மாலையில் ராஜா மனதோடு பேச

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”ன்னு எம்.எஸ்.வி பாட்டு ஒன்னு உண்டு. கண்ணதாசன் எழுதுனதுதான். ஆனா நினைக்குறது நடக்குறதுக்கும் தெய்வத்தோட அருள் தேவைதான்.

ஒரு கனவு. கனவுல இளையராஜாவைப் பாக்குறேன். அவர் கால்ல விழுந்து கும்பிடுறேன். அவரும் ஆசி கொடுத்தாரு. யார்னு அவர் கேட்டதுக்குச் சாதாரண ரசிகன்னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். அப்புறம் அவரோட ஒரு செல்பி எடுத்துக்கிட்டேன்.

இத அடுத்த நாள் காலைல டிவிட்டர்லயும் போட்டுட்டேன். நண்பர்கள்ளாம் சீக்கிரமே நடக்கட்டும்னு வாழ்த்துனாங்க. அது அடுத்த மூனு நாள்ள நடக்கப் போகுதுன்னு அப்பத் தெரியல.
Ilayaraja-Tweet
”டி.வி.கோபலகிருஷ்ணன் சங்கீத கலாநிதி பட்டம் வாங்குனதுக்கு honour பண்ணி மாலா மணியன் மேடம் விழா எடுக்குறாங்க. இளையராஜால்லாம் வருவார். காமராஜர் அரங்கத்துலதான். போறியா?”ன்னு நண்பர் கோபி கேட்டதும், கொஞ்சம் கூட யோசிக்காம ஒத்துக்கிட்டேன்.

சில டிவிட்டர் நண்பர்களும் வர்ரதாச் சொன்னதால கோபி நிறையவே பாஸ்கள் குடுத்தாரு. எல்லாம் விஐபி பாஸ்கள். Thanks Gopi.

கடைசி நேரத்துல விக்னேஷ் (https://twitter.com/VikitweetZzz) வரமுடியல. வீருவும் (https://twitter.com/vforveeru) அவனோட நண்பன் அரங்கநாதனும் எனக்கு முன்னாடியே காமராஜர் அரங்கத்துக்கு வந்துட்டாங்க.

முதல் ஏழு வரிசைக்குள்ள உக்கார எடம் கிடைச்சது. வழியை ஒட்டி அரங்கநாதனும், அடுத்து வீருவும், அதுக்கடுத்து நானும் உக்காந்திருந்தோம். சரியா எனக்கு முன்னாடி ஒரு ஒட்டகச்சிவிங்கி முழுசா மேடைய மறைச்சிட்டு உக்காந்திருந்தான். மேடைல போட்டிருந்த நாலு நாற்காலியுமே எனக்குத் தெரியல.

வீரு ரொம்ப நல்லவன். அவன் எடத்த எனக்குக் கொடுத்துட்டு நான் இருந்த எடத்துல உக்காந்துக்கிட்டான். அப்பதான் மேளதாளத்தோட டி.வி.கோபாலகிருஷ்ணனைக் கூட்டீட்டு வந்தாங்க. அவர் மேடைக்குப் போனதும், அந்த ஒட்டகச் சிவிங்கி அவன் நண்பன எழுப்பி விட்டுட்டு சரியா எனக்கு முன்னாடி உக்காந்தான். எனக்குச் சரியான கோவம். என்ன செய்ய முடியும்.

அரங்கநாதன் ரொம்ப ரொம்ப நல்லவன். அத்தோட எங்க ரெண்டு பேரையும் விடக் கொஞ்சம் உயரம். எனக்கு வழியை ஒட்டியிருக்கும் எடத்தக் குடுத்துட்டான். அடுத்து வீருவும் அதுக்கடுத்து அரங்கநாதன்னும்னு மாறி உக்காந்துக்கிட்டோம். நான் எடம் மாறி உக்காந்ததும் அரங்கத்துல ஒரு பரபரப்பு.

பாத்தா ராஜா உள்ள வந்துக்கிட்டிருக்காரு. டி.வி.ஜி மறுபடி வெளிய போய் ராஜாவை வரவேற்றுக் கூட்டீட்டு வர்ராரு.
IlayarajaEntry
எத்தன பாட்டு கேட்டிருப்போம். எந்த அளவுக்கு ரசிச்சிருப்போம். எவ்வளவு உருகியிருப்போம். அந்த இசைக்கெல்லாம் சொந்தக்காரர் கண் முன்னாடி வர்ரப்போ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி மனசுக்குள்ள.

வழியில எல்லாரும் எந்திரிச்சு வணக்கம் சொல்றாங்க. அவரும் பதிலுக்கு வணக்கம் சொல்றாரு. நாலு பக்கமும் செக்யூரிட்டி மாதிரி பசங்க அவரக் கூட்டீட்டு வர்ராங்க. அவர் வர்ரத மொபைல்ல படம் பிடிச்சிட்டிருந்தேன்.

பாத்தா பக்கத்துல வந்துட்டாரு. என்ன செய்றோம்னே தெரியாம அவர் கால குனிஞ்சு தொட்டுக் கும்பிட்டேன். அவர் கையத் தூக்கி ஆசிர்வதிச்சது தெரிஞ்சது. திரும்ப எந்திரிச்சதும் அவர் என் முகத்தைப் பாத்தாரு. இல்ல. இல்ல. என்னோட கண்ணைப் பாத்தாரு. ஏன்னா எனக்கு மொதல்ல தெரிஞ்சது அவரோட கண்ணுதான். அடுத்து அந்த முகத்துல ஒரு அமைதியான புன்னகை. நானும் புன்னகைச்சேன்.

அதுக்குள்ள அவர கூட்டீட்டுப் போயிட்டாங்க. அதுனால கனவுல வந்த மாதிரி செல்பி எடுக்க முடியல.

என்னடா எம்.எஸ்.வி ரசிகன் ராஜா கால்ல விழுந்துட்டானே பாக்குறீங்களா? எனக்கு எப்பவுமே மெல்லிசை மன்னர் தான் இசைத் தெய்வம். அவர் இசைதான் என் நாடித்துடிப்பு. அவருக்குப் பிறகுதான் மத்தவங்க யாரா இருந்தாலும். அதே நேரத்துல இளையராஜாவின் இசைஞானத்தை நான் புரிஞ்சிக்கலைன்னா ஒரு இசை ரசிகனுக்கான அடிப்படைத் தகுதி கூட எனக்கில்லைன்னு உறுதியாச் சொல்லலாம். ஆசிரியரின் காலில் விழுந்து வணங்குறது மாணவனுக்கு அழகுதான்.

ராஜாவைப் பாத்ததும் கால்ல விழுந்துட்டேனே… எம்.எஸ்.வியப் பாத்திருந்தா என்ன செஞ்சிருப்பேன்னு யோசிச்சேன். எனக்குத் தெரியல. அதுனால அந்த யோசனையை விட்டுட்டேன்.

பிறகு மேடைல எஸ்.வி.சேகருக்கும் கவுதமிக்கும் நடுவில் ராஜாவும் டி.வி.ஜியும் உக்காந்திருந்தாங்க. சம்பிரதாயமான மாலை மரியாதைகளுக்குப் பிறகு எஸ்.வி.சேகரும் கவுதமியும் ராஜாவைப் புகழ்ந்து பேசுனாங்க. எஸ்.வி.சேகர் நல்லாதான் தொடங்கினாரு. இசை படத்தைப் பத்திப் பேசாமத் தவிர்த்திருக்கலாம். கவுதமி சில இடங்கள்ள தமிழ்ல தடுமாறினாலும் நல்லாப் பேசுனாங்க.
IlayarajaHonouring
டி.வி.ஜியின் பிரதான சிஷ்யை ஒரு இசைக்குழுவைத் தொடங்கியிருப்பதால அதைப் பாராட்டி தொடக்கி வைக்க இளையராஜாவைக் கூப்பிட்டாங்க. அப்ப அவர் பேசுனத இங்க பாத்து ரசிக்கலாம்.

இசைக்குழுவில் இளையராஜா பாடல்களாப் பாடினாங்க. மொதல்ல எஸ்.ஜானகி(நிலாக்காயும் நேரம் சரணம்) பாட்டு. அடுத்து சுவர்ணலதா(மாலையில் யாரோ). அடுத்து சித்ரா(இந்த மான் உந்தன்). அடுத்து மறுபடியும் எஸ்.ஜானகி(கண்மணி அன்போடு காதலன்). இதுல கமல் மாதிரி பாடுனவர் ரொம்ப நல்லாப் பாடினாரு. அவர்தான் நிலாக்காயும் நேரம் பாட்டும் பாடினாரு. நல்ல திறமையிருக்கு.

அப்போ பாத்து வீருகிட்ட, “இன்னும் ரெண்டு பாட்டுல சுசீலாம்மா பாட்டு வருதுன்னு சொன்னேன்.” இளையராஜா இசைல சுசீலாம்மா நெறையப் பாடாததால அவங்க பாட்டு வராதுன்னு சொன்னான் வீரு. ஒரு போட்டியா எடுத்துக்கிட்டோம். அடுத்த ரெண்டு பாட்டும் கேட்டுட்டு அதுக்கப்புறம் வீட்டுக்குக் கெளம்பலாம்னு முடிவு செஞ்சோம்.

என் சோதனைக்குன்னு அடுத்த ரெண்டு பாட்டுமே சுசீலாம்மா பாட்டு இல்ல. என்ன பாட்டுகள்னு மறந்துட்டேன். சரி. முடிஞ்சது. கெளம்பலாம்னு முடிவு பண்ணோம். திடீர்னு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பிரியதர்ஷினி, “இவ்வளவு நேரம் இசைஞானியின் பாடல்களைக் கேட்டு ரசிச்சோம். இப்போ அதுக்கும் மேல போய் மெல்லிசை மன்னரின் பாட்டை ரசிக்கலாம்”னு அறிவிச்சாங்க.

என்ன பாட்டு தெரியுமா? நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா பாட்டுதான். ஒடனே வீருகிட்ட திரும்பி, “பாத்தியா, சுசீலாம்மா கூட எம்.எஸ்.வியையும் கூட்டீட்டு வந்துட்டேன்”ன்னு பெருமையடிச்சிக்கிட்டேன்.

அசுரர்கள் வரம் கேக்குறப்போ, “வீட்டுக்கு உள்ளயும் இல்லாம..வெளியவும் இல்லாம.. தரைலயும் இல்லாம”ன்னு வரம் கேப்பாங்களாம். கொடுத்துட்டு அந்த வரத்தின் படியே அவங்களைக் கடவுள் அழிச்சிருவாராம். அந்த மாதிரி “ரெண்டு பாட்டுல சுசீலாம்மா பாட்டு வருது”ன்னு நான் சொன்னத முருகன் அப்படியே பொருள் எடுத்துக்கிட்டாருன்னு வீரு சொல்லிக் கிண்டலடிச்சான்.

நாளை இந்த வேளை பார்த்து பாட்டு முடிஞ்சதும் மறுபடி இளையாராஜா பாடல்களைப் பாடத் தொடங்கிட்டாங்க.

இப்படியொரு வாய்ப்பு கொடுத்த மாலா மணியன் மேடத்துக்கும் அந்த நிகழ்ச்சிக்குப் போறதுக்கு வழி செஞ்ச கோபிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எது எப்படியோ… I couldn’t have asked more for that evening. மனசு நிறைஞ்ச மகிழ்ச்சி.

இன்னும் சுசீலாம்மாவையும் மெல்லிசை மன்னரையும் பாத்துட்டா.. இன்னும் ரெண்டு பதிவு போடலாம். 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், இசைஞானி, இசையரசி, எம்.எஸ்.விசுவநாதன், திரையிசை, பி.சுசீலா, மெல்லிசைமன்னர் and tagged , , . Bookmark the permalink.

2 Responses to மாலையில் ராஜா மனதோடு பேச

  1. கனவு காணுங்கள்னு அப்துல் கலாம் சொன்னதை மிகச் சரியாக ஃபாலோ செய்யுறப் போல 🙂

  2. amas32 says:

    செம deja vu ஆக இருந்திருக்கிறதே ஜிரா 🙂 நீங்கள் போட்ட ட்வீட்டை நான் டைம்லைனில் கவனிக்கவில்லை. சீக்கிரம் வரிசையாக அனைத்து இசை அரசர்கரளையும் அரசிகளையும் சந்தித்து விடுங்கள் 🙂

    amas32

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s