காஞ்சனா-2 விமர்சனம்

கோவை சரளா ராக்ஸ்.

படத்தின் மிகப் பெரிய பலமே கோவை சரளாதான். அப்பிடி விழுந்து விழுந்து சிரிச்சேன். ஒருத்தர் அடி வாங்கும் போது சிரிச்சா தப்பில்லையான்னு மூளைய யோசிக்க விடாம சிரிக்க வைச்ச கோவை சரளாவுக்கு நன்றி.

அதே மாதிரி விதவிதமான பேய்களா ராகவா லாரண்ஸ் வரும் காட்சிகள் அருமை. நல்ல மேக்கப் மேன் தேவை. பேயா வராத காட்சிகள்ள முகத்துல பான் ஸ்டிக் திட்டுத் திட்டாத் தெரியுது.

நித்யா மேனனின் அழகும் நடிப்பும் அட்டகாசம். இந்தப் பிள்ளையப் போய் இப்பிடிக் காட்டீட்டீங்களேப்பா. என்னப்பா இப்பிடிப் பண்றீங்களேப்பா. நொடிக்கு நொடி மொகத்துல உணர்ச்சியெல்லாம் மாறுது. சட்டுன்னு அழுது சட்டுன்னு வெக்கப்பட்டு சட்டுன்னு சிரிச்சு… அருமை. லிப்ஸ்டிக் அழகா பொருத்தமா இருக்கு.

டாப்சி பொண்ணா பையனான்னு பட்டிமன்றம் வெச்சா தீர்ப்பு வேற மாதிரி வர்ர அபாயம் இருக்குறதால மேற்கொண்டு இதப்பத்திப் பேச வேண்டாம். படம் முழுக்க வர்ர முக்கியமான பாத்திரம்.

டார்லிங் படத்தில் லேசுபாசாகக் காட்டிய “என்னம்மா இப்பிடிப் பண்றீங்களேம்மா” இராமரை இந்தப் படத்தில் அதே கெட்டப்பில் ஒரு பாடல் முழுவதுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள். படம் முழுக்கவே பயன்படுத்தியிருக்கலாம்.

இடைவேளை வரைக்கும் சிரிப்பு வருவேனான்னு அடம்பிடிக்கும் மொக்கை காட்சியமைப்புகள். ஸ்ரீமன் மட்டுந்தான் நல்லா நடிச்சிருக்காரு. பேய் வந்ததுக்குப் பிறகுதான் படத்துல சூடே பிடிக்குது.

ரேணுகா வீண். செல்ஃப் எடுக்காம குரலும் எடுபடாம படாதபாடு பட்டிருக்காங்க. பேசாம மதுமிதாவையோ இராமரையோ இந்தப் பாத்திரத்தில போட்டிருக்கலாம்.

குடும்பத்தோட பாக்கனும்னு விளம்பரப்படுத்தப்படும் படத்துல பாத்ரூம் காமெடியிலயும் அது தொடர்பான காட்சிகள்ளயும் படுவக்கிரமான வசனங்கள்.

தம்பி வில்சன் அறிமுகம்னு பேர் போட்டு அறிமுகப்படுத்துறது… நீ மாஸ்னா நான் பக்கா மாஸ்னு வசனம் பேசுறதெல்லாம் ரொம்பவே ஓவர். பேய் இல்லாம ஒரு படத்த எடுத்து வெற்றி பெற வச்சிட்டு அப்புறம் இதெல்லாம் பேசுங்க லாரண்ஸ்.

பாட்டுகள் ஒன்னும் மனசுல நிக்கல. படம் முடிச்சிட்டு வர்ரப்போ காதுக்குள்ள ஒரே ஙொய்ய்ய்ய்ய்.

படத்துல பேய் வந்தப்பல்லாம் வராத பயம், படம் முடியுறப்போ முனி-4 வரும்னு கார்டு போடுறப்போ வந்ததுதான் ஹைலைட்.

என் வரிசையில் காஞ்சனா > முனி > காஞ்சனா 2.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s