் பாத்த மகன் கிட்ட “கால் வலிக்குதுப்பா”ன்னு சொல்லிச் சமாளிச்சிட்டாரு. அம்மாக்காரிதான் மகனைக் கூப்பிட்டு உண்மையைப் போட்டு உடைச்சிட்டா. “ராத்திரியில இருந்து அவருக்கு விடாமப் போகுதுப்பா. ஒரு கோயில்ல ரெண்டு கோயில்ல பிரசாதம் வாங்குனாச் சரி. மதியச் சாப்பாட்டையும் சேத்து முடிக்கிற அளவுக்குப் பிரசாதங்கள அமுக்குனா எப்படி? அதான் விடாமப் போகுது.” அதுக்குப் பிறகு மார்கழி மாசத்துல எல்லாக் கோயிலுக்கும் “விடாமப் போவேன். விடாமப் போவேன்”னு அவர் சொல்லவேயில்ல.

ஊருக்கெல்லாம் கொடுத்துச் சாப்பிட வேண்டிய மார்கழி மாசப் பிரசாதத்த ஒரே ஆளா லபக்லபக் பண்ணதால பெருமாளுக்கே கோவம் வந்து குண்டலகேசிக்குப் பின்வாங்கீட்டாரோன்னு அவர் வீட்டுல நெனச்சிக்கிட்டிருக்காங்க. அந்தப் பெருமாளுக்குதான் வெளிச்சம்!

பாட்டனி புரபசர் தாவரச்செல்வன் இன்னொரு வகை. தாவுற செல்வன் இல்லைங்க. சரியாப் படிங்க. ஆஞ்சனேயர் கோவிச்சுக்கப் போறாரு. தாவரவியல் துறைல இருந்த ஈடுபாடு காரணமா தாமரைச்செல்வன்னு வீட்ல வெச்ச பேர தாவரச்செல்வன்னு மாத்தி வெச்சுக்கிட்டாரு. ஆள் அதிதீவிர சமூகவிஞ்ஞானி. நம்ம என்ன செஞ்சாலும் அதுல ஒரு அறிவியல் இருக்குன்னு கண்டுபிடிச்சுச் சொல்ற அளவுக்கு விஞ்ஞானி. பாயாசத்துல அப்பளத்த ஒடச்சுப் போட்டு சாப்புடுறதால சுகர் வராதுங்குற உண்மையத் தமிழ் முன்னோர்கள் தெரிஞ்சு வெச்சிருந்தாங்கன்னு சாதிக்கிற அளவுக்கு அவரோட சமூக அறிவியலறிவு வளந்துருந்தது.

அன்னைக்குக் கிளாஸ்ல எதோ பாடம் எடுத்துக்கிட்டிருக்கிறப்போ இப்படியொரு கேள்வியக் கேட்டாரு. “மார்கழி மாசம் வந்தா மத்த மாசத்த விட காலைலயே எந்திரிச்சுக் கோயிலுக்குப் போறாங்க. ஏன்னா பெருமாள் கோயில்ல துளசி தீர்த்தம் குடுக்குறாங்க. அதுனால போறாங்க. அதுக்குக் காரணம் என்னன்னு யாராவது சொல்லுங்க பாப்போம்.”

டேஸ்ட்டா இருக்கும் சார். வாசனையா இருக்கும் சார். அதுல அருள் நெறஞ்சிருக்கும் சார். ரெண்டு வாட்டி வாங்கிக் குடிப்பேன் சார்னு வந்த அதியற்பமான பதில்களை எல்லாம் ஒரு சின்னச் சிரிப்போட தள்ளி விட்டுட்டு தன்னுடைய கண்டுபிடிப்பை எடுத்து விட்டாரு.

“மார்கழி மாசம் குளிர் மாசம். அந்த சமயத்துலதான் காதலும் காமமும் பொங்கும். அதக் கட்டுப்படுத்தாட்டா மக்கள்தொகை எக்கச்சக்கமா ஏடாகூடாமா ஏகத்துக்கும் பொங்கும். அதைக் கொறைக்கத்தான் மார்கழி மாசம் எல்லாரும் பெருமாள் கோயில்ல துளசி தீர்த்தம் குடிக்கிறாங்க. ஏன்னா.. துளசிக்குத்தான் ஆண்மையைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. பாத்தீங்களா? நம்ம முன்னோர்கள் எப்படி சயண்டிஃபிக்கா யோசிச்சிருக்காங்கன்னு.”

அவர் அவ்வளவு பெருமையா சொன்னத மாணவர்கள் ஒடனே சிறுமையிலும் சிறுமைப்படுத்தீட்டாங்க.

”சார் எங்க வீட்டுப் பக்கத்துக் கோயில்ல வருசம் பூரா துளசி தீர்த்தம் குடுக்குறாங்க சார். அப்போ அங்க போறவங்களுக்கெல்லாம் கொழந்தையே பொறக்காதா?”

“சார் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்த நிறுத்தீட்டு ஏன் துளசித் திட்டம்னு தொடங்கக் கூடாது? நீங்க அரசாங்கத்துக்கு ஒரு திட்ட வரைபடம் அனுப்புங்க சார். நோபல்பரிசு கட்டாயம் குடுப்பாங்க.”

“துளசி தீர்த்தம் குடிச்சா ஆண்களுக்கு ஆண்மை குறையுற மாதிரி பெண்களுக்கு எதுவும் குறையுமா சார்?”

”மார்கழி மாசம் முருகன் கோயில்ல ஏன் சார் துளசி குடுக்குறதில்ல? முருக பக்தர்களுக்கு மார்கழில காதலும் காமமும் வந்து மக்கள் தொகை எக்கச்சக்கமா ஏடாகூடமா ஏகத்துக்கும் பொங்குனா தப்பில்லையா சார்?”

இப்படியெல்லாம் எக்குத்தப்பா எகனைமொகனையா எதிர்க்கேள்வி கேட்டாலும் மாணவர்கள் ஒரு விஷயத்தக் கப்புன்னு பிடிச்சிக்கிட்டாங்க. பெருமாள் கோயில்ல துளசி தீர்த்தம் வாங்குனா அதக் குடிக்காம மோந்து பாத்துட்டு அப்படியே மொத்தமா தலைல தடவிக்கிறாங்க. நாளப்பின்ன கொழந்த பொறக்காமப் போயிருச்சுன்னா?!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in நகைச்சுவை and tagged , . Bookmark the permalink.

4 Responses to மாருகோ மாருகோ மார்கழி

  1. அடிபொளி! தூள்! நன்னாயிட்டுண்டு கேட்டோ:-))))))

    ஆனாலும் பெருமாளுக்கு ரொம்பத்தான்….. மார்கழி எனக்குப்பிடிக்குமுன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே மாசம் பூரா திரை மறைவில் இருப்பான். எதுக்கு? ஓ…. அதுக்கோ?

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s