ராகுல் – ஒரு பார்வை

ஒரே நாள்ள ரெண்டு நண்பர்கள் ராகுல் பத்தி ரொம்ப நம்பிக்கையோட சொன்னதால என்னோட கருத்தையும் சொல்லலாம்னு இந்தப் பதிவை எழுதுறேன்.

Rahul_Gandhi_1இன்னைக்குத் தமிழ்நாட்டுல அதிகளவு கிண்டல் செய்யப்படுறது விஜயகாந்த். இந்திய அளவுல ராகுல்காந்தி.

இந்த மாதிரியான அளவுக்கு மீறிய கிண்டல்கள் எனக்கு எரிச்சலைத்தான் உண்டாக்குது. இதுக்கும் bullyingகும் வேறுபாடு இல்ல. பிடிக்காதவன அடக்கி ஒடுக்கி வாயடைக்க வைக்கிறதுதான் நோக்கம்.

இன்னைக்கு பிஜேபி கிட்டத்தட்ட ராகுலை அப்படித்தான் செஞ்சிக்கிட்டிருக்கு. இன்னைக்குக் கூட வெங்கய்யா நாயுடு ராகுலைப் பத்தி ஏதோ பேச மக்களவைல மல்லிகார்ஜுன கார்கே சண்டை போட்டிருக்காரு.

பிஜேபி… ஒங்களுக்கு ஒன்னு சொல்றேன். நீங்க மறைமுகமா ராகுலுக்குத்தான் உதவி செய்றீங்க. ஏன்னா.. எப்பவும் அடி வாங்கிக்கிட்டே இருக்குறவன் ரோஷம் வந்து திரும்ப அடிச்சான்னா தாங்க மாட்டீங்க. ராகுல் பிள்ளைப்பூச்சியா இருக்குறதும் குளவியா மாறுவதும் ஒங்க கைலதான் இருக்கு.

சரி. நண்பர்கள் ராகுலை நேர்மையாளர்னும் அர்விந்த் கேஜ்ரிவாலோடு கைகோர்த்து அவர் அரசியல் செய்யும் காலத்துக்குக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தாங்க. அது அவங்க விருப்பமும் எண்ணமும். அது பத்தி என்னோட கருத்து என்ன?

ராகுல் நேர்மையானவரா நல்லவரான்னு இப்பச் சொல்ல முடியாது. இன்னைக்கு வரைக்கும் அவர் காங்கிரஸ் பழம்பெருச்சாளிகளின் கைப்பாவைதான். இப்ப இருக்கும் காங்கிரசை முழுசா நீக்கிட்டா அவர் புதுக்கட்சி தொடங்கப்போறாரு? இதே காங்கிரஸ் கட்சியைத்தான் வெச்சி அவரோட அரசியல் இருக்கும்.

மோடி வந்தா பாலாறும் தேனாறும் ஓடும்னு சொல்றதுக்கும் ராகுல் வந்தா நேர்மையும் நியாயமும் பெருக்கெடுக்கும்னும் சொல்றது. அது நடக்கவே நடக்காதுன்னு சொல்லல. ஆனா அவசரப்பட வேண்டியதில்லைன்னு சொல்ல வர்ரேன்.

நாட்டை நேரு குடும்பம் ரொம்பவே ஆண்டாச்சு. வெளிய இருந்து ஒருத்தர் வந்தா நல்லாருக்கும். அளவுக்கு மீறி ஒரு குடும்பத்தைச் சார்ந்து நாட்டின் எதிர்காலம் இருப்பது நல்லதல்ல என்பது என் கருத்து.

சுருக்கமாச் சொன்னா…
1. பிஜேபின் ராகுல் கிண்டல்கள் அருவருப்பு
2. ராகுல் இன்னும் அரசியல்ல குழந்தை
3. நேரு குடும்பத்துக்கு வெளிய இருந்து (கெஜ்ரிவால் மாதிரி) யாராவது வந்தா நல்லாருக்கும்
4. காங்கிரஸ் வேண்டாம்யா. எங்கெங்க என்னென்ன தப்பு பண்ணலாம்னு நல்லாத் தெரிஞ்சவங்க
5. முன்னமே சொன்ன மாதிரி… ராகுலோட வளர்ச்சி ராகுல் கைல இல்ல. பிஜேபியோட கைல
6. ஒருவேளை நாளைக்கு ராகுல் நல்லரசியலும் நல்லாட்சியும் செஞ்சா.. நான் உறுதியா பாராட்டுவேன். ராகுல் மட்டுமில்ல. யார் நாட்டுக்கு நல்லது செஞ்சாலும் நான் பாராட்டுவேன்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அரசியல் and tagged , . Bookmark the permalink.

4 Responses to ராகுல் – ஒரு பார்வை

  1. இதை வாசிச்சுக்கிட்டு இருக்கும்போது இங்கே வந்த கோபால், ‘என்ன அரசியல் எல்லாம் படிக்கிறே!’ன்னார்:-)

    ஊழல் இல்லாத இந்தியாவைப் பார்த்துடணுமுன்னு ஹிரண்யன் வரம் வாங்கி இருந்து இருக்கலாம்.

    • GiRa ஜிரா says:

      அரசியல்லாம் தெரியாதும்மா. ஒரு சாதாரணக் குடிமகனா ஒரு பார்வை. என்னோட அரசியல் பார்வைப்படி எதும் நடக்க மாட்டேங்குதும்மா. அரசியல்வாதிகள் அப்படி இருக்காங்க.

  2. பன்னீர்செல்வம் பத்தி எதுவுமே சொல்லியே 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s